எனது ஈரான் பயணம் - 1
கடந்த வாரம் ஈரான் நாட்டின் தீவு ஒன்றுக்கு விசா மாற்றல் விஷயமாக
சென்றிருந்தேன். இரண்டுமாத விசிட் விசாவில் வருபவர்கள் மறுபடியும் வேறு விசா
மாற்ற வேண்டும் என்றால் நாட்டை விட்டு வெளியேறி பிறகு புதிய விசாவில் உள்
நுழைய வேண்டும். முன்னர் வேலை பார்த்த கம்பெனி விசாவில் இருந்து புதிய
கம்பெனி விசாவுக்கு மாறுவதால் நானும் செல்ல வேண்டியதாயிற்று. முன்னரே இரண்டு
மூன்று முறை சென்று வந்த அனுபவம் இருந்தாலும் அதே விமானத்தில் சென்று
திரும்பியதால் ஊர்சுற்ற நேரமில்லை. இந்த முறை அபுதாபி திரும்ப விமானம்
இல்லாததால் இரண்டு நாள் தங்க வேண்டிய சூழ்நிலை.
நான் கொண்டு சென்றிருந்த N95 மொபைல் கேமராவில் பிலிம் போட மறந்ததால்
கூகிளில் சிக்கிய படம் இங்கே. அதுவுமில்லாமல் கொளுத்தும் வெயில் வேறு
கவுந்தடித்து தூங்கவே நேரம் சரியாக இருந்தது.
ஈரானிய மக்களில் பெரும்பாலோனோர்கு பார்சி தவிர வேறொரு மொழியும்
தெரியவில்லை. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி தெரியாதது போல. ஒன்றிரண்டு
பேர் சுமாராக ஆங்கிலம் பேசினார்கள். விமான நிலைய அதிகாரிகள் கூட சைகை
மொழிதான் பேசினார்கள். எங்கள் ஊர் பேருந்து நிலையத்தை விட சற்று பெரிதான
விமான நிலையம். அறுபது பேர் அமரக்கூடிய விமானம். விமானத்தில் ஏறியதும்
பாதி விலைக்கும் வாங்கி வந்த விமானமோ என்று எண்ணத்தோன்றியது. விமானம்
கிளம்ப ஆரம்பித்ததும் அவரவர் குலசாமியை கும்பிடுவது போல பாவத்துடன்
காணப்படுவதை அவர்கள் முகமே காட்டிக்கொடுத்தது.
உலகத்திலயே சேச்சிகள்தான் அழகு என்ற எண்ணத்தை ஈரானிய பணிப்பெண்ணை
பார்த்ததும் சற்றே தளர்த்த நேர்ந்தது (சேச்சிகள் மன்னிக்க). ஈரானிய பெண்கள்தான்
உலத்திலேயே மிக அழகு என்று யாரோ எங்கோ சொல்லக்கேட்ட ஞாபகம்
வந்துபோனது. அந்த பெண்ணிற்கே கூச்சம் வரும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரென்று வில்லன் போல விமான பணிப்பையன் வந்துவிட்டான். (விமானத்துல
எல்லாம் எவண்டா பையன வேலைக்கு வைக்க சொன்னது?) விமானநிலையத்தில
இறங்கியதும் ஏதோ பணய கைதிகளை நடத்துவது போல விமான பணியாளர்கள் நடத்தினார்கள். அவர்கள் பேசும் மொழியின் தோரணைதான் அப்படியே தவிர
அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
விமானநிலையத்தில் இறங்கியதும் நம் ஊர் ஆட்டோக்காரர்களை போல் அல்லாமல்
நாகரீகமாக எங்கள் ஹோட்டலில் தங்குங்கள் என்று கையை பிடித்து இழுத்தார்கள்.
எல்லோரும் வேனில் ஏறவே தயக்கத்துடன் கடைசி ஆளாக ஏறி ஹோட்டல் வந்ததும்
முதல் ஆளாக இறங்கினேன். நேராக பதிவு செய்யும் அலுவலகம் சென்றேன். அங்கேயும்
முக்காடிட்டு அழகான இரு பெண்கள் அவர்களிடம் அடுத்த விமானம் எப்போது என்று
விசாரித்தேன். அதெப்படி இவங்க மட்டும் மெழுகு மாதிரி முகத்தில மாசு மருவில்லாமல்
இருக்கிறார்கள் எந்த சோப்பு போட்டு குளிக்கறிங்கன்னு கேவலமான கேள்வி கூட கேட்க
நினைத்தேன்.
பாஸ்போர்ட்டை ஒப்படைத்தால்தான் ஹோட்டலில் அறையே தருவார்கள்.
