குரங்குகளும் மனிதர்களைப் போல, ஒன்றுக் கொன்று பேசிக்கொள்வதும், குரல் வித்தியாசத்தை உணர் ந்து கொள்வதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஜெர்மன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.ஆசிய குட்டை வால் இன குரங்குகள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. பல்வேறு ஒலிகளை எழுப்பி, அதை குரங்குகள் உணர்கின்றனவா என்பது பரிசோதிக்கப்பட்டது. மனிதர் களைப் போலவே, குரங்குகளிலும், மூளையில், ஒலிகளை உணரும் பகுதி இருப் பது தெரியவந்தது. ஒலியின் தன்மைக்கு ஏற்ப, மூளைப்பகுதியில் மாற்றம் ஏற்படுவது, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் உறுதி செய்யப் பட்டது. குரங்குகளின் மூளைப்பகுதியில், ஒலி உணரும் பகுதி இருப்பதால், தங்கள் இன குரங்குகளுடன் பல்வேறு ஒலி சமிஞ்சைகளுடன் அவை பேசிக்கொள்கின்றன. ஒவ்வொரு குரங்கின் குரலுக்கும் வித்தியாசம் உணர்ந்து கொள்கின்றன.குரங்குகளின் ஒலியை துல்லியமாக உணரும் அதே நேரத்தில், பிற விலங்குகள், பூச்சிகள், மழை, இடி போன்றவற்றை தெளிவாக உணர்வது இல்லை. இந்த ஒலிகள், இவற்றின் மூளையில் உள்ள ஒலி உணரும் பகுதியில், குறைந்தளவே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம், குரங்குகளை வைத்து, மனிதர் களுக்கு குரல் இழப்பு, செவித்திறன் இழப்பு குறித்த காரணங்களை கண்டுபிடிக்க முடியும் என்ற புதிய கோணம் ஏற்பட்டுள்ளது.
Tuesday, 19 February 2008
குரங்குகளும் மனிதர்களைப் போல, ஒன்றுக் கொன்று பேசிக்கொள்வதும
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment