Friday 22 February 2008

அளவோடு ஒயின் அருந்தினால் இதயத்துக்கு நல்லது


தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால் இதய நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள சமீபத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது: தினமும் ரெட் ஒயின் ஒரு கிளாஸ் (120 மி.லி.,) மட்டும் சாப்பிட்டால், ரத்த குழாய்கள் விரிவடைகின்றன. இதனால், இதயத்தின் பணி சுமை குறைகிறது. இதன் மூலம் இதய நோய்கள் வருவது கட்டுப்படுத்தப் படுகிறது. ஒரு கிளாசுக்கு மேல் ஒயினோ அல்லது 44 மி.லி.,க்கு மேல் வேறு மது வகைகளையோ அருந்தும் போது ரத்த அழுத்தம் கூடுகிறது. ரத்த குழாய்கள் விரிவடைய முடியாமல் சோர்வடைந்து விடுகின்றன. இதனால், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகின்றன. எனவே, ஒயினை அளவோடு அருந்தினால் வளமோடு வாழலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

No comments: