அப்பாவிப் பொது மக்களை விட்டுவிட்டு என்னை பயங்கரவாதிகள் தமது இலக்காகக் கொள்வார்களானால் அதனை ஒரு சவாலாக நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை இல்லாதொழித்து எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளேன் என ஊடகங்களுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதகாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மததிய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
நாட்டின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நடவடிக்கையை தான் முன்னின்று நடத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நிலைப்பாட்டில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் நாட்டுக்காக எந்தத் தியாகத்தையும் தான் செய்யத் தயார் என்றும் என்னிடம் ஜனாதிபதி மிகவும் துணிவுடன் தெரிவித்தார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்
Wednesday, 2 July 2008
எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை தோற்கடிப்பேன்-ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் கெஹெலிய தகவல்
“சார்க்” மாநாட்டுக்காக இந்திய படைகள் இலங்கை வருமா? இலங்கை இந்திய அரசாங்கங்களின் நிலைப்பாடுகளுக்கு வெற்றி கிட்டுமா?
இலங்கையைப் பொறுத்தவரை சார்க் மாநாட்டை நடத்தி அதன் தலைமையை தமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதே அதன் இலக்காக உள்ளது. அத்துடன் இதனை வைத்துக்கொண்டு உள்நாட்டில் அரசியலை முன்னெடுப்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தெற்காசிய மாநாட்டில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளுக்குத் தமது பிராந்திய ஆதிக்கத்தன்மையை வெளிக்காட்டுவதும் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலவரத்தில் தளம்பல் ஏற்படாமல் வைத்துக்கொள்வதன் மூலம் அந்த நாட்டை வேறு நாடுகளின் பக்கம் சாராமல் தம்பக்கம் வைத்துக்கொள்வதே முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த இரண்டு நோக்கங்களையும் மையமாகக்கொண்டே “சார்க்” மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிக்க மூவாயிரம் படைவீரர்கள் இலங்கைக்கு வருவர் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக இந்தியப் படையினரின் வருகைக்குத் தாம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. tamilwin |
கொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் மூலம் கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்க புலிகள் திட்டம்?
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் கறுப்பு ஜூலை கலவரத்தை அனுஷ்டிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக சிங்கள நாளேடு புலனாய்வுத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுமார் 21 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொழும்பிற்குள் ஊடுறுவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவினர் எதிர்வரும் நாட்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் இந்தத் தாக்குதல் குழு ஐந்து பிரிவுகளாக பிரிந்து தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹெலியில் நான்கு துவாரங்களை கண்டேன்...
ராஜபக்ஷ பயணித்த ஹெலிகொப்டருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக ஐந்து ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. தாக்குதலுக்கு இலக்கான ஹெலிகொப்டரில் நான்கு துவாரங்களை கண்டேன். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் அஹமது மொஹைதீன் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
பி.பி.சி.செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுனாமியினால் பாதிக்கப்பட்ட அறுகம்பை பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 10.30 மணிக்கு வருகை தருவதாக இருந்தார். எனினும் ஜனாதிபதி 12 மணியளவிலேயே வந்தடைந்தார்..
பாலம் திறப்பு விழாவிலும் அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் நான் கலந்து கொண்டேன். எனினும் ஜனாதிபதியை இறக்கிவிட்டு சென்ற ஹெலிகொப்டரில் ஒன்று தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூட்டம் முடிந்த 15 நிமிடங்களுக்கு பின்னர் எனக்கு தகவல் கிடைத்தது.
அந்த தாக்குதல்களை புலிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து பொத்துவில் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரையும் பார்த்தேன். அந்த ஹெலிகொப்டரில் நான்கு துவாரங்கள் இருந்ததை கண்டேன். துப்பாக்கி சூட்டினாலேயே இந்த துவாரங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கு கடமையிலிருந்த இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார் என்றார்.
சார்க் மாநாட்டிற்கு 288 கோடி ரூபா செலவு
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது 15ஆவது சார்க் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்படி 15 ஆவது சார்க் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இம்மாதம் 27ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வரை கண்டியில் நடாத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சார்க் மாநாட்டை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரினால் முன்வைக்கப்பட்ட நிதி பாதீட்டுத் திட்டம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி புனரமைப்பு செலவீனங்களுக்காக 401,801,272 ரூபாவும், முலீட்டு செலவீனமாக 2,478,299,060 ரூபாவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மொத்தமாக 2,880,180,332 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சிற்கு 354,417,497 ரூபாவும் கலாச்சார அமைச்சிற்கு 2,960,000 ரூபாவும், பொலிஸ் திணைக்களத்திற்கு 2,168,315,735 ரூபாவும், கண்டி மாவட்ட செயலகத்திற்கு 920,000 ரூபாவும், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு 123,267,100 ரூபாவும், தேசிய இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்திற்கு 7,500,000 ரூபாவும் மற்றும் கொழும்ப நகர சபைக்கு 222,800,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முஷாரப்பின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானிய படைகள் வரவில்லை
பாகிஸ்தான் ஜனாதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரம் இந்த விஜயத்தின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பிற்கு 3000த்திற்கும் மேற்பட்ட இந்திய படையினர் இலங்கை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய அனைத்து அரச தலைவர்களின் பாதுகாப்பிற்காகவும் இந்திய படையினர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
”நாம் பேச்சுக்களை முன்னெடுத்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் புலிகள் ஆயுதப் பலத்தைக் காட்டவே முற்பட்டனர்.” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
”நாம் பேச்சுக்களை முன்னெடுத்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் புலிகள் ஆயுதப் பலத்தைக் காட்டவே முற்பட்டனர்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
”இன்றைய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அப்பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பேருவளையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: ”நாம் எதைச் செய்வதற்கும் எமக்கு நாடு முக்கியம். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமை. நாட்டைத் துண்டாட எம்மால் இடமளிக்க முடியாது.
பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நாம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டோம். நோர்வே, ஜெனீவா என வெளிநாடுகளில் பேச்சுக்களை முன்னெடுத்தும் எதுவும் பயனளிக்கவில்லை. அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் புலிகள் அவர்களின் ஆயுதப் பலத்தைக் காட்டவே முற்பட்டனர்.
மாவிலாறு பிரச்சினை வரை பொறுமை காத்த பின்னரே நாம் யுத்தத்தை மேற்கொண்டோம். எனினும் யுத்தம் இடம்பெறுகின்ற போதும் நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் உணவுகளையும், மருந்துகளையும் அனுப்புகின்ற அரசாங்கமாக நாம் உள்ளோம்.
இதற்காக சர்வதேச நாடுகள் எம்மைப் பாராடுகின்றன. அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் உணவு உட்பட சகலதையும் அரசாங்கமே வழங்குகிறது. அப்பிரதேச உற்பத்திகளை விலைகொடுத்து அரசாங்கம் பெற்றுக் கொள்கிறது. வேறு எந்த நாட்டில் இப்படி நடக்கின்றது?
இப்போது யுத்தம் நிறுத்தம் செய்ய வேண்டுமென கோரப்படுகிறது. எமக்கு 20 வருடகால வரலாற்றுப் படிப்பினையுள்ளது. நாம் சிறந்த பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். தெற்கில் குண்டு வைத்து இனக்கலவரமொன்றை ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம் என்ற பகற்கனவில் பயங்கரவாதிகள் செயற்படுகின்றனர்.
இதற்கு பல தந்திரோபாயங்களை அவர்கள் மேற்கொள்கின்றனர். நம்மவர்கள் பலரும் இதற்கு உதவி வருகின்றனர். சிலர் தெரிந்தும் தெரியாமலும் உதவி செய்கின்றனர். நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தியையும், அரசாங்கம் ஈட்டிவரும் வெற்றிகளையும் பொறுக்க முடியாத சிலரே அரசைக் கவிழ்க்கும் முயற்சிக்குத் துணைபோகின்றனர்.
எமது அடுத்த பரம்பரைக்கு சுதந்திரமான இலங்கையைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமும், பொறுப்பும். அதுவரை அரசாங்கத்தின் இந்தப் பயணம் தொடரும்” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பித்தானியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராக சுமித் நகந்தல நியமனம்
நேபாளத்திற்கான சிறி லங்காவின் தூதுவர் சுமித் நகந்தல, பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் பிரதி உயர்ஸ்தானிகராக வெளிவிவகார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னர் பிரித்தானியாவுக்கான சிறி லங்காவின் பிரதி உயர்ஸ்தானிகரான கனிகம அராச்சியின் இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிகம அராச்சி அரசாங்க அறிக்கைகள் தயாரிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
பிள்ளையானை அழிப்பதற்குக் கருணா முயற்சி: "த பொட்டம்லைன்" வார ஏடு
இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா; விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலைக் கருணா எதிர்த்ததுடன், பிள்ளையானை அதில் போட்டியிட வேண்டாம் என்றும் கருணா தெரிவித்திருந்ததாகவும் பிள்ளையான் தன்னையும் மீறி ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டது கருணாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களில் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலைக் கிழக்கில் நடத்தலாம் என்று பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார். . இதனைத் தொடர்ந்து கிழக்கில் படையினர் பாதுகாப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றனர். |
இந்தியாவின் மினிப் படையெடுப்பு?
வ. திருநாவுக்கரசு ""அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்களைப் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்துடனேயே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதத்திற்குத் திடகாத்திரமாக முகம்கொடுத்து, கிழக்கை மீட்டது போல வடக்கையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. அங்கே வாழும் மக்கள் சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க முடியும். அவர்கள் ஜனநாயக காற்றைச் சுவாசிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்காகவே ஆயுதப் படையினர் உழைத்துவருகின்றனர்' மேற்கண்டவாறு சென்றவாரம் இடம்பெற்றதாகிய பேருவலை மீன்பிடித் துறைமுகத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். இதே பல்லவி தான் முன்னைய சந்திரிகா அரசாங்க காலத்திலும் இசைக்கப்பட்டு வந்தது. அதாவது, யுத்தமானது விடுதலைப்புலிகளுக்கெதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கெதிரானதல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஓயாது அலட்டி வந்தவர். அது போலவே, விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து தமிழரை மீட்பதற்காகவே தாம் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த அடிக்கடி கூறிவந்தவர். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கி ஆண்டு வந்த பேரினவாத ஆட்சியாளர் தமிழரின் மீட்பர்களாக நாடகமாடி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் காரியமாகவே காணப்படுகிறது. சிங்கள பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழரை மீட்கவே ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது தமிழ் மக்களை சிங்கள பேரினவாதத்தினதும், அரச பயங்கரவாதத்தினதும் பிடியிலிருந்து மீட்பதற்கான தற்காப்புச் செயற்பாடாகவே தமிழரின் 3 தசாப்த கால சாத்வீகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமிக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த வரலாறு ஆட்சியாளராக கம்பளத்தின் கீழ் தள்ளப்பட்டு, விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற காலத்திலிருந்துதான் ஆட்சியாளர் புதிய வரலாறு படைத்து வருகின்றனர். இது உண்மையில் ஆட்சியாளரை ஆட்டிப்படைக்கும் பேரினவாதப் போக்கின் குருட்டுத்தனத்தையும் அரசியல் மறதிக் குழப்பத்தை பிரதிபலிக்கிறது எனலாம். புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் பேசத் தயார் அண்மையில் சர்வமதத் தலைவர்களுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடத்திய கலந்துரையாடலின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராயிருப்பதாகக் கூறிவைத்தார். தமிழர்தரப்பில் பல்வேறு தமிழ் இளைஞர் அமைப்புகளால் ஏன் ஆயுதப் போராட்டம் முடுக்கிவிடப்பட்டது என்பது எந்தவொரு அரிவரி அரசியல் மாணவனுக்கும் கூட தெரிந்த விடயமாகும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வு எட்டப்பட்டால் ஒழிய, இராணுவ அடக்குமுறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் ஒழிய விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவார்களென எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும். ஆயுதப் போராட்டமும் யுத்தமும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களால் தமிழர் மீது திணிக்கப்பட்டன எனும் ஒட்டுமொத்தமான வரலாற்று யதார்த்தத்தினை நாடு இன்று ஆளாக்கப்பட்டிருக்கும் நிலையிலாவது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உணர்ந்து கொள்ளுமாயின் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட இடமுண்டு. ஆனால், விடுதலைப்புலிகளைக் கொன்று குவித்துப் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட வேண்டுமென்ற நிகழ்ச்சித் திட்டத்தினை படைத்தரப்பினர் தன்னிச்சையாக முன்னெடுப்பதற்கான "வெற்றுக் காசோலை' அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளமையே காண முடிகிறது. அந்த வகையில் இன்னும் ஒரு வருட காலத்தில் விடுதலைப்புலிகளை முற்று முழுதாக ஒழித்துக்கட்டப் போவதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாட்டு ஊடகவியலாளர் முன்னிலையில் கூறியுள்ளார். விரைவில் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இராணுவத் தளபதி, இன்றைய யுத்தத்தினை அடுத்த தளபதிக்கு விட்டுச் செல்லப் போவதில்லையென முன்னர் சூளுரைத்ததற்கு அமைய திட்டம் தீட்டியுள்ளதாகவே பகிரங்கமாக அறிவித்துள்ளார் போலும். ""விடுதலைப்புலிகள் மரபு ரீதியிலான யுத்தத்தில் ஈடுபடும் ஆற்றலை இழந்துவிட்டனர்' என பொன்சேகா கூறியதோடு, ""இடங்களைப் பிடிப்பதற்கு மட்டும் நாம் செல்லவில்லை. நாம் கொல்லவும் போகிறோம்' என முழங்கியுள்ளார். 2006 இற்குப் பின்னர் ஏறத்தாழ 9000 புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஆனால், அந்தக் காலப்பகுதியில் புலிகள் மேலும் அதிகமானோரை திரட்டியிருப்பதாகவும் கூறியுள்ள பொன்சேகா, அதேநேரம் அவர்களின் தற்போதைய எண்ணிக்கை 5000 எனவும் முன்னர் புலிகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். இடங்களைப் பிடிக்கும் விடயத்திலும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஆண்டாங்குளம், பரப்புக்கடந்தான், ""றைஸ் பொவ்ல்' (கீடிஞிஞு ஆணிதீடூ) என்றழைக்கப்படும் பாரம்பரிய நெல்விளையும் பிராந்தியம் போன்ற இடங்களும் மன்னார் கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டதாகவும் விடத்தல் தீவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதுவாயினும், படைத்தரப்பினரின் பிரசார யுத்தமும் வெகு தீவிரமாக நடத்தி வரப்படுவதைக் காணமுடிகிறது. வாழ்க்கைச் செலவு விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கையில் தென்னிலங்கை மக்கள் வயிற்றுப் பட்டிகளை இறுகக்கட்டி வைத்திருந்தது போதும் எனப் பொறுமையிழந்து குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர். போராட்டங்களில் குதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், யானைப் பசிக்குச் சோளப் பொரி போல், ரூ. 5000 சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ள தறுவாயில் ரூ. 1000 வழங்குவதன் மூலமும் வடக்கு யுத்தத்தில் வெற்றிக்கு மேல் வெற்றியீட்டப்படுகின்றன என பிரசாரம் செய்வதன் மூலமும் மக்களை அமைதிப்படுத்திவிடலாமென அரசாங்கம் எண்ணுகின்றது போல் தெரிகிறது. படைத்தரப்பினரின் பிரசாரத்தின் மீது அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஏனென்றால், பிரசார யுத்தமும் ஒரு போர்த் தந்திரோபாயமென அவர்கள் எண்ணுவர். ஆனால், படைத்தரப்பினர் விடுதலைப்புலிகளையோ, விடுதலைப் புலிகள் படைத்தரப்பினரையோ குறைத்து மதிப்பிடப் பிரயத்தனம் செய்வது நல்லதற்கல்ல. வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வந்து கொண்டிருக்கக் கூடும். எனவே, இருதரப்புமே பெருவெற்றிகளை ஈட்டுவதற்கான வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கும் நிலைதான் எஞ்சிநிற்கும். ஆக, யுத்தம் ஓரிரு வருடங்களில் முடிவுக்கு வந்து விடும் என்பதற்கு மாறாக யுத்தம் தொடர்ந்து நடைபெற்று நாட்டைச் சிதைத்துச்சீரழித்துக் கொண்டே போகும். நாட்டின் இறைமையிலும் ஆட்புல ஒருமைப்பாட்டிலும் ஆட்சியாளருக்கு உண்மையான அக்கறை இருக்குமாயின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்த முள்ள அதிகாரப்பகிர்வு மூலமான அரசியல்தீர்வு காணப்படவேண்டும். அல்லாவிட்டால் நாடு பல்வேறு வெளிநாட்டு சக்திகளால் சுரண்டப்படும் ஆடுகளமாகி விடும். வளங்கள் சூறையாடப்படும் நிலை அதிகரித்துச் செல்லும். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் "இந்தியா திருகோணமலை எண்ணெய்க்குதங்களைப் பெற்றுக் கொண்டதும் தமிழருக்குக் கிடைத்தது ஒன்றுமில்லை' என 2 வாரங்களுக்கு முன் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர் அதிகாரிகள் முன்னிலையில் கடிந்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், சம்பூரில் அனல் மின்நிலையம் நிறுவுவதற்கு பல்லாயிரக்கணக்காண ஏக்கர் நிலங்கள் இந்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளன. அப்பகுதியில் தலைமுறை தலைமுறைமுறையாய் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விவசாய மற்றும் மீனவ மக்கள் விரட்டப்பட்டுவிட்டனர். இதனிடையில் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் மற்றும் மன்னார் எண்ணெய் அகழ்வுத்திட்டங்கள் மூலம் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு சில அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடிய அச்சம் காணப்படுகிறது. சீனா இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு ஆயுத விநியோகங்களும் செய்துள்ளது. இலங்கை தனது அண்டை நாடென்ற வகையில் சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்வாக்கை இலங்கையில் மேலோங்க விடாமல் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு இந்தியா முனைந்து கொண்டிருக்கும். எதிர்வரும் சார்க் (குஅஅகீஇ) மாநாடு தொடர்பாக வருகைதரவுள்ள இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கின் பாதுகாப்புக் கருதி இலங்கையில் 3000 பேர் கொண்ட படைபலம் இறக்கப்படவுள்ளது. இந்த "மினி' படையெடுப்பு இலங்கையில் இறைமைக்குப் பங்கம் விளைவிக்கும் என தேசியவாதிகள் கூக்குரலிடுவார்கள். இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு அடிப்படையில் அதிதீவிர தேசிய வாதிகளும் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கும் பேரினவாதிகளும்தான் காரணம் ஒழிய வேறு யாரும் அல்ல. 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அன்றைய இந்தியப்பிரதமர் ரஜிவ் காந்தி, மரியாதை அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரால் துப்பாக்கியால் பலமாகத்தாக்கப்பட்டார். கடுமையான சூரியக்கதிர் வீச்சு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாலேயே அந்தச்சிப்பாய் இந்தியப் பிரதமரை தாக்கிவிட்டார்போலும் என அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.கேலியாகக் கூறிச்சமாளித்துவிட்டார். மன்மோகன்சிங்கின் பாதுகாப்புக்காகவென காரணம் கற்பித்தும் தான் பெரிய படைபலம் இங்கே இறக்கப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அதிகம் அழுத்தம் கொடுப்பதற்கு அக்கறை காட்டாமல் இந்தியா சற்று நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. அன்று 1987 இல் இலங்கையில் இந்திய அமைதிப்படையினை இறக்கி விரலைச் சுட்டுக் கொண்டதன் பின் "கைவைப்பதில்லை' எனும் போக்கினைக்கடைபிடித்து வந்துள்ளது. அதே நேரத்தில் இராஜதந்திர முறையில் "இலங்கையில் எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுக்கு இந்தியா ஆதரவளிக்கும்' என இந்திய அரசாங்கங்கள் வாய்ப்பாடாகக் கூறிவந்துள்ளன. அண்மையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலம் கடந்த 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாகத் தெரிவித்த போது "அது ஒரு நல்ல ஆரம்பம்' என இந்தியா அரசாங்க தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அது ஒருகண்துடைப்பு என்பதை இந்திய ஆட்சியாளர் புரிந்து கொண்டால், அது தொடர்பாக மன்மோகன்சிங் எதிர்வரும் மாநாட்டு உரையில் எத்தகைய நிலைப்பாட்டினை முன்வைக்கப் போகின்றார்? இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தும் ஏறத்தாழ 100,000 இலங்கை அகதிகள் பற்றி என்ன கூறப்போகின்றார்.
போலி விஸாவுடன் வெளிநாடு செல்ல முயன்ற மூவருக்கு அபராதம்; ஒத்திவைக்கப்பட்ட சிறை
போலி விஸா மூலம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரு தமிழ் இளைஞர்களுக்கும், சிங்கள யுவதி ஒருவருக்கும் நீர்கொழும்பு நீதிமன்றம் தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயைச்சேர்ந்த தர்மலிங்கம் செந்தூரன், புத்தளத்தைச் சேர்ந்த செல்லத்துரை ரகுநாதன் ஆகிய இருவரும் இத்தாலி செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பைச் சேர்ந்த துஷ்யந்தி ஜாகொட என்ற சிங்கள யுவதி பிரான்ஸ் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2007 டிசம்பர் 10 ஆம் திகதி இவர்கள் மூவரும் விமான மூலம் பயணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தபோது இவர்களின் பயண ஆவணங்களை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பரிசீலித்தபோது போலியான விஸாக்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். பொலிஸார் இவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சமர்ப்பித்த "பி' அறிக்கையைத்தொடர்ந்து மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்த வழக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜனனி அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில் மூவரையும் குற்றவாளிகளாக கண்ட நீதிவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார். பயண முகவர் ஒருவர் மூலம் தமது வெளிநாட்டு பயணத்தை ஏற்பாடு செய்ததாக இவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் வறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு திடீரென்று இடைநிறுத்தம்
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு இடைநிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றது. இதனை சமைத்துக் கொடுப்பதற்கும் மற்றும் இதர செலவுக்குமாக வழங்கப்படும் நிதி கடந்த எட்டு மாதங்களாகியும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் நிதி திறைசேரிக்கு வழங்கப்பட்ட போதும் திறைசேரி மாவட்ட அலுவலகத்திற்கு வழங்காமையினால் மாவட்டத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கு நிதி சென்றடையவில்லை. இதனால் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் மாணவர்களின் நலன் கருதி அதிபர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து உணவு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கான உணவு வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்களின் போஷாக்குத்தன்மை குறைவடைவதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் என பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றார்கள்.
மேலதிக கடன்களால் நாடு பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது-எதிர்க்கட்சிகள்
நாட்டின் நிதி நெருக்கடி மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும், ஐ.தே.கட்சியும், ஜே.வி.பி.யும், அரசாங்கம் Standard Chartered வங்கியிடமிருந்து 2.56 வீத வட்டியுடன், 220 மில்லியன் டொலர் கடன்பெற முயற்சிப்பதானது நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என எச்சரித்துள்ளன.
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கடன் எனக் கூறியே இந்தத் தொகை பெறப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இதற்கு முன்னரும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக எனக் கூறி HSBC வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெற்றதாகவும், ஆனால் அதனைக் கொண்டு எந்த அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய கடன்கள் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களையும், அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
" இந்த நாடு கடன்களால் சூழப்பட்டிருக்கிறது. மேலதிக கடன்கள் நாட்டின் பணவீக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது. ஏற்கனவே இலங்கை 400 பில்லியன் ரூபாய்கள் கடனையும் வட்டியையும் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் புதிய கடன்களும் நாட்டை பாரிய நிதி நெருக்கடிக்கே இட்டுச் செல்லும்" என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இவ்வாறு அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற கடன்களுக்கு எதிர்காலத்தில் தமது அரசாங்கம் பொறுப்பேற்காது என ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு முன்னர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும், ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, அரசாங்கம் தனது செலவினங்களை ஈடுசெய்வதற்காக வெளித் தரப்புகளிடமிருந்து கடன் பெறுவதாகவும், நாட்டு விவகாரங்கள் அறிவற்றவிதமாக கையாளப்படுவதன் காரணமாக அதற்கெதிராக பொது மக்கள் இறுதி முடிவெடுக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார்.நாமலைத் தாக்கியவர்கள் பற்றி தகவல் தருபவருக்கு 5 மில்லியன் ரூபா: பத்திரிகை வெளியீட்டாளர்கள் அறிவிப்பு
ஊடகவியலாளரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் மான நாமல் பெரேராவை தாக்கியவர்கள் தொடர்பான விபரங்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் ரூபா பரிசு வழங்கப்படும் என்று இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பத்திரிகை வெளியீட்டாளர்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவலை அவர்கள் வெளியிட்டனர். காலை 10.30 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், விஜயா நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், உபாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், தினக்குரல் பப்ளிகேசன்ஸ் பிறைவேட் லிமிட்டட், சுமதி பப்ளிகேசன்ஸ் லிமிட்டட், உதயன், சுடரொளி வெளியீட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்களுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை ஆசியர் சங்கம் ஆகியனவும் இணைந்து இந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தினர்.
