வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலேயே கடும் வரட்சி நிலவுவதால், பல மைல் தூரம் சென்றே பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் குடிநீரை பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குளங்கள் வற்றி வரண்டு காணப்படுகின்றன. சில்லிக்கொடி ஆற்று வாய்க்கால் உட்பட அனைத்து வாய்க்கால்களும் வற்றி வரண்டு காணப்படுகின்றது. இதனால், இப்பகுதி மக்களின் அவலம் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உடன் கவனம் செலுத்தி பவுசர் மூலம் நீரினை வழங்குவதன் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் பாரிய வரட்சி நிலவுவதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Tuesday, 29 July 2008
படுவான்கரைப் பிரதேசத்தில் கடும் வரட்சி குடிநீர் தேடி அலையும் பொது மக்கள்
90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவலில் தடுத்து வைப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம் தெரிவிப்பு
பொலிஸாரால் கைது செய்யப்படும் ஒருவர் 90 நாட்களுக்கு மேல் தடுப்பு காவல் உத்தரவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட தியாகராஜா மோகனரூபன் (வயது 33) என்பவரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான பூர்வாங்க விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
14-9-2007 அன்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தியாகராஜா மோகனரூபன் கடந்த 11 மாதங்களாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கைதும் தடுத்து வைப்பும் சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய சட்டத்தரணி மூலம் சத்தியக் கடதாசியை கையொப்பம் இட அனுமதி கோரிய போதும் அதற்கு புலனாய்வு பிரிவின் அத்தியட்சகர் அனுமதி வழங்கினார்.
ஆனால், அதன் பொறுப்பதிகாரி அனுமதி வழங்க மறுத்ததையடுத்து சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் 1ஆம் பிரதிவாதியாக பிரசன்னா டி அல்விஸ் பொறுப்பதிகாரி பயங்கரவாத பிரிவு, 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் பிரதிவாதிகளாக அதன் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு இருந்தனர்.
இழந்த நிலங்களை மீட்டு இலட்சியத்தை அடைவோம்: கடற்புலிகளின் துணைத்தளபதி
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முகாமையாளர்கள் ஒன்றுகூடலில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: எதிரியின் வன்பறிப்பு போர் முன்னெடுப்புக்களால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தமது தொழில்களை இழந்து இடம்பெயர்ந்துள்ள கடற்றொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மரநிழல்களின் கீழ் வாழும் நிலை உருவாகியுள்ளது. பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை மக்கள் இழந்துள்ளனர். எதிரியின் திட்டமிட்ட போர் வன்பறிப்பு நடவடிக்கைகளினால் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ள எமது மக்கள் ஏதிலிகளாக வாழும் அவலத்தை சிங்கள அரசு உருவாக்கியுள்ளது. எமது மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு எதிரியால் வன்பறிப்புச் செய்யப்பட்டுள்ள நிலப்பகுதிகளை மீட்டெடுத்து விடுதலைக் குறிக்கோளை அடைந்து கொள்வதுதான் தமிழர்களுக்குள்ள ஒரே முடிவு. அதனை நாம் செய்வோம் என்றார் அவர். |
NTT NEWS - July-28-2008
Tamil Eelam News - July-28-2008 Part 1
Tamil Eelam News - July-28-2008 Part 2
நுவரெலியாவில் இருவர் கைது--காவற்துறைப் பேச்சாளர்
நுவரெலியா மாவட்டத்தின் சீதா-எலிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து வெடி மருந்துகளும், குண்டு தயாரிப்பு பயன்படுத்தும் ஏனைய சில பொருட்களுடன் இரண்டு பேர் நேற்றிரவு கைதுசெய்யப்படடதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
நுவரெலிய காவல்துறையினர் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த வீட்டில் இருந்து 200 கிராம் ரி;என்ரி ரக வெடிமருந்து, 281 இரும்பு உருளைகள், 04 மின் டெட்டநேட்டர்கள் மற்றும் இரண்டு மின்கலங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது வீட்டில் இருந்த இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் நுவரெலிய காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரஞ்சித் குணசேகர குறிப்பிட்டார்.
புலிகளின் யுத்த நிறுத்தப் பொறியில் மகிந்த அரசாங்கம் சிக்காது - பிரதமர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த பொறியில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு போதும் சிக்காது என சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரநாயக்க தெரிவித்துள்ளார்.
தியத்லாவ இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறும் 55 பேர் கொண்ட கடேற் அலுவலர்களது பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலிகளின் யுத்த நிறுத்தத்தில் கடந்த காலங்களில் ஏனைய அரசாங்கங்கள் விழுந்துள்ளன. ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புலிகளின் யுத்த நிறுத்த பொறியில் ஒருபோதும் சிக்காது.
புலிகள் பலவீனமடைந்த காலங்களில் புலிகளின் தங்களுடைய இராணுவ பலத்தை கட்டியெழுப்புவதற்க ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத் அறிவிப்பார்கள். விடுதலைப் புலிகள் ஒரு ஆயுதக் குழு. இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் மீது யுத்தத்தைப் பிரகடனம் செய்துள்ளார்கள்.
நாங்கள் ஒரு பொறுப்புள்ள அரசாங்கம். இந்த குழு தனிநாட்டுக் கோரிக்கை கைவிட்டுவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு நாங்கள் புலிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்த யுத்த நிறுத்தத்தை மீறினராம்- இது எப்படியிருக்கு??
இன்று காலை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப்பகுதியான பூ நகரியிலிருந்து 10 தடவைகள் முகமாலையிலுள்ள படையினரின் நிலைகள் மீது ஆட்லறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு படையினர் காயமடைந்ததாக படைதரப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறிவிட்டனராம்.புலிகளின் யுத்த நிறுத்த அறிவித்தலின் பின்னர் தேவன்பிட்டியில் படையினரின் தாக்குதலில் 16வயதுடைய வினாயகர் செல்வகுமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதனைவிட தொடர்ச்சியாக படை நடவடிக்கையை அரசாங்கம் நடாத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்த அறிவிப்பின் மத்தியில் முகமாலையில் படையினர் தாக்குதல்
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்க் மாநாட்டை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் போர் நிறுத்த அறிப்பு செய்துள்ள நிலையில், சிறீலங்கா படையினர் சற்று முன்னர் முதல் முகமாலையிலும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
முதல் தாக்குதலை ஆரம்பித்த படையினர், விடுதலைப் புலிகள் முதலில் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக கொழும்பின் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறையிலுள்ள 1,200 தமிழ்க் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்துக-பிரதம நீதியரசர் உத்தரவு
வெலிக்கடை சிறைச்சாலையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகால விதிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சுமார் 1,200 தமிழ்க் கைதிகளின் நலன்களைப் பேண உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், அவர்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும் பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழர்கள் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே பிரதம நீதியரசர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான சாட்சியங்களும் அடிப்படைகளும் உள்ளவர்களைத் தவிர ஏனையோரை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதம நீதியரசர் இங்கு உத்தரிவிட்டுள்ளார்.
இதேவேளை, இவ் வழக்கில் அரசாங்க தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதவான் நீதிமன்ற நீதிபதி விரைவில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமளவான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக அண்மையில் மட்டக்குளி பகுதியில் தமிழர்கள் அதிகாலையில் அழைத்துச்செல்லப்பட்டு வீடியோ பதிவுசெய்யப்பட்டமை குறித்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இதேவேளை, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல அப்பாவிகள் தென்பகுதி சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.ரொறன்ரோவில் 'வேர்களைத் தேடி' எனும் பேரில் தமிழ்இளையோர் மாநாடு.
தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் கலைத் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் இளையோர் மாநாடு ஒன்றினைஇன்று ஞாயிற்றுக்கிழமை யூலை 27இல் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
1983ம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலையின் 25ம் வருட நிறைவை நினைவுகொள்ளும் வேளையில் எமது வரலாற்றை எம் தமிழ் கனேடிய இளையோரிடம் எடுத்துச் செல்லும்வண்ணம் 'வேர்களைத் தேடி..' என்னும் தலைப்பின் கீழ் இம் மாநாடு நடைபெற்றது.
இம் மாநாட்டிற்கு ஏற்கனவே இளையோரிடம் பதிவுகள் பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்ட நிகழ்வாக இது நடைபெற்றது.
இம் மாநாட்டிற்கு ஐக்கிய அமெரிக்காவில் இருந்து மருத்துவ கலாநிதி எலைன் சான்ட்லர், கலாநிதி யமுனா சங்கரசிவம் ஆகியோருடன் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தனும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தனர்.
இதில் மருத்துவ கலாநிதி எலைன் சான்ட்லர் சுனாமி நேரத்தின் போது தமிழீழப் பிரதேசத்திற்குப் பயணம் செய்து அதன் பின்னர் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக ஈடுபாடுகொண்டு தமிழர் தொடர்பாக தன்னார்வம் கொண்டு செயற்படுபவராவார்.
இம்மாநாட்டில் தமிழ்கனேடிய அடையாளம், உலகநாடுகள் தழுவிய வகையில் தமிழர் மற்றும் தமிழின் நிலை, சமவுரிமை: எம் சமூகத்தில் தமிழ்ப் பெண்கள், கனடியத் தமிழ் இளையோரை எதிர்மறையாகக் காட்சிப்படுத்தும் விடயங்கள்,
தமிழ் திரைப்படங்களும் அவைமூலம் எம் சமூகம் பெற்றுக்கொள்பவையும் மற்றும் அமைதியாக்கப்பட்ட குரல்கள்: 1983இலிருந்து இன்றுவரை போன்ற தலைப்புக்களில் பட்டறைகள் நடத்தப்பட்டன.
இலங்கை வானொலியின் 2500 மீட்டர் உயரமுள்ள ஆன்டனா
இலங்கை ரூபவாஹினி கார்பரேசன் தனது சக்தியை அதிகரிக்க உள்ளதாக புராட்காஸ்ட் ஆசியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.கொழும்புக்கு அருகில் உள்ள பிதிருடலகா மலையின் உச்சியில் சக்தி வாய்ந்த ஜம்ப்ரோ வகை ஆன்டனாவை நிறுவ உள்ளது. இந்த மலையானது 2500 மீட்டர் உயரமுள்ளதால், இலங்கை முழுவதும் இந்த ஒரு இடத்தில் இருந்தே இலங்கை முழுவதும் ஒலிபரப்ப முடியும்.
பண்பலை ஒலிபரப்பினை இந்த ஆன்டனா மூலம் செய்தால், தமிழக நேயர்களும் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டக வாய்ப்புள்ளது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் 17 தமிழர்கள் கைது
வெள்ளவத்தை பிரதேசத்தில் 17 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட விசேட தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைவரும் வடக்கு கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மன்மோகன் சிங் பிள்ளையானை சந்திக்க முன்னுரிமை அளிப்பதா--ஜே.வி.பி.சீற்றம்
உள்நாட்டு அரசியலில் இந்தியா அளவுக்கதிகமாக தலையீடு; ஜே.வி.பி.சீற்றம்
எம்.ஏ.எம்.நிலாம்
இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளாதாரத்தைச் சுரண்டுவதிலும் இந்தியா நேரடியாகத் தலையிடத் தொடங்கி இருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. இந்தியாவின் ஆதிக்கம் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என எச்சரித்துள்ளது.
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எமது நாட்டை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் விடயத்தில் ஜே.ஆர்.ஜயவர்தனவை விடவும் மோசமானதாகக் காணப்படுவதாகவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடக வியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
""சார்க் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை ஜே.வி.பி. ஒருபோதும் எதிர்க்கவில்லை. பிராந்திய நாடுகளுக்கிடையில் நட்புறவும் ஒத்துழைப்பும் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்பதில் முரண்படப்போவதுமில்லை. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால், இன்னொரு நாடு இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. சார்க் அமைப்பின் வெளிநாட்டுக் கொள்கையின்படி அனைத்துச் செயற்பாடுகளும் 50க்கு 50 என்ற வீதத்தில் பாதுகாக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதாரம்,
கலாசார உறவுகள் அனைத்து நாடுகளும் சமமாகப் பேணப்பட வேண்டும்.
ஆனால், இந்தியா அதன் ஆதிக்கத்தன்மையை சக நாடுகள் மீது பிரயோகிக்க முற்படுகின்றது. பிரதானமாக இலங்கையில் இந்தியா சட்டாம்பிள்ளை வேலை பார்ப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றது. ஆரம்பம் முதலே இந்தியா தவறான பாதையிலேயே பயணிக்கின்றது. அண்மைக்காலமாக இந்தியாவின் ஆதிக்கப் போக்கு அதிகரித்து வருகின்றது.
அமரர் பண்டாரநாயக்கா சிங்கள மாகாண சபையை ஆரம்பித்த போது சொன்ன வார்த்தைகள் இன்று நிதர்சனமாகி வருகின்றது. நாம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் சிக்கியதைவிட இந்தியாவின் ஆதிக்கத்துக்குள் மிக மோசமாக சிக்கிவிடலாம் என்று அவர் அன்று எச்சரித்திருந்தார். அந்த வார்த்தைகள் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் யாருக்காக நடத்தப்பட்டது. இந்தியா கட்டாயப்படுத்தியதற்காக மகிந்த ராஜபக்ஷ இத்தேர்தலை நடத்தினார். சார்க் மாநாட்டில் பங்கேற்க இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை சந்திப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் தாளத்துக்கு இலங்கை அரசு ஆடுவதை புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.
திருகோணமலையில் 625 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை பொருளாதார வலயமாக மாற்றி தன்வசப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு அரசு மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இலங்கையில் எண்ணெய் வள ஆய்விலும் இந்தியா கூடுதல் அக்கறை காட்டுவது அங்கும் ஆதிக்கத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே ஆகும். எண்ணெய் வள ஆய்வு உடன்படிக்கை அதற்கு ஏதுவான வகையிலேயே செய்துகொள்ளப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கம்பனிக்கே உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து கேபிள் மூலம் மின்சாரம் பெறும் திட்டம் கூட இலங்கைக்கு பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும். இந்தியா நினைத்தால் ஒரு இரவுக்குள் முழு நாட்டையும் இருளில் மூழ்கடிக்க முடியும். அப்படி நடக்குமானால் அதன் பின்விளைவுகள் எவ்வாறாக அமையும் என்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது.
இந்தியாவின் இந்த ஆதிக்கப்போக்கு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய ஆபத்தையே காட்டுகிறது. எமது தேசிய பொருளாதாரத்தையும் வளங்களையும் சூறையாடும் திட்டத்துடன் இந்தியா வியூகம் அமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் அதற்கான வழிகளை இந்தியாவுக்கு தாராளமாக திறந்துவிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசும் தமது அரசியல் நலன்களுக்காக நாட்டை இந்தியாவுக்கு தாரைவார்க்கத் தயாராகிவிட்டனர். இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்க நாம் ஒன்றுபட வேண்டும். நாம் பொறுப்பின்றிச் செயற்பட்டால் எமது நாடு மீண்டுமொரு தடவை அடிமை நாடாக மாறிவிடலாம். இந்தியாவின் இந்த ஆதிக்க முயற்சியானது பயங்கரவாதத்தை விடவும் அபாயகரமானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்
Ooh..! Foreign Ministry's dinner Rs.10,000 per head :cocktail separately?
Mind-boggling huge amounts of the tax-payers' money are being spent lavishly on entertaining and throwing parties to SAARC summit VIPs, The government got a supplementary estimates bill for Rs. 2880 million passed for expenditure on the summit but it is learnt that certain ministers and government top bureaucrats are trying to grab a lion’s share for throwing dinner parties and other extravaganza paying exorbitant rates.
