Saturday, 22 March 2008

இப்படி தான் நாம் அடிமை ஆனோம்..........



நாம் மீட்டு எடுக்க வேண்டிய மூன்று விஷயங்கள்,

1.கல்வி ‍: மெக்காலே அடிமை கல்வி முறையை விட்டொழித்து , நமது சொந்த கல்வி முறையிலேயே கற்போம்.
2.பண்பாடு : நமது பண்பாட்டை சீர்குழைக்கும் விஷயங்களை நொருக்குவோம் உதாரணத்திற்கு கோட்டு , சூட்டூ , டை , மட்டமான ஊடகங்கள் ,சேவை எனும் பெயரால் மதமாற்றம் செய்யும் மிஷனரிகள், இங்கிலிபீசூ ,பப் , ஃபாசன் ஷோ , அனுமர் வால் போல் பட்டியல் நீலும்.................
3. ஆன்மீகம் : பாரதத்தின் ஆன்மீக வளத்தை பற்றி நாம் அறியாததா யோகம் என்ன‌, தவம் என்ன‌ , தானம் , வேதம், யாகம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்...........

களை யிழந்த நாட்டிலே முன்போல்
களை சிறக்க வந்தனை ! வா! வா!
‍ -அமரன் பாரதி.




Three things which we have to retreive is ,
1.Education - leave this stupid macaulay system and adopt our own system.
2.Culture - We have to kick off things which spoil our culture like coat,shoes,tie,certain medias,conversions by missionaries in the name of service,speaking in english,pubs,fashion shows etc,etc.....
3.Sprituality - True indian does nt need any thing abt this bcos he know Spritual wealth of Bharat like yoga,yaga,vedha, meditation, alms and so on.....

எண்களின் அர்த்தங்கள்

நாம் இப்போது உபயோகிக்கும் எண்கள் அராபிய எண்கள் அல்லது போனிசியன் எண்கள் என்று அழைக்கபடுகின்றன. சுமார் 3000 வருடங்களுக்கு முன்னர் லெபனான், சிரியா பகுதியில் வாழ்ந்த போனிசியன் வியாபாரிகள் இந்த எண்களை அவர்கள் வியாபாரம் செய்த இடங்களில் பிரபலமாக்கினர். இந்த எண்கள் அதன் அர்த்தத்தை அதன் எண் வடிவங்களில் அமைத்து வைத்துள்ளன. கீழ்க்காணும் படத்தில் அவை விவரிக்கப்படுகிறது.




ஒவ்வொரு எண் வடிவத்திலும் உள்ள கோணங்களின் (Angles) மொத்த எண்ணிக்கையே அதன் மதிப்பாகிறது. இந்த படத்தில் கோணங்கள் o என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த எண் வடிவங்கள் 3000 வருடங்கள் முந்தையவை ஆதலால் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கின்றன.
thankyou:tamil maasala

Friday, 21 March 2008

கருப்பையை வாடகைக்கு விட்டு இந்தியப் பெண்கள் சாதனை.

பீனா என்ற பெண் கருப்பையை வாடகைக்கு விட்டு ஒரு அழகிய வெள்ளையினக் குழந்தையை அமெரிக்க உயிரியல் தாய்க்காகப் பெற்றெடுத்துள்ள காட்சி.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு கூட இவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.



IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கும் வாடகைத் தாய்களுக்கும் உதவும் டாக்டர் Patel.

vitro முறைக்கருக்கட்டல் பொறிமுறையில் தேர்ச்சி பெற்ற இந்திய பெண் வைத்தியரான Dr Patel கூறுகையில் இந்த முறைமூலம் ஒருவருக்கு ஒருவர் உதவக் கூடியதாக இருப்பதுடன் பணமும் சம்பாதிக்க முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கும் ஓரளவு வருமானம் வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இதே முறையை தான் அமெரிக்காவில் மேற்கொண்டால் இதை விட உயர்வாக சம்பாதிக்க முடியும் எங்கிறார்.



கருப்பையை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வீடு கட்டும் புஷ்பா எனும் பெண்ணும் அவளின் குடும்பத்தினரும்.

கருப்பையை வாடகைக்கு விடுதல் உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகி உள்ள போதும் இந்தியாவில் கூலிக்கு வாடகைக்கு விடுதல் சட்டப்படி பெண்களுக்கு அனுமதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலதிக தகவல் இங்கு.