பத்திரிகை வெளியீட்டாளர்கள் சார்பாக இங்கு தகவல் வெளியிட்ட எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் குமார் நடேசன், இலங்கையில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராக இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவும் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்பட்டுச் சட்டத்தின்முன் நிறுத்தப்படாத காரணத்தினால், ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீதான தாக்குதலை நடாத்தியவர்கள் தொடர்பான தகவல் தருபவர்களுக்கு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாக 5 மில்லியன் ரூபா வெகுமானம் வழங்கத் தீர்மானித்திருப்பதாக கூறினார்.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் நெறிமுறைகளுக்கு அமைவாக, நாமல் பெரேரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக வழங்கப்படும் தகவல்கள் மற்றும் விபரங்கள் விசேட குறியீட்டு முறையில் இரகசியமாகப் பேணப்படும் என்றும் அவர் இங்கு அறிவித்தார்.
Tuesday, 1 July 2008
ஓமந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல் நாளை போக்குவரத்து ரத்து
ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.
எனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார். இதனால் நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது
, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நன்றி:BBC
மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞனைக் காணவில்லை.
இவரது தந்தை இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை, மருதானைக்கு தொழிலுக்குச் சென்ற வேளை இவர் காணமல் போயுள்ளார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி, மாவிலங்குத்துறையைச் சேர்ந்த 17 வயதுடைய குணரத்தினம் பிரசாத் என்பவரே காணமல் போயுள்ளார்.
சார்க் மாநாட்டுக்கு வரும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் இழுபறி - இந்திய பாதுகாப்பு படை வருகையை எதிர்க்க ஜேவிபி முஸ்தீபு
கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் ஆசிய நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இலங்கைப் படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி, பாலித கொஹண தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பு வழங்க இந்தியப் படையினரும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் ஹர்ஷாய்குப் பாதுகாப்பு வழங்க ஆப்கானிஸ்தான் படையினரும் இலங்கை வரவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த ஊடகத் தகவல்களை மறுத்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கைப் படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் எனக் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கென, இந்தியாவின் கறுப்புப் பூனைகள் படையணி உட்பட 3000 இந்தியப் படையினர் இலங்கை வரவிருப்பதாகவும், இலங்கை கடற்பரப்பில் இந்தியக் கடற்படையினரின் கப்பல்கள் மற்றும் வான்பரப்பில் இந்திய உலங்குவானூர்திகள் என்பன பாதுகாப்பில் ஈடுபடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் தனக்குத் தேவையான பாதுகாப்பு அதிகாரிகளை அங்கிருந்து அழைத்துவரத் தீர்மானித்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அடுத்தமாதம் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரிலிருக்கும் பிச்சைக்காரர்களை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவைப்பது தொடர்பாக கொழும்பு மாநகரசபை ஆராய்ந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஜே.வி.பி. ஓர் புலி ஆதரவு குழுவாக மாறி வருகிறது – விமல் வீரவன்ச
ஜே.வி.பி. ஓர் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுவாக மாறி வருகிறதென ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜே.என்.பி.யின் முதலாவது தேசிய மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. தவறான வழியில் செல்வதனால் ஜே.என்.பி; கட்சியை ஆரம்பிக்க நேரிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி. தற்போது பழமைவாதிகளின் கட்சியாக மாற்றமடைந்துள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதே நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலாக இன்று ராஜபக்ஷவே இருப்பதாக அவர் சுடு;டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பிக்கு பலத்த சவாலாக ஜே.என்.பி திகழ்வதாகவும், ஜே.என்.பிக்கு ஜே.வி.பி ஓர் பொருட்டல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு தசாப்தங்களாக பெற்றுக் கொள்ள முடியாதுள்ள சுதந்திரத்தை ஜே.என்.பி இந்த நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
25 வருடம் - 8000 சூடு – 430 பேர் கொலை - 100 பேரை காணவில்லை – தட்டிக் கேட்கவில்லை இந்தியா!!!