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மதவாச்சி சோதனைச்சாவடியில் தென்பகுதி நோக்கிப் பிரயாணம் செய்ய அனுமதி மறுப்பு
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தென்பகுதிக்குச் செல்வதற்கு மதவாச்சி சோதனைச்சாவடியில் அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணமாக பாஸ்போட், வாகனங்களைச் செலுத்துவதற்குத் தகுதி பெற்றதை உறுதிப்படுத்துகின்ற லைசன்ஸ், நிறுவனங்களில் பணிசெய்பவர்களாக இருந்தால்,
அதனை உறுதிப்படுத்துவத்றகாக வழங்கப்படுகின்ற அடையாள அட்டை (ஜொப் காட்) போன்றவற்றைக் காண்பித்துவிட்டு பலரும் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.
எனினும் தற்போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள்,
தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வேறு ஆவணங்களை வைத்திருந்தாலும், மதவாச்சி சோதனைச்சாவடியில் அவைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் மதவாச்சி சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்படுவதாக, அவ்வாறு தமது பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்முனையில் ஒருவர் கடத்தல் - திருமலை உப்புவெளியில் ஒருவர் சுட்டுகொலை!!
திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 18 வயதான மரியதாஸ் சாயதாஸ் என இனங் காணப்பட்டுள்ளதாக உப்புவெளிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பினனர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என உப்புவெளிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
kalmunai
திங்கள் பிற்பகல் மோட்டார்சைக்கிளில் வந்த ஆயுததாரிகளால் 18 அகவையுடைய பிரசாத் என்பவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.வன்னியர் லேன் 2ம் குறிச்சி கல்முனையை சேர்ந்த இவரது கடத்தல் தொடர்பாக கல்முனை பொலிஸ்சில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சர் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை --அதிர்சியில் அமைச்சர்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் செயலாளர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதித் தலைவர் முத்துசிவலிங்கம், மத்திய மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாதச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பேச்சாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர் சதாசிவம் கடந்த 2000ஆம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேறியபோது, அவர் நுவரெலியாவிலுள்ள கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்தக் கூடாது என கட்சி தீர்மானித்தது. இத் தீர்மானத்தை எதிர்த்து சதாசிவம் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில்; மனுத் தாக்கல் செய்தார். இதற்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இடைக்கால உத்தரவொன்றைப் பெற்றது” என அக்கட்சியின் பேச்சாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
“அந்த உத்தரவுக்கமைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியாவிலுள்ள அலுவலகத்தைப் பயன்படுத்தியது. எனினும், நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்ததாகக்கூறி நுவரெலியா நீதிமன்றம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 6 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது” என யோகராஜன் கூறினார்.
எனினும், இந்தத் தீர்ப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும், இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவிருப்பதாகவும் அக்கட்சியின் பேச்சாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளருக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க விளக்கமளிக்கவுள்ளார்???
இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராக நியமனம் பெற்றுள்ள திருமதி.நவநீதம்பிள்ளையைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தற்போது இலங்கையில் இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிரேஷ்ட ஆலோசகருடனும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் பற்றிய தேசிய செயற்திட்ட அறிக்கை குறித்து திருமதி நவநீதம்பிள்ளையிடம் தான் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
"நாட்டின் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் அவரிடம் எந்தவொரு நேரத்திலும் விளக்கமளிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஏற்கனவே நான் தெரிவித்த மனித உரிமை நிலைவரம் தொடர்பான தேசிய செயற்திட்ட அறிக்கைக்கு பல நாடுகள் சிறந்த வரவேற்பை அளித்துள்ளன " என்றும் அமைச்சர் சமரசிங்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
திருமதி நவநீதம்பிள்ளையின் இனத்துவப் பின்னணி குறித்து அந்த ஊடகம் கேட்டதற்கு, இன ரீதியாக அவர் தமிழராகவிருக்கின்ற போதிலும் அது இலங்கை அரசாங்கத்தினதோ அல்லது நாட்டினதோ விவகாரங்களில் எந்தவித பாதிப்பையும் எற்படுத்தாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழரும் நீதிபதியுமான திருமதி நவநீதம்பிள்ளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக அண்மையில் நியமனம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படும்- முன்னாள் நீதிபதி நிசங்க உடலகம
முக்கியமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூதூரில் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான இடைக்கால விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி நிசங்க உடலகம கூறியுள்ளார்.
“எந்தவித இடையூறுகளும் இன்றி ஆணைக்குழு தொடர்ச்சியாகக் கூடியிருந்தால் விசாரணைகளைத் துரிதமாக முடித்திருக்க முடியும். எனினும், ஆணைக்குழு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்பட்டு வருவதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக விசாரணைகளை ஒத்திவைக்கவேண்டிய நிலை காணப்படுகிறது. தற்பொழுது சார்க் மாநாட்டுக்காக அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்தார்.
குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான சரியான நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும், இந்தப் பரிந்துரைகள் முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் உட்பட ஏனைய குற்றச்செயல்களின் குற்றவாளிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் எனவும் முன்னாள் நீதிபதி கூறினார்.
“ஆணைக்குழுவின் உறுப்பினர்களான கலாநிதி நேசையா மற்றும் ஜாவிட் யூசுப் ஆகியோர் விலகியதைத் தொடர்ந்து ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. எனினும், இதனால் ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலகம மேலும் தெரிவித்தார்.Monday, 28 July 2008
வீரவிலவில் நிர்மாணிக்கப்பட இருந்த விமானநிலையம் மத்தளையில்
ஹம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தில் அமைக்கப்படவிருந்த இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சமால் ராஜபக்ஸ விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரச்சபையின் தலைவருக்கு இன்று அறிவித்துள்ளார்.
வீரவில பிரதேச வயல் உரிமையாளர்களை சந்தித்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.வீரவில பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது எனவும்
அத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படும் என விவசாயிகள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை உத்தேச சர்வதேச விமான நிலையத்தை ஹம்பாந்தோட்டையின் மத்தல பிரதேசத்தில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் வீரவிலவில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கலையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டியமை குறிப்பிடதக்கது.
நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் இலங்கையில் மீறப்பட்டுள்ளன - ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நாஸ்னல்
அரச நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழு மற்றும் அரச கணக்கீட்டு தெரிவுக்குழு ஆகியவற்றின் தலைவர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளமையானது,
நிறைவேற்று தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளை தடையின்றி செய்வதற்காக தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கை என் ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நாஸ்னல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவும் அவற்றின் தலைவர்களாகவும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானதும் ஆபத்தன நிலைமையுமாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றம் இந்த பிரச்சினைக்குரிய விடயத்தை மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்ற நிதியில் தெரிவுக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்படும் அடிப்படை சித்தாந்தததை மதிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய இவ்வாறான தெரிவுக்குழுக்களின் தலைவர்ளாக எதிர்க்கட்சியினரே நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் உறுப்பினர்களாக நிறைவேற்று அதிகாரமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டும்.
இந்த சம்பிரதாயமான மிக நீண்டகாலம் இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த இரண்டு நிதியியல் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் இருவரும் அந்த பதவிகளை துறந்து நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை கிளையின் நிறைவேற்று பணிப்பளர் கே.சி. வெலியமுன அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டுச்சென்ற ஆ.ஊடுருவும் அணியினர் மீது மக்கள் படை தாக்குதல் - ஒருவர் பலி.
கடந்த வெள்ளிக்கிழமை மாங்குளத்திற்கும் இளவன் குளத்திற்கும் இடையில் கிளேமோர் தாக்குதலை மேற்கொண்ட சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் ஒருவர் மக்கள் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இவர் கிளிநொச்சி மாவட்ட அரசசெயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்திய படையினரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த ஆழஊடுருவும் அணியினர் மீதே கடந்த வெள்ளிக்கிழமை மாலை மக்கள் வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது உடலம் இன்று அனைத்துலகசெஞ்சிலுவைச் சங்க ஊடாக சிறிலங்காப் படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் போர் நிலவரம் குறித்து மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள எண்ண அலைகள் -tamil win
இலங்கையின் அனைத்து ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்களும் இன்று யுத்தம் என்ற மாயையின் கீழ் மறைந்து போயுள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
வீண்செலவுகளும் துஸ்பிரயோகங்களும் மலிந்துள்ளன.உலகிலேயே பாரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள மஹிந்தவின் அரசாங்கத்திற்குப் பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான செலவுகள் யாவும் பொதுமக்கள் மீது சுமத்தப்படுகின்றன. நாட்டின் பணவீக்கம் இன்று 28 முதல் 30 வீதம் வரை உயர்ந்து சென்றுள்ளது. எனினும் மக்கள் குறிப்பாகச் சிங்கள மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாதபடி அரசாங்கம் மூடிமறைப்பு வேலைகளைச் செய்து வருகிறது.
இதற்கு ஊடகங்களும் ஒரு காரணமாக இருக்கின்றன. இலங்கையில் உள்ள சிங்கள ஊடகங்களில் பெரும்பாலானவை யுத்தம் என்கின்ற ஒன்றுக்காக இன்று அரசாங்கத்திற்குச் சாதகமாக எழுதும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. அல்லது அவற்றில் அவ்வாறு எழுதுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றன.
தமிழ் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் அரசாங்கத்தின் ஊழல்களைச் சுட்டிக் காட்டுகின்ற போதும் அது பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்குச் சென்று சேராமை காரணமாக அவர்கள், அரசாங்கத்தின் மீது ஏதோ ஒருவகை ஈர்ப்பைக் கொண்டுள்ளனர் எனலாம்.
இலங்கையில் எந்த ஒரு சிங்களவரிடம் கதைத்தாலும் அவர் “புலிகளை அரசாங்கம் தோற்கடித்து விடும்” என்ற கருத்தையே கூறுகின்றனர். அதற்கான மாற்றுக் கருத்தை அவர்கள் எண்ணியும் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற அளவில் சிங்கள ஊடகங்களும் அரசாங்கமும் இலங்கையை யுத்தகளமாக ஆக்கியுள்ளன என்றே கூறவேண்டும்.
1983 ஆம் ஆண்டுக் காலத்தைப் போலவே தற்போதும் பொது இடங்களில் அதுவும் சிங்களவர்கள் அதிகமாக உள்ள இடங்களில் தமிழில் உரையாடுவதில் அச்சநிலை தோன்றியுள்ளது. பொது இடங்களில் தமிழில் பேசினால் அதனை வித்தியாசமாக நோக்கும் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது.
அயலில் உள்ள தமிழர்களின் வீடுகளுக்கு யாராவது புதிய ஆட்கள் வந்தால் உடனடியாக படைத் தரப்பினர் வந்து சோதனையிடும் அளவிற்கு சிங்கள மக்கள் படைத்தரப்பினருடன் தமது உறவுகளை பலப்படுத்திக்கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியினர் தமது அரசியல் நலனுக்காகத் தமிழர்கள் மீது பரிவுக்காட்டுவதாகக் காட்டிக்கொள்கின்ற போதும் உள்மனதில் யுத்தவெறியுடனேயே கருத்துக்களை முன்வைப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் ஏனைய இடங்களில் இந்த நிலை என்றால் இலங்கையின் தென்பகுதியில் சொல்லவும் தேவையில்லை.
கதிர்காமம் பகுதியில் தமிழ் வர்த்தகர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளது. இந்த முறை மட்டக்களப்பில் இருந்து குறிப்பிட்ட அடியார்கள் கதிர்காமத்திற்குச் சென்ற போதும் ஏனைய தமிழ்ப் பிரதேசதங்களில் இருந்து
குறிப்பாக எப்போதும் கதிர்காமத்திற்கு அதிகமாகச் செல்லும் மலையகப் பகுதிகளில் இருந்தும் அடியார்கள் குறிப்பிடத்தக்க அளவில் செல்லவில்லை. ஏனெனில் எந்த ஒரு தமிழரையும் “புலி” எனப் பார்க்கும் தோற்றம் படையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.
கொழும்பில் ‘சார்க்” மாநாடு ஆரம்பமாகியுள்ளது. தமிழர்கள் இப்போதே தமது கொழும்புக்கான பயணங்களைக் காலதாமதமாக்கும் திட்டங்களை வகுத்து விட்டனர். அதற்காக கொழும்பின் முக்கிய பகுதிகளில் இருந்த தமது கடமைகளை முன்கூட்டியே அவர்கள் நிறைவுசெய்து கொண்டுள்ளனர்.
சோதனைச் சாவடிகளில் அனைத்து மக்களும் இறக்கப்பட்டுச் சோதனைகள் இடம்பெறுகின்றன. எனினும் சிங்களவர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளைக் காட்டுவதைக் காண முடியவில்லை.
சிலர் அதுவும் யுத்தச் சூழ்நிலையைப் புரிந்தவர்கள் இந்த அரசாங்கத்திற்குக் கடும் எதிர்ப்புப் போக்கைக் கொண்டிருப்பவர்கள் மாத்திரம் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
எனினும் அதுவும் ஒளிவுமறைவான கருத்துக்களாக இருக்கின்றன. மட்டக்களப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் வடக்கில் தமது விளையாட்டைக் காட்டமுடியாது எனத் தமிழ் மக்கள் நம்பினர்.
இப்போது யுத்தச் சூழ்நிலையை, களநிலவரங்களை அறியாத நிலையில் அவர்கள் குழம்பிப் போயுள்ளனர். எனினும் அவர்கள் மத்தியில் “தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றுவார்கள்” என்ற நம்பிக்கை எப்போதும் உறுதியாக உள்ளது.
தமிழர்களைப் பொறுத்தவரையில் யாரிடமும் கதைக்கும் போது “ நான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றில்லை. ஆனால் அவர்கள் ஏதோ ஒரு திட்டத்துடனேயே பொறுமையைக் கடைப்பிடிக்கின்றனர்” என்ற கருத்தைப் பெரும்பாலும் கேட்க முடிகிறது.
ஏனெனில் சிங்களவர்களைக் காட்டிலும் தமிழர்கள் கடந்த 25 வருட காலப் போரியல் வரலாற்றைத் தெரிந்தவர்கள் என்பது இதற்கு அடிப்படையாக இருக்கலாம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் “சார்க்” மாநாட்டின் போது யுத்ததவிர்ப்பு அறிவிப்பை வெளியிட்டபோது தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ராஜதந்திரத்தைப் பாராட்டுவதைக் காணமுடிந்தது.
எனினும் உள்ளுக்குள்ளே வன்னிக்குள் படையினரின் நகர்வுபற்றிச் செய்திகள் வரும்போது அவர்களின் உள்மனதில் ஒரு ஏக்கம் ஏற்படுவதை நோக்கக் கூடியதாகவே உள்ளது. இந்தநிலையில் “சார்க்” மாநாடு முடியும் வரையில் தமக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட முடிந்துள்ளது என்றும் தமிழ் மக்கள் கருத்துரைக்கின்றனர்.
இதன் பின்னர் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது அவர்கள் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தவே காத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே தமிழர்களைச் சிங்களவர்கள் மதிக்கிறார்கள் என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அன்று தொடக்கம் ஏற்பட்டுள்ளமையாகும்.
கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் புற்றுநோயால் தாக்கப்படும் அபாயம்- பிற்ஸ்வேம் நிறுவனம்
கையடக்க தொலைபேசிப் பாவனையளாகர்ளை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருக்கும் பிற்ஸ்வேக் புற்றுநோய் நிலையப் பணிப்பாளர் டாக்டர். றோனால்ட் ஹேர்வெர்மன், தம்மைத் தாமே பாதுகாப்பதற்கு அவர்கள் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்வாரியாக தொழில்புரியும் பணியாளர்களுக்கு டாக்டர் பிற்ஸ்வேக், அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தில் மூளை புற்றுநோய் சம்பந்தமாக வெளியிடப்படாத அறிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சரியான தகவல்கள் வரும் வரையும் தாங்கள் தாமதிக்கவில்லையெனக் குறிப்பிட்ட றோனால்ட் ஹேர்வெர்மன், ஆனாலும் தவறிழைத்துவிட்;டு வருந்துவதை விட புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததெனக் கூறினார். அத்துடன், கையடக்க தொலைபேசிப் பாவனையின் பாதுகாப்புத் தொடர்பில் வெளியிடுவதற்கு போதுமான தகவல்கள் இருப்பதாக அவர் கூறினார்.
இதேவேளை கையடக்கத் தொலைபேசிப் பாவனையால் மூளையின் தொழிற்பாட்டுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமென எந்தவொரு ஆய்விலும் கண்டுபிடிக்கப்படாத போதிலும், இவ்வாறு இருந்தாலும் அது சிறியளவிலேயே இருக்குமென அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிலையம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் நீண்டகால கையடக்கத் தொலைபேசிப் பாவனையால் புற்றுநோய் உட்பட உடற் பாதிப்புக்கள் ஏற்படலாமென டாக்டர் ஹேர்வெர்மன் குறிப்பிட்டுள்ளார்.
10 வருடங்களிலிருந்து கையடக்க தொலைபேசி பாவிக்கப்பட்டாலும் கூட, உடல் நோய்கள் வருவதற்கு காரணமாக அமைவதில்லையென கடந்த செப்டம்பர் மாதத்தில் லண்டன் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் நீண்டகாலப் பாவனையாளர்கள் மத்தியில் மூளையில் புதிதாக கட்டி உருவாகுவதாக கையடக்க தொலைபேசி நிலையம் மற்றும் சுகதார ஆய்வுத் திட்டம் மேற்கொண்ட ஆய்வின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிப் பாவனையால் மூளை சம்பந்தமான புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் எதுவுமில்லையென 6 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கிழக்கு மாகாண முதலீடுகளைக் கருணா வரவேற்கிறார்
கிழக்கு மாகாணத்தின் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய இந்தியா முன்வந்திருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் என்றழைக்கப்படும், விநாகயமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் காலடி பதிப்பதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும், இலங்கையின் வளங்களை முற்றாகத் தம்வசப்படுத்த இந்தியா முயற்சிப்பதாகவும் ஜே.வி.பி. மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன குற்றஞ்சாட்டிவரும் நிலையிலேயே கருணா அம்மான் இந்தியாவின் முதலீட்டை வரவேற்றுள்ளார். இந்தியாவிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ முதலீடுகள் கிடைக்கப்பெற்றால் அது மத்திய அரசாங்கத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் என கருணா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதம், அனல்மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்தியா உதவிவழங்கியுள்ளது.
போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் கருணா அம்மான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். 200 பேர் இந்த மாத இறுதியில் மக்கள் பாதுகாப்புப் படையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும், இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடகத்துக்குக் கூறியுள்ளார்.
“பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கான தகுதிகளை எவராவது பூர்த்திசெய்தால் அவர்கள் பின்னர் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்” என்றும் கருணா தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களைப் பகிரக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் யோசனைத் திட்டத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வுத்திட்டமொன்றை தமது கட்சி தயாரித்து வருவதாகவும், இந்த யோசனைத் திட்டம் விரைவில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். அத்துடன், கல்வி, காணி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கான அதிகாரங்களையும் கோரவிருப்பதாக கருணா குறிப்பிட்டார்.
“கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் பல்வேறு அமைச்சர்களைச் சந்திப்பதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். அண்மையில் நான் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை சந்தித்திருந்தேன்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் அந்த ஊடகத்திடம் கூறியிருந்தார்.
விவசாயக் காணிகள் தொடர்பாக முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 480 பேருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமனங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் 125 தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கல்வி அமைச்சரிடம் மனுக்கொடுக்க முற்பட்டபோது, தொண்டர் ஆசிரியர்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர்.
எனினும், கல்வியமைச்சரைச் சந்தித்து தமது மனுவைக் கையளித்ததாக தொண்டர் ஆசிரியர் ஒருவர் பி.பி.சி. செய்திச்சேவைக்குத் தெரிவித்திருந்தார். உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கல்வியமைச்சர் தமக்கு உறுதிமொழி வழங்கியதாக அந்த ஆசிரியர் பி.பி.சி.யிடம் கூறியிருந்தார்.
ஈரானுடன் நெருக்கமான உறவை அடுத்து சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானம்
ஈரானுடன் நெருக்கமான உறவுகளை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதனால் அதற்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஈரான் அரசுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் நெருக்கமான உறவுகளை அடுத்து சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு அமைய இஸ்ரேலின் படைத்துறை உற்பத்தி நிறுவனம் (The Israeli Military Industrial Complex) சிறிலங்காவுக்கான படைத்துறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நிறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்கிவரும் நாடுகளில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவில் பொருளாதார முதலீடுகள் படைத்துறை உதவிகளை அது மேற்கொண்டு வருகின்றது.
மகிந்த ராஜபக்சவினால் ஈரானுடன் கொண்டுள்ள உறவை மறைக்க முடியவில்லை. அது வெளிப்படையான ஒன்று. சிறிலங்கா அரசின் இந்த புதிய உறவு இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசிடம் உள்ள இஸ்ரேலின் நவீன ஆயுதங்களின் தொழில்நுட்பத்தை ஈரான் அறிந்து கொள்ளலாம் என்ற அச்சம் இஸ்ரேல் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரசிற்கு இஸ்ரேல் நீண்டகாலமாக கனரக ஆயுதங்களை விநியோகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொழும்புக்கான ஆயுத விநியோகத்தை இஸ்ரேல் அதிகாரபூர்வமாக நிறுத்தியுள்ள போதும், ஏற்கனவே வழங்கிய ஆயுதங்களுக்கான உதிரிப்பாகங்களை தொடர்ந்து வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஜமான விசுவாசம் வாலாட்டும் சங்கரி
'சார்க் நாடுகளின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவிருக்கின்றமை குறித்து இனத் துரோகி சங்கரி வாழ்த்துத் தெரிவித்துள்ளா..
வாழ்த்துச் செய்தி வருமாறு :
இன்னும் சில நாட்களில் இன்னுமொரு பெரும் பதவி தங்களை அலங்கரிக்க இருக்கிறது. 1.7 மில்லியன் மக்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அமைப்பாகிய சார்க சாடுகளின் தலைவராக நியமிக்கப்படவுள்ளீர்கள். தங்களின் இச்சாதனைக்கு முன் கூட்டியே எனது வாழ்த்துக்கள்.
இப்பெரும் கௌரவம் தங்கள் மீது சுமத்தப்பட்தையிட்டு நாடு பெருமிதம் கொள்கிறது. குறைந்த வயதில் நாடாளுமன்று உறுப்பினராக தெரிவு செய்யபட்டு 38 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த ஒரு பெருமகனாருக்கு வழங்கபட்ட பொருத்தமான கௌரவமாகும்.
நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழும் எம் மக்களுக்கு சார்க் உச்சிமாநாட்டை நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பு கடவுளால் தரப்பட்ட வரப்பிரசாதமும், ஆசீர்வாதமும் ஆகும்.
இலங்கையின் வீதிகளில் ஒருவர் சுதந்தரமாக நடமாட முடியாது. அங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சிகைகளுக்குத் தீர்வு காண்பதே சார்க் உச்சி மாநாட்டு வேலைத்திட்டத்தில் ஒன்றாகும். அதிஷ்டவசமாக எமது ஏழு அயல் நாடுகளுடன் எமக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.
ஜனாதிபதியாக கடமையாற்றும் தாங்கள் அங்கத்துவ நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருப்பது எமது மேலதிக அதிஷ்டமாகும். எமது நாடு எதிர் நோக்கும் பிரச்சனைகள் அத்தனையையும் தீர்ப்தற்கு உதவ அங்கத்துவ நாடுகள் மகிழ்வுடன் செயற்படத் தயாரகவுள்ளன. மக்களின் நலன் பேணல், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்துதல், பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல், கொளரவமாக வாழ வாய்ப்பளித்தல் ஆகியவை சாhக் உச்சி மாநாடடின் பல நோக்கங்களில் சிலவாகும்.
தற்போது தோடர்ந்து யுத்தம் நடைபெறும் வேளையில் விடுதலைப் புலிகள் இடம் பெயரும் மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் செல்லவிடாது தடுப்பதால் அவர்கள் அனைவரும் கிளிநொச்சியை நோக்கி நகர்கின்றனர்.
இது மக்களுக்கு மேலும் மேலும் பல கஷ்டத்தைக் கொடுப்பதோடு மக்களுக்கு பட்டினி நிலைமையை ஏற்படுத்தும். இந்த நாட்டு ஜனாதிபதி என்ற கோதவில் மக்கள் அனைவரையும் சமமாக நடத் வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதேர்டு துன்புறும் மக்களின் துயர் துடைக்க வேணடிய கடமைப்பாடும் உண்டு.
தங்களைத் தவிர இது சம்பந்தமாக வேறு எவரிலும் பார்க கூடிய அக்கறை கொள்ள வேணடியவன் நானே. ஏனெனில் 1970ம் ஆண்டு கிளிநொச்சியையும், 2000ம் ஆண்டு யாழ். மாவட்டத்தையும் நாடாளுமன்றத்தில் பிரதிநிரதிப்படுத்தியவன் .கிளநொச்சித் தொகுதியின் ஒரு பகுதியாக முல்லைத்தீவின் ஒரு பகுதியை நான் பிரதிநிதிப்படுத்தியுள்ளேன்.
இத் தாங்கொணத் துயரை மக்களால் மேலும் பொறுத்துக் கௌ;ள முடியாது. மேலும் தாமதிக்காது ஒரு தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும். சார்க மாநாடு என்ற போர்வையில் ஒரு பொன்னான வாய்பினைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் பல ஆண்டுக்கு மேலாக இத்தகைய வாய்ப்பு எமக்கு கிட்டாது.
நீங்கள் நல்ல உறவு கொண்டுள்ள ஏழு நாடுகளின் தலைவர்களின் உதவியை நாடினால் தங்களை யாரும் குறை கூற முடியாது. இம் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியக் குழுவினா எமது பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள். நீண்ட காலமாக இனப்பிரசிசினையில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் இந்தியா பிரதான பங்காற்றுவதை சகல நாட்டுத் தலைவர்களும் நிச்சயமாக வரவேற்பர்.
நன்றி சுடர்ஒளி
உணவுப் பொருட்கள், சிறீலங்கா படைகளால் சூறையாடப்பட்டு வருகின்றன.
கப்பல் மூலம் யாழ் குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள், சிறீலங்கா படைகளால் சூறையாடப்பட்டு வருகின்றன.
‘பால’, ‘றுகுணு’, ‘வின்ரன்’ போன்ற கப்பல்களில், யாழ் குடாநாட்டிற்கு
உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்கா
அரசாங்கம் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்ற பொழுதும்,
இவற்றில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்டும்
உணவுப் பொருட்கள், படையினரால் சூறையாடப்படுகின்றன.
இதனை விட, உணவுக் கப்பல்களில் சிறீலங்கா படைகளுக்கான
சீருடைகளும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக, தெரிய வருகின்றது.