thank you:vingaana kuruvi

உலகிலேயே சுத்தமான நகரம்: சுவிட்சர்லாந்த் ஜூரிச்சுக்கு முதல் இடம்

ஐரோப்பிய நாடுகளில், வெளிநாட்டினரை உபசரிப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் பின்தங்கியுள்ள நகரங்களில், முதலிடத்தில் உள்ளது பாரிஸ். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது லண்டன். மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் மாஸ்கோ பிடித்துள்ளது. சர்வதேச அளவில், வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. லண்டனும், பாரிசும் தான் சர்வதேச அளவில், பொருட்கள் விற்பனை, உணவகங்கள், பொது பூங்காக்களுக்கு புகழ்பெற்றுள்ளன. பல்வேறு விஷயங்களில், முன்னணி இடங்களில் உள்ள பாரிஸ் மற்றும் லண்டன், அழுக்கான, குப்பை மிகுந்த நகரங்கள் பட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரம் தான், உலகிலேயே சுத்தமான நகரம் என்ற முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்நகரத்தில் பொழுதுபோக்கு அம்சம் மிகக்குறைவு. சுத்தமான நகரங்கள் பட்டியலில், கோபென்ஹாகன், ஸ்டாக்கோம் நகரங்கள் அடுத்த இடங்களை பிடித்துள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமுள்ள நகரங்களில், பிரசெல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

வாங்க, ஹேக்கிங் பண்ணலாம்...சூடான பதிவு...பகுதி -1 (WebCam Hacking using google )


(இந்த பதிவு ஒரு விழிப்புணர்வை தருவதற்காகவும், தொழில் நுட்ப பாதுகாப்பு அவசியம் என்பதை உணர்த்தவே... எல்லா நாடுகளிலும் தகவல் பாதுகாப்பு சட்டங்கள் உண்டு. இதனை செயல் படுத்தி பார்ப்பது சட்டப்படி தவறு. இனி உங்கள் சொந்த முடிவே... நான் இதற்கு பொருப்பாளி இல்லை... I am not responsible for any of your action...)


தொன்னந் தட்டி...தொன்னந் தட்டி... தொன்னந் தட்டி... ....

இதனால சகலமான தமிழ் பேசும், படிக்கும் மக்களுக்கு தெரிவிச்சுக்கிறது என்னன்னா...
இணையத்துல திருட்டு பசங்க தொல்ல அதிகமாயிட்டதால, அதனை பத்தின விவரம் இல்லாத மக்க ஏமாந்து போராங்க... இனிமே மக்க எல்லாரும் அவங்க மென்பொருள் மற்றும் கணிணியில் தேவையான பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்துக்கனும்னு கேட்டுக்குறோம்... தவறுனா, அவங்க தகவல் எப்போ வேணும்னாலும் திருடு போகலாம்... எப்படி திருடு போகலாம்னு வாரா வாரம் சொல்லப் போரோம்... கேட்டுக்கங்க......சாமியோவ்.........

தொன்னந் தட்டி...தொன்னந் தட்டி... தொன்னந் தட்டி... ....

அடுத்த வீட்ட எட்டி பாக்கிறதுன்னா ரொம்ப பேருக்கு ஒரு அலாதி ஆனந்தம் தாங்க... நிறைய பேரு, வீட்டு கதவு, ஜன்னல், இண்டு இடுக்கு எல்லாம் பூட்டிட்டுவாங்க... ஆனால், அவங்க வீட்ல, அலுவலகத்துல இருக்கிற வெப் கேமிராவுல ஒரு சின்ன பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்ய தவறுனதால, உலகமே அவங்கள பார்க்கலாம்...

இணையத்துல வெப் கேமிராவை ஆக்கிரமிக்கிறது எப்படின்னூ பார்க்கலாம்.

உண்மை 1 - ஒரு கணிணிய இணையத்துல நீங்க இணைத்தால், அதுக்கு ஒரு Public IP கிடைத்தால், அந்த கணிணிய உலகத்துல எந்த மூலையில இருந்தும் தொடர்பு கொள்ளலாம். சரி..அதுக்கு என்ன? அது தான் எங்களுக்கு தெரியும்ல...

உண்மை 2- இப்போ, அந்த கணிணியில ஒரு வெப் கேமிராவை நிலை நிறுத்தம் (Install) செய்யறீங்க. இந்த கேமிராவை கட்டுப்படுத்த, அந்த கேமிராவோட வந்த ஒரு மென்பொருளையும் நிலை நிறுத்தம் (Install) செய்யவீங்க. அந்த மென்பொருள் உங்களுக்கு ஒரு உபயோகிப்பாளர் தொடர்பி (User Interface) யாக, இன்டெர்னெட் எக்ஸ்ஃப்ளோரை (Internet Explorer -ie) பயன்படுத்த சொல்லும். ஆமா... இப்போவெல்லாம் பொதுவாகவே முன்வாசலாக (Front End tool) இன்டெர்னெட் எக்ஸ்ஃப்ளோரர் தான் பயன்படுது. அது தான் எங்களுக்கு தெரியுமே... வந்துட்டாய்ங்க..சொல்றதுக்கு...

அண்ணே, இப்போது உண்மை-1 யும், உண்மை 2யும் சேர்த்து முடிச்சு போடுங்க... உங்க கண்ணி இணையத்துல இருக்கும் போது, அதுல வெப்கேமரா இருந்து, அதை முறையா பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்யாம இருந்தா, யாரு வேணும்னாலும் உங்க கேமராவை பார்க்கலாம்...அவ்வ்வ்வ்வ்...

நெசமாவ...??? இத தான் மில்லியன் டாலர் கேள்வின்னு சொல்லுவாங்க...

கூக்லி (www.google.com) யில், சில குறிப்பிட்ட முறையில் தேடுனா (google hacking), அதுவே அந்த மாதிரியான பாதுக்காப்பு இல்லாத வெப் கேமராக்களை காட்டி குடுத்துடும். நம்ம சும்மா அது மேல சொடுக்கி, உள்ளே போய் பார்க்கலாம். சில சமயம் வெப் கேமிராவை மொத்தமாக(admin) கட்டுப் படுத்தலாம்...

சில நேரம், உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கேட்கும். guest/guest அல்லது admin/admin உபயோகிக்க திறந்து கொள்ளும்... சில அறிவு ஜீவிகள் மட்டும் சுதாரித்து, பாதுகாப்பு செட்டிங்க் (Configuration Settings) செய்திருப்பாங்க.

சரி... இப்ப எப்படி வெப் கேமிராவை ஆக்கிரமிக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

படி 1: இன்டெர்னெட் எக்ஸ்ஃப்ளோரில் (Internet Explorer -ie) www.google.com type pannnga..



படி 2: தேடுதல் பெட்டியில் (search box) கீழே உள்ள ஏதாவது ஒன்றை தட்டச்சு செய்யலாம்.
inurl:/view.index.shtml
inurl:view/indexframe.shtml
inurl:lvappl
inurl:/view/shtml
inurl:viewerframe?mode=



படி 3: வந்த பட்டியலிடப்பட்டுள்ள யூஆர்எல் (URL) ஏதேனும் ஒன்ரை சொடுக்க, அது மைக்ரோசாஃப்ட் ஆக்டிவ் எக்ஸ் (Microsoft Active-x)-ஐ பதிவிரக்கம் செய்ய சொல்லும். குறிப்பு - சில கேமராக்களின் முன்வாசலாக (Front End tool) பட்சட்த்தில், ஜாவா பதிவிரக்கமாக ஆரம்பிக்கும்.









படி4: பதிவிரக்கம் செய்த பின்னர், அது அந்த வெப்கேமராவிற்குரிய மென்பொருளை பதிவிரக்கம் செய்ய சொல்லும்.



படி5: அதன் பின்னர், நேரடி ஒளிபரப்பை காணலாம்.





தடுப்பது எப்படி?

1. உங்கள் வெப்கேமராவிற்கு, உடனடியாக உபயோகிப்பாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை அமுல் படுத்துங்கள்.

2. அறியாமை என்பது ஒரு காரணமாக கொள்ளப் படாது. இணைய தள பாதுகாப்பை அறிந்து மற்ற நண்பர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்...

முக்கிய குறிப்பு - பொதுவாகவே, நீங்கள் ப்ரொசிங் பண்ணிய பின்னர், history மற்றும் cookies-ஐ அழித்து விடுங்கள்.

தாய்லாந்த்தில் யானைகள் திருவிளா

The image “http://nitharsanam.net/wp-content/uploads/2008/03/aaa-011.jpg” cannot be displayed, because it contains errors.

Wednesday, 19 March 2008

ஆகாது-முடியாது-நடக்காது

நீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் ·புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் "இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.

திடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். "ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்"

இப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் 'இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது" என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும் negative மனிதர்கள் இவர்கள்.

பல பேருடைய ஆகாது-முடியாது-நடக்காது அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலமாகவோ, ஆழ்ந்த அனுபவ மொழியாகவோ இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தங்கள் அறிவுக்கெட்டாதவைகளையும், தங்களால் சாதிக்க முடியாதவைகளையுமே இவர்கள் இப்படி சொல்லத் துவங்குகிறார்கள்.

எல்லா நல்ல காரியங்களும், சாதனைகளும், இவர்களைப் பொருட்படுத்தாமல் முயல்வதாலேயே நடக்கிறது. யாராவது இவர்களைப் பொருட்படுத்தி தயங்க ஆரம்பித்தால் அவர்கள் சாதனைகள் குறைப் பிரசவத்தில் உயிரிழக்கின்றன. எத்தனை அருமையான எண்ணங்கள், அருமையான திட்டங்கள் இப்படி மற்றவர்களது எதிர்மறை நோக்குகளாலும், பேச்சுகளாலும் விதையிலேயே கருகி விடுகின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பெரிய சரித்திரம் படைக்கும் விஷயங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன தினசரி வாழ்க்கை விஷயங்களில் கூட இந்த மனிதர்கள் மற்றவர்கள் வாழ்க்கையைத் தேக்கமடையச் செய்து விடுகிறார்கள். மற்றவர்களது திறமைகளை 'இது பெரிய விஷயமில்லை, இதனால் பெரிய பயன் இல்லை' என்றெல்லாம் சொல்லி முளையிலேயே கிள்ளி விடும் இவர்கள் சில சமயங்களில் தயாராக சில உதாரணங்களையும் வைத்திருப்பதுண்டு. "இப்படித் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்...."

தங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. அப்படி உறுதியாக இல்லாதவர்கள் போகின்ற பாதை சரியாக இருந்தாலும், தங்கள் பாதையில் சந்தேகம் கொண்டு பயணத்தை நிறுத்தியோ, மாற்றியோ தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.

எனவே இப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக விலகி இருங்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருப்பது மிக நல்லது. அவர்களுக்குப் புரிய வைக்கவோ, உங்கள் தரப்பு வாதங்களை தெளிவு படுத்தவோ முயலாதீர்கள். அது வீண். எதையும் திறந்த மனதோடு கேட்டு தீர்மானிப்பவர்களாக இது போன்ற மனிதர்கள் என்றும் இருப்பதில்லை. முன்பே தீர்மானித்து விட்டவர்களிடம் நீங்கள் விளக்க முயல்வது கவிழ்த்து மூடிய குடத்தில் தண்ணீர் நிரப்ப முயல்வதற்கு சமம். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தந்து விடாதீர்கள்.

இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான நோயாக எய்ட்ஸை சொல்வார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை முற்றிலும் அழித்து எல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல்களுக்கும் நம் உடலை எதிர்ப்பில்லாத இரையாக்குகின்றது இந்த நோய். இந்த அவநம்பிக்கையும் அதைப் போலவே கொடுமையானது. வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து எந்த சவாலையும் சந்திக்க முடியாத நிராயுதபாணியாக நம்மை ஆக்கி விடுகிறது இந்த அவநம்பிக்கை என்னும் நோய்.

கடைசியாக ஒரு வார்த்தை- இந்த ஆகாது-முடியாது-நடக்காது என்னும் அவநம்பிக்கை சொற்களை
நீங்களும் மற்றவர்களிடம் எப்போதுமே கவனக் குறைவாக பயன்படுத்தாதீர்கள். அந்த நோயை இந்த சமுதாயத்தில் பரப்பும் சாதனமாக என்றுமே மாறி விடாதீர்கள்.

-என்.கணேசன்

உலகிலேயே ஒழுக்கக்கேடு மிக்க பெண்கள் இருக்கும் நாடு பட்டியலில், முதல் இடத்தை பிடித்துள்ளது நியூசிலாந்து

உலகிலேயே ஒழுக்கக்கேடு மிக்க பெண்கள் இருக்கும் நாடு பட்டியலில், முதல் இடத்தை பிடித்துள்ளது நியூசிலாந்து. இங்கு அந்தரங்க உறவுக்காக பெண்கள் அலைவது, ஆய்வில் தெரியவந்துள்ளது.நியூசிலாந்து பெண்களுக்கு, குடிப்பழக்கமும், விரும்பிய ஆண்களுடன் தேவைப்படும் போதெல்லாம் அந்தரங்க உறவு வைத்துக் கொள்வதும் சர்வசாதாரணமாக உள்ளது. சராசரியாக ஒரு பெண், 20 ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறார். இது சராசரி கணக்கு தான். 20க்கு அதிகமான ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வோரும் உண்டு; சற்று குறைவான எண்ணிக்கையில் மிதமாக இருப்போரும் உண்டு. ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் பெண்களை விட, இது இரண்டு மடங்கு அதிகம். சர்வதே அளவில், மூன்று மடங்கு அதிகம்.நியூசிலாந்தில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் அந்தரங்க உறவுக்காக ஏங்குகின்றனர். ஆண்களுடன் பழகி, அதன் பின் அந்தரங்க உறவு கொள்ள நாள் கணக்கில் காத்திருக்க, அவர்கள் தயாரில்லை. பார்த்ததும் பிடித்து விட்டால், உடனே அந்தரங்க உறவுக்கு தயாராகி விடுகின்றனர். ஓர் ஆணிடம் திருப்தி அடையாவிட்டால், மீண்டும் அவருடன் உறவு வைத்துக் கொள்ள விரும்புவது இல்லை. புது ஆள் தேடத் துவங்கி விடுகின்றனர்.இந்த வயது பெண்களுக்கு, குடிப்பதும், அந்தரங்க உறவு கொள்வதும் தான் மிகவும் பிடித்தமான பொழுது போக்காக உள்ளது. குடித்ததும், அதை கொண் டாட ஆண் துணை தேடுகின்றனர். அந்தரங்க உறவின் போது, பெண்களின் விதவிதமான அணுகுமுறைக்கு ஆண்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆண்களில் 28 சதவீதம் பேர், வலுக் கட்டாயமாகவும், விருப்பம் இல்லாமலும் பெண்களால் அந்தரங்க உறவுக்கு கட்டாயப் படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

Monday, 17 March 2008

த்ரிஷா - ஆறிலிருந்து இருபத்தைந்து வரை!!

“அய்யா.. ஜாலி.. நான் ஸ்கூலுக்கு போகப்போறேனே?”


“ஏஞ்சலுக்கே ஏஞ்சல் ட்ரெஸ்ஸா?
இதெல்லாம் ஓவரா தெரியலை?”

“கல்யாணம் தான் கட்டிக்கினு பாட்டுக்கு டேன்ஸ் ஆட
அப்பவே பிராக்டிஸ் பண்ணிட்டேன்!”

“மம்மி டாடியோட ஒரு பர்த்டே பார்ட்டி. யப்பா..

“டிஸ்னி லேண்ட் போனப்போ எடுத்தது. நீங்களே சொல்லுங்க.
நான் அழகா இருக்கேனா? இல்லேன்னா மிக்கி மவுஸ் அழகா இருக்கா?”

“கனா காணும் காலங்கள்!”

“க்க... க... க்க.... கல்லூஊர்ரீச் சாலை!”

“99ல் மிஸ் சென்னை. 2008ல் மிஸ் கோலிவுட்!”


“அப்போவெல்லாம் நான் தான் நெ.1 மாடல்!”

“சினிமாவில் கல்லக்கல் எண்ட்ரீ”

Sunday, 16 March 2008

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அரங்கம்

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முக்கிய அரங்கங்களில் ஒன்றான தேசிய அரங்கம் மீதான பரிசோதனை பணி முடிவடைந்துள்ளது. இது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மையத்தில் கட்டி முடிக்கப்பட்ட முதல் அரங்கமாகும்.



Location: Olympic Green;

Total land surface: 258,000 sq m;

Seats: 91,000;

Designer: Herzog & DeMeuron (Swiss) and China Architecture Design Institute;







இது, தற்போது சீனாவில் மிக முன்னேறிய வசதிகளையும் முழுமையான செயல்திறனையும் கொண்ட அரங்கமாகும்.

Saturday, 15 March 2008

ராசியான மனுஷன் :


நம்பல மாதிரி இவருக்கும் அவசர வேளையா இருந்திருக்கும்,

நம்பல மாதிரி இவரும் கூட்டத்தில முந்தியடிச்சு ஏறியிருப்பாரு்,

நம்பல மாதிரி இவரும் நேரத்துக்கு போக நினைச்சாரு,

ஆனா............ .....
இவர் தொடர் வண்டிக்கும் புகையிரத மேடைக்கும் (ப்லாட்ஃப்பாம்) நடுவில் விழுந்தார்.......

எட்டு தொடர் வண்டி பெட்டிகள் இவர் மேல் நொடி பொழுதில் சென்றது...........

என்ன ஆச்சு தெரியுமா?


கடவுளா பாத்து ஒரு மனுஷன அனுப்பி இவர அசையாம பாத்துக்கிட்டாரு........
ஒரு கீறல் கூட விழாமல் இவரு தப்பிச்சுட்டாரு.....

விதினு ஒன்னு இருக்கா இல்லையா?

நீங்க வேணா இல்லனு சொல்லலாம் ஆனா இவர் கிட்ட கேட்டா கண்டிப்பா இருக்குனு தான் சொல்லுவாரு..........

Friday, 14 March 2008

nice arts



Thursday, 13 March 2008

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிரு‌க்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

பிறந்து ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோர் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனனகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி பாவத்தைக் குறித்து எல்லோரையும் எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என அறிவிக்கவும் செய்யவும் துவங்கினானாம்.

செவ்வாயில் உள்ள தரைகீழ் வீடுகளில் இன்னும் மக்கள் வசிப்பதாகவும், ஒரு மாபெரும் அழிவை செவ்வாய் கிரகம் சந்தித்ததாகவும், இதனால் மக்கள் தரையின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும். அந்தப் போரில் தானும் தனது நண்பனும் கால வாகனத்தில் பயணித்ததாகவும் அவன் விளக்குகிறான்.


செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதை அறிவியல் புனை கதை கேட்பது போல எல்லோரும் ரசிக்கிறார்களாம்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.


இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக இவன் விளக்கும் போது தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகளிடம் பேசும்போது விஞ்ஞான மொழியில் வேறு பேசி அதிர்ச்சியளிக்கிறானாம்.

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு “ மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான். யாரேனும் உன்னை காயப்படுத்தினல் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் “

என்கிறான் இவன். இவன் சொல்வது உண்மையா பொய்யா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தின் குழந்தையாய் திரிகின்றனர்.
thankyou:yarl

Monday, 10 March 2008

குப்பைக்குண்டு - 1

மேலை நாடுக‌ளும் அல்கொய்தா போன்ற‌ தீவிர‌வாதிக‌ளின் பார்வையில் ப‌ட்ட‌ நாடுக‌ளும் இன்று மிக‌ப்பெரிய‌ ஒரு ஆப‌த்தான‌ சூழ‌லில் சிக்கியுள்ள‌து. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு அதாவ‌து அமெரிக்க‌ இர‌ட்டைக் கோபுர‌ தாக்குத‌ல் ந‌ட‌ந்த‌ பிற‌கு தேடுத‌ல் வேட்டை தீவிர‌ப‌டுத்த‌ப‌ட்ட‌ ச‌ம‌ய‌ம் 2004 - டிச‌ம்ப‌ரில் தாலிபானின் க‌ட்டுபாட்டில் இருந்த‌ ஆப்கானை மீட்ட‌ பிற‌கு ஆப்பிரிக்க‌ நாடுக‌ளில் ஒன்றான‌ சூடானில் ஒரு அல்கொய்தா தீவிர‌ வாதியின் கைதை அடுத்து ஒரு திடுக்கிடும் செய்தி வெளியான‌து. ஆம் அல்கொய்தா தீவிர‌வாதிக‌ள் சில‌ விஞ்ஞானிக‌ளின் உத‌வியால் அணுகுண்டுக‌ளை த‌யார் செய்வ‌து போன்ற‌ ஆராய்ச்சிக‌ளில் ஈடுப‌ட்டு கொண்டிருக்கின்ற‌ன‌ர் என்ற‌ அந்த‌ செய்தி பாதுகாப்பு ஏஜென்சிக‌ளுக்கு எச்ச‌ரிக்கை ம‌ணி அடித்தாலும் அவ‌ர்க‌ள் அதை வெளிகொணராம‌ல் விட்டுவிட்ட‌ன‌ர்.



இத‌ற்கு ஒரு கார‌ண‌மும் உண்டு ஏற்க‌ன‌வே இர‌ட்டை கோபுர‌ம் த‌க‌ர்க்க‌ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சியால் மிர‌ண்டிருந்த‌ ம‌க்க‌ளுக்கு இது மேலும் ஒரு பாதுகாப்பின்மை த‌ன்மையை உருவாக்கி அது அமெரிக்க‌ அதிப‌ரின் ப‌த‌விக்கு வேட்டு வைக்கும் என்ற‌ கார‌ணத்தாலோ என்னவோ.

அணுகுண்டு த‌யாரிப்ப‌து லாலா க‌டை அல்வா த‌யாரிப்ப‌து போல் எளிதான‌ காரிய‌ம‌ல்ல‌. ஆனால் அதே நேர‌த்தில் விஞ்ஞான‌ வ‌ள‌ர்ச்சியில் கால‌ப்போக்கில் தீவிர‌வாதிக‌ள் த‌ங்க‌ள‌து அறிவுத்திற‌னை வ‌ள‌ர்த்து பேர‌ழிவு சாத‌ன‌ங்க‌ளை உருவாக்கிவிட்டால்? இத‌ற்கு ப‌தில் அமெரிக்க‌ர்க‌ளுக்கு கூட‌ குலை ந‌டுங்க‌ வைக்கும் ஒரு ப‌தில். இத‌ற்கான‌ ப‌திலை தெரிந்து கொள்ளும் முன்புஇ

நாள் 11.02.08 நேரம் சரியாக பகல் 2:30 மணி ஆப்கானிற்கான பகிஸ்தான் துதருமான திரு தாரிக் அஸிஸ்சுத்தீன் காபூலில் இருந்து பாகிஸ்தான் எல்லை நகரமான பெஸவருக்கு தனது காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது கடத்தப்பட்டார். தாலிபானின் சீனியர் கமான்டர் ஒருவர் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இவர் கடத்தப்பட்டார்.

உல‌கின் பார்வைக்கு கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ தாலிபான் க‌மாண்ட‌ரை விடுவிக்கும் நோக்கில் க‌ட‌த்த‌ ப‌ட‌லாம் என்ற நினைப்போடு இருக்கலாம் ஆனால் உண்மை அதுவல்ல.
தீவிர‌வாதிக‌ளின் முக்கிய‌ நோக்க‌ம் தாரிக்கின் மூல‌ம் பெரும் அழிவு பொருள் ஒன்றை செய்வ‌த‌ற்காக‌ ஆம் அணுகுண்டு தயாரிப்ப‌த‌ற்கான‌ வ‌ழிமுறைக‌ள் பெறுவ‌த‌ற்காக‌.

ஆப்கான் தூதுவ‌ருக்கும் அணுகுண்டிற்கும் என்ன‌ உற‌வு என்றால் ஒரு அதிர்ச்சி செய்தி. பாகிஸ்தான் அணு ஆராய்ச்சி க‌ழ‌க‌த்தின் முன்னால் த‌லைவ‌ரும் விஞ்ஞானியும் இதே தாரிக் அஸ்ஸிசுத்தீன்.

இப்பொழுது முத‌லில் கேட்ட‌ கேள்விக்கான‌ விடை கிடைத்திருக்கும்இ ஆனால் உண்மையில் தீவிர‌வாதிக‌ளின் உண்மை நோக்க‌ம் வ‌ல்ல‌ர‌சு நாடுக‌ளை போல் அணுகுண்டு தயாரிப்ப‌து அல்ல‌.

தாங்கள் த‌யாரிக்கும் அணுகுண்டுக‌ள் மேலை நாடுக‌ளுக்கு ப‌ல‌ யுக‌ங்க‌ளாக‌ ச‌காராவாக‌ ஆக்க‌ வேண்டும் என்ற‌ நோக்க‌ம்இ முக்கிய‌மாக‌ த‌ற்பொழுது ஒரு இட‌த்தில் அணுகுண்டு வீசும் பொழுது ஒரு ந‌க‌ர‌ம் என்ற‌ அள‌விற்கு ம‌ட்டுமே பாதிக்கும். அணுகுண்டு த‌யாரிக்கும் திற‌ன் ம‌ற்றும் அதைக் கொண்டு செல்லும் வல்லமை எல்லாம் சிறிய‌ அள‌வு அணுகுண்டால் ம‌ட்டுமே முடியும். அதுவும் சில‌ காரிய‌ம் கெட்டு போய்விட்டால் இவ‌ர்க‌ள‌து திட்டம் இல‌க்கை அடையாம‌ல் போய்விட‌லாம். அத‌ற்கு இவ‌ர்க‌ள் எடுத்திருக்கும் புதிய‌ வ‌டிவ‌ம் குப்பைக்குண்டு என‌ப்ப‌டும் ட‌ர்டி பாம். ஆம் இவை அணுக்க‌ழிவுக‌ளில் இருந்து த‌யாரிக்க‌லாம் இவ‌ற்றை கையாள்வ‌து எளிது.

இதை த‌யாரிப்ப‌த‌ற்கான‌ மூல‌ப்பொருட்க‌ள் தீவிர‌வாதிக‌ளின் ந‌ட்பு நாடுக‌ளான‌ சில‌ சாகாரா பாலைவ‌ன‌ நாடுக‌ளின் உள்புர‌ங்க‌ளில் வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ள் த‌ங்க‌ள‌து அணுக்க‌ழிவுக‌ளை மில்லிய‌ன் ட‌ன் க‌ண‌க்கில் கொட்டி வைத்திருப்ப‌து இவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌ப்பிர‌சாத‌ம்.

இவ்வ‌கை அணு குண்டுக‌ள் ஆர‌ம்ப‌த்தில் மிக‌ப்பெரிய‌ அள‌வில் சேத‌மேற்ப‌டுத்தாவிட்டாலும் நாள‌டைவில் அது போட‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் இருந்து ப‌ல‌ ஆயிர‌ம் கி.மீட்ட‌ர் ப‌குதிக‌ளை த‌ன‌து க‌திரிய‌க்க‌த்தால் பாலைவ‌ன‌மாக்கிவிடுவ‌து ம‌ட்டும‌ல்லாது எந்த‌ ஒரு உயிரின‌மும் வாழ‌ இய‌லாம‌ல் செய்துவிடும். இது வாஷிங்ட‌ன் ந‌க‌ரில் போட‌ப்ப‌டுமானால் பாஸ்ட‌ன் முத‌ல் மிச்சிக‌ன் வ‌ரை இத‌ன் பாதிப்பு இருக்கும் என்ப‌து உல‌க‌ அணு விஞ்ஞானிக‌ளின் க‌ருத்து.
thank you:athikaalai

கூகிள் குழுவுக்கு பென்டகன் அனுமதி மறுப்பு

lankasri.comஅமெரிக்க படைத்தளங்கள் குறித்த அதிதுல்லிய வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காக அனுமதி கோரிய கூகிள் குழுவிற்கு, பாதுகாப்பு காரணங்களை காட்டி அமெரிக்காவின் பென்டகன் அனுமதி மறுத்துள்ளது.உலகளவில் எந்தப் பகுதியையும், விமானத்தில் இருந்து மிக அருகே பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், வீடியோ வரைபடங்களை (video maps) உள்ளடக்கிய நவீன வசதியை கூகிள் நிறுவனம் தனது தளத்தில் ஏற்படுத்தி வைத்துள்ளது.

இதில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ள இடங்கள், நிலைப்படை உள்ள பகுதிகளைப் பற்றிய தெள்ளத்தெளிவான படங்களையும் இணைக்கும் வகையில், அவை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க பென்டகனிடம் அனுமதி கோரியது.

ஆனால், உஷாரான பென்டகன் அதிகாரிகள் இதுபோன்ற படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கூகிள் குழுவுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

டெக்சாஸ் பகுதியில் உள்ள அமெரிக்க படைதளங்களை அதிதுல்லியமாக காட்டும் புகைப்படம் ஒன்று பிரபல இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Saturday, 8 March 2008

சிரிப்பை அளக்க வருது டிஜிட்டல் கருவி

“வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி விட்டனர். ஆனால், எத்தனை பேர் சிரிக்கின்றனர்… அப்படியே சிரித்தாலும் வாயார, வயிறு குலுங்க சிரிக்கின்றனரா? இப்படி சிரித்தால் தான் உடலுக்கு நல்லது; இல்லாவிட்டால், “இதயத்துக்கும், வயிற்றுக்கும் தொல்லை ஆரம்பித்து, பல நோய்களுக்கு காரணமாகி விடும்’ என்று ஜப்பான் நிபுணர் எச்சரித்துள்ளார். ஜப்பான் ஒகாசா பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பின் அளவை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித் துள்ளார். அவர் கூறியதாவது: வாயார, வயிறு குலுங்க சிரித்தால் தான் இயல்பான சிரிப்பு. சிரிக்கும் போது, பல முறை “ஹாஹ்..ஹாஹ்…’ என்று சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக, ஒரு நொடிக்கு 10 தடவையாவது இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் தான் மின் அதிர்வுகள் உடலில் பரவி, உடல் முழுமையாக இயங்கும்; சுரப்பிகள் வேலை செய்யும்; அவை வேலை செய்தால் தான் உடல் உறுப்புகள் சரிவர இயங்கும்; ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இதயத்துக்கும், வயிற்றுக்கும் இடையே இருக்கும் தசைகள் மிக முக்கியமானவை. இந்த பகுதி பெயர் உதரவிதானம். சிரித்தால் இந்த தசைகள் முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும். கம்ப்யூட்டர் சுவிட்சை போட்டு, அதை இயங்க வைப்பது போல, உடலை முழு வேகத்தில் இயங்க வைக்க இந்த தசைகள் புத்துணர்ச்சி பெறுவது முக்கியம்.

அவை முடங்கி விடக்கூடாது. அப்படி முடங்காமல் வைப்பது சிரிப்பு மட்டும் தான். மனதுக்குள்ளிருந்து வராமல், பெயரளவில் சிரிப்பதால், இந்த தசைகள் புத்துணர்ச்சி பெறாது; மனம் விட்டு சிரித்தால் தான் முழு வேகத்தில் இயங்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் “ஹாஹ்…ஹாஹ்…’க்கள் வெளிப் பட்டால் தான் , தேவையான மின் அதிர்வுகள் உடலில் ஏற்படும். இதற் காக ஒரு டிஜிட்டல் கருவியை கண்டு பிடித்துள்ளேன்.

இந்த கருவி மூலம், நம் உடலில் உள்ள மின் அதிர்வுகளை கணக்கிடலாம். சிரிப்பதன் மூலம், அந்த அதிர்வுகள் தொடர்ந்து இருக்கும். எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. நகைச்சுவை உணர்வுடன் இருந்தாலே தசைகளின் மின் அதிர்வுகள் நீடிக்கும். இந்த மின் அதிர்வுகள் தொடர்ந்தால், மூளை நரம்புகள் வலுவாக இருக்கும்; பாதிப்பு வராது. இவ்வாறு கிமுரோ கூறினார். மொபைல் போன் போன்ற கையடக்க கருவி இது. எப்போதும் கையில் வைத்திருந்து சிரிப்பை அளந்து கொள்ளலாம். ஜப்பானில் விரைவில் விற்பனைக்கு வருகிறது; சில ஆண்டில் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும்.

Friday, 7 March 2008

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா? உண்மையில் அப்படி இல்லை. மனிதர்களுக்குத் தான் இருளை கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறது. இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது, லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லுõரியின் ஆராய்ச்சிக்குழு. இருள் சூழ்ந்து இருக்கும் போது, நிழலைப் பார்த்து, இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக் கொள்கிறது. கண்களால் காணும் காட்சி, முழுமையாக மூளைக்கு சென்றடைவதற்குள் ஏற்படும் மாயத்தோற்றம் இது. இருளில் ஒன்றன் பின் ஒன்றாக, இரண்டு பந்துகளை வீச செய்த போது, வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும், மூளையையும் ஏமாற்றும் செயல். உண்மையில் மூன்றாவது பந்து வீசப்படாத போது, அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும், வீசப்பட்ட பந்து, மற்ற இரு பந்துகளை போல மறைந்து விடுவதாகவும் மூளை உருவகப்படுத்திக் கொள்கிறது.

இது மட்டுமின்றி,கம்ப்யூட்டர் திரைகள் மூலமும், மூளையை கண்கள் ஏமாற்றும் சோதனைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையின் மத்தியில், 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய, பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப் பட்டது.

இந்த சோதனையின் போது, உண்மையில் திரையில் தோன்றிய முக்கோணத்தை விட, அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை, அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரியவந்தது. இதன் மூலம் ஒளி இல்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள், மூளையை ஏமாற்றும் விதமான உருவங்களில் தோன்றுகிறது. இதைத் தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்து கொள்கிறது.

Wednesday, 5 March 2008

Tuesday, 4 March 2008

VAAZHGHAA TAMIL

POWER OF TAMIL - Can you compare it with any other languages??? ??????

1 = ONDRU -one
10 = PATTU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand

100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -
??????
1000000000000000000 0 = PARARTTAM --
anybody know?
1000000000000000000 00 = POORIYAM -
<>?#%^&
1000000000000000000 000 = MUKKODI -
&^*^%^#
1000000000000000000 0000 = MAHAYUGAM -???????????? ????

One of the oldest and greatest languages in the World!!!

Saturday, 1 March 2008