இலங்கை கடற்படை தொடர்ந்து 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சுடுவதை இந்திய மத்திய அரசு தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ இல்லை. இது இந்தியாவின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார். மீனவர் வாழ்வுரிமை கோரிக்கைப் பயணத்தை ஜூன் 25-ம் திகதி தொடங்கி, சுமார் 400 கி.மீ. வரை கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தினரை சந்தித்துள்ளதாகவும் கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை சுமார் 8000 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
430 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரை 100 பேர் காணாமல் போனதாகவும் தெரியவருகிறது எனவும் தா.பாண்டியன் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மட்டுமே சுடப்படுகின்றனர். பிற மாநில மீனவர்கள் யாரும் சுடப்படுவதில்லை.
இதுவரை இந்திய மத்திய அரசு இலங்கை அரசிடம் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துமாறு கூறவில்லை. ஒரு எச்சரிக்கை கூட செய்யவில்லை.
இந்த விடயத்தில் இந்திய அரசு எந்த வழியையாவது பின்பற்றி இனிமேல் சுடமாட்டோம் என்ற உறுதியை பெற்றுத் தர வேண்டும். இது இந்தியாவின் கௌரவத்துக்கு விடப்பட்ட சவால். இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் எனவும் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
தமிழக மீனவர்களுக்கு தன்னைக் காத்துக் கொள்ள துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமம் வழங்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீன்பிடிக்க போகும் ஒவ்வொரு படகிலும் பாதுகாப்புக்கு ஒரு காவலரை அனுப்ப வேண்டும்.
மீன் பிடிக்கும் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
அம்பாந்தோட்டையில் சிறீலங்கா படைமுகாம் மீது அதிரடித் தாக்குதல்
அம்பாந்தோட்டை கும்புக்கன்ஓயா பகுதியில் திங்கட்கிழமை மாலை 6.20 மணியளவில் சிறீலங்கா படையினரின் ஒன்றுகூடல் இடம்பெற்றுகொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது பலர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகளுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை எனத்தெரியவருகிறது.
இத்தாக்குதலையடுத்து இருதடவைகள் உலங்குவானூர்தி இ;ப்பகுதிக்கு சென்று திரும்பியதாகவும் அறியமுடிகிறது.
(2ம் இணைப்பு)மகிந்தவை ஏற்றச்சென்ற உலங்குவானூர்தி மீது கனரகத் தாக்குதல்: உலங்குவானூர்தி கடும் சேதம்
அம்பாறை மாவட்டம் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் உலங்குவானூர்தி மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாலத்தினை திறந்து வைத்து மகிந்த ராஜபக்ச மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1:00 மணியளவில் பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகளால் அகோர எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலினைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து மகிந்த ராஜபக்சவினை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி விரைவதற்காக உடனடியாக அங்கு விரைந்து கொண்டிருந்த உலங்குவானூர்தி மீதும் விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தினர்.
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதிக்கு மேலாக உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்தபோது பிற்பகல் 1.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலுக்கு இலக்கான உலங்குவானூர்தி சிவப்பு விளக்கை எரிய விட்டவாறே தாழ்வாகப் பறந்து உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பாடசாலை மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியை மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றனர். அது மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்திருக்கின்றது.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதனை சிறிலங்கா வான்படையும் ஒத்துக்கொண்டிருக்கின்றது.
இது குறித்து சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பயணத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த மூன்று உலங்குவானூர்திகளில் ஒன்று அறுகம்குடா உல்லைப் பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
மேற்படி உலங்குவானூர்தி இயந்திரக் கோளாறு காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக முதல்கட்டமாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை உகண இராணுவ முகாமில் எரிபொருளை நிரப்பிவிட்டு அறுகம்குடா நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டு வருகின்றது.
தரையிறக்கப்பட்ட உலங்குவானூர்தியில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இருக்கவில்லை. அவர் அறுகம்குடா பால திறப்பு விழாவில் அச்சயம் இருந்தார் என்றார்.
இதேவேளை பொத்துவில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது சுமார் 30 நிமிட நேரமாக நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது சுமார் 30 நிமிட நேரமாக நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதில் 6 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத் தாக்குதலானது நன்கு திட்டமிட்டு நேர்த்தியாக நடைபெற்றிருப்பது புலப்படுவதுடன், இலங்கையில் தலைவர்கள் சென்றுவர இருந்த கடைசி பாதுகாப்பான ஆகாய வழி பாதையின் பாதுகாப்பையும் இப்போது கேள்விகுறியாகியுள்ளது... இனிவரும் காலங்களில் விடுதலை புலிகள் இவ்வாறான தாக்குதலை அதிகரிகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளின் நியமச்சீருடையில் ஆழ ஊடுருவும் அணியின் நபர்
பூநகரியில் உள்ள ஜெயபுரம், முறிகண்டிச் சாலையில் வன்னேரிக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகள் பேருந்தினைத் தாக்குவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த போதே ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட ஆழ உடுருவும் அணியின் தாக்குதலாளி, ஜெனீவா கடப்பாடுகளை மீறித் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் நியமச்சீருடையை அணிந்திருந்தார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குற்றம் சாட்டியுள்ளார்.
