Friday 15 February 2008

உலகின் முதல் " குற்றவாளிகள் திருத்தும் மையம்"


சிறைச்சாலைகள் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் பள்ளிகளாக இருக்கவேண்டுமேயொழிய அவர்களை மென்மேலும் முட்டாளாக்கி, மூடனாக்கி, மனநோயாளியாக்கி, சமூகத்தின் மேல் மென்மேலும் கோபத்தை உண்டாக்கும் தண்டனை நிலையலங்களாக இருக்கக்கூடாது என்பதே மனிதனாகப் பிறந்த ஒருவனின் நேர்மையான எண்ணமாக இருக்கமுடியும். சமீபத்தில் தமிழக அரசு சிறைச்சாலைகளில் இறைச்சி உணவை சேர்த்தது கூட பலராலும் எள்ளி நகையாடப்பட்டது. இதைவிடக்கொடுமையான விடயம் என்னவென்றால், இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தமிழ்நாட்டின் ஏதோ ஒரு சிறைச்சாலையில் இறைச்சியுணவு வேண்டி கைதி ஒருவர் மரத்தின் மீதமர்ந்து போராட்டம் நடத்தியதாக ஊடகங்களில் படித்தோம்.

அக்காலம் தொட்டே கட்டிடக்கலைதான் அனைத்துக்கலைகளுக்கும் முன்னோடியாகவும் பலவித பரிணாமங்கங்களையும் வெளிப்படையாக முகத்தில் அறைந்தாற்போல் காட்டியுள்ளது. அத்தோடு பல சமூக அரசியல் மாற்றங்களையும் கட்டிடக்கலை கொண்டுவந்துள்ளது. அதற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் நீங்கள கீழே பார்க்கும் சிறைச்சாலை. இது ஆஸ்திரியாவின் லியோபென் நீதித்துறை நிலையத்தின் குற்றவாளிகள் திருத்தகம். இது கடந்த வாரத்தில் கட்டிடக்கலை நிபுணர்களின் பல்வேறுவகையான விமரிசனத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால் இம்மாதிரியான 5 நட்சத்திர விடுதியைப்போன்ற சிறைச்சாலையும் இவ்வுலகில் உள்ளது. அபூ காரிப் சிறையும் உள்ளது...குவாந்தனாமோ வளைகுடாவின் தீவிரவாதிகள் கைகால்களைக் கட்டிப்போடும் சிறைச்சாலைகளும் உள்ளது. இனியாவது ஏகாதிபத்திய அரசுகள் படிப்பினைக் கற்றுக் கொள்ளுமென நம்புவோம்.

No comments: