டர்காம் மற்றும் செயின்ற்.அன்ட்ரூ மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு முடிவு பெண்கள் கட்டு மஸ்தான ஆண்களை விட பெண்ணியல்புகள் கூடிய முகங்களுடைய ஆண்களையே அதிகம் விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளது.
*** Women see 'masculine' men as unsuitable long-term partners, new research suggests. Conversely, the psychologists from Durham and St Andrews Universities found that men with feminine facial features are seen as more committed and less likely to cheat on their partners. ***
இலண்டனில் 400 ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட ஆராய்ச்சியிலேயே இது தெரிய வந்து உள்ளது.
சிறிய கண், பெரிய மூக்கு, சதுர தாடை போன்ற ஆண்வர்க்கத்துக்குரித்தான இயல்புகளுடையவர்களை பெண்கள் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள், பிள்ளைப் பாசம் குறைந்தவர்களாக கணிப்பிடுவதாக தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் அகன்ற, மெல்லிய கண்கள், வளைந்த புருவம் போன்ற பெண்ணியல்புகளுடையவர்களை அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள், பிள்ளைப்பாசம் கூடியவர்கள், பெணகளை சமமாக நடத்துபவர்களாக பெண்கள் கருதுவதாக் கணிப்பிட்டுள்ளது.
ஒரு புத்தகத்தை முன் அட்டையை பார்த்து கணிப்பிடுவது போல ஆண்களையும் பெண்கள் கணிப்பிடுவதாக இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
அதை விட முக்கியமாக சிறந்த ஆண், பெண் உறவானது ஆணின் உடல் ஆரோக்கியத்திலே பெரிதும் தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
"Our research also found that it is men's health that conveys all round good qualities for partnership and personality. Our results contradict claims that machismo denotes fitness and disease immunity. Masculinity may buy you dominance but not necessarily tip top physical condition. Instead women see a healthy guy as the source of wealth, and fit for family life."
ஆகவே தமிழர் நாம் என்று கடா மீசை வைத்து தோன்றுவதிலும் பார்க்க மென் முகவியல்புகள் தோன்றும் விதத்தில் எமது உருவத்தை மாற்றியமைத்தால் நலம் போலத்தான் தோன்றுகிறது!
Tuesday, 19 February 2008
பெண்கள் நீண்டகால பார்ட்னராக எவ்வாறான ஆண்களை விரும்புகின்றனர்?..புதிய ஆராய்ச்சி விபரங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment