Wednesday, 2 July 2008

அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுவோரின் நோக்கம் வெளிநாடு செல்வதே – காவற்துறைப் பேச்சாளர்

slpolice.jpgஅச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாடுகளில் குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.


தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்று பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் காணப்பட்டால் அவற்றை காவற்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாது ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஊடாகவே சிறந்த தீர்வை முன்வைக்கலாம்- அமைச்சர் திஸ்ஸ வித்தாரண

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாகவே இலங்கையில் தொடர்ந்துவரும் இனப்பிரச்சினைக்கு சிறந்ததொரு இறுதித் தீர்வை முன்வைக்க முடியுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சருமான, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு இதுவரை 70 தடவைகள் கூடி ஆராய்ந்துள்ளபோதும், இரண்டு அடிப்படை விடயங்களில் உறுப்பினர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருவதாகவும் கூறினார்.

அதிகாரப்பகிர்வு இதில் ஒரு அங்கமாக உள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், மாகாணசபைகளுக்குக் கூடுதல் சுதந்திரம் வழங்கப்பட்டால் அது தனிநாட்டுப் பிரேரணைக்கு அதிகாரம் வழங்கியதாக அமைந்துவிடுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு சாரார் அஞ்சுவதாகக் கூறியுள்ளார். ஒரு முறை அதிகாரங்கள் பகிரப்பட்டால் பின்னர், அரசாங்கம் அதிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென அச்சம் வெளியிடப்பட்டிருப்பதால், அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயம் மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டியுள்ளது என அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மாற்றப்பட்டு, ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறைக்கு அமைய நாட்டின் தலைவராக பிரதமரை நியமிக்கும் முறை ஏற்படுத்தப்படவேண்டுமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பிரதிநிதிகள் சிலர் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் இணைந்துகொள்ளுமாறு ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” எனக் குறிப்பிட்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்துக் கவனம் செலுத்தப்படும் என்ற நம்பிக்கையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தமிழர்களுக்கு ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக தீர்வொன்றை எட்டுவது காலத்தைக் கடத்தும் செயலென சபைமுதல்வர், அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

எனினும், அமைச்சரின் இந்தக் கருத்துத் தொடர்பாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர், இலங்கை இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகவே தீர்க்கப்படவேண்டுமெனவும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக விரைவில் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படவேண்டுமெனவும் இலங்கை உயர்மட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுமக்களின் அசௌகரியங்களை தடுப்பதற்கு ஐ.தே.க பாதுகாப்பு இணைப்பு குழுவொன்றை உருவாக்கியுள்ளது

பொதுமக்களுக்கு காவல்துறையினரால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு இணைப்பு குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையிலான காவல் துறை அதிகாரிகள் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தராதரம் பார்க்காது பாரபட்சமற்ற ரீதியில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சேவையாற்றுவதனை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், காவல்துறையில் 34 வருடம் சேவையாற்றியுள்ள புதிய காவற்துறை மா அதிபர் வெள்ளை வான் கும்பல் பற்றி தமக்கு எதுவம் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளமை வேதனைக்குரிய வியடம் என பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபர் பதவிகளில் கடமையாற்றுவோர் தூதுவராலய அல்லது ஆளுனர் பதவிகளை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு சார்பாக நடந்து கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு செல்வதற்காக லொட்ஜில் தங்கியிருந்த இரு குழந்தைகளின் தாயார் பொலிஸாரால் கைது

சகோதரியின் அழைப்பை ஏற்று வெளிநாடு செல்வதற்காக தனது இரு பிள்ளைகளுடன் கொழும்பில் தங்கியிருந்த தாயாரும், ஜெர்மனியில் 10 வருடமிருந்துவிட்டு நாடு திரும்பி மறுபடியும் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டு தங்கியிருந்த செவிப்புலன் குறைந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த இன்பராசா ஹெலன் டயானா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் விவேகானந்தா மேட்டிலுள்ள ரகுமானியா லொட்ஜிலிருந்து சிவில் உடையில் ஜீப்பில் வந்த ஒரு பெண்ணாலும் நான்கு ஆண்களாலும் அழைத்துச் சென்றதையடுத்து அவர் தற்போது இரகசியப் பொலிஸில் 4 ஆவது மாடியில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரஸ்தாப பெண்ணின் தந்தையான ஆபிரகாம் சாமிநாதன் புகார் செய்துள்ளார். இவரிடம் ஒரே இலக்கமுடைய இரண்டு சிம் இருப்பதாகவும் அதிலொன்று அனுராதபுரத்தில் இன்னொருவரின் பெயரில் இருப்பதாகவும் கிடைத்த புகாரை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோல தர்மலிங்கம் ரமேஷ்குமார் (வயது 33) என்ற இளைஞர் ஆட்டுப்பட்டி வீதியில் தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்தபோது சோதனை தேடுதல் நடத்திய இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து ஆட்டுப்பட்டி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சகோதரி கே.ராதா தெரிவித்துள்ளார்.

இவர் செவிப்புலன் குறைந்தவர் என்றும் வீட்டுக்கு வெளியிருந்து இராணுவத்தினர் கூப்பிட்டபோது ரமேஸ்குமார் போகாததாலேயே இவரை கைது செய்து கடந்த 15 நாட்களாக தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்விரு புகார்குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸிடம் பிரதி அமைச்சர் புகார் செய்து தகவல் கோரியுள்ளார்.

அரசாங்கம் 51 ஆயிரம் கோடி ரூபா வட்டியை உலக நாடுகளுக்கு வழங்குவது துரதிர்ஷ்டமான செயற்பாடு

கண்டியில் ரில்வின் குற்றச்சாட்டு

அரசாங்கம் உலக நாடுகளில் கடன் பெறுவதையிட்டு பெரிதும் பெருமைப்படுகின்றது. இது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும் என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா 51 ஆயிரம் கோடி ரூபாவுக்கான வட்டியே வழங்கி வருகின்றது. இது நாட்டுக்குச் செய்யும் துரதிர்ஷ்ட செயலாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கண்டி பிரதான அஞ்சல் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நவரட்ண பண்டார, திமுத்து அபயகோன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சமன்சிறி பண்டார மற்றும் கட்சியின் பிரமுகர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது;

இன்று நாட்டில் ஒரு அரசை மாற்றி இன்னொரு அரசை ஏற்படுத்துவதானது நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

எனினும் நாட்டின் அரசியல், பொருளாதார சுதந்திரம், இறைமை, ஜனநாயகம் என்பவற்றைப் பாதுகாக்கக்கூடிய சிறந்ததொரு வேலைத்திட்டத்தை உருவாக்குவது அவசியமாகும்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களைப் பயமுறுத்தி அரசாங்கம் வெற்றி பெற்றதை மறுக்க முடியாது.

எனினும், கிழக்கில் ஜனநாயகம், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது.

இதனை உரிய வகையில் செயற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

1550 களில் ஏகாதிபத்தியவாதிகள் நமது நாட்டை நேரடியாக அடிமைப்படுத்தி வந்துள்ளனர். ஆனால், இன்று அவர்கள் தந்திரமாகவும், சூட்சுமமாகவும் நம்மை அடிமைப்படுத்தி வருகின்றனர். நமது உள்நாட்டு பிரச்சினைகளில் நேரடியாக தலையிடும் வரையில் செயற்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

15 தமிழ் இளைஞர்கள் மொனறாகலயில்,சிலாபம், கம்பஹாவில் 12 தமிழ் இளைஞர்கள் கைது

மொனறாகல குமாரவத்த தோட்டத்தில் பதினைந்து தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் செவ்வாய்க்கிழமை மொனறாகல நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது, இவர்கள் மீது தொடர்ந்தும் விசாரணை நடத்தவேண்டியுள்ளதால் தமது பாதுகாப்பில் வைத்திருக்க பொலிஸார் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.

சந்தேகநபர்களை விசாரணை செய்து குற்றமற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் மற்றும் கம்பஹா பகுதிகளில் பொலிஸார் சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.

சிலாபத்தில் நேற்று புதன்கிழமை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது இரு தமிழ் இளைஞர்கள் தமது வதிவிடப் பாதுகாப்பை உறுதிப்படுத்தாத காரணத்தால் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல கம்பஹாவில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரையும் நடத்தப்பட்ட தேடுதலில் 10 தமிழ் இளைஞர்களும் இரு சிங்கள இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இங்கு தொழில் செய்து வருவதாகவும் வதிவிடத்தை உறுதிப்படுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் அரசாங்கத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது- ஊடகத்துறை அமைச்சர்

ஊடகவியலாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரப் பிரிவு அதிகாரி மகேந்திர ரட்ணவீர ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் தவறினால், அரசாங்கம் மீதே சந்தேகம் ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு விசேட அமைச்சரவைக் குழு மற்றும் இரண்டு ஊடகத்துறை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம் தம்மைத் தலைகுனிய வைத்திருப்பதாக நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார்.

“எமக்கு வெட்கத்தையும், வெறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கைதுசெய்யுமாறு பொலிஸாரிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.


இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கென இரண்டு விசேட குழுக்களைப் பொலிஸார் நியமித்துள்ளனர்” என்றார் அமைச்சர்.

தாக்குதல் இடம்பெற்று சில நிமிடங்களின் பின்னர் தாக்குதல் குறித்து அறிந்துகொண்டதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதிக்கு உடனடியாக அறிவித்ததாகவும் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன, தாக்குதலுக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாகவும் கூறினார்.

“தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் காணப்பட்ட இலக்கத் தகடுபற்றிய தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு வெள்ளைவான் பயன்படுத்தப்படவில்லை, வெள்ளை வானுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பில்லையென்பதும் பின்னர் கண்டறியப்பட்டது” என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவர்களுக்கு 5 மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,

பத்திரிகை வெளியாட்டாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் நாமல் பெரேராவை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் விசேட அமைச்சரவைக் குழுவின் உறுப்பினர், அமைச்சர் சரத் அமுனுகம வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டிருந்தார்.

அத்துடன், இனந்தெரியாத குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நாமல் பெரேரா அப்பலோ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகிறார். உட்காயங்களால் தான் பெரிதும் வேதனைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கல்வி பயிலும் இரு யாழ் மாணவிகளை தாக்கி நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் இரவு வேளையில் வீதியில் நடந்து சென்ற வேளை மலேசிய தமிழ் பேசிய இனம் தெரியாத நபர்கள் அவ்விருவரையும் தாக்கி தகாத வார்த்தையால் பேசிய படி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்துக்கூறிய முஸ்லிம் மாணவன் ஒருவர் நாங்கள் இரவு 8மணிக்கு மேல் வெளியே போவதை தவிர்க்கிறோம் ஆனால் இந்த இருவரும் சீன பெண்களை விட கவர்ச்சியான உடை அணிந்து இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதாகவும் இது குறித்து அவர்களிடம் கூறியும் புரிந்து கொள்ள வில்லை. இனியாவது திருந்தினால் சரி என்றார்.


மலேசியாவில் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களால் பல வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.;

இலங்கையில் கற்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதனால் பெற்றோர்களால் இவ்வாறு மாணவிகள் பலர் வெளி நாடுகளுக்கு படிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் கலாசாரத்தை மறந்து நடப்பது அவர்களாகவே தமது தலையில் மண்ணைப்போட்டுக்கொள்கின்றனர்.

இவ்வாறு பட்டு திருந்துவதை விட யோசித்து நடந்து கொள்வது அவர்களையும் அவர்களின் கலாசாரத்தையும் பாதுகாக்கும்.

http://www.nitharsanam.com/?art=25195

கொழுப்பில் 800 தமிழர்கள் அதிகாலை நித்திரைகளில் இருந்து எழுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளனர்

கொழும்பின் மோதரைப் பகுதியில்(கிம்புலகெல வட்டெ ,மடம்பிடிய ) நேற்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 10 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது தமிழர்கள் சித்திரவதை நிலையை எதிர்நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிகாலை நித்திரைகளில் இருந்து எழுப்பப்பட்ட பலர், மைதானங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களும் சிறுவர்களும் இரவு நேர ஆடைகளுடனேயே திறந்த நிலை இடங்களுக்கு அழைத்துசெல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சோதனையின் பின்னர் வரிசையாக நிறுத்தப்பட்ட தமிழர்கள், வீடியோ படம் எடுக்கும் வரை நிற்குமாறு படையினர் உத்தரவிட்டதாகத் தமிழ் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது பிள்ளைகள் காலை சாப்பாட்டை சாப்பிட்ட கையுடன் கோப்பைகளுடனும் படையினரால் வெளியேற்றப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிக்கான தொலைபேசி சேவைமட்டும் இதுவரை தடை விதிக்கப்படவில்லை - பல தமிழ் ஒட்டுக்குழுவினரும் அரசாங்கத்தால் சுதந்திரமாக ஒட்டுகேட்கப்படுகிறது

புலிகளின் கட்டுப்பாட்டுபகுதியில் உள்ள மக்களுக்கான அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளும் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டு மிகவும் நெருக்குவாரத்துக்குள் மக்கள் அன்றாடம் சீவிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எது எப்படியிருந்த போதும் கடந்த 2 வருடமாக கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய பகுதிகளுக்கு வழங்கி வந்த சிறீலங்கா டெலிகொம்மின் தொலைபேசி சேவைக்கு அரசாங்கம் எதுவித தடைகளையும் விதிக்கவில்லை.

இது தொடர்பில் தெரியவருவதாவது வன்னியில் இருந்து வெளியிடங்களுக்கும், வன்னி இனைப்புக்கும் வரும் அனைத்து தொடர்பாடல்களும் சிறீலங்கா புலனாய்வுதிணைக்களத்தின் ஒட்டுக்கேட்கும் பிரிவால் மிகதுல்லியமாக ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், புலிகளின் உரையாடல்கள் மட்டும் அல்லாமல் பொதுமக்களின் உரையாடல்களும் கேட்கப்பட்டு புலிகளின் பகுதியில் நடப்பவைகள் அறியப்படுவதாக தெரியவருகிறது.


எனினும் புலிகள் தமதுபாதுகாப்பான உரையாடல்களூக்காக செய்மதிதொலைபேசி பரிவர்த்தனைகளாயே மேற்கொண்டுவருவதாக பாதுகாப்புதரப்பினர் தெரிவிக்கின்றனர். மிக அண்மைக்காலத்தில் யாழ், மன்னார், வவுனியா பகுதிக்கான சீடிஎம்.ஏ,லங்காபெல் தொலைபேசி செயற்பாட்டினை அரசபாதுகாப்புதரப்பினர் செயலிழ்க்கச்செய்துள்ளனர்.

இது அரச கட்டுப்பாட்டுபகுதியிலிருந்து புலிகளுக்கு தகவல் சென்று அடைவதை கட்டுப்படுத்தவென காரணம் சொல்லப்படுகிறது .இச்சுதந்திர ஓட்டுகேட்பதற்காக பல தமிழ் ஒட்டுக்குழுவினரும் அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேகலிய ரம்புக்வெல வன்னியில் விவசாயம் செய்ய ஆவலாக உள்ளார்

புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.


நெல் விளையும் பாரிய நிலப்பரப்பையே படையினர் இன்று மீட்டுள்ளனர். இது ஒரு வரலாற்று வெற்றியாகவே கருதப்படுகின்றது.???

இதுவொரு இராணுவ வெற்றி மட்டுமல்ல, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைப்பற்றியதாக சொல்லப்படும் நெல் விளையும் பாரிய நிலப்பரப்பிலாவது நெல் விதைத்து சிறிலங்காவின் அரிசி விலையை குறைக்க முயற்சி செய்தால் நல்லது.

வழக்கம் போல கேகலியவின் அறிக்கைகள் கோமாளித்தனமாக அமைந்துள்ளது.

விமானப் படை வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற இருவர் மீது தாக்குதல் ஒருவர் பலி, மற்றவர் காயம்

திருகோணமலை கந்தளாய் தம்பலகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கியை பலவந்தமாகப் பறிக்க முற்பட்டவர்கள் மீது விமானப் படைவீரர் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும், மற்றையவர் காயமடைந்தும் உள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பற்றைக்குள் இருந்து பாய்ந்து வந்த இருவர் விமானப் படைவீரரைத் தள்ளிவிட்டு அவரது ஆயதத்தை பறிக்க முற்பட்டுள்ளனர்.

எனினும் சுதாகரித்துக் கொண்ட விமானப் படைவீரர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டு, ஏனையவர் காயமடைந்துமுள்ளார்.

பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவர்கள் இருவரும் புலி உறுப்பினர்களாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை நேற்றிரவு உப்புவெளி அபேபுர பகுதியில் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் பாதுகாப்புத் தரப்பினரிடம் சுமுகமான உறவுகளை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சார்ஜன்ட் சுருக்கிட்டு தற்கொலை

அங்குறு வதோட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த பொலிஸ் சார்ஜன்ட் பத்ம பந்து என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை காலை இவருக்கு சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மாலையில் தற்கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை வான் விபரங்களை வெளியிட நாம் தயார் சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸ்மா அதிபர் தயாரா?

வெள்ளை வானில் ஆட்களைக் கடத்தும் நபர்கள் குறித்த விபரங்களை வெளியிட நாம் தயாராக வுள்ளோம். அரசியல்வாதிகளுக்கு அடிபணியாது அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த புதிய பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண தயாரா? என்று ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த பண்டார கேள்வி எழுப்பினார்.

பொறுப்பு மிக்க அதிகாரியான பொலிஸ்மா அதிபர் வெள்ளை வானை பார்க்க தானும் ஆவலாக உள்ளதாக தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியதாகும். இத்தகைய கருத்தினை வெளியிடும் இவர் கடத்தல் சூத்திரதாரிகளை கைது செய்யும் வகையில் எவ்வாறு செயற்படுவார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெ?வித்த போதே அவர் மேற்கண்டவாறு தெ?வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; பொலிஸ் சேவை என்பது தற்போது அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடிபணிந்து செயற்படும் சேவையாக உருவெடுத்துள்ளது. அதன் பிரகாரமே சில பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டும் வருகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியினால் பொதுமக்கள் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவொன்றை உருவாக்கியுள்ளோம். இதன் இணைப்பாளராக நான் செயற்பட்டு வருவதுடன் அதன் செயலாளராக பிரபல சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார செயற்படவுள்ளார்.

அரசியல் தேவைப்பாட்டுக்காக செயற்பட்டு வரும் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாத்தல், அவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்தல், அரசியல்வாதிகளிடம் அடிபணியாது செயற்பட்டு வரும் அதிகா?களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுத்தல், மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் கீர்த்தியைப் பாதுகாத்தல் போன்ற நான்கு பிரதான காரணங்களை உள்ளடக்கியே இந்த பொதுமக்கள் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவினை உருவாக்கியுள்ளோம்.

இதேவேளை பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவோர் அவர்களது சேவைக்கா லம் முடிந்து ஓய்வு பெற்றதன் பின்னர் அரசியலிலோ அல்லது அரசாங்கத்தின் ஏதாவது ஒரு சேவையிலோ இணைந்து சேவையாற்றி வருகின்றனர். அந்த வகையில் இலங்கையின் 30ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்த விக்டர் பெரேரா தற்போது ஆளுனராக பொறுப்பேற்கவுள்ளார்.

அரசாங்கத்துக்கும் அதிலுள்ள சில அரசியல்வாதிகளுக்கும் அடிபணிந்து செயற்பட்டு வருகின்றவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி அவர்களுக்கான சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது.

நேற்று முன்தினம் காலை 31ஆவது பொலிஸ்மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்ட ஜயந்த விக்கிரமரட்ண தமது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றின் போது கடத்தல்களில் ஈடுபடுத்தப்பட்டு வரும் வெள்ளை வானை தானும் பார்க்க ஆவலாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

கடந்த சில காலங்களாகவே வெள்ளை வான் ஆயுததாரிகளால் நபர்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றது. இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்க வேண்டிய பொறுப்புமிக்க அதிகாரி ஒருவர் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருப்பதை நாம் கண்டிக்கின்றோம்.

இதேவேளை நேற்று முன்தினம் அம்பாறை அறுகம்பை பாலத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு வரும் சில சக்திகளே ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்துகின்றன என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அவர் கூறும் அரசாங்கத்திற்கு எதிரான சில சக்திகள் தம்முடனேயே இணைந்திருப்பதனை அவர் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே எமது கேள்வியாகும். ரூபவாஹினிக் கூட்டுத் தாபன ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளே மேற்கொண்டனவா என்று ஜனாதிபதி கருதுகின்றாரா? இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.

எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக கூறி தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் தலைமறைவு

எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக அச்சுறுத்தி அக்குழந்தையின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்திலிருந்து தப்பி வந்த சிப்பாயை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

23வயதான இந்த யுவதியின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருகிறார் யுவதி தனது எட்டுமாத குழந்தையுடன் ஆனமடுவில் உள்ள வீட்டிலிருந்த சமயம் இராணுவச் சிப்பாய் வானில் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து எட்டுமாத குழந்தையை கொலை செய்து விடுவதாக கூறி யுவதியை பாலியல் வல்லுறவு செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான கனரக ஆயுதங்கள் செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்தது!!!

வடபோர் முனையில் பயன்படுத்துவதற்கான பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் அடங்கிய தொகுதி ஒன்று செக் குடியரசிடமிருந்து கடந்த வாரம் கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

செக் தயாரிப்பான

40 குழல்கள் கொண்ட ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான 122 மில்லி மீற்றர் ஏவுகணைகள்,

பி.எம்.பி.-3 தொடர் இலக்க துருப்புக்காவிகளுக்கான உதிரிப்பாகங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பு வந்து சேர்ந்திருப்பதாக மேற்படித்தகவல் மேலும் தெரிவித்தது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் செக் நாட்டுக்குச் சென்ற சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் அடங்கிய குழு, இந்த ஆயுத தளபாடக்கொள்வனவை இறுதி செய்து செய்து விட்டு வந்தமை தெரிந்ததே.

இதேவேளை, ஸ்லோவோக்கியா நாட்டிடமிருந்து ஆர்.எம். 70 பல்குழல் பீரங்கிகளுக்கான ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவம் கடந்த மாதம் அவற்றினைப் பெற்றுக்கொண்டதாக தெரியவருகின்றது.

வன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும் காலம் நெருங்கி வருகிறது - ஜெயானந்தமூர்த்தி

சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமாதிகளை கட்டுவதற்கு விடுதலை புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 27 கிலோமீற்றர் 18கிலோமீற்றர் என நீளங்களை அளவிடும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் மறுபுறத்தில் விடுதலை புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோமீற்றரை தூரத்தை கணக்குப் போடத்தவரிவிட்டார்.

நீண்ட காலம் பொறுமையோடு, நீண்ட காலம் அமைதியைக்காத்துவிட்டோம். இந்த அமைதி நிச்சயமாக ஒரு பயங்கர போராக வெடிக்கப் போகின்றது. கிழக்கு மாகாணத்தை கைபெற்றியது போன்று வன்னிப் பிரதேசத்தையும் கைப்பெற்றிவிடலாம் என்ற அரசாங்கத்தினதும் படைத்தரப்பினதும் கனவு பொடிப்பொடியாக சிதறும் காலம் மிகவும் அண்மையில் நெருங்கிவிட்டது.

மணலாறு தொடக்கம் மன்னார் வரையும் மற்றும் முகாமலை, நாகர்கோவில் பகுதிகளில் கடும் போர் இடம்பெற்றுவருகின்றது. விடுதலை புலிகளின் பொறிக்குள் அகப்பட்டுள்ள படையினர் கண்பிதுங்கி தவிக்கின்றனர். அத்துடன் தன்னை தானே சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதனையும் காணலாம். இராணுவ நடவடிக்கையின் போது எப்பகுதியிலும் சண்டை செய்யமுடியாத நிலையிலும், முன்னேற முடியாத நிலையிலும் உள்ள படைத்தரப்பினர்க்கு கடந்த காலங்களிலும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி இராணுவ உதவிகளையும், நிதி உதவிகளையும், இராணுவத்தளபாடங்கள், தொழில்நுட்பங்களை கோரி உலக நாடுகளை கையேந்துவது வழக்கமாகிவிட்டது.

ஆனால் எமது போராட்டம் எங்களுடைய தேசிய தலைவரான மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் வன்னி மண்ணில் நின்று சகல படைக் கட்டுமானங்களையும், நன்கு பயிற்சி பெற்ற படையணிகளையும், கொண்டு சிறிலங்கா இராணுவத்திற்கு மாத்திரமல்ல உலக வல்லரசுகளுடன் போராடிக் கொண்டு உள்ளதை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் போராட்டத்தின் அடிநாதமாக விளங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன்.

உலகில் உள்ள விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் எதுவாக இருந்தாலும் தனியான விமானப் படை ஒன்றை அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் அது விடுதலை புலிகளையே சாரும் இதனையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எங்களுடைய தனியரசை சர்வதேசம் கட்டாயம் அங்கிகரிக்க வேண்டும். அவ்வாயின்றி சர்வதேசம் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடிக்குமானால் நாம் எமது தேசிய தலைவரின் காலத்தில் தனியாக பிரிந்து செல்வதைவிட வேறுவழியில்லை.

அதன்பின்னர் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் உருவாகும் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். போர்முனையில் உள்ள போராளிகள் தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். நானை உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் மறுநாள் தமிழீழம் மலரும். அதேபோன்ற வென்றெடுக்கும் தமிழீழத்தை சர்வதேசம் அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகள் இவ்வாறான பொங்குதமிழ் நிகழ்வுகள் மூலமாக பொங்கி எழுந்து வெளிக்காட்ட வேண்டும்.

எனவே விடுதலைப் போராட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவை இந்நாட்டு சட்டத்திற்கு இணைவாக செயல்பட்டு சிறிலங்கா படையினதும், அரசாங்கத்தினதும் தமிழர்க்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள், கொலைகள், கடத்தல்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியாவில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 19 பேர் படுகாயம்

புதன்கிழமை, 02 யூலை 2008, வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

பாலமோட்டைப் பகுதியை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

முன்நகர்வினை மேற்கொண்ட படையினருக்கு எதிராக இரவு 8:00 மணியளவில் விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தினர்.

இரவு 10:00 மணிவரை தொடர்ந்த தீவிர தாக்குதலில் படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

படையினர் அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

''இனிமேலும் பொறுக்க முடியாது!''; ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

ஊடகவியலாளரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடக செயற்பாட்டு பதில் முகாமையாளருமான நாமல் பெரேரா தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் முன்னணி ஊடக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்கள் என்பன இணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடாத்தின.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான ஊடக செயற்பாட்டாளர்களும், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஐந்து முன்னணி ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.கட்சி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னணி, இடதுசாரி முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சிவில் சமூக நிறுவனங்களும் கலந்து கொண்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காலி வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்ததுடன், பெருமளவிலான பொலிசாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

"நாமலைத் தாக்கியதன் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்து, புதிய பொலிஸ்மா அதிபரின் முதல்பணி குண்டர்களைக் கண்டுபிடிப்பதே, அமைச்சரவை உப குழுவுக்கு குண்டர்களைக் கண்டுபிடிக்க முடியாதா" எனும் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் ஏந்தியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, மஹ்ரூப், தயாசிறி ஜெயசேகர, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ரோசி சேனாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தனர்.

அத்துடன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், தேசிய சமாதானப் பேரவை, பிரயத்ன மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் வரையறையின்றித் தொடர்வதாகவும் அது குறித்து அரசாங்கம் பாராமுகமாகச் செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன், தொடர்ந்தும் அரசாங்கம் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் கவனம்செலுத்தத் தவறுமானால் பொதுமக்களையும் இணைத்துக் கொண்டு இப்போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமும் பொலிஸ் அதிகாரிகளும் பொறுப்பற்றவிதமான கருத்துக்களை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டினார். அத்துடன் புதிதாகப் பதவியேற்ற பொலிஸ்மா அதிபர், இதுதொடர்பில் வெளியிட்ட கருத்துக்களும் பொறுப்பற்றவிதமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், கருத்துத் தெரிவித்த சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய, தொடரும் ஊடகவியலாளர்களுக்கெதிரான வன்முறைகளைப் பொறுக்கமுடியாமலேயே ஜனாதிபதியைத் தேடி அவரது காரியாலயத்துக்கு அருகில் வந்துள்ளதாகவும், நாமல் பெரேராவைத் தாக்கியவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியது பொலிசாரினதும், ஜனாதிபதியினதும் கடமை எனவும் குறிப்பிட்டார்.

உலகில் மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க்: மகிழ்ச்சி குறைந்த நாடு சிம்பாப்வே-அமெரிக்க ஆய்வு

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் திகழ்வதாக அமெரிக்க அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வொன்று இந்த வாரம் தெரிவித்துள்ளது.

அரசியல் ஸ்திரமற்ற நிலையின் காரணமாக சிம்பாப்வே, இந்தத் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

97 நாடுகள் மத்தியில் அமெரிக்கா நடாத்திய இந்த ஆய்வில் அமெரிக்கா 16 வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

டென்மார்க் மகிழ்ச்சிகரமான நாடாக விளங்குவதுடன் சிறந்த பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் சமூக சகிப்புத்தன்மை ஆகிய அம்சங்கள் அங்கு காணப்படுவதாக அமெரிக்க தேசிய விஞ்ஞான நிலையம் தனது ஆய்வில் மேலும் கூறியுள்ளது.

இந்த ஆய்வில் முதல் 10 மகிழ்ச்சிகரமான நாடுகளாக டென்மார்க், பியுற்றோ றிக்கோ, கொலம்பியா, ஐஸ்லாந்து, வட அயர்லாந்து, அயர்லாந்து, சுவிஸ்லாந்து, நெதர்லாந்து, கனடா மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பான அமைப்பாக இலங்கை கருதுகிறது- ஐ.நா. அதிகாரி

இலங்கை உட்பட ஏனைய நாடுகள் சில, ஐக்கிய நாடுகள் சபையை பக்கச்சார்பற்ற, சுதந்திரமான ஒரு அமைப்பாகக் கருதுவதில்லையென ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சிரேஷ்ட ஐக்கிய நாடுகள் சபைக்கான இராஜதந்திரியுமான லக்டார் ப்ராஹிமியே இவ்வாறு கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, உலகத்தின் பக்கச்சார்பற்ற அமைப்பு என்ற மதிப்பைக் குறைப்பதற்கு சக்திவாய்ந்த நாடுகள் முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் அவர், ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பற்றதென நீண்டகாலத்துக்குப் பார்க்கமுடியாத நிலைமை உள்ளதாக ஐ.நா. அலுவலகர்கள் தமது குழுவுக்குக் கூறியிருப்பதாக ப்ராஹிமி தெரிவித்துள்ளார்.

“ஐ.நா. குழுவினர் எங்கு சென்றாலும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் என்றே அவர்கள் கூறப்படுவார்கள். ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பான அமைப்பு என்ற கருத்து கடந்த சில காலமாக நிலவி வருகிறது. அரேபிய, முஸ்லிம் நாடுகளில் மாத்திரமன்றி, ஜெனீவா, ரோம், நைரோபி மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் இவ்வாறான கருத்து நிலவிவருகிறது” என அவர் கூறியுள்ளார்.

சக்திவாய்ந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதால், தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட காலத்துக்குக் காலம் உறுப்பு நாடுகளான 192 நாடுகள் சார்பாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கருத்துத் தெரிவிக்க முடியாமல் போயுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்குத் தாக்குதல் நடத்தப்போவதாகப் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாக ப்ராஹிமி வெளியிட்டுள்ள 103 பக்க அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீ.டி.எம்.ஏ தொலைபேசி அரசாங்கத்தால் துண்டிப்பு - மொபிரெல் தொலைபேசி யாழ் குடாவில் விஸ்தரிப்பு

"மொபிரெல்' தொலைபேசிச் சேவை குடாநாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது 19 கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன
யாழ்.குடாநாட்டின் சகல பிர தேசங்களுக்கும் "மொபிரெல்' கைய டக்கத் தொலைபேசிச் சேவை விஸ் தரிக்கப்படவுள்ளது. இதற்கென 19 தொலைத்தொடர்புக் கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.
இது பற்றி நேரடியாக மதிப்பீடு செய்து பணிகளை ஆரம்பிப்பதற் கென உயர்மட்டத் தொழில் நுட்பக் குழுவொன்று கடந்தவாரம் யாழ்ப் பாணம் விஜயம் செய்திருந்தது.


இந்தக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 9 தொலைத் தொடர்புக் கோபுரங்கள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன. யாழ்.நகரை அண்டிய பகுதிகளிலும் கோப்பாய்ப் பிரதேசத்திலும் இந்தக் கோபுரங்கள் அமையவுள்ளன.

இதற் கான உபகரணங்களில் ஒரு தொகுதி யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட் டுள்ளதாக "ரெலிக்கொம்' நிறுவனத் தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்.வந்த இந்தத் தொழில்நுட்பக் குழுவினர் ஒருவாரம் இங்கு தங்கி நின்று தொலைத் தொடர்புக் கோபுரங் கள் அமையவுள்ள இடங்களை நேரடி யாகப் பார்வையிட்டனர். இதன் முதற் கட்டமாக 9 இடங்களில் கோபுரங் களை அமைத்து "மொபிரெல்' கைத் தொலைபேசிச் சேவையை விஸ்தரிப் பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் செப் ரெம்பர் மாதத்துக்குள் நிறைவு செய் யப்படும் எனவும் அடுத்த கட்டப் பணிகள் இவ்வாண்டு டிசம்பர் மாதத் துக்குள் நிறைவடையும் எனவும் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் "மொபிரெல்' சேவை குடாநாடு முழுவதும் கிடைக் கும் என வும் அந்த ரெலிக்கொம் அதி காரி மேலும் தெரிவித்தார்.

ரெலிக்கொம்மின் சித்தன்கேணி, சுன்னாகம், நெல்லியடி பரிவர்த்தனை நிலையங்களிலும் வேறு காணிகளிலும் இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பல வாரமாக புலிகள் யாழ் குடாவின் மீது தாக்குதல் நடாத்தவுள்ள்தாக பாதுகாப்புதரப்புக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து யாழ் குடாவிற்கான சீடிஎம்.ஏ இனைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ள் சூழ்லில் மொபிரெல் விஸ்தரிக்கப்படுவதான செய்தி சீடிஎம்.ஏ வாடிக்கையாளர்களை விசனமடைய செய்துள்ளது.

சிறீலங்காவில் யாழ் மாவட்டத்திலேயே தொலைபேசி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

கல்முனையைச் சேர்ந்த 1 வயதுக் குழந்தை உட்பட்ட குடும்பத்தினர் ஹொரனையில் கைது

கல்முனையில் இருந்து ஹொரனைப் பகுதிக்கு சென்ற 1 வயதுக் குழந்தை உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளர்.

திருமண நிகழ்வொன்னிற்காக புகையிரதமூலம் ஹொரண சென்று பேருந்து தரிப்பிடத்தில் நின்ற வேளை கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட குடும்பத்தின் இளைய மகன் ராஜரட்ணம் லோரன்ஸ் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளார்.

இந்தக் கைது குறித்து தகவல்களைப் பெறச்சென்ற அருட் தந்தை பற்றிக் லோறன்ஸை ஹொரன காவல் நிலையப் பொறுப்பதிகாரி அனுரறன்தெனிய கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வயதுடைய ராஜமணி ராஜரட்ணம், 27 வயதுடைய ராஜரணம் கிறிஸ்ரோபர் பிறின்ந், 23 வயதுடைய ராஜர்ணம் கிறிஸ்ரோபர் பிரியாளினி, 23 வயதுடைய அருண் தர்மினி சொலமன், 1 வயதுடைய பிராங்லின் தெரேசா ஆகியோரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தமது ஆள் அடையாள அட்டை, தமது பகுதி கிராம சேவகரின் கடிதம், திருமண அழைப்பிதழ் என அனைத்து ஆதாரங்களையும்; காவற்துறையினரிடம் காண்பித்த பின்பும், இவர்கள் கல்முனைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈழத் தமிழர் மீதான வெறுப்பின் அடையாளமே கருணாநிதியின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களில் சிலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஆவணங்களைப் பெற்று தமிழகத்தில் சொந்து வாங்குவதாக அரசின் கவனத்திற்கு புகார்கள் வந்துள்ளன.

இவற்றைப் பரிசீலித்து இந்தியக் குடிமக்களாக இல்லாதவர்கள் நிலம் மற்றும் வீடு வாங்குவதை மாவட்ட ஆட்சியர்களும் காவல் துறையினரும் தடுக்க வேண்டும். அகதிகள் என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அவரின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற வெறுப்பின் அடையாளமாகும். சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் விரட்டியடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற ஈழத்தமிழர்களில் பலர் அரசு அமைத்திருக்கிற அகதி முகாம்களில் போதுமான உணவின்றியும் சுகாதாரம், கல்வி வசதிகள் இல்லாமலும் வாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதை பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.

அகதிகள் முகாம்களில் உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்துவற்கான வழி எதையும் தமிழக இந்திய அரசுகள் செய்யவில்லை. அகதிகளின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் முன்வந்தபோது இந்திய அரசு அவர்களின் உதவியை ஏற்க மறுத்துவிட்டது.

அரசு உதவியை எதிர்பாராமல் தங்களுடைய சொந்த முயற்சியின் பேரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் இன்னொரு வகையினர்.

தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் மானத்துடன் வாழவும் அவர்கள் தமிழ்நாட்டில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் சிலர் வீடுகளை வாங்கியும் குடியிருந்து வருகிறார்கள்.

இலங்கையில் போர் ஓய்ந்து அமைதியான சூழ்நிலை திரும்பிய பிறகு இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் தங்கியிருக்கப் போவதில்லை. தங்கள் நாட்டிற்கு நிச்சயமாகத் திரும்பிப் போய்விடுவார்கள். நமது நிழலில் அண்டியிருக்க வந்த நமது சகோதரர்களை விரட்டியடிப்பதற்கு கருணாநிதி முற்படுகிறார்.

தமிழகத்தைச் சுரண்டவந்த மார்வாடியும், குஜராத்தியும், மலையாளியும் பிறகும் தமிழகத்தில் நிலம் வீடுகள் வாங்கிக் குவிக்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழை விவசாயிகளிடமிருந்து பறித்துத் தர கருணாநிதி கொஞ்சமும் தயங்கவில்லை.

அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் கொள்ளையடித்துத் திரட்டியுள்ள பணத்தில் தமிழகமெங்கும் நிலம் வீடு வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தடுப்புக்காவலில் இருந்த முத்துசாமி இலங்கோவனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ilango-singapore.jpgவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தொடர்புகளை வைத்திருந்ததுடன் அவர்களுக்கு உதவிகளை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் 100 நாட்களுக்கு மேலாக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முத்துசாமி இலங்கோவனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்ற நீதவான் மஞ்சுள திலக்கரட்ன இந்த உத்தரவைப்பிறப்பித்தார். சிங்கபூர் பிரஜையான இலங்கோவன், ஐரிஸ் மோனா கப்பலின் உரிமையாளருமாவார்.

இவர்கள் இலங்கை வந்திருந்த போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து பிரபாகரனுடன் முல்லைத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றபட்டது.

இலங்கோவனுக்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் கே.பிக்கும் இடையில் தொடர்புகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்தது.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கோவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பண்டார ஏக்கநாயக்க சந்தேக நபர் 90 நாட்களுக்கு மேலதிகமாக காவல்துறையினரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர் தொடர்பான விசாரணைகள் எந்தளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து இதுவரை அறிக்கையிடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தேகநபர் வெளிநாட்டவர் என்பதால், அவருக்காக ஆஜராகவும் உதவவும் எவரும் இல்லாத நிலையில் சந்தேகநபரை விளக்கமறியில் வைக்குமாறு நீதாவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தேக நபரை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்குமாறு காவல்துறையினர் கோரிய போதும் அதற்கேதுவான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை.

இதனையடுத்து காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் சிறைச்சாலை ஆணையாளருக்கு நீதவான் உத்தரவிட்டார். சந்தேக நபர் சார்பில் பண்டார ஏக்கநாயக்க, மஞ்சுள பத்திராஜ, உபாலி ரஞ்சித் காரியவசம் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் ஈ பி டி பிக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி முயற்சி

கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் இணைந்து செயற்பட்டு வரும் பிள்ளையானை அழிப்பதற்கு முன்னாள் துணைப்படைத் தலைவரான கருணா முயற்சித்து வருகின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கு உதவிகளைப் புரிந்து பிள்ளையானை அழிக்கப்பேவதாக கருணா தெரிவித்துள்ளார் என்று கிழக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவின் குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அங்குள்ள தடுப்பு முகாமில் கருணா தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கில் நடைபெற்ற தேர்தலை கருணா எதிர்த்ததுடன், பிள்ளையானை அதில் போட்டியிட வேண்டாம் என்றும் கருணா தெரிவித்ததாக அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

எனினும் பிள்ளையானை மகிந்த தன்னுடன் இணைத்துக்கொண்டது கருணாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே கிழக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கிழக்கில் படையினர் பாதுகாப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றனர்.

கிழக்கில் தனியார்துறையைச் சேர்ந்த எல்லா பணியாளர்களும், பொதுமக்களும் குற்றப்புலனாய்வுத்துறையினாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்லா மக்களையும் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகள் செய்து வருவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே எதிர்வரும் மூன்று மாதங்களில் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலினை கிழக்கில் நடத்தலாம் என்று பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஈ பி டி பிக்கும் பிள்ளையான் குழுவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். ஈ பி டி பியும் பிள்ளையான் குழுவும் அண்மையில் கிழக்கில் தமக்கிடையில் முரண்பாடுகளை வளர்த்து வந்துள்ளன.
இதன் ஒரு உச்சகட்டமாக இரண்டு தரப்பினரும் அண்மைக் காலத்தில் ஆட்கடத்தல்களிலும் ஈடுபட்டனர்.

அத்துடன் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஈ பி டி பி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலைகளிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு ஈ பி டி பியின் நான்கு உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் பிள்ளையான் குழு தமக்கெதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு ஈ பி டி பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தமக்கு ஆதரவாகச் செயற்படும் இந்த இரண்டு குழுக்களையும் வைத்துக்கொண்டு கிழக்கில் இயங்குவதைச் சாதகமாகக் கருதுகிறது.

எனவே இரண்டு தரப்புக்கும் இடையில் இந்த வாரம் ஜனாதிபதியின் தலைமையில் இணக்கப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை திரும்பியதும் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பெண்ணிடம் குடிவரவு முத்திரைகள் - சிங்கப்பூரில் கைது

singapore-stambs.jpgஇலங்கையைச் சேர்ந்த 29வயது பெண்ணொருவரிடம் இருந்து குடிவரவு ரப்பர் முத்திரைகள் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் சிங்கபூர் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடைகளை வைத்திருந்த பொதி ஒன்றில் இரண்டு காற்சட்டைகளில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கபூரில் குடியிருப்பதை உறுதிசெய்ய கூடிய குவரவு முத்திரைகள் இதில் காணப்பட்டதாக சிங்கபூர் குடிவரவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிங்கபூரில் விசா அனுமதி முடிந்த நிலையில் தங்கியிருப்போருக்கு அபராதம், அல்லது 6 மாத சிறைத்தண்டனை, அல்லது மூன்று மாத சிறைத்தண்டனையுடன் மூன்று பிரம்படிகள் தண்டனைகளாக வழங்கப்பட்டு வருகின்றன.