அமைச்சரவை சாரா நீதிமன்ற அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் டிலான் பெரேரா பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை சாரா துறைமுக அமைச்சுப் பதவியை மாத்திரம் வகிக்க அவர் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் டிலான் பெரேரா நாடு திரும்பியவுடன் தமது நீதிமன்ற அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற அமைச்சர் டிலான் பெரேராவிற்கும், அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத்திற்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை நீடித்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ நீதிமன்ற அமைச்சின் செயலாளரை பாதுகாத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை சாரா அமைச்சுக்களிலிருந்து பதவி விலகி, சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கடமையாற்றத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பின்வரிசை அமைச்சர்கள் சிலர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இது குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
டிலான் பெரேரா, மேர்வின் சில்வார், ஜகத் புஸ்பகுமார, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
Saturday, 14 June 2008
டிலான் பெரோ நீதிமன்ற அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானம்
சேகுவராவின் 80ஆவது சிறார்த்த தினம் இன்றாகும்
உலகின் மிகச் சிறந்த கிளர்ச்சியாளராக இன்றுவரையில் போற்றப்படும் சேகுவராவின் 80 ஆவது சிறார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்படவுள்ளது.
கியூபா, ஆர்ஜன்டீனா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் சேகுவராவின் சிறார்த்த தினத்தை வெகு விமரிசையாக அனுஸ்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றைவிட சேகுவரா இன்று மக்கள் மத்தியில் வாழ்வதாக குறித்த நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
எல்லா கிளர்ச்சிகளின் போது உச்சரிக்கப்படும்
நாமமான சேகுவராவின் உயிர் 39 ஆவது வயதில் இந்த உலகைவிட்டு நீங்கியது.
அநேகமான கிளர்ச்சியாளர்களைப் போன்ற சேகுவராவின் வாழ்க்கையும் குறுகிய காலத்திற்கு வரையறுக்கப்பட்டது.
மூன்று கண்டங்களில் வெடித்த கிளர்ச்சிகளில் சேகுவாரா பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூப புரட்சியை வெற்றிகரமாக முன்னெடுத்த பிடெல் கஸ்ட்ரோவின் மிக நெருங்கிய அரசியல் நண்பராக சேகுவரா திகழ்ந்தார்.
1928ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி ஆர்ஜன்டீனாவின் மிசியோன் நகரில் சேகுவரா பிறந்தார். அர்னேஸ்டோ கேவரா டிலலோசனா என்பதே அவரது இயற்பெயராகும்.
சே எனும் மருத்துவப் பட்டத்தை சேகுவரா பெற்றுக் கொண்டார்.
1967ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ம் திகதி பொலிவியாவில் இடம்பெற்ற கிளர்ச்சி ஒன்றில் சேகுவரா கொல்லப்பட்டார்.
பத்மநாதனை ராமதாஸ் சந்தித்தமை குறித்து விசாரணை வேண்டும் -சுப்பிரமணிய சுவாமி
விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய கே.பத்மநாதனை சந்தித்தமை தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பத்மநாபனை தேடி ஜெர்மனி சென்றுள்ளனர்.
ஆனால் கடந்த ஜனவரி 9ம் திகதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஜி.கே. மணி, திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்று, அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
Final war of Tamil Eelam will be fought on Sea -
News 1 of 3
Final war of Tamil Eelam will be fought on Sea - News 2 of 3
Final war of Tamil Eelam will be fought on Sea - News 3 of 3
ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை - ஐ.தே.க. பொதுச் செயலாளர்
ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூறி இருக்கிறார். புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவர்கள் பூண்டோடு ஒழித்துக்கட்டப்படுவார்கள் என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை எதுவும் அவர்களிடம் இல்லை எனபதை தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:
தேசிய பாதுகாப்பு இன்று பெரும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளது. வடக்கு கிழக்கு பகுதிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுத்தம் இன்று அகில இலங்கைக்கும் பரவி உள் ளது. யுத்தத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்த பீதி ஒரு புறம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மறுபக்கம், நாட்டு மக்கள் இந்த இரண்டிலும் சிக்கி தவிக்கிறார்கள்.
பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
பொலீஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் வெலிகேபொல பொலீஸ் பிரிவில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வெலிகேபொல பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றிய கல்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஓமரா கமகே சனத் வயது 39 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடமையிலிருந்த போதே துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் அடையாளத்தை நிருபிக்க தவறிய மூன்று தமிழ் யுவதிகள் கைது
ஆள் அடையாளத்தை நிருபிக்க தவறிய மூன்று இளம் தமிழ் யுவதிகளை மாத்தறை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கடந்த 12ம் திகதி கைது செய்தனர்.