அப்போதுதான் பாக்கெட்டை தடவி பார்த்தேன் காணவில்லை. அடங்கொய்யால
எவனோ அடிச்சிட்டான் போலருக்குன்னு மனசு பதறிப்போச்சு. பாஷை தெரியாத
ஊர்ல பாஸ்போர்ட்ட தொலச்சிட்ட எப்படிடா ஊருக்கு போவன்னு உள்ளுக்குள்ள
உதறல். கொஞ்சநேரம் கழிச்சி நிதானமா வந்த வழி போன வழி எல்லாம் தேடினேன்
நிதானமா உக்காந்து யோசிச்சேன். ஒருவேளை ரிசப்ஷன்ல தவற விட்டிருப்பனோன்னு
நேராக அங்கு சென்று அந்த ஈரானிய பெண்ணிடம் கேட்டேன். கேவலமான நமட்டு
சிரிப்புடன் எடுத்து நீட்டினாள். தேங்க்ஸ்னு சொல்லிகிட்டே திரும்பி பார்க்காமல்
வந்துவிட்டேன்.
தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகிலேயே பல ஷாப்பிங் மால்கள் இருந்தது நான்
போன நேரம் கல்லா கட்டும் நேரமாதலால் அனைவரும் பூட்டிக்கொண்டு செல்ல
இருந்தனர். உலகத்துலயே சாயங்காலம் ஆறுமணிக்கு கல்லா கட்டுறவங்க இவங்களாதான் இருப்பாங்க. விலையெல்லாம் துபாயுடன் கம்பேர் பண்ணும்போது டபுள் டபுளா
விக்கறாங்க. ஒரு திராம்ஸ் கொடுத்தால் 2400 ஈரானிய ரியால் தருகிறார்கள். பெரும்பாலும்
அனைத்து கடைகளிலும் டாலர்,திராம்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார்கள். தரை
இறங்கியவுடன் லட்சாதிபதியாகும் ஆசையில் 100 திராம்ஸ் பணத்தை ஈரான் மதிப்பிற்கு
மாற்றிக்கொண்டேன். இரவு உணவுக்கு 28800 ரியால் செலவு செய்ததை இங்கு
பெருமையுடம் கூறிக்கொள்கிறேன்.
ஹோட்டலில் தொண்ணூரு சதவீதம் பேர் பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள்
பேசியது சைனா மக்கள் பேசுவது போல கொய்ங் மொய்ங் என்று இருந்தது. மீதி
பத்து சதவீத ஆட்கள் கேரளத்து சேட்டன்கள். இவனுங்க பண்ண சேட்டை கொஞ்சமா
நஞ்சமா... அறையில் இருந்த சேட்டன் ஒருவர் குஷ்புவுக்கு கோவில் கட்டிய கேணயர்கள்
இந்த தமிழ்காரனுங்கள் என்று கூறினார்
அட நன்னாறி நாய... ஷகிலாவுக்கு கட் அவுட் வச்சிட்டு ஏண்டா இதபேசறிங்க?
என்று சொன்னவுடன் அடக்கி வாசித்தார்.
எவ்வளவு நேரம்தான் இந்த சேட்டன்கள் கூட சண்டை போடறது. அப்படியே பீச் பக்கம்
போலாம்னு போனேன். நம்ம மெரினா பீச் மாதிரியே இருந்தது நிறைய விசைப்படகுகள்
கரையில் நிறுத்தியிருந்தார்கள் ஆனால் அதன் நிழலில் காக்காய் கூட உட்காராமல்
வெறிச்சோடி இருந்தது ஏமாற்றாம்தான்.
வரும்வழியில்தான் ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது.
தொடரும்.
பி.கு: தொடர் எழுதணும்லாம் எழுதலங்க. பதிவு கொஞ்சம் பெருசா இருந்தா
வாசிக்காம போயிடுவாங்கன்னுதான் இரண்டு பதிவா போடறேன்.
எனது ஈரான் பயணம் - 2
முந்திய பதிவில் சொன்னது போல ஆச்சரியமான சந்திப்பு நிகழ்ந்தது என்று
சொல்லியிருந்தேன் பிரபலான ஒருவரை சந்தித்திருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள்.
ஆனால் சாதாரண மனிதர்தான் அவருடன் பேசிய அந்த மூன்று மணிநேரங்களில்
எவ்வளவு துயரம் எவ்வளவு இன்னல் அடைந்திருக்கிறார் என்று அறிய முடிந்தது.
பார்த்திபன் என்ற அவர் ஒரு இலங்கைத்தமிழர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பத்து
வருடங்கள் இருந்தவர். இயக்கத்தில் இருந்தவர் என்றதும் மிக ஆர்வத்துடன் கதைத்துக்கொண்டிருந்தேன். இயக்கத்தில் இருந்த ஒருவருடன் நேரடியாக பேசுவத
இதுவே முதல் முறை.
என் கண்முன்னே என் உறவினர்கள் ஊர்க்காரர்கள் சித்திரவதை செய்யப்படுவதும்
கேள்வி விசாரணையில்லாமல் கொல்லப்படுதையும் காணச் சகிக்காமல் பள்ளியிலிருந்து
இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.
இயக்கத்தில் சிறுவர்களை சேர்த்து ஆயுதப்பயிற்சி கொடுப்பதை விட இளைஞர்களை
சேர்க்கலாம் இயக்கத்தில் நீங்கள் இணையும்போது பதினைந்து வயதிலிருக்குமா?
பதினைந்து வயதுதான். இயக்கத்தில் சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஆயதப்பயிற்சி
தருவதில்லை. முதலில் படிப்பு பின்பு அவரவர்க்கு எந்த துறையில் நாட்டம் இருக்கிறதோ அதைப்பொறுத்து படிக்க வைப்பார்கள். தேவையென்றால் வெளிநாட்டுக்கு கூட அனுப்பி
படிக்க வைப்பார்கள். பெற்றோர் இல்லாத பலர் இதுபோன்ற படிப்பினை பெற்றிருக்கிறார்கள். மற்ற நேரங்களில் அடிப்படை பயிற்சி கொடுப்பார்கள். நீங்கள் நினைப்பது கட்டாயமாக
சேர்க்க மாட்டார்கள் ஈழவிடுதலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மட்டுமே இயக்கத்தில் சேர்க்கப்படுவார்கள்.
2005ம் ஆண்டு போர்நிறுத்தம் அறிவித்த போது இஅயக்கத்திலிருந்து வெளிவந்தேன்.
பின்னர் கருணா அணி பிரிந்து சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவுடன்
இயக்கத்திற்கு திரும்பவில்லை.
இயக்கத்தில் இருந்த காரணத்தால் உள்ளூர் போலிசாரால் அடிக்கடி சிறை சென்று வர
நேர்ந்தது எந்த காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் சிறையில் கழித்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் ஐம்பதாயிரம், லட்சம்னு கொடுத்து வெளியே வந்தேன். என்னுடன்
இருந்த பொடியன்கள் பலரை சிறையில் அடித்தே கொன்று விட்டார்கள். மிஞ்சியிருப்பது
நான் மட்டுமே. ஒருவேளை அங்கேயே இருந்திருந்தால் இந்நேரம் கண்டிப்பா
இறந்திருப்பேன்.
சென்ற வருடம் என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது என்னை
பிடித்துச்சென்றார்கள். என்ன குற்றம் என்றே தெரியாமல் கையெழுத்திட்டேன். ஆறுமாதம்
சிறைதண்டனை. சிறை என்றால் சாதாரண சிறை இல்லை. மூன்றுக்கு ஆறு அளவில்
உள்ள சிறையில் இரண்டு பேர் நெருக்கியடித்து இருக்க வேண்டும். மலஜலம் கழிப்பது
எல்லாமே அதே அறையில்தான். வருத்தம் வந்து விட்டால்கூட மருத்துவ வசதி
கிடையாது. கேட்டால் அடிப்பார்கள் என்று வருத்தம் வந்த சேதிகூட யாரும்
சொல்வதில்லை. டாக்டர் குறித்த நாளில் பிரசவம் ஆனதா, என்ன குழந்தை
பிறந்தது, சுகப்பிரசவமா என்று எதுவுமே தெரியவில்லை.
கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் சந்திக்கும் ஒருநாளில் என் மனைவியும் குழந்தையும்
வந்திருப்பதாக சொன்னார்கள். மிகுந்த ஆவலுடன் முண்டியடிக்கும் கூட்டத்தின் நடுவில்
பயங்கர சப்தத்திற்கு இடையில் ஓடினேன். என் மனைவி முன் நின்றும் என்னை
அடையாளம் தெரியவில்லை. நான்கு மாதம் முகம் வழிக்காமல், முடிவெட்டாமல் உடல்
இளைத்து இருந்தேன். எதிரில் நின்ற என் தாய் தந்தைக்கே என்னை அடையாளம்
தெரியவில்லை சில வருடங்களுக்கு முன் மணம் செய்த பெண்ணுக்கு எப்படி தெரியும்.
முதல் முதலாக என் குழந்தையை தூக்கும்போது கையில் விலங்கோடு தூக்கினால்
எப்படி இருக்கும்? குற்ற உணர்ச்சியோடு திரும்பினேன். எதிரில் ஜெயிலர் சீக்கிரம்
சீக்கிரம் என்று அவசரப்படித்தினார். நான் பார்க்க விரும்பவில்லை என்றும் என்
குழந்தையை முதல் முதலில் கைவிலங்கோடு தூக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்து
நகர்ந்தேன்.
திடீரென்று கனத்த மௌனம் சூழ்ந்து கொண்டது. யார் என்ன பேசுவது என்று திகைத்த
போது மறுபடியும் அவரே தொடர்ந்தார்.
வீட்டில் கொஞ்சம் வசதி இருந்த காரணத்தால் வெளிநாடு தப்பி வர முடிந்தது.
வசதியில்லாத நிறைய பேர் வீதியில் நிற்கிறார்கள். வசதியாக வாழ்ந்த குடும்பம் இன்று தெருவிலும், மரத்தின் அடியிலும் குடியிருக்கிறார்கள். வீட்டில் உள்ள பொருள்களை
கொள்ளை அடித்து அப்படியே வீட்டை நொறுக்கி விடுவார்கள்.
முதலில் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தேன் நாளாக நாளாக போலிசார்
எல்லா வழக்குகளுக்கும் என்னையே தேடி வந்து இழுத்து செல்லவே. அவசர அவசரமாக
எங்காவது செல்லவேண்டுமே என்று துபாய் வந்தேன்.
எங்க வேலை செய்யறிங்க?
எங்கயும் வேலை செய்யலங்க. வேலை தேடினேன் கிடைக்கவில்லை. விசா மேல விசா
போட்டு இது மூணாவது விசிட். வேலையும் கிடைக்கல பணமும் செலவாகிட்டே இருக்கு.
வீட்டுக்கு பணம் அனுப்புவது இல்லாமல் வீட்டிலிருந்தே வரவழைத்து செலவு செய்து
கொண்டிருக்கிறேன். நாட்டுக்கும் திரும்ப முடியாமல் இங்கயும் இருக்க முடியாமல்
ரொம்ப சிரமமாக இருக்கிறது என்றார்.
நண்பர்கள், உறவினர்கள் யாரும் இருந்தால் அவர்கள் மூலமாக ஏதாவது ஒரு வேலைக்கு
முயற்சி செய்யலாம்தானே?
என் கூட்டாளி பொடியன்கள் எல்லாருமே சாதாரண வேலை செய்பவர்கள்தான் இருப்பினும்
அவர்கள் மூலமாக கிடைத்த ஓரிரு வேலையும் இரண்டு மூன்று நாட்களுக்கு செய்தேன் பிறகு
திருப்பி அனுப்பிவிட்டார்கள்.மேலும் செலவழிக்க பணமும் இல்லை இந்த விசாவிலாவது
வேலை கிடைக்காவிட்டால் நாடு திரும்புவதை தவிர வேறு வழியில்லை.
என்ன வேலை தெரியும்?
டெய்லரிங் வேலை நல்லா தெரியும். துணிகளை வெட்டி வடிவா தைப்பேன் என்று கூறவே
அங்கிருந்து துபாயில் டெய்லர் கடை வைத்திருக்கும் நண்பருக்கு பேசி ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்டேன். ஆள் அனுப்புங்க வேலை தெரிஞ்சா எடுத்துக்கொள்கிறேன்
என்று கூறினார்.
விசா கிடைத்து துபாய் வந்ததும் மறக்காமல் போன் செய்யுங்கள் என்று தைரியம்
கூறிவிட்டு வந்தேன். இன்னும் எத்தனை காலம் அகதிகளாக இவர்கள் வாழ்க்கை
அமையுமோ தெரியவில்லை. கடைசியாக ஒன்று சொன்னார் இந்தியா நினைத்தால்
உடனே பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னும் கொஞ்ச
நாளில் எங்கள் நாட்டிலே வாழும் நிலை ஏற்படும் என்று உறுதியாக கூறினார்.
மெய்ப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் எங்கள் கண்ணீருக்காக, எங்கள் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள்
வெகுசிலரே. சுப.வீ,பழ.நெடுமாறன் அய்யா, வைகோ போன்றவர்கள்தான் என்றார்.
உடனே கொண்டு சென்றிருந்த ஆ.வி இதழில் சுப.வீ எழுதும் "அது ஒரு பொடா காலம்"
பகுதியினை காட்டினேன். ஆர்வத்துடன் படித்தார்.
இன்னுமா வைகோவை நம்புகிறார்கள் என்று வேதனைதான் எனக்கு வந்தது.
ஈரானை பற்றி அறிவோமா
----------------------------------------
|
|
|
nowadays hottest news about iran
-------------------------------------------
சீறிப்பாய்ந்தது ஈரான் ராக்கெட்: அமெரிக்கா கலக்கம்
டெஹ்ரான், பிப்.26_
ஈரான் ராக்கெட் அனுப்பி வெற்றிகரமாக சோதன
முதன் முதலாக விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி , அதனை வெற்றிகரமாக சோதித்து பார்த்ததாக ஈரான் நேற்று அறிவித்தது. அந்நாட்டின் இந்த அறிவிப்பு அமெரிக்காவை கலங்கடித்துள்ளது.
ஈரான் வரலாற்றிலேயே முதன் முதலாக விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி அதனை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்ததாக ஈரான் நேற்று அறிவித்தது.இந்த தகவலை அந்நாட்டு டெலிவிஷன் நேற்று ஒளிபரப்பிக்கொண்டேயிருந்தது.ஈரான் அனுப்பிய முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டதாக தொலைக்காட்சி அறிவிப்பாளர் தெரிவித்தார்.
நாட்டின் அறிவியல் மற்றும், ராணுவஅமைச்சகத்தின் ஆராய்ச்சி பிரிவினர் தயாரித்த முக்கிய பொருட்களை சுமந்துக்கொண்டு அந்த ராக்கெட் சென்றிருப்பதாக ஈரான் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மைய தலைமை அதிகாரி பஹ்ராமி தெரிவித்தார்.அது என்ன பொருள் , எங்கிருந்து அந்த ராக்கெட் அனுப்பபட்டது என்ற விபரங்கள் தரப்படவில்லை. தலைமை அதிகாரியின் பெயரும் கற்பனை பெயர் என்று கூறப்படுகிறது. ஈரானின் இந்த ராக்கெட் அறிவிப்பு அமெரிக்காவை கலங்கடித்துள்ளது. ஏற்கெனவே ஈரான் அணுகுண்டு தயாரிப்பதாக புலம்பிவரும் அமெரிக்கா அந்த ராக்கெட்டில் அணுகுண்டு இருக்குமோ என புரியாமல் குழம்பி தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் அணுசக்திப் பிரச்சினையை பேச்சு வார்த்தைமூலம் வழி தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி புஷ் இணக்கம்.
-----------------------------------------------------------------------------------------ஈரான் அணுசக்தியைப் பயன்படுத்த யுரேனியத்தை செறிவூட்ட மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு ராசதந்திர வழிகள் மூலம் தீர்வு காணவேண்டும் என்பதை மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவியும் அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யூ புஷ அவர்களும் கடந்த வியாழக்கிழமையன்று ஒப்புக்கொண்டனர்.
World Congress on Information Technology(WCIT) 2006 என்னும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆஸ்டின், டெக்சஸ் சென்றுள்ள பிரதமர் படாவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் புஷ், அவர்கள் ஈரான் பிரச்சினை பற்றி பிரதமர் படாவியுடன் கலந்தரையாடினார். அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமரை வரவேற்ற ஜோர்ச் புஷ் அவர்கள் ஈரானின் அணு ஆயுத உற்பத்திக்கான பிரச்சினை தொடர்பாக சுமுகமான வழிவகைகளைக் கையாள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்
ஈரான் அணுசக்தியை மின்சக்தி உற்பத்திக்கும் இதர அமைதிப்பணிகளுக்கும் பயன்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே இதில் மலேசியாவுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது என்றார் பிரதமர் படாவி. எனினும் அணுசக்தியை குண்டுகள் மற்றும் இதர அணுஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தினால் அதை மலேசியாவும் இதர நாடுகளும் எதிர்க்கும் என்றார்.
இந்தப் பிரச்னைக்கு ராசதந்திர வழிகளில் தீர்வு காணப்படுவதை ஈரானும் விருப்புகிறது. ஆனாலும் அது அணுசக்தி பயனீடு தொடர்பான அனைத்துலக கட்டுப்பாடுகளையும் அதன் பொறுப்புகளையும் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளைமாளிகை பேச்சாளர் Scott McClellan தெரிவித்தார்.
மனிதன் சின்ன உருவம் கொண்டவர் தான். ஆனால், அமெரிக்கா அவரைப் பெரும் பூதமாக நினைத்து அச்சம் கொள்வது ஏன் என்பதுதான் கேள்வி,
இக் கேள்விக்குப் பதிலை வழங்குவதற்கு முன்பாக ஈரானின் கடந்தகால அரசியல் சமூகப் பின்னணியையும் சற்று ஆராய வேண்டியிருக்கின்றது.
1979 ஆம் ஆண்டுவரை பிராந்தியத்தில் மட்டுமல்லாது முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் குட்டி அமெரிக்காவாகத் திகழ்ந்த நாடுதான் அன்றைய ஈரான். அன்று அந்த நாட்டிற்குத் தலைமைத்துவம் கொடுத்தவர் மன்னர் ஷா.
அமெரிக்காவினாலும் மேற்கத்திய நாடுகளினதும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தனது அரசியல், சமூகக் கொள்கையைக் கடைப்பிடித்தவர் இந்த ஷா. ஈரான் எண்ணெய் வளத்தை அமெரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப உபயோகித்தது மட்டுமல்லாது, மத்திய கிழக்கில் மேற்கத்திய கலாசாரப் பாரம்பரியங்களை பரவுவதற்கும் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு அயல்நாடுகளை ஈர்த்தெடுக்கின்ற ஓர் மைய நிலையமாகவே ஈரானை அமெரிக்க உபயோகித்து வந்தது. இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கெதிரான கலாசாரமொன்று வளர்வதற்கு மன்னர் ஷா உதவி புரிந்தார். அத்துடன், பலஸ்தீனப் போராட்டம், அரபு இஸ்ரவேல் போர்கள் நிகழ்ந்த காலங்களில் கூட அன்றைய ஈரான் கண்டுகொள்ளாமல் இருந்ததற்குப் பின்னணியாக இருந்ததற்கு பின்னணியாக இருந்தவர் மன்னர் ஷா அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் மீது கொண்டிருந்த நட்பே இதற்குக் காரணமாக அமைந்திருந்தது. மொத்தத்தில் முஸ்லிம் உலகின் பிரச்சினைகளை மன்னர் ஷா எப்போதுமே பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. இவ்வாறே அவரது ஆட்சி தொடர்ந்தது.
மன்னர் பரம்பரையின் நிலைப்பாடு அங்கு வாழ்கின்ற புத்திஜீவிகளிடத்தும் சமயக்குருமார்களிடத்தும் (அயாத்துல்லாக்கள்) பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்திருந்தது. அயத்சல்லா ருகுல்லா, கொமெய்னி பிரான்சில் அஞ்ஞாதவாசம் புரிந்த நிலையில் ஈரான் நாட்டில் பள்ளிவாயில்களை மையமாகக் கொண்டு மன்னரின் நடவடிக்கைகளுக்கெதிரான பிரசாரமொன்றை மேற்கொண்டது மட்டுமல்லாது, எண்ணெய் வளத்தை மன்னர் தனது குடும்ப சுகபோகங்களுக்காக உபயோகிப்பதற்கெதிராகவும் இவர் பிரசாரம் செய்யுமாறு அந்நாட்டு அயாத்துல்லாக்களைக் கேட்டுக் கொண்டார். காலப்போக்கில் பள்ளிவாயல்களை மையப்படுத்தி மேற்கொண்ட பிரசாரம் மன்னருக்கெதிரான பெரும் போராட்டமாக உருவெடுத்தது.
அயாத்துல்லாகொமெய்னி தலைமையில் நிகழ்த்த ஈரான் அரசியல் புரட்சிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஷாவும் அவர் குடும்பத்தினரும் நாட்டைவிட்டு ஓடிப்போய் தமது நட்பு நாடுகளில் புகலிடம் புகுந்தனர். மன்னர் கடைசியாக நிறுவிய பொம்மை அரசும் சில நாட்களுக்குள் வீழ்ச்சியடைந்தது. நாட்டில் இஸ்லாமிய அரசொன்று அங்கு உதயமானது.
நெடுநாள் அஞ்ஞாதவாசத்தின் பின்னர் அயாத்துல்லா கொமெய்னி ஈரான் வந்திறங்கிய சம்பவமும், அந்தக்காட்சியும், ஈரான் வரலாற்றில் மட்டுமல்லாது உலக வரலாற்றிலும் உணர்வுபூர்வமாக இன்றும் நினைவு கூரப்படுகின்றது. இதேபோன்றதொரு நிகழ்வே கொமெய்னி மரணத்தின்போதும் நிலவியது. அவரது ஜனாசாவை, உடலைப் பார்ப்பதற்காக முண்டியடித்த மக்கள் வெள்ளத்தைச் சமாளிக்க முடியாது. ஈரான் காவல்படை திக்குமுக்காடிப்போனது.
தலைவரின் மரண ஊர்வலத்தை நடத்துவதற்கு அபிமானிகளினால் பெரும் தொல்லை கொடுக்கப்பட்டபோது, வீதிவழியே ஊர்வலத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்ட ஹெலிகொப்டரில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அவர் சடலம் ஏற்றப்பட்டு பல கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள அவர் பிறந்த கும் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டு தரையிறங்க முயன்ற வேலைகளில் அங்கு சூழ்ந்துகொண்ட சனத்திரள் காரணமாக ஹெலிகொப்டர் தரையிறங்க முடியாமல் போனது. பலமணித்தியாலங்களாக அங்கும், இங்கும் வானில் பறந்த ஹெலிக்கொப்டர் கடைசியாக தரையிறங்கியபோது, பாதுகாப்புப் படைகளின் தடைகளையும் தகர்த்துக்கொண்டு வந்த மக்கள் வெள்ளம், தனது தலைவனின் முகத்தை ஒருமுறை கடைசியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று செய்த ரகலைகளினால் ஜனாசாவைத் தாங்கி வந்த பெட்டியும் சேதமாக்கப்பட்டது. அந்த வகையில் இன்றும் ஈரான் மக்களின் உள்ளங்களில் வாழ்கின்ற ஒரு புரட்சித் தலைவராகவே கொமெய்னி மதிக்கப்படுகின்றார்.
மன்னருக்கெதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகத் தனது தந்தை, சகோதரர்களைக் கூட இப்போராட்டத்தில் கொமெய்னிக்கு இழக்கவேண்டி ஏற்பட்டது. அத்துடன், கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒமெய்னி உறவினர்களும் அடங்குவார்கள். அதனைத் தொடர்ந்து 1979 இற்குப் பின்னர் அங்கு நடைபெற்ற தேர்தல்களின் மூலம் இன்றுவரை பலர் ஈரான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக ரட்சஞ்சானி திகழ்ந்தார். கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இவரே பெருவெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் தெஹ்ரான் நகர மேயராக பணியாற்றிய பொதுவாக பெரியளவில் உலகத்தவரால் கண்டுகொள்ளப்படாத அகமட் நஜாட், தேர்தலில் பெற்ற வெற்றி முழு உலகத்தின் கவனமும் அவர் மீது திரும்புவதற்கான ஒரு ஆரம்பத்தைக் கொடுத்தது.
எளிமையான வாழ்க்கை நடத்தும் இந்த சின்ன மனிதன் மிகவும் திறமையான கண்டிப்பான நிருவாகி.
ஜனாதிபதியாக இவர் தெரிவானதும் அவர்மீது அமெரிக்கா இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைத்தது. உலக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெஹ்ரான் பல்கலைக்கழக மாணவர்களின் அமெரிக்க பணயக்கைதிகள் விவகாரத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். எனவே, இவரின் ஜனாதிபதி அந்தஸ்தை அங்கீகரிக்க முடியாது. சர்வதேச சமூகம் இவர் மீது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சேபனையை வெளியிட்டது. எனினும், அதற்கான ஆதாரங்களை அவர்களினால் உரியமுறையில் சமர்ப்பணம் செய்ய முடியாமல் போனது. இப்பணயக் கைதிகள் விவகாரம் அமெரிக்க தனது வரலாற்றில் எதிர்நோக்கிய மிகப்பெரிய பின்னடைவாகவும் அவமானமாகவும் இன்றும் அவர்களால் நினைவுகூரப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் கால்நூற்றாண்டுகளையும் கடந்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படும் ஈரானின் மதசார்பு ஆட்சி அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாகவும் எச்சரிக்கையாகவும் கருதப்படுகின்றது.
ஈரானில் ஆட்சிமாற்றமொன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றது.
1988 களில் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் சதாம் ஹுசைன் ஈரான் மீது போர்தொடுத்த போது சதாமிற்கு ஆதரவாகவும் பக்கபலமாகவம், உதவி ஒத்தாசை கொடுத்துவந்த அமெரிக்கா, இப்போரில் ஈரானுக்கெதிராக இரசாயன ஆயுதங்களை சதாம் அன்று உபயோகித்த போது கண்டுகொள்ளவில்லை. இப்போரின் துவக்கத்தில் ஈராக் மேற்கத்திய ஆயுதங்களின் துணையுடன் பல வெற்றிகளை கண்டு முன்னேறிய போதும்; ஈரான் இஸ்லாமிய காவல்படை போரில் பிரவேசம் எடுத்தபோது ஈராக் பின்னடைவுகளை எதிர்நோக்கியது. ஈராக்கைக் கொண்டு ஈரானை வீழ்த்துவோம் என்ற அமெரிக்காவின் திட்டமும் தோல்வியில் முடிந்தது.
பின்பு அமெரிக்காவின் ஈராக் மீது போர் தொடுத்து சதாமையே வேட்டையாடியபோது தனது விமானங்களை அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஈரானில் கொண்டுபோய் வைத்த நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈராக் ஆட்சிமாற்றத்தின் போது ஈரான் சொத்தாகிவிட்டதாகவே கருதப்படுகின்றது.
இவ்வாறான அமெரிக்க சூழ்ச்சிகளிலிருந்து உள்நாட்டு நிலைமைகளை ஸ்திரப்படுத்திக் கொண்ட ஈரான், உலக அரங்கில் தனது ஸ்திரத்தன்மையை நிலைநாட்டிக் கொள்வதற்கு, பலமானதொரு இராணுவத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடைவர் தான் இன்றைய ஈரான் ஜனாதிபதி அகமட் நஜாட். எனவே, ஈரானை தொழில்நுட்ப ரீதியில் நவீனப்படுத்துவதற்கும் சக்திவாய்ந்த இராணுவமொன்றை கட்டியெழுப்புவதிலும் அவர் முனைப்புடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், அமெரிக்க தலைமையிலான மேற்கத்திய உலகம் கொடுக்கும் அச்சுறுத்தல்களையும், நெருக்கடிகளையும் இவர் காதுகளில் போட்டுக்கொள்ளாமல் செயற்படுவது அமெரிக்காவிற்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
போருக்குத் தேவையான ஆயுத தளபாடங்களில் எண்பது சதவீதத்தை ஈரான் இன்று சொந்தமாக உற்பத்தி செய்து கொள்ளும் வல்லமையை அடைந்திருக்கின்றது. மேலும், ஆயுத ஏற்றுமதியை ஒரு வருமானம் தரும் தொழிலாக முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் அது இன்று ஈடுபட்டு வருகின்றது.
மேலும், நீருக்கடியில் நெடும்தூரம் பாய்ந்து தாக்கவல்ல நவீன ஏவுகணை ஒன்றை உலகிற்கு முதல்முறையாக ஈரான் அறிமுகம் செய்து வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்த்திருக்கின்றது. கடற்போரில் எதிரிகளின் கப்பல்களைத் தாக்கியழிக்க இது பயன்படும். அத்துடன், அமெரிக்க தொழில்நுட்பத்தை விஞ்சும் அளவிலான நவீன போர் விமானங்களை சொந்தமாக உற்பத்தி செய்து சில தினங்களுக்கு முன்பு அது வெற்றிகரமாக தனது வான் பரப்பில் காட்சிப்படுத்தியிருக்கின்றது.
சொந்தமான கனரக போர் ஆயுதங்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் வருமானத்தை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
எட்டுக் கோடி சனத்தொகையைக் கொண்ட ஈரான் இன்று பலம் வாய்ந்த இராணுவமொன்றைக் கொண்டிருப்பதுடன் அண்மையில் ஈரான் மீது அமெரிக்கா கொடுத்த அச்சுறுத்தல் காரணமாக விஷேட தற்கொலைப் படையணியொன்றை உருவாக்குவதற்கு ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஆள்திரட்டிய போது, இரண்டு மூன்று தினங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் இதில்வந்து சுயமாக இணைந்து கொண்டதும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளை ஒருமுறை சிந்திக்க வைத்திருக்கலாம்.
யுரேனியம் செறிவூட்டுவதை உலகில் பல நாடுகள் பகிரங்கமாகவும் ரகசியமாகவும் மேற்கொள்கின்ற போது அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அமெரிக்காவும் அதன் சகாக்களும் ஈரான் விடயத்தில் மட்டும் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தும்படி கோருவதும் அமெரிக்காவிற்கு ஈரான் மீதுள்ள அச்சத்தையே வெளிப்படுத்துகின்றது. எனினும், ஈரான் ஜனாதிபதி அகமட் நஜாட்டின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் மிகத்தெளிவாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் ஈரான் அணுவாயுத பரீட்சையின் எல்லைக்கோட்டை எட்டியிருக்கின்றது. அல்லது அதற்கான தலைமைகளை என்றோ பெற்றுவிட்டது என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.
சொல்லப்படுவது போன்று ஈரான் அணுவல்லமையை அடையுமானால் மத்திய கிழக்கில் தற்போதைய நிலைமையும் தலைகீழாக மாறுவதற்கான வாய்புகள் நிறையவே காணப்படுகிறன.
ஈராக் மீது இஸ்ரேல் ஒருமுறை நடத்திய அதிரடித் தாக்குதல் போன்ற ஒன்றை மேற்கொண்டு ஈரான் யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இஸ்ரேல் அழித்துவிட முயன்றாலும் ஈரானின் பதிலடி தொடர்பில் இஸ்ரேல் அவ்வாறானதோர் தாக்குதலை தவிர்த்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான காரணங்களினால் ஈரானைப் பலவீனப்படுத்துவதற்கு அமெரிக்கா வேறு விதமான அணுகுமுறைகளை கையாண்டு வருகின்றது. ஷியா - சுன்னி மோதல்களை வலுவடையச் செய்து ஈரானுடன் இஸ்லாமிய நாடுகள் அணிசேருவதைத் தடுப்பதற்கான பாரிய சூழ்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக் கூட எதிர்காலத்தில் ஈரானுடன் அணிசேர்ந்தால். அது அமெரிக்காவின் இராஜதந்திர அணுகு முறைக்கு விடுக்கப்படும் பின்னடைவாகவும் அவமானமாகவும் அமைந்துவிடும். தற்போது ஈராக் நிகழ்வுகள் பெரும்பாலும் ஈரானுக்கு சாதகமாக காணப்படுகின்றன.
அமெரிக்காவின் அணுகுமுறையின்படி பாகிஸ்தானின் பெரும்பான்மையாகவுள்ள சுன்னி முஸ்லிம்களுடன் ஈரானை ஏதேனுமொரு சிக்கலில் மாட்டி அதன் மூலம் பாகிஸ்தான் - ஈரான் போறொன்றை தூண்டி ஈரானுக்குப் பாடம் புகட்ட அமெரிக்க நிருவாகம் முயற்சிகளை மேற்கொள்கின்ற போது அது கூட ஈரான் விடயத்தில் வெற்றியளிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே, ஈரானை அடிபணிய வைப்பதற்கு அவசரமான தேவை அமெரிக்க நிருவாகத்திற்குத் தற்போது ஏற்பட்டுள்ளது என்பது மிகத்தெளிவு.
கடந்த காலத்தில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதற்காக கூறிய காரணங்கள் அப்பட்டமான பொய் அபாண்டமானவை என்பதனை உலகம் உணர்ந்து கொண்டுள்ள சூழ்நிலையில் அதேபோன்றதொரு கற்பனைக்கு உருவத்தைக் கொடுப்பதும் இன்று அமெரிக்காவிற்கு சிரமமான காரியமாக அமையும் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் அணுவாயுத உற்பத்திக்கானவையல்ல என அது தொடர்பான புலன் விசாரணை நடத்திய குழு பகிரங்கமாக அறிவிப்புச் செய்துவிட்டமை அமெரிக்காவை சங்கடத்தில் மாட்டியுள்ளது.
No comments:
Post a Comment