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் வீதியில் தந்தையும் மகளும் நீலநிற வானில் கடத்தல்
கொழும்பு கொட்டாஞ்சேனை புளுமெண்டல் வீதியில் தகப்பனும் மகளும் நீலநிற வானில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 28 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் தந்தையரான அன்ரனிராஜ் டிவேரா அவரது மகளான மேர்வின் டிவேரா (வயது 17) ஆகிய இருவருமே கடத்திச் செல்லப்பட்டவர்களாவர். கொட்டாஞ்சேனை மேபில் வீதியிலுள்ள நீச்சல் தடாகத்தில் நீச்சல் பயிற்சியை முடித்துவிட்டு வீடு நோக்கிச் சென்ற போதே இவர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். நீச்சல் பயிற்சிபெற்ற வேறு ஒரு சிறுமியும் இவர்களுடன் வந்துள்ளார். அவரின் கையையும் பிடித்து இழுத்து வானில் ஏற்றப்பட்டவேளை அவர் அழுது கூச்சலிட்டு தப்பியோடியுள்ளார். முகத்துவாரம் இப்பாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட தந்தையும் மகளுமே கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட ஆட்டோ சாரதிகள் வானின் இலக்கத்தை பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த இலக்கமுடைய வானை கண்டுபிடித்துள்ள போதும் அந்த வான் நீலநிறமுடையதல்ல என்று தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும் மக்கள் கண்காணிப்பு குழுவின் தலைவர் மனோகணேசன் எம்.பி. ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர்.
லப்ரொப் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் பாராளுமன்றத்திற்கு எடுத்துச்செல்லத் தடை
பாராளுமன்றத்திற்கு "லப்ரொப்' உட்பட இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுசெல்வதற்கு அரசு தடைவிதித்துள்ளது.
இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் பாராளுமன்றத்திற்குள் வெடிபொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புத் தரப்பினர் விடுத்த அறிவுறுத்தலுக்கமைய, "லப்ரொப்' உட்பட அவை போன்ற உபகரணங்கள் பாராளுமன்றத்திற்குள் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவை மிகக்கடுமையாகக் கடைப்பிடிக்குமாறு பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவினரும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் இதுதொடர்பாக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய கடிதத்தில்,
பாராளுமன்றத்தில் கீழ்த்தளத்திலுள்ள பொதுநூலகத்தைப் பயன்படுத்துவோர் அங்குள்ள இணையங்களை பயன்படுத்தச் செல்லும்போது அங்கு "லப்ரொப்' போன்ற இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுசெல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு நிலைமைகள் சீரான பின் இதற்கான அனுமதியளிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களை மிக நன்கு பயன்படுத்தித் தாக்குதல் நடத்தும் வல்லமையை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளதால், இலத்திரனியல் கருவிகள் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது
பாதுகாப்பு தொடர்பில் சார்க் நாடுகள் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை-அரசாங்கம்
இந்தியப் படையினர் இலங்கை வருவது தொடர்பில், இந்திய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமான வேண்டுகோள்கள் எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை எனவும், இந்தியப் படையினர் பிரசன்னமாவதற்கு இலங்கை அனுமதி எதனையும் வழங்கவில்லை எனவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டின் பாதுகாப்பு தொடர்பில், எந்தவொரு நாடும் இதுவரை உத்தியோகபூர்வமான வேண்டுகோள்கள் எதனையும் விடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எந்தவொரு வெளிநாட்டு இராணுவ அதிகாரிக்கும் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
"இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு இராணுவ அதிகாரியும் இலங்கைக்கு வந்தததாக கேள்விப்படவில்லை. அதனால் எம்மால் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்க முடியாதிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் படையினரும் சார்க் மாநாட்டிற்கு வருகைதரும் அந்நாட்டு ஜனாதிபதி ஹமீத் கர்சாயிக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு இம்மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்க மட்ட தகவல்கள் தெரிவிப்பதாகாவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் படையினரால் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாதிருக்கும் என்பதால், இரு நாடுகளும் தத்தமது படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த ஊடகம் அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
"பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் இலங்கைக்கு இந்திய உயர்மட்டக் குழுவினர் வருகை தந்தமைக்கான முக்கிய காரணமும் இதுவே. இந்திய கறுப்புப்பூனை படையினரும் கடற்படை அதிகாரிகளும் இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் ஆப்கானிஸ்தான் படைகளும் வரலாம்" எனவும் அந்த ஊடகம் அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இந்தியா மட்டுமன்றி எல்லா நாட்டுத் தலைவர்களும் தத்தமது பாதுகாப்புப் படையினருடனேயே இலங்கை வருவார்கள் எனவும், அது வழமையாக நடைமுறையிலுள்ள ஒரு விடயமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரைக் கொண்டே செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 15 ஆவது சார்க் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே நடைபெறவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தரைச் முன்னர் சந்தித்துள்ளார்?
கிழக்கு பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட போது ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விடுதலைப் புலி தலைவர் ஒருவரை சந்தித்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பூர் மற்றும் வாகரைப் பகுதிகளுக்கு குறித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் இரகசிய விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி.யினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஜே.வி.பி. உறுப்பினர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