யுவதிகள் சிலர் மாத்றை நகரில் சந்தேகத்துக்குரிய முறையில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பையடுத்தே இந்த யுவதிகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரஸ்ஸ ஹீளந்தாவ தோட்டத்திலிருதந்து வசந்தாக கூறப்படும் இந்த யுவதிகளிடம். அடையாள அட்டைகளோ வேறு ஆவணங்களோ இருக்கவில்லையென்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்றை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பி.பி. ஆயுபாலவின் ஆலோசனையின் பேரில் மூன்று யுவதிகளையும் மாத்றை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சின்னமுகத்துவாரத்தில் மண் ஏற்றச்சென்ற இரு இளைஞர்கள் கடலுக்கு பலி
ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் கடற்கரையில் கடல் மண் ஏற்றச்சென்ற இரு இளைஞர்கள் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். கோளாவில் மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திற்காக அருகிலுள்ள சின்னமுகத்துவாரம் கடற்கரையில் கடல் மண் ஏற்றச் சென்ற நான்கு இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் கடல் மண்ணை ஏற்றிவிட்டு கடலில் குளித்தபோது கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் கோளாவில் வைத்தியர் வீதியைச் சேர்ந்த சிதம்பரம் சக்திதாஸ் (வயது 20), பாரிப்போடி வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரதீப் (வயது 18) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் நேற்று வரை மீட்கப்படவில்லை. தற்கொலை இதேவேளை, ஆலய பூசாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பனங்காடு ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த கந்தக்குட்டி கமலநாதன் (வயது 51) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாரே நேற்று காலை அலரிக்கொட்டையை அரைத்து அருந்தி தற்கொலை செய்துள்ளார். இவரது சடலம் பிரதேச பரிசோதனைக்காக அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி உயர்தொழில் நுட்பப் பயிற்சி கலாசாலை, , மகரகம ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் தலா 4 தமிழ் மாணவர்கள் கைது,
மட்டக்குளி உயர்தொழில் நுட்பப் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் நான்கு தமிழ் மாணவர்கள் கைது மட்டக்குளி ""உயர் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில்' கல்வி பயிலும் கரவெட்டியைச் சேர்ந்த எஸ்.ராஜரட்ணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நடராஜா விசாகன், அம்பாறையைச் சேர்ந்த ஏ.அசோகதீபன், பாசையூரைச் சேர்ந்த மத்தியூ சகாயதாஸ் ஆகிய நான்கு தொழில்நுட்பவியல் மாணவர்களே கடந்த 5 ஆம் திகதி இரவு தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரஸ்தாப நான்கு மாணவர்களும் கல்யாணி கங்காராம வீதியிலுள்ள ரவி என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து படித்து வந்ததாகவும், சந்தேகத்தில் வீட்டுரிமையாளரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேற்படி இளைஞர்கள் சம்பந்தமாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே தெஹிவளை குண்டு வெடிப்பு தொடர்பாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்கரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பந்துல குணரட்ன பிரதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மாணவர்களை விடுவிப்பதற்கும் அவர்கள் தொடர்பான கல்வி பாதிப்படையாமல் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இவர்கள் தொடர்பாக பாடசாலையைச் சேர்ந்த பெரும்பான்மையின மாணவர்களே போலித்தகவலை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மகரகம ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 4 தமிழ் மாணவர்கள் பொலிஸாரால் தடுத்துவைப்பு கடந்த திங்கட்கிழமை இந்த நால்வரும் வவுனியாவிலிருந்து கொழும்புக்கு ரயிலில் வந்த போதே மருதானை ரயில் நிலையத்தில் வைத்து இந்த நான்கு ஆசிரிய மாணவர்களையும் மருதானைப் பொலிஸார் கைது செய்தனர். கொழும்பு வருவதற்கான சகல ஆவணங்களையும் இந்த நால்வரும் வைத்திருந்த போதும் எதுவித காரணமும் கூறப்படாது இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் பெண்கள். இது தொடர்பாக பயிற்சிக் கல்லூரி நிர்வாகத்திடம் பல தடவைகள் கூறியும் இவர்களை விடுவிக்க அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் மாணவர்கள் தொடர்ந்தும் கொட்டாஞ்சேனை கடற்கரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களும், நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார்கள்.
பாரம்பரிய வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்க முயற்சிக்கும் அரசுக்கு முதலமைச்சர் பாடம் புகட்டுவாரா?
* முன்வந்தால் மு.கா. ஆதரவளிக்கும் ஹக்கீம் கூறுகிறார் கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்றுவிட முயற்சிக்கும் மத்திய அரசாங்கத்துக்கு முதலமைச்சர் தகுந்த பாடம் புகட்ட முன்வந்தால் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை தெரிவித்தார். முதலமைச்சரின் கொள்கை உரை மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார். அவர் சொன்னதாவது; முதலமைச்சரின் கன்னி கொள்கை உரை குறித்து சில வார்த்தைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். அதற்கு முன்பதாக கடந்த தேர்தலில் நெருக்கடி, அச்சுறுத்தலுக்கு மத்தியில் எமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கின்றேன். முதலமைச்சர் பதவி தொடர்பாக முதலமைச்சரின் அணியிலே முரண்பாடான கருத்துக்கள் வளர்த்தெடுக்கப்பட்டது. இருப்பினும், முதலமைச்சர் நேர்மையாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரை நான் வாழ்த்துகின்றேன். சபையின் அமர்விலே நான் மகிழ்ச்சியோடு கலந்துகொள்ளவில்லை. நாம் எதிரணியில் அமர்ந்திருக்கின்றோம் என்ற காரணத்தினால் அல்ல. எனது மகிழ்ச்சி இன்மைக்குக் காரணம் தமிழ்பேசும் சமூகத்தின் தலைமை தங்கள் மாகாணத்தில் அதிகாரங்களை அனுபவிப்பதற்கான போட்டியினால் எனக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனமேயாகும். காலம் காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும் அபிலாஷைகளுக்காகவும் முதலமைச்சர் துணிவுடன் போராடுவதாக இருந்தால், அவருக்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம். முதலமைச்சரின் கொள்கை உரையின் இரண்டு அம்சங்கள் குறித்து நான் பேசவிருக்கின்றேன். புனர்வாழ்வும் மீள்குடியேற்றமும் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றியதாகும். கொள்கை உரையில் புனர்வாழ்வும் மீள்குடியேற்றமும் பற்றி 5 பந்திகளும் சட்டமும் ஒழுங்கும் குறித்து 2 பந்திகளும் உரையில் உள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணசபைக்கு நேர்ந்த கதிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த மாகாண சபையில் நாம் எதிர்க்கட்சியிலிருந்தோம். அந்தச் சபை கலைக்கப்படுவதற்கு காரணமாக தனிநாட்டுப் பிரகடனம் அமைந்தது. மாகாண சபைக்கு வளங்கள் குறைவு அதேநேரம் வழங்கப்படும் அதிகாரங்கள் பின் கதவினால் பறிக்கப்பட்டு வருகின்றன. அதே அநியாயம் தான் இன்னும் அரங்கேறி வருகின்றது. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் பற்றியது:திருகோணமலை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம், விசேட பொருளாதார வலயம் ஆகியன வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயம் பாதுகாப்பு அமைச்சின் கீழும் விசேட பொருளாதார வலயம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த 4,249 குடும்பங்களைச் சேர்ந்த 15,648 பேர் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் 19 பாடசாலைகள் இயங்கவில்லை. 18 இந்துக் கோவில்கள் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் ஆகியன இவ்வலயத்தில் அமைந்துள்ளன. சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்க முடியாது வெளியேற்றப்பட்டனர். கடந்த ஒரு வருடகாலமாக தகரக் கொட்டில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் படும் அவஸ்தைகளை கிளிவெட்டி, பட்டித்திடல் கிராமங்களுக்குச் சென்றால் நேரடியாகப் பார்க்க முடியும். இம் மக்கள் படும் கஷ்டங்கள் கொழும்பு அரசுக்கு புரியாது. 11 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்து இம்மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் மீளக்குடியமர்வதற்கு ஒரு பகுதியினர் அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சிலர் மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இன்னும் சம்பூர் கிழக்கு, கடற்கரைச் சேனை, கூனித்தீவு ஆகிய கிராமங்களில் மீளக்குடியமர்வதற்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. திருமலை துறைமுகத்தைச் சுற்றி சூழவுள்ள பிரதேசம் விசேட பொருளாதார வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு நிறைய ஏற்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த விசேட பொருளாதார வலயம் சம்பூரிலிருந்து நிலாவெளி மற்றும் கந்தளாய் வரை நீண்டு செல்கிறது. இதற்கான காணி சுவீகரிப்பு சட்டரீதியாக நடத்தப்பட்டதா? யாருக்குமே தெரியாது. காணிச் சுவீகரிப்புக்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அவை கடைப்பிடிக்கப்பட்டதா? இதுபற்றி தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா? மத்திய அரசு கொழும்பிலிருந்து எமது வளங்களை சூறையாட அனுமதிக்க முடியாது. தீர்மானங்களை எடுப்பதில் எமக்கும் பங்கு வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் உரிமைகளை அபகரிக்கும் வேலைக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்களுக்காக பேச வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பாரம்பரிய வதிவிடங்களில் மீளக்குடியமர்த்துவோம் என்று முதலமைச்சர் தனது கொள்கை உரையில் கூறியுள்ளார். பாரம்பரிய வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்றுவிட முயற்சிக்கும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் தகுந்த பாடம் புகட்ட முன்வர வேண்டும். அவருக்கு அப்போது நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம். தட்டிக்கேட்கும் முதலமைச்சர் தான் எமக்குத் தேவை. தனது கொள்கை உரையில் தமது நிறைவேற்று நிர்வாகத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டிருக்கின்றார். சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கீழ் வரவேண்டும் என்றும் முதலமைச்சர் கோருகின்றார். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படக்கூடாது என்று மத்திய அரசின் பங்காளிக்கட்சி ஒன்று வலியுறுத்தியுள்ளது. சமூகத்தின் உரிமைகள் பறிபோகும்போது வாய்பேசா மடந்தைகளாக நாம் இருக்கக்கூடாது. அமைச்சரவையில் ஜனாதிபதி முன்னிலையில் நம் அமைச்சர்கள் வாய்பேசா மடந்தையராகவே இருக்கின்றனர். மட்டக்களப்பு கலவரத்தை அடுத்து முதன் முதலாக முதலமைச்சருடன் தொடர்பு கொண்டேன். தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். முதலமைச்சரை நம்பினோம். இன்னும் முதலமைச்சரை நம்புகின்றோம். தமிழ், முஸ்லிம் உறவு தொப்புள் கொடி உறவாக தொடர வேண்டும் என்று நம்புகின்றோம். முஸ்லிம் காங்கிரஸ் மீது பழி சுமத்தாதீர்கள். மற்றவர்களின் துன்பங்களில் குளிர்காய எண்ணுபவர்கள் அல்லர் நாம். ஒரே பூமியில் ஒன்றாக வாழ வேண்டும் என்ற உறுதியுடன் நாம் பணிபுரிகின்றோம். அரசியல் ரீதியாக அணி பிரிந்து இருக்கலாம். கிழக்கை பிரித்துவிட்டால் இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்துவிட்டது என்று முஸ்லிம் மக்கள் எண்ணிவிடக்கூடாது. மாகாண சபையின் நோக்கம் என்ன என்பதை கண்டறிந்து நாம் செயல்பட வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு வித்தியாசமானது. அனைத்து சமூகங்களும் தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் அதிகாரப் பங்கீடு பெற்று வாழக்கூடிய தீர்வு ஒன்றையே முஸ்லிம் காங்கிரஸ் நாடுகிறது. அந்தத் தீர்வு கிடைக்குமா? சர்வகட்சி மாநாடு ஆரம்பமானது. அடிக்கடி கூடியது. அதன் முன்னேற்றத்தில் நாளுக்கு நாள் நம்பிக்கையிழந்து வருகின்றேன். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னராவது சர்வகட்சி மாநாட்டின் செயல்பாட்டின் முன்னேற்றம் காணப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
சி.சு.க அமைச்சர்கள் சிலர் பதவி விலகத் தீர்மானம்?
அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்து, சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், எரிபொருள் பாவனைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செலயாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் குறித்து அரசாங்கத்திற்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனவும், எதிர்காலத்தில் இது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் இராஜினாமா குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களே இவ்வாறு பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளையானைச் சந்திக்க மறுத்ததால் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கிழக்கிற்குச் செல்லத் தடை
இலங்கைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்திக்க மறுப்புத் தெரிவித்ததால், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் கிழக்கு மாகாண விஜயத்துக்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமை விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்துக்குச் செல்ல அனுமதிக்கவேண்டுமென இலங்கைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சிடம் முதலில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு சாதகமான சமிக்ஞையை வழங்கிய வெளிவிவகார அமைச்சு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்ட மாகாணசபை அதிகாரிகள் அவர்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியது.
எனினும், தமது விஜயத்தின்போது கிழக்கு மாகாணசபை முதலமைச்சரைச் சந்திக்க விரும்பவில்லையென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குப் பதிலளித்துள்ளனர்.
இதனைக் கவனத்தில்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை கிழக்கு மாகாணத்திற்கு அனுமதிப்பதில்லையெனத் தீர்மானத்தது. கிழக்கு மாகாண முதலமைச்சரையும் மீறி கிழக்கு மாகாணத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லையென்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், அரசாங்கத் தரப்பினர், மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான காலாந்த அறிக்கை மற்றும் இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளனர்.
புலிகளின் திறமையான பிரசாரம் - அரசாங்கதின் கீர்த்திக்கு பங்கம்-மஹிந்த
தமிழீழ விடுதலைப்புலிகளின் திறமையான பிரசாரம் காரணமாக இலங்கை அரசாங்கதின் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அரசாங்கம் பிரசார போரில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட இணங்கினால், சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கமுடியும் எனக் கூறியுள்ள ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப்புலிகள், தாம் பலவீனம் அடைந்துள்ள போதெல்லாம், பேச்சுவார்த்தைக்கு தயார் என சர்வதேசத்திற்கு கூறிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
400 பொலிஸாரின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை
18 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 400 பொலிஸார் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜுன் 11ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் 401 பொலிஸார் விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டதாக பாதுகாப்புத் தொடர்பான ஊடக மையம் அறிவித்துள்ளது.
“அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 401 பொலிஸார் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்” என அந்த ஊடக மையம் தெரிவித்துள்ளது.
18 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் படுகொலைக்கு அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் என தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
அப்போதைய அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய பொலிஸாரை விடுதலைப் புலிகளிடம் சரணடையுமாறு 1990ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பணித்ததாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக நிலையம் விடுத்திருக்கும் இந்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து எந்தவிதமான பதிலும் வெளியிடப்படவில்லையென சர்வதேச செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளது
இந்த ஆண்டுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் பொருட்டு அரசாங்கம் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வருடாந்த கடன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் முன்னணி சர்வதேச வங்கிகளிடமிருந்து இலங்கை இந்தக் கடன் தொகையைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கே இந்த நிதி செலவிடப்படவுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக குவைஉh சுயவiபௌ எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இது குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறோம். இது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது" என அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் மெக்கோமார்க் தெரிவித்துள்ளார்.
"வெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் வட்டி அதிகரிப்பினால் இலங்கையின் நாணயத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் படி, 2007ஆம் ஆண்டிற்கான கடன் நிலுவை 2.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விடயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே என மத்திய வங்கியின் தலைமைப் பொருளியலாளரான நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.Friday, 13 June 2008
உலகெங்கும் உணவு நெருக்கடிக்கு உச்சிமாநாடுகள் ஆனால்; உண்பதற்கு கிடைப்பது அரைவயிறு உணவே இரண்டு பாரிய ஐ.நா
* செல்வந்த நாடுகள் துரித கதியில் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறிய மக்கள் இரண்டு பில்லியனாக அதிகரிக்கும் நிலை உருவாகும் உணவுக்கான உச்சிமாநாடுகளின் பின்னர் ஒன்று 1996 இல், மற்றையது 2002 இல் சர்வதேச சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவின்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது. 1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்தில் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மூன்று ஐ.நா மகாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன்தரவில்லை. இரண்டு உச்சிமாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர். 30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ள நிலையிலும் 60 க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி, தானியப் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் 150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய 3 ஆவது உலக உச்சிமாநாட்டில் வியாழனன்று தலைவர்கள் இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒழுங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர். யூ.என்.செயலாளர் நாயகம், பான்கிமூன் ரோமாபுரி உச்சி மகாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது ""?வைபீறியாவில், அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்துள்ளேன்' என்றார். இந்த மகாநாட்டில் கேட்ட பேரொலி யாதெனில் சர்வதேச சமூகத்தின், விசேடமாக செல்வந்த நாடுகளின் அரசமைப்புக்களை இந்த நெருக்கடிக்கும் தீர்வுகாணவேண்டிய தேவையுள்ளது என்பதை அழுத்தமாக விளங்கவைக்க வேண்டும் என்பதாகும். "நாங்கள் துரிதகதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறியமக்கள் இரண்டு பில்லியன்களாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களது பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டித்ததனால் அரைவாசியாகக் குறைந்துள்ளது' என்கிறார் . பசி,பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் யூ.என். ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் ஜோசெற்ஷிறான். உலக உணவுத்திட்டம் இந்த வருடம் அது 78 நாடுகளைச் சேர்ந்த 90 மில்லியன் மக்களுக்கு 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவு உதவியைச் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. இந்த நாடுகளுள் அதிகம் பாதிக்கப்பட்டனவான ஹெயிற்றி ஆப்கானிஸ்தான், சோமாலியா, எதியோப்பியா, கென்யா ஆகியன அடங்கும். உரோமாபுரியைத் தளமாகக் கொண்ட உணவு, விவசாய நிறுவனத்தின் அனுசரணையில் 3 நாட்களாக நடைபெற்ற உச்சிமகாநாடு பிரகடனப்படுத்துவதாவது; உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போஷாக்கின்மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனம். ஆனால் இறுதியில் இதில் எவ்வளவு வீதம் நடைமுறைப்படுத்தப்படும்? இந்தப் பிரகடனத்துடன் தளம்பல் நிலையிலுள்ள எண்ணிக்கையும் வெளிவந்தது. செயலாளர் நாயகம் உச்சி மாநாட்டில் கூறியதுபோல உறுதியான புதியவளங்கள் தேவைப்படுகின்றன. அல்லது உலகளாவிய இந்த நெருக்கடியைத் தீர்க்க வருடமொன்றிற்கு 1520 பில்லியன் டொலர்களும் மேலும் ஆபிரிக்காவில் பசுமைப் புரட்சியின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வருடந்தோறும் 810 பில்லியன் டொலர்களும் தேவைப்படும். சான்பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஒக்லன்ட் மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அனுறாதா மிற்றால் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது: முதற் பார்வையில் உச்சி மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உத்தரவாதங்கள் நம்பிக்கையூட்டுவன. அவர் கூறுவதாவது: உணவு நெருக்கடியினாற் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக உதவிகளுக்கும், கொள்ளை சிபார்ஸுகளுக்கும் அழைப்புவிடுப்பது. மேலும் இவற்றுள் சிறுவிவசாயிகளுக்கு உதவி, சமூக பாதுகாப்பு வலுப்படுத்தல், உணவு சேமித்துவைத்தல், ஆபத்து வேளைகளில் உதவக்கூடிய செயன்முறைகள் ஆகியனவும் உள்ளடக்கப்படுதல் போன்றனவற்றிற்கு அழைப்பு விடுத்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிறார். அதேவேளையில், மத்திம,நீண்டகாலச் சிபார்ஸுகள், விவசாயத்திற்கு மக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியனவும் உணவுப்பற்றாக்குறையை நீக்க உதவும் எனவும் அவர் கூறுகிறார். மிற்றால் மேலும் கூறுவதாவது: "அண்மைக்கால உணவு விலை நெருக்கடியும், அதிகரிக்கும் பட்டினி நிலையும் சர்வதேச சந்தையில் பொருட்கள் வர்த்தகம் செய்யப்படுதல் என்பதற்குப் பதிலாக புதிய விவசாய, உணவுக்கொள்கையின் தேவையொன்றை வேண்டி நிற்கிறது' இதற்கு மூன்றாவது உலக நாடுகளுக்கு உணவு நிறைவை உறுதிப்படுத்த உறுதியான கொள்கையொன்று அவசியமாகிறது. மேலும் மூன்றாவது உலகநாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தவறான வழிநடத்தல்களிலிருந்து விலகிக்கொள்ளும் திறமையும் அவசியமாகிறது. சிறுவிவசாயிகளை மையமாகக் கொண்டு ஒரு விவசாய முறையை உருவாக்குவது. விவ சாய தொழிலாளர்கள், மீனவர்கள், உள்நாட்டு சமூகங்கள் ஆகியவர்களை அடிப்படையாகக் கொண்டு உணவு நிறைவையும், நாடுகளின், உணவுக்கான சுயதேவைப் பூர்த்தியையும் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும் ஆகும். சர்வதேச செயற்பாடு, ஏற்கனவே உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்கிறது என பான் கூறினார். உணவு விவசாய நிறுவனம் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கு விதைகள், வேறு விவசாய உதவிகளைச் செய்தற் பொருட்டு 1.7 பில்லியன் டொலர்களுக்காக அழைப்புவிடுத்துள்ளது. இந்த வருடத்திற்கான உத்தரவாதங்களை நிறைவேற்ற உலக உணவு நிறுவனம் சவுதி அரேபியாவிடம் இருந்து 755 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது. உணவு, விவசாய நிறுவனம் மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களை பாதிக்கப்பட்ட நாடுகளில் வறிய கமக்காரர்களுக்குக் கொடுக்கிறது. மேலும் உலகவங்கி 1.2 பில்லியன் டொலர் நிதி வசதியை உருவாக்கி உணவு உற்பத்தியைப் பெருக்க உதவ முன்வந்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்கள் உலகின் மிகவறிய நாடுகளுக்கு உதவுவதற்காகும். ஐக்கியநாடுகள் சபையும் சி.ஈ.ஆர்.எவ். நிதியத்திலிருந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையினால் பாதிக்கப்படும் மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளுக்காக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. அவர் மேலும் கூறியதாவது, வளர்ந்துவரும் நாடுகள் தமது விவசாயப் பகுதியில் இன்னும் அதிகளவு நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும், அவை தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும், மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வலுவையும் கட்டுப்படுத்தி விடுமென்றும் கூறினார். தற்போதைய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலை மூன்று தசாப்தகாலமாக விவசாயத்தில் காட்டப்பட்ட சந்தை ஒழுங்கின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. மிற்றால் கூறுவதாவது: ஆகவே உணவு உற்பத்தியை ஸ்திரப்படுத்தவும், தகுந்த முறையில் உணவை நியாயமான விலையில் உலகளாவிய ரீதியில் விநியோகிக்கவும் நல்ல தீர்வுகளைக் காணுமாறு அழைப்புவிடுக்கிறோம். அதேவேளையில் 237 அரசசார்பற்ற நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புக்களும், ஏறக்குறைய 50 நாடுகளிலிருந்து பங்கேற்றுள்ளன. அவை உலக வர்த்தக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பஸ்கால்லாமியை வானளாவும் உணவுப் பொருட்களின் விலைக்கான விடை உணவு உற்பத்தி, வர்த்தகம் மேலும் ஒழுங்கீனம் ஆக்குவதிற் தங்கியிருக்கவில்லை என எச்சரித்துள்ளன. அக்கடிதம் டோகா செயற்பாடுகள் உலக உணவு முறையை எதிர்நோக்கும் பாரிய சவால்களை நிர்ணயிக்கவில்லை. அது காலநிலை மாற்றத்தையும், இயற்கை வளங்கள் குறைதல், எரிபொருட்களின் விலை நாலுமடங்காதல், வர்த்தக சந்தையில் போட்டியின்மை, பயோ எரிபொருள்கள் அதிகரித்தல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இதிற் கையொப்பமிட்டவர்கள் அக்ஷன் எயிட் இன்ரர் நாஷனல், ஆபிரிக்கா வர்த்தக வலைப்பின்னல், ஏஷியன் பெசன்ற் கொயலிஷன், ஒக்ஸ்பாம், ஒக்லன்ட் மன்றம் எல்.ஏ.சி.ஆர்.எம்.தேட்வேள்ட் நெற்வேக், பூமியின் நண்பர்கள் பூட்ஸ்பான் ஆகியவையாகும். ஐ.பி.எஸ்
அக்கரைப்பற்று காவல்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் விபச்சாரத் தொழில் முன்னெடுப்பு
அம்பாறை அக்கரைப்பற்று காவல்நிலையப் பொறுப்பதிகாரி முஹமட் இஷாட் (O.I.C சொந்த இடம் கொழும்பு இரு வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் கடமையாற்றுகின்றார்) உதவியுடன் விபச்சார தொழில் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொத்துவில், வாங்காமம், ஆலங்கேணி, போன்ற பின்தங்கிய பகுதியில் உள்ள முஸ்ஸிம் யுவதிகளும் , கோமாரி, விநாயகபுரம், போன்ற பகுதி தமிழ் யுவதிகளையும் இத்தொழிலுக்கு ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளுக்கு கையூட்டாகப் பணமும் பெண்களையும் கொடுத்து விபச்சாரத் தொழிலை அக்கரைப்பற்று நகரில் முதன்மை இடத்தைப் பெறும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மேற்கொண்டுவருகின்றது. அத்துடன் இக்காவல்துறை அதிகாரி, மற்றும் இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் அரசாங்க கட்சியில் அமைச்சராக உள்ள அதாவூல்லாவின் ஆதரவாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அக்கரைப்பற்று நகரில் அமைந்துள்ள S P.T.M Gold House Group கம்பனியின் உரிமையாளர் மஞ்சூர், விக்டோரிய வர்த்தக நிலையம், ரி.வி. ஆஜியாரின் மகன், மற்றும் அக்கரைப்பற்று ஒமேக்கா விடுதிக்கு அருகில் உள்ள கோழிக்கடை உரிமையாளரான ஒரு பெண் ஆகியோர் தமிழ் முஸ்ஸிம் இளம் யுவதிகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதற்கான முகவர்களாக செயல்பட்டுவருகின்றனர். இவ்வாறான தொழில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்துவருகின்றது. அத்துடன் இளம் யுவதிகளை வெளி மாவட்டங்களுக்கும் அழைத்து சென்று இத்தொழிலில் ஈடுபடுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இவர்களின் வர்த்தக நிலையங்களுக்கு வரும் பெண்களை வியாபாரம் செய்வது போன்று கை பிடித்து பேசியும் இத்தொழிலில் கூடுதலான வருமானம் பெற்றுத்தருவதாக அவர்களிடம் தெரிவித்து வரவழைக்கின்றனர். இவர்கள் உயர் தொழில் புரியும் அதிகாரிகள் மற்றும் மதிப்பு மிக்க பிரமுவர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இத்தொழிலுக்கு பெண்களை கொடுக்கும் முகவராக தொழில்பட்ட ஒரு தமிழ்பெண் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது ஈ.பி.டி.பியில் இணைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் சால்வையையா உண்ணக் கொடுப்பது
நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கைக்கு மதிப்பளிக்காதமையினால் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை பட்டினி; பிணியில் சிக்க வைத்திருக்கும் இந்த அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஸவின் சால்வையையா உணவாக மக்களுக்கு கொடுக்க உத்தேசித்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க இருந்த சந்தர்ப்பம் சில அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கத்தினால் கைநழுவிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் கலைக்கப்பட்ட இரண்டு மாகாணசபைகளிலும் வெற்றிபெறுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் சுலபமானது என கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த அரும்பாடுபட்ட ஜே.வி.பி. தற்போது தனித்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசியல் பின்னணியில் இரண்டு மாகாணசபைகளிலும் வெற்றிபெறுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் இலகுவானதென அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் மாகாணசபைகளை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் வாங்கிய கிராம சேவையாளர் கைது
காலி பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினரிடம் மூவாயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற கிராம சேவையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, சிறீசங்கமித்தபுரவிலுள்ள கிராமசேவகர் அலுவலகத்தில் வைத்தே நேற்றுக்காலை 9.35அளவில் இலஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கும்போது இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் பணிப்பாளர், சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். காலி, சிறீசங்கமித்தபுர 98வது பிரிவின் கிராம சேவையாளரான பீ.தீக்ஷன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு 70 மில்லியன் பவுண்ஸ்! பிரித்தானியா இரட்டைக் கொள்கை மகிந்த கண்டணம்!
பிரித்தானிய அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.பிரித்தானியாவில் இன்று வெளியாகியுள்ள த ரைம்ஸ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்புகு நிதி சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக பிரித்தானியா இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் மகிந்த கண்டித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களிடம் இருந்து வருடம் ஒன்றுக்கு 70 மில்லியன் பவுண்ஸ் நிதி விடுதலைப் புலிகளுக்கு சேகரிக்கப்படுவதாகவும் மகிந்த கூறியுள்ளார்.
இந்த நிதிமூலம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் விடுதலைப் புலிகள் தம்மீது தாக்குதலை நடத்தி வருவதாகவும், பிரித்தானியாவில் மட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவற்றிலும் இடம்பெறும் விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்தபோது, வெளியே ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் போராட்டம் நடத்திய போதிலும், தமிழ் மக்களிடம் பலவந்தமாக நிதி சேகரிக்கப்படுவதாக, மகிந்த ராஜபக்ஸ கூறியிருப்பதை த ரைம்ஸ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
ஹட்சனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - சர்வதேச ஊடகவியலாளர் சங்கம்
இலங்கை அரசாங்க ஊடகத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை தொடர்பாக சர்வதேச ஊடகவியலாளர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவினால் கடந்த 8ம் திகதி, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த மற்றும் பி.பி.சீ. செய்தியாளர் எல்மோ பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வானொலியில் பிரசாரம் செய்ததாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும் என ஊடக அமைச்சருக்கு சர்வதேச ஊடகவியலாளர் சங்கம் கடித மூலம் அறிவித்துள்ளது.
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருக்கும் அனைத்து ஊடகவியலாளர்களையும் பாதுகாக்குமாறும் அந்த சங்கம் அமைச்சரிடம் கோரியுள்ளது.
கனேடிய தமிழ் மாணவன் இலங்கையில் கைது
கனடாவை நிரந்தர வதிவிடமாக கொண்ட மாணவரொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடா ரொரண்டோவை சேர்ந்த கஜன் இரம்பைமூர்த்தி(வயது20) எனும் மாணவரே கடந்த இரு வாரங்களிற்கு முதல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கனடாவிலிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் ,இரசாயன பொருட்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது இவை விடுதலைப்புலிகளிற்கு அனுப்பி வைக்கப்படும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரில் கஜன் இரம்பைமூர்த்தி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பில் தமிழர்கள் காரணங்கள் எதுவும் இன்றி கைதுசெய்யப்படுவதாக கனேடிய தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளதாக
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்படுகிறது
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான உலகளாவிய ரீதியிலான காலாந்த அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் இந்த அறிக்கையை மனித உரிமைகள் அமைச்சின் சார்பில் அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் ரஜீவ விஜயசிங்க சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை தொடர்பான காலாந்த அறிக்கை கடந்த மே மாதம் 13ஆம் திகதி மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் செயற்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகள் விமர்சனங்களை முன்வைத்திருந்தன. 80 நாடுகள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தன என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையின் அறிக்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் 45 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 11 பரிந்துரைகள் தொடர்பாக மேலும் ஆராயத் தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், 26 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக 19ஆம் திகதி நடைபெற்ற செயற்குழக் கூட்டத்தில் 26 விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.
இதேவேளை, தற்பொழுது நாட்டில் காணப்படும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அனர்த்தமுகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் என்ற ரீதியில் இலங்கையில் இருக்கவேண்டி இருப்பதாகவும், இதனால் இன்று ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு தனியார் ஊடகமொன்றிடம் கூறியிருந்தார்.
எனினும், தனக்குப் பதிலாக சமாதானச் செயலகத்தின் தலைவர் ரஜீவ விஜயசிங்க இலங்கை பற்றிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளத் தவறியிருக்கும் சூழ்நிலையில் இந்த அறிக்கை முன்வைக்கப்படுகிறது.
யாழ் சிறைச்சாலை வாகனத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் பலி
யாழ்ப்பாண சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் மீது வெள்ளைவான் குழுவினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்து இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் செல்வராஜா ஜெனரிக்ராஜ் (17), தங்கராஜா சுலோஷன் (17) ஆகிய இருவரும் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். யாழ் சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலை வாகனம் சுண்ணாகம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளை வானொன்றில் பின்தொடர்ந்த ஆயுதக்குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்ததாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்ட ஜெனரிக்ராஜ் என்வரின் தாய் தந்தையர் இனந்தெரியாத ஆயதக்குழவினரால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரும் அவருடைய சகோதரியும் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்திருந்தனர்.
யாழ் சிறைச்சாலை ஆணைக்குழுவுக்கு போதியளவு வாகனங்கள் இன்மையும் இன்றைய சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருப்பதாக யாழ் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.ஜனாதிபதி செயலகத்திடமிருந்து விளக்கம் கோரினார் கலாநிதி நேசையா
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலிருந்து விலகுமாறு கூறியமை தொடர்பாக ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி நேசையா, ஜனாதிபதி செயலகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
மூதூரில் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் பேர் கொல்லப்பட்டமை, திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டமை உள்ளிட்ட 15 முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு முன்னெடுத்துவரும் இரண்டு விசாரணைகளிலிருந்து ஆணைக்குழு உறுப்பினர் நேசையாவை விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
கலாநிதி நேசையா மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துடன் தொடர்புபட்டவர் எனவும்இ மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டுவரும் அமைப்பு என்பதால் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் மற்றும் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் கொலை வழக்குகளிலிருந்து விலகிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
எனினும், ஏனைய வழக்கு விசாரணைகளில் நேசையா இணைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நிசாங்க உடலகம கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தனது பங்களிப்புத் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விளக்கமளிக்கவேண்டுமென கலாநிதி நேசையா ஜனாதிபதி செயலகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Thursday, 12 June 2008
தமிழக மாணவர்கள் 52,000 பேருக்கு ஐடி வேலை
சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பளிக்கும் வகையில், மாநில அளவில் கேம்பஸ் இண்டர்வியூவை தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தி வருகிறது.
சாப்ட்வேர் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் இண்டர்வியூ நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறார்கள். சமீபத்தில் 300 மாணவர்கள் சி.டி.எஸ், டி.சி.எஸ்., கோத்ரேஜ், ராபர்ட் பாஸ் ஆகிய 4 நிறுவனங்களில் வேலை பார்க்க தேர்வானார்கள்.
அவர்களுக்கு வேலைக்கான உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
வேலைக்கான உத்தரவுகளை துணைவேந்தர் டி.விஸ்வநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த வருடம் படித்த 72,000 மாணவர்களில் 52,000 பேருக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது. மீதமுள்ள 20,000 பேருக்கும் வேலை கிடைக்கும் வகையில் மேலும் இண்டர்வியூ நடத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 கல்லூரிகளிலும் 3,200 மாணவர்களில் 3,100 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
ஆங்கிலத்தில் தகராறு:
மாணவர்கள் பாடத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாலும் திறமையுடன் ஆங்கிலத்தில் விளக்கும் தகுதி பலருக்கு இல்லை. வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை மாணவர்களிடம் வளர்க்க அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டுவருகிறது. அதற்காக தொழிற்சாலைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
4 அல்லது 5 கல்லூரிகளை இணைத்து இந்த திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப துறையில் தான் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என்றாலும் இப்போது மெக்கானிக் மற்றும் சிவில் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. அதைச் சார்ந்த கம்பெனிகள் பல சென்னையை சுற்றி வந்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பி.இ. கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் இடம் கிடைக்கும் என்றார்.
டிசிஎஸ் சாதனை:
இதற்கிடையே, வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 1,075 மாணவ, மாணவியரை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு தேர்வு செய்துள்ளது டாடா கன்சல்டன்ஸி நிறுவனம்.
வேலூரில் உள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை கேம்பஸ் இன்டர்வியூவை டிசிஎஸ் நடத்தியது. இதில் 1,075 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பில் மீண்டும் இராணுவ முகாம்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வெளியேறி விசேட அதிரடிப்படையினர் முகாம் இட்டுள்ள இடங்களில் மீண்டும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, கிரான்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மட்டக்களப்பு பார் வீதியிலும் ஒரு முகாம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணு வத்தினர் வெளியேறி விசேட அதிரடிப்ப டையினர் முகாம் இட்டுள்ள இடங்களில் மீண்டும் இராணுவ முகாம்கள் அமைக்கப் பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சா லையில் ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, கிரான்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் மட்டக்களப்பு பார் வீதியிலும் ஒரு முகாம் புதிதாக அமைக் கப்பட்டுள்ளது.
