Monday 30 June 2008

ஸிம்பாப்வேயிடம் இருந்து இலங்கை முன்பு ஆயுதக் கொள்வனவு???

இலங்கை முன்னர் ஸிம்பாப்வேயிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஸிம்பாப்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு ஸிம்பாப்வே பாதுகாப்பு நிறுவனம்,

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம்ஆண்டு லிபிய கப்பலில் ஸிம்பாப்வே இலங்கைக்கு அனுப்பிவைத்த 32 ஆயிரத்து 400 மோட்டர்கள், நடுக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை முகாபேயின் ஸிம்பாப்வே அரசாங்கம் இன்னமும் ஆபிரிக்க நாடுகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

500 இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளதாக த ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முதற் தடவையாக 500 க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலான படையினர் இந்தப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கலகத் தடுப்பு போரியல், காடுகளில் போரிடும் முறைமை, விசேட கடல்சார் பயிற்சி, தகவல், தகவல் வழிகாட்டி, நீர்மூழ்கி எpதிரத் தாக்குதல் முறைமை என பலதரப்பட்ட போரியல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்படுத்துவது அமுல்

கொழும்பு நகருக்குள் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் புதிய அவசரகால சட்டங்களை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரியவருகிறது.

கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையை நோக்கிச் சென்ற பிக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தையடுத்தே இந்தப் புதிய ஒழுங்குகள் குறித்து ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டப் பேரணிகள், ஊர்வலங்கள் என்பவற்றினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்க உயரதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பாராளுமன்ற கட்டடத்தொகுதி ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் உள்ளடக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் புதிய திட்டத்தினால் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளுக்கோ அல்லது இடங்களுக்கோ எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்காது எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் நிமித்தம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமையல் எரிவாயுவின் விலை இன்றிரவு உயரும்?

சமையல் எரிவாயுவின் விலைத்திருத்தம் குறித்து இன்று திங்கட்கிழமை மாலை இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் றூமி மர்சூக் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலைத்திருத்தத்திற்கென முன்வைத்த கோரிக்கைகளின் பிரகாரமாகவே, இந்த விலைதிருத்தம் அறிவிக்கப்படவிருப்பதாகத் தெரிவித்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, சமையல் எரிவாயுவிற்கான புதிய விலைத்திருத்தம் இன்று நள்ளிரவு வெளியிடப்படுமென தெரிவித்துள்ளது.

ஷெல் எரிவாயு நிறுவனம் தற்போது 12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் ஒன்றை 1,729 ரூபாவுக்கு விற்பனை செய்து வரும் நிலையில், அதன் விலையை மேலும் 324 ரூபாவால் அதிகரிக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை லாப் எரிவாயு நிறுவனமும், விலைத்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது

மோதல்களை நிறுத்தினால் அரசாங்கம் கவிழும்: விமல் வீரவன்ச

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது தமக்குத்தாமே மரண அத்தாட்சிப் பத்திரத்தை எழுதுவதற்குச் சமமாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணி, எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை இடைநிறுத்தினால் அது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு முடிவுகாலமாக அமைந்துவிடும் என பத்தரமுல்லவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

“அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக மக்கள் முறைப்பாடுகள் எதனையும் செய்யவில்லை. மோதல்களைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்புத் தன்மை தங்கியுள்ளது. அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் போருக்கும், அரசாங்கத்தின் நீடிப்புக்கும் இடையில் தொடர்புள்ளது. மோதல்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர அரசாங்கத்துக்கு மாற்றுவழி இல்லை” என்றார் விமல் வீரவன்ச.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்ற முற்பட்டால் அது அவர்களுக்கு மரணச் சான்றிதழ் எழுதுவதைப்போன்றதாக அமையும் எனக் குறிப்பிட்டிருக்கும் தேசிய சுதந்திர முன்னணி, மோதல்களை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்குப் பல்வேறு தரப்புக்களிடமிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளது. வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம், அயல் நாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போன்றவற்றிடமிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக விமல் வீரவன்ச நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த சனிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த விமல் வீரவன்ச, “இந்தியாவின் கைப்பொம்மையாக பிள்ளையான் செயற்படுகின்றார் என நான் நினைக்கவில்லை. ஈ.பி.டி.பி.கட்சிக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு கட்சிகளும் இந்தியாவினால் ஆதரவு வழங்கப்படும் கட்சிகளாயின் இவ்வாறு இடம்பெறாது” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் முதலாவது பொதுக்கூட்டத்தை ஜே.வி.பி.யினர் குழப்புவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

சார்க் நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கைப் படையினரே பாதுகாப்பு: பாலித கொஹண

கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் ஆசிய நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இலங்கைப் படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி, பாலித கொஹண தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பு வழங்க இந்தியப் படையினரும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் ஹர்ஷாய்குப் பாதுகாப்பு வழங்க ஆப்கானிஸ்தான் படையினரும் இலங்கை வரவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த ஊடகத் தகவல்களை மறுத்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கைப் படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் எனக் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கென, இந்தியாவின் கறுப்புப் பூனைகள் படையணி உட்பட 3000 இந்தியப் படையினர் இலங்கை வரவிருப்பதாகவும், இலங்கை கடற்பரப்பில் இந்தியக் கடற்படையினரின் கப்பல்கள் மற்றும் வான்பரப்பில் இந்திய உலங்குவானூர்திகள் என்பன பாதுகாப்பில் ஈடுபடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் தனக்குத் தேவையான பாதுகாப்பு அதிகாரிகளை அங்கிருந்து அழைத்துவரத் தீர்மானித்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அடுத்தமாதம் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நகரிலிருக்கும் பிச்சைக்காரர்களை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவைப்பது தொடர்பாக கொழும்பு மாநகரசபை ஆராய்ந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஐந்து முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருக்கும் இந்திய உயர்மட்டக் குழுவினர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்மட்ட இந்தியக் குழுவினர், இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் ஐந்து முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருப்பதாகத் தெரியவருகிறது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன், இந்திய பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோர், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பது, ஆயுதக் கொள்வனவுகள் , பாதுகாப்பு நிலைவரம், பொருளாதார நிலைவரம், சார்க் உச்சிமாநாட்டை நடத்தும் இடம் போன்ற ஐந்து முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடு மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக இந்திய உயர்மட்டக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நேரத்தை வீணாக்கும் செயற்பாடு என்ற அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வாவின் கருத்து மற்றும் இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடக்கூடாது என்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவின் கருத்து தொடர்பாகவும் இந்திய உயர்மட்டக் குழுவினர் தமது கவலைகளை வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைத்த பிரேரணையை வரவேற்றிருக்கும் இந்தியா, அதனை அடிப்படையாகக் கொண்டு நல்ல தீர்வை முன்வைக்கக்கூடிய பிரேரணைகளை விரைவில் முன்வைக்க வேண்டும் எனவும், தென்னிலங்கை அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. 17வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தாமை குறித்தும் இந்தியா, இலங்கை உயர்மட்டக் குழுவினரிடம் கேள்வியெழுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு மறைமுகமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியிருக்கும் இந்தியக் குழுவினர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட்ட பின்னரே அவர்கள் சர்வகட்சிக் குழுவில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தை அச்சுறுத்தும் வகையில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கருத்து வெளியிட்டமை குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்தி மற்றும் உணவு விடயங்களில் இந்தியக் கம்பனிகள் பலிக்கடாவாக்கப்படக்கூடாது என்பது உறுதிப்படுத்தப்படவேண்டுமெனவும் இந்தியக் குழுவினர், இலங்கைத் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் இரு தரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமென அவர்கள் அச்சம் வெளியிட்டதாகவும் தெரியவருகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை மேற்கொள்ளும் ஆயுதக் கொள்வனவுகள் குறித்துக் கேட்டறிந்துகொண்ட இந்தியா, ஈரானுடனான ஆயுதக் கொள்வனவு தொடர்பாகவும் வினவியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு கூட்டுறவு ஒத்துழைப்பைப் பேணவேண்டுமெனவும் உயர்மட்டக் குழுவினர் வலியுறுத்தியிருப்பதாக அந்த ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்திய பாதுகாப்பு ஆலேசாகர் எம்.கே.நாராயணன் தலைமையிலான குழுவினர், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடம் கேட்டறிந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்திய உயர்மட்டக் குழுவினர், இலங்கை பாதுகாப்புத் தரப்பினரிடம் வினவியுள்ளனர். பெருமளவான இலங்கை அகதிகள் தமிழகத்துக்கு இடம்பெயர்வது பற்றியும் இந்திய உயர்மட்டக் குழுவினர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கையில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை வந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் அக்கறை காட்டியதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொட, ஆகியோரிடம் இந்தியா கேட்டறிந்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சார்க் உச்சிமாநாட்டைக் கொழும்பில் எங்கு நடத்துவது என்பது பற்றியும் இந்திய உயர்மட்டக் குழுவினர், இலங்கை உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்திய உயர்மட்டக் குழுவினர் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அதற்கு முன்தினம் 19ஆம் திகதியே, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். அவர்களின் இலங்கை விஜயம் பற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவுக்குக் கூட விளக்கமளிக்கப்படவில்லையென கொழும்பு ஊடகமொன்று மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

army-with-cemera.jpgவரலாற்றுப்புகழ் மிக்க கதிர்காமம் முருகன் ஆலய உற்சவம் எதிர்வரும் யூலை 3 ஆம் திகதி ஆரம்பமாகி, அதேமாதம் 18 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்த தலயாத்திரையை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்து அடியார்கள் நாளையதினம் சென்றடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நடைபயணமாக செல்லும் இவர்களை யால வனப்பிராந்தியத்தில் வைத்து படையினர் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர்கள் கதிர்காமத்தில் தங்கியிருக்கும் காலத்திலும் கண்காணிக்கப்படுவர் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது

Sunday 15 June 2008

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பூகம்பம் ரணிலின் தலைமைத்துவம் மீண்டும் ஊசலாடுகிறது - ராவய செய்தி

ஐ.தே.க.யின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை நீக்குவது தொடர்பாக கட்சியினுள் ஏற்பட்டுள்ள பூசல்கள் உச்சநிலையை அடைந்துள்ளதாக ராவய பத்திரிகை இன்று (June 15) தனது பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தது.

இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது கட்சியின் பிரதான செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகிய அங்கத்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இருந்து வருகின்ற போதிலும், கட்சியின் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமைத்துவத்திலிருந்து நீங்க வேண்டும் என்ற போக்கிலேயே உள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் சில பிரதானிகள் June 13 ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கட்சி தலைமைத்துவத்திலிருந்து நீங்க வேண்டுமென கேட்டுக்கொள்ள இருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க அந்த வேண்டுகோளுக்கு சரியான முடிவினை அறிவிக்காவிட்டால் எதிர்வரும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களில் எதிர்ப்புக்குழு பங்கேற்பதில்லை எனவும் முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்திலிருந்து நீங்க வேண்டுமென உறுதியாக நிற்கும் குழுவில் கட்சியின் முன்னாள் தலைவரும், ரணிலுடன் நெருங்கியவருமான மலிக் சமரவிக்கிரம மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சண்டைலீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும் இருப்பதாக தெரிய வருகிறது.

June 10 இந்திய சுற்றுலாவை முடித்துக்கொண்டு ரணில் நாடு திரும்பியதும் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சில சிரேஸ்ட தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியவர்களுள் ரேணுகா ஹேரத், அமரா பியசிறி ரத்நாயக்க, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அதநாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரும் அடங்குவர்எனவும் கூறப்படுகிறது.

நாளை திங்கட்கிழமை ஐ.தே.க.யின் செயற்குழு கூடவிருப்பதாகவும் அச்சமயத்தில் ரணிலுக்கு எதிரான குழுவின் கடுமையான போக்குகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் இம்முன்னணியில் மங்கள சமரவீர சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்வதென்பதும் இவ்வெதிர்ப்புக்குழுவின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமைத்துவத்திலிருந்து நீக்குவதற்கு இதற்கு முன்பு 2 தடவைகள் முயற்சி மேற்கொள்ளப்பட்டன. அவ்விரு தடவைகளிலும் வந்த எதிர்ப்பினை ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக முறியடித்தார்.

2000ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கட்சியின் உபதலைவர் கருஜயசூரிய மற்றும் பிரதித் தலைவர் காமினி அதுகொரல ஆகியோரின் தலைமையில் ரணிலுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சியினை தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்ற ஒப்புதலுடன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன் பின்பு 2005 ஜனவரித் தேர்தலின் பின்னர் ரணிலின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. அச்சந்தர்ப்பத்தில் கட்சியின் உபதலைவர் கருஜயசூரிய உட்பட 17 பேர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியினை உருவாக்கியதுடன், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கல்லடியில் துப்பாக்கிச் சூடு : இரண்டு பொலிசார் பலி.

மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் பயணம் செய்த பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று மாலை தமது பணியை முடித்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் கைவசமிருந்த ஆயுதங்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலி பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்ப சிறிலங்கா தூதரகம் முயற்சி

இத்தாலியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்பும் முயற்சியில் அந்நாட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

இத்தாலி மிலானோ நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வினை குழப்பும் முயற்சியிலேயே சிறிலங்கா தூதரகத்துடன் இணைந்து அங்கு வாழும் சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை இறக்கச் செய்யுமாறு இத்தாலிய காவல்துறையினரிடம் சிறிலங்கா தூதரகத்தினரும், சிங்களவர்களும் முறையிட்டுள்ளனர்.

அவர்களின் முறைப்பாட்டினை பொங்கு தமிழ் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடம் இத்தாலிய காவல்துறையினர் கூறினர்.

இது மக்களின் நிகழ்வு, அதற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்து அதனை அரங்கிலும் தெரிவித்தனர்.

பொங்கு தமிழ் நிகழ்வு எதுவித தடையும் இன்றி தொடர்ச்சியாக நடைபெறுவதோடு தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் பாவலர் அறிவுமதி உணர்ச்சி பொங்க உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரோயல் கல்லூரியின் திருடனா?


பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலவின் மகன் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் என்பவை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளார்.

எனினும் இந்தக் குற்றத்தை கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பாடசாலை அதிபரை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டைக் கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைவிரல் அடையாளங்களின் அடிப்படையில் இந்தக் குற்றங்களுக்காக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித்திற்கும் ஏனைய நான்கு மாணவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் அவர்களுக்கு ஒரு மாதத்திற்குப் பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது.

எனினும் கேஹலிய ரம்புக்வெலயின் மகன் தமது குற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவருக்கு 6 மாத காலத்திற்குப் பாடசாலை நடவடிக்கைகளில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை வழங்கப்பட்டவுடன் கல்லூரிக்கு தமது பாதுகாப்பு அதிகாரிகளுடன் விஜயம் செய்த அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல அதிபரைத் தமது மகன் மீதான தடையை நீக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு தடையை நீக்காவிட்டால் அதிபரையும் உப அதிபரையும் வவுனியாவுக்கு இடமாற்றம் செய்யப் போவதாகவும் அமைச்சர் அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் மகன் மீதான குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டு இன்று நடைபெறும் பாடசாலை கிரிக்கட் போட்டியில் அவர் பங்கேற்கிறார்.

இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பாக ரோயல் கல்லூரியின் பழைய மாணவனான சட்டமா அதிபர் சி ஆர் டி சில்வாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த வாரம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்புவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கையரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளது!!!

indian-police1.jpgவிடுதலைப்புலிகளுக்கு வெடிமருந்துகள், ஆயுதங்களை கடத்தப்படுவதை தடுக்க தமிழக அகதி முகாம்களில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதுடன் அவற்றிக்கான அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்யவும் தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள், மின்கலங்கள் என்பன தொடர்ந்தும் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை அகதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் தங்கியுள்ள முகாம்களில் வைத்துள்ள இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி தூர இடங்களுக்குச் சென்று வெடி மருந்துகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்து, அவற்றை மறைத்து வைத்து, கடல் வழியாக விடுதலைப்புலிகளுக்கு கடத்திச் செல்லும் சம்பவங்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உளதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 117 அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளிடம் இருக்கும் வாகனங்களை கணக்கிட்டு, அவற்றை பறிமுதல் செய்யவும், அதன் பின்னர் அவற்றிக்கான அனுமதிகளை நிரந்தரமாக ரத்துச் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பணிகளில் கியூ, உளவுதுறை காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காவல்துறையினர் அதிகாரி ஒருவர் அகதி முகாமில் உள்ள அகதிகளை வெளியில் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவர்களை அழைத்துச் சென்று, புலிகளுக்கு தேவையான வெடி மருந்து உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து அதனை மறைத்து வைப்பதாகவும்.

புpன்னர் அவை கடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்தே தமிழக அரசாங்கம் இந்த உடனடியாக உத்தரவைபிறப்பித்துள்ளது. அத்துடன் அகதிகள் வாகனங்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் மருமகனுக்கு வரதட்சணையாக 30 மில்லியன் ரூபா

அராசங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு வரதட்ணையாக 30 மில்லியன் ரூபா கடன் தொகையொன்றை இலங்கை வங்கியூடாக தனது மருமகனுக்கு வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

"கமட கர்மாந்த நய" என்ற கிராமப்புற கைத்தொழில் திட்டத்தின் கீழ் இந்த கடன்தொகை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இதே கடன் திட்டத்தின் கீழ் அமைச்சரின் சகோதரர் ஒருவருக்கு 320 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட நிதி கூடிய வட்டி வீதத்தில் தனியார் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொள்ள பல வர்த்தகர்கள் விண்ணப்பித்த போதிலும் 200 ஊழியர்களுக்கு அதிகமாக உள்ள தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் சில உறவினர்களுக்கு மாத்திரம் இந்தக் கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த அமைச்சரின் மருமகன் ஒரு புகைப்படக் கடையொன்றை மாத்திரமே வைத்திருப்பதாகவும் அதில் சில ஊழியர்களே கடமையாற்றுவதாகவும் இரிதா லங்கா பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை வங்கியின் நகர கிளையினூடாக 6.5 வீத வட்டிக்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் குறித்த அமைச்சரின் மகள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பில் வான் குண்டுத்தாக்குதல்: 2 பேர் பலி- 11 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு நகர மையத்தில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளடங்கலான பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் குண்டுத்தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் பாடசாலைக் கட்டடங்கள் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

செந்தூர்முருகன், கோபால், பத்மநாதன் ஆகியோரின் வீடுகள் முற்றாக அழிந்துள்ளன.

சுதாகரன், சிவா, அன்ரன் நிக்சன், சந்திரகுமார்ஆகியோரின் வீடுகள் சேதமாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

இதில் விசுவமடு புன்னைநீராவியடியைச் சேர்ந்த

நாகதம்பிராசா (வயது 20)

ஐயாத்துரை சுந்தரலிங்கம் (வயது 47)

ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

6 பிள்ளைகளின் தந்தையான 1 ஆம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தங்கரசா

5 பிள்ளைகளின் தந்தையான வேணாவிலைச் சேர்ந்த அசோகன்

9 பிள்ளைகளின் தந்தையான வேணாவிலைச் சேர்ந்த பத்மநாதன் (வயது 76)

ஒரு பிள்ளையின் தாயான முதலாம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயமோகினி (வயது 32)

முதலாம் ஆம் வட்டராம் புதுக்குடியிருப்பைச்சேர்ந்த கலைத்தேவன் (வயது 36)

கற்சிலைமடுவைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 58)

2 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச்சேர்ந்த தினேஸ் (வயது 18)

10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சந்திரன் (வயது 52)

இரணைப்பாலை 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பார்புகழன் (வயது 27)

இரணைப்பாலையைச் சேர்ந்த விநோதன்

விசுவமடுவைச் சேர்ந்த பானுஜன்

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

Tamilwin.com

puthinam.com

நோர்வே ஓஸ்லோவில் பொங்குதமிழ்

நேர்வே ஓஸ்லோ, பேர்கன், துர்னெயம், ஸ்ரவங்கர், மொல்ட்டே, ஓலசூண்ட், புலூரா போன்ற நகரங்களில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நோர்வே ஒஸ்லோவில் மாபெரும் பொங்குதமிழ் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.பொங்கு தமிழ் நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழகத்தைச்சேர்ந்த உணர்வாளர்கள் பாவலரும், தமிழீழ ஆதரவாளருமான அறிவுமதி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

தேசியக் கொடியினை தமிழகத்தில் வருகைதந்திருந்த பாவலர் அவர்களும் புலமைப்பித்தன் ஆகியோர் ஏற்றினர்.இதனைத் தொடர்ந்து தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் உரை காணொளியில் காண்பிக்கப்பட்டது.

/>


ஊடகவியலாளர் திசாநாயகம் தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள்

சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பத்தியாளரும், அவுட் ரீச் இணையத்தள ஆசிரியர்களில் ஒருவருமான ஜே.எஸ். திசாநாயகம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் திசாநாயகம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மேலும் 90 நாட்களுக்கு அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, திசாநாயகத்தை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஊடக செயற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஊடகவியலாளர்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் பட்டியலில் 27 ஊடகவியலாளர்களின் பெயர்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக உரிமைகள் தொடர்பான பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் அந்த பெயர் விபரங்களை வெளியிடவி;ல்லை.

இருப்பினும் இந்தக் கருத்தை ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மறுத்துள்ளார்.

யுத்த சூனிய பகுதியை உறுதியுடன் பேணும் முயற்சியில் ஆலய நிர்வாகம்

மடு தேவாலயப் பகுதியில் சுமார் இரண்டரை கிலோ மீற்றர் பகுதியை யுத்த சூனியப் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்குரிய ஆயத்த வேளைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நேற்று (June 14) தெரிவித்தார்.

ஜுலை மாதம் 2ஆம் திகதி மடு தேவாலய திருவிழாவை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனத் தெரிவித்த ஆயர் மடு தேவாலயப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிலைகொண்டுள்ள படையினரை தேவாலயப் பகுதியிலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்வதற்கான முன்னரங்குக் காவல் நிலைகள் அமைக்கப்பட்டு வருவதாக வன்னி கட்டளைத் தளபதி ஜகத் ஜயசிறி தெரிவித்ததாகவும் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.


இதேவேளை மடு தேவாலயப் பகுதியை யுத்த சூனிய பிரதேசமாக புலிகளும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும். புலிகளுடன் பேச்சு நடத்தி அந்த உறுதிமொழியை பெறவுள்ளதாகவும் ஆயர் தெரிவித்தார்.

படையினரின் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்ததன் பின்னர் மடு தேவாலயத்துக்கு செல்ல அனுமதி வழங்கிய பின்னர் ஆலயத்தை புனரமைத்து மடு மாதாவின் திருச்சொரூபம் கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துள் முடிவடையும் பட்சத்தில் ஆகஸ்ட் 15ஆம் திகதி திருவிழாவை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம் மடு தேவாலயத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட திருசசொரூபத்தை மீண்டும் இருந்த இடத்திலே கொண்டுவருவதற்கு புனித பாப்பாண்டவர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக புலிகள் அமைப்புக்கு அறிவித்தல் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தூதுவராலய செய்திகளை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நாசகார பொறி - இலங்கையின் இனநெருக்கடி தொடர்பாக சென்னையில் இருநாள் கருத்தரங்கு.

இந்தியாவின் தெற்காசிய கற்கை நிலையம் இலங்கை இனநெருக்கடி தொடர்பாக ஏற்பாடு செய்துள்ள இருநாள் சென்னையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெறும் முக்கிய இராஜதந்திரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கையில் தீவிரமடைந்துவரும் அரசியல் நெருக்கடி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வி கண்டது ஏன்?

என்ற இரு தலைப்புக்களிலேயே இந்த இருநாள் நடைபெறுகிறது. இலங்கையிலிருந்தும் பங்குகொள்ள தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

முடிவில் மேற்சொன்ன தலைப்புகளுக்கு அப்பால் வேறுபல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

மகிந்தவினதும் அவரது பரிவார்ங்களினதும் எரிபொருள் செலவு 1163 கோடி

அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் எரிபொருள் செலவிற்காக இந்த வருடம் 1163 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் பாதுகாப்பு படையினரின் எரிபொருள் செலவீனங்களுக்காக 750 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் சேவைக்காக 270 கோடி ரூபாவும், எஞ்சிய 150 கோடி ரூபாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் எரிபொருள் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் என்பவற்றினால் சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக நிதியமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் துறைமுக ஊழியர் சுட்டுக்கொலை

திருகோணமலையில் துறைமுக ஊழியர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இவர் தனது கடமைகளை முடித்துவிட்டு திரும்பும் வேளையில் திருகோணமலை அன்புவழிபுரம் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்

சாக் மாநாட்டில் பயன்படுத்துவதற்காக 80 புதிய வாகனங்கள் இறக்குமதி

எதிர்வரும் மாத இறுதியில் நடைபெறவுள்ள சார்க் அரச தலைவர்கள் மாநாட்டின் போது பயன்படுத்துவதற்காக 80 வாகனங்களும், 60 மோட்டார் சைக்கிள்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச தலைவர்கள் பயன்படுத்தும் 10 விசேட மோட்டார் கார்களும், அரச தலைர்வகளின் வாகனங்களுடன் பயணிக்கும் 45 ப்ளைட் கார்களும், பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் 25 டிபென்டர் ரக வாகனங்களும் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச தலைவர்களின் வாகனங்களுடன் செல்வதற்காக 60 மோட்டார் சைக்கிள்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு எதிராக சந்திரிகா குமாரதுங்க பிரசாரம்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.

நாட்டின் சமகால அரசியல் போக்கில் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவரால் தனித்து நின்று போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையிருப்பதாகச் சுட்டிக்காட்டும் அரசியல் தரப்புகள், அதன்காரணமாக அவர் சந்திரிகாவுடனும், மங்கள சமரவீரவுடனும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றன.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரசாரங்களில் ஈடுபடுவார் எனவும், அவரது வருகை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பலமாக அமையும் என நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் அரசியலில் ஈடுபடச்செய்து, அவரூடாக சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தினைக் கொண்டுவர அழைப்பு விடுக்கலாம் என ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்ப்பதாகவும் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊழல்கள் போன்றவற்றினால் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டிருக்கும் பொதுவான அதிருப்தியினைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான வழிகளில் ஒன்றாகவே இந்தக் கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்தக் கூட்டணி அமைக்கப்படுமானால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ருக்மன் சேனநாயக்கவிடம் ஒப்படைக்கப்படும் எனவும், ரணில் விக்ரமசிங்க கூட்டணியைத் தலைமை தாங்கி நடாத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அண்மைக்காலமாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரசாங்கத்துக்கமிடையிலான முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றமை ஜே.வி.பியும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியங்களை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை மாதத்தில் நாடு தழுவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டம்

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ஜூலை மாதம் பாரிய தொழிற்சங்க போராட்டடமான்றை முன்னெடுக்க தேசிய தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக ரிவிர வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 80ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற பாரிய தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்று 28 ஆண்டுகள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அப்போது இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத அகில இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம், ஊழியர் சேவை சங்கக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியனவும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக தேசியத் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கன் முன்னணி மற்றும் லங்கா சமசமாஜ கட்சியுடன் தொடர்படைய தொழிற்சங்கங்களுக்கும் இந்த ஜூலை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன் முதல் கட்டமாக லட்சக் கணக்கான தனியார்துறை ஊழியர்கள் பங்கேற்கும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஜூன் மாத இறுதியில் ஊழியர் சேவை சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் போராட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளதாகச் சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொழிற்சங்கங்களினால் கோரப்படும் 5000 ரூபா சம்பள உயர்வை அரசாங்கம் வழங்காவிடின் ஜூலை மாத இறுதியில் அனைத்து அரச மற்றும் தனியார்துறை உழியர்களின் பங்களிப்பில் பாரிய ஜூலை தொழிற்சங்க போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக அதிகாரசபை போன்ற நிறுவனங்களும், நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனியார்துறை ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொழிற்சங்கப் போராட்டங்கள் நடைபெறும் தினங்கள் குறித்த தகவல் எதிர்வரும் 16ம் திகதி அநேகமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிவித்தலைத் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் துரித கதியில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Saturday 14 June 2008

LTTE strengthened thanks to President's war, says Mangala

Sri Lanka Freedom Party – People's Wing (SLFP-PW) leader Mangala Samaraweera says that LTTE has strengthened itself thanks to the war initiated by President Mahinda Rajapske. He also challenged to Defense Ministry Secretary Gotabhaya Rajapakse for a public debate on this argument.

Participating in an interview with a private TV channel last night (13) MP Mangala Samaraweera said that in contrast to the boasting of the government on the safety in Colombo, the bomb explosions took place not only in Colombo but also in far away villages. He said that none other than the LTTE is conducting them and the number of innocent civilians killed had increased. Commenting on the success in the Eastern front, the MP said that the war should be viewed as a whole and not as individual operations.

In that sense, instead of victory, the war had spread to villages in Deep South and the LTTE had been strengthened. He challenged Defense Secretary Gotabhaya Rajapakse for a debate on this argument.
Stating that innocent civilians and the war heroes hailing from villages are the victims of war, MP Samaraweera said that neither the sons of President Rajapakse, his brother Gotabhaya nor the relatives of Weerawansas or Chakrawarthis are killed in this war.

President and his brother challenge the LTTE to target them if possible while using maximum security such as road emptying for the President to go from one end of the Galle Face to the other end and the 42 back up vehicles of the Defense Secretary. The maniac LTTE leader who cannot aim them, targets the innocent civilians, said Mr. Samaraweera.

Stating that the government targets civilians in north in retaliation to the LTTE terrorist acts, MP Samaraweera asked the government not to forget that all the killed are citizens of this country.

Pointing out that Chandrika’s cabinet vowed to end war in three or six months after capturing Jaffna, although war remained up to date, MP Samaraweera stated that problems of this nature had ever been resolved only by means of war anywhere in the world.

Mr. Mangala Samaraweera further stated that Mahinda Chinthanaya pledged to restructure the ceasefire and not to abrogate it. He says that people have not given a mandate to drag the country into an unending war.

Mr. Samaraweera alleged that none of the pledges of the Mahinda Chinthanaya manifesto had been fulfilled.

மாகாண சபைத் தேர்தல் செலவுகளுக்காக 400 மில்லியன் ரூபா அபகரிப்பு!!!

  • UNNECESSARY EARLY ELECTIONS
  • GOVT RAISES LOAN TO PAY FOR POLL

வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த 40 கோடி ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து கொடுப்பனவுகள், கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான ஊதியம், எரிபொருள் கொடுப்பனவு உட்பட அனைத்து செலவினங்களுக்காகவும் இந்த பணம் செலவிடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 20 கோடி ரூபா செலவானதுடன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு 6 கோடி ரூபா செலவானதாகவும் தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளது

இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக குவைஉh சுயவiபௌ எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இது குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறோம். இது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது" என அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் மெக்கோமார்க் தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் வட்டி அதிகரிப்பினால் இலங்கையின் நாணயத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் படி, 2007ஆம் ஆண்டிற்கான கடன் நிலுவை 2.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விடயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே என மத்திய வங்கியின் தலைமைப் பொருளியலாளரான நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

படுவான்கரைப்பகுதி குண்டுச் சத்தங்களால் மட்டக்களப்பு நகரப் பகுதி செயலிழப்பு

மட்டக்களப்பு படுவான் கரைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் கேட்ட பாரிய குண்டுச் சத்தங்களால் மட்டு.நகரும் அதன் புறநகர்ப் பகுதிகளும் சில மணிநேரம் செயலிழந்தன.

படுவான்கரை பகுதியில் அண்மைக் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டுகளை நேற்று முற்பகல் 11.30 மணியளவில் படையினர் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்தனர்.

இந்தச் சத்தங்கள் மட்டு.நகரையும் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி போன்ற பிரதேசங்களையும் அதிரவைத்தன.

இதையடுத்து பலபகுதிகளிலும் மக்கள் சிதறியோடியதுடன் கடைகள், வர்த்தக நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. சந்தைகளிலிருந்து மக்கள் ஒட்டமெடுத்தனர்.

சுமார் அரைமணி நேரம் அனைத்துப் பகுதிகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

இதன் பின் உண்மைநிலை தெரியவரவே நிலைமை வழமைக்குத் திரும்பியது.

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை மீது தற்கொலைத் தாக்குதல்; 1,100 கைதிகள் தப்பியோட்டம்

வடக்கு ஆப்கான் சிறைக் கட்டடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தலிபான் போராளிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து, அச்சிறையிலிருந்த 1,100 சிறைக்கைதிகள் தப்பியோடியுள்ளதுடன், 15 சிறைக் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தப்பியோடியுள்ள சிறைக் கைதிகளில் இராணுவத்தினரும் அடங்குவதாக பிரதி நீதியமைச்சர் முகமட் காசீம் ஹாசிம்சாய் குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாரின் பிரதான சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பாக, சரியான எண்ணிக்கையை கூற முடியாதுள்ளதுடன், எஞ்சியுள்ளவர்களை கணக்கிட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி சில நூறு கைதிகள் எஞ்சியுள்ளதாக அவர் கூறினார்.

மேற்படி தப்பியோடியவர்களை கைது செய்யும் பொருட்டு ஆப்கான் பாதுகாப்புப் படைகள் பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக ஹாசிம்சாய் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கள இனவெறியரசின் தொடரும் அட்டூழியங்கள்.


கண்டி, கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் சிங்கள இனவெறியரசின் மாணவர்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

பெராதெனிய, மொறட்டுவ பல்கலைக் கழகத்திற் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்ந்தும் இராணுவ மற்றும் காவற்துறையினரின் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு செல்லும் இரணுவத்தினரும், காவற்துறையினரும் சந்தேகத்தின் பேரிலான கைது, விசாரணைக்காக அழைத்துச் செல்லுதல் என்று கூறி தமிழ் மாணவர்களை தொடர்ந்தும் கைது செய்து வருவதோடு அவர்கள் மீதான தாக்குதல்களையும் நடாத்தி வருகின்றனர்.

பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு இரவு வேளையில் செல்லும் இராணுவ உடை தரித்தவர்களும், அவர்களுடன் செல்லும் சில சிங்கள காடைக்கும்பலும் மாணவர்களைத் தாக்கிவிட்டு, அவர்களின் வீடுகளில் இருக்கும் பணம் விலையுயர்ந்த பொருட்கள், கைத்தொலைபேசிகள், மடிக்கணணிகள் போன்றனவற்றைத் திருடுவதுடன், அவர்களைக் கைதுசெய்து வாகனங்களில் தூக்கி எறியப்பட்டு கடத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.


மனிதநேயமற்ற காட்டுவாசிகள் போன்று தமிழ் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் காவற்துறையினரும், இராணுவத்தினரும், இராணுவப் புலனாய்வாளர்களும் மாணவர்கள் தமது அனைத்து ஆவணங்களினைக் காண்பித்தாலும் கூட விடுதலைப்புலி என்று முத்திரை குத்தி, யாழ்ப்பாணத்திலிருக்க வேண்டிய நீ; கொழும்பு எங்களுடைய இடம் இங்கு எதற்காக வந்தாய் என்று கூறி கண்மூடித்தனமாக தாக்குதல்களைத் தொடர்ந்தவண்ணமுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்ல கண்டி, கொழும்பு, மற்றும் புறநகர்ப் பகுதியைச் சூழ்ந்துவாழும் அப்பாவித் தமிழர்கள், இவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

இதே வேளை வீடுகளுக்கு வருகைதரும் இராணுவத்தினருடன் பல்கலைக்கழகத்திற் கல்விகற்றுக்கொண்டிருக்கும் சக சிங்கள மாணவர்களும் வருவதாகவும், அவர்களும் இராணுவத்தினருடன் சேர்ந்து தாக்குதல் நடாத்திவருவதாகவும் கொழும்பு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு வாழ் அப்பாவித் தமிழர்கள் காவற்துறையினரிடம் சென்று முறையிட முடியாமலும், தாக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலைகளில் சென்று சிகிச்சை பெறமுடியாமலும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதுடன், பயத்துடனே தனது காலத்தினைக் கழிக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கைது செய்யப்படும் மாணவர்கள் தொடர்பாகவும், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாகவும் இராணுவத்தினரும், காவற்துறையினரும் கூறுவதற்கு மறுத்து வருகின்றனர்.

அப்பிரதேச காவற்துறை நிலையத்திற் கைது செய்தவர்கள் தொடர்பாகக் கேட்கப்படும்போது தாம் யாரையும் கைது செய்யவில்லை என அங்கு கடமையிலிருக்கும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்தராஜபக்சவின் விசேட உத்தரவின் பெயரிலேயே இக்கைதுகளும் கடத்தல்களும் இடம்பெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதோடு இக்கைதுகள் சம்பந்தமாக அவரிடமே நேரடியாகச் சென்று கேட்கும்படியும், தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர யாழ் பிரதேசத்தில், போதைப்பொருட்களின் பாவனையை தேடிப்பிடித்து அழிக்கவேண்டிய இராணுவத்தினரும், காவற்துறையினரும்; தமது காவலரண்களுக்கு அழைக்கும் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களையும், ஆபாசப் பட குறுவட்டுக்களையும் வழங்கி மாணவர்களை தீயவழியில் வழி நடாத்தி வருகின்றனர்.

அத்துடன் மாணவ, மாணவிகளினை வீதிச்சோதனை என்னும் பெயரில் துன்புறுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களை உடற் சோதனை செய்வதற்கு பெண் காவற்துறையினரோ, அல்லது பெண் இராணுவ வீரர்களோ இல்லாத நிலையில் ஆண் இராணுவ வீரர்களும், காவற்துறையினரும் பெண்களினை உடற் சோதனைக்கு உள்ளாக்குவதினை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டுகொண்டும் காணாமல் இருப்பது அவர்களை மேன்மேலும் செய்யத்தூண்டும் ஒரு நிகழ்வாக அமைந்து வருகின்றது.

அன்பான மாணவர்களே, இனியும் பொறுத்திருந்து மாற்றானிடம் மண்டியிடத் தேவையில்லை. ஒரு ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா அரசு,
ஜனநாயகத்திற்கான எந்தவிதமான அடிப்படையுமற்று செயற்பட்டு வருகின்றது.

நாம் சுதந்திரமாக கல்வியினைத் தொடரவேண்டுமாயின் நமக்கென்று ஒரு நாடு அவசியம். இனியும் தாமதிக்காது அனைத்து மாணவர்களும் கேட்டுக் கிடைக்காத சுதந்திரத்தினை போராட்டம் மூலமாவது மீட்போம்.

மாணவர்களே நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் சுதந்திரத்தினை கேட்டு வாங்குவதா? இல்லை நாமாகவே எமது சுதந்திரத்தினைப் பெற்றுக்கொள்வதா?.

சர்வதேச நாடுகளும், ஐநா அமைப்புக்களும் இவை அனைத்தையும் கண்டும் காணாமலிருப்பதானது ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் இவ்வாறான செயல்களினை ஆதரிப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

உலகிலேயே போதைப்பொருட்களையும், ஆபாசப் பட குறுவட்டுக்களையும் மாணவர்களுக்கும், மக்களுக்கும் இராணுவ வீரர்களூடாகவும், காவற்துறயினரூடாகவும் வழங்கும் ஒரே நாடாக காணப்படுவது ஸ்ரீலங்கா மட்டுமே, அத்துடன் மாணவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள் கடத்தல், மக்கள் மீது தாக்குதல் நடாத்துதல் என்ற காட்டுமிராண்டித்தனமான, மனித நேயமற்ற ஒரு அரசாங்கம் நடைபெறுகின்றது என்றால் அதுவும் ஸ்ரீலங்கா மட்டுமே.

சர்வதேச நாடுகளும், ஐநா அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும் இவ்விடயத்தில் தலையிட்டு அப்பாவி மாணவர்களும், மக்களும் தாக்கப்படுவதையும், காரணமின்றி கைது செய்யப்படுவதனையும் தடுத்துநிறுத்த வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தத்தினால் தமது உறவுகளையும், வீடு வாசல்களையும் இழந்து, கல்வி கற்பதற்காக தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடாத்தப்படும் தொடர்தாக்குதல்களினால் மனமுடைந்து விரக்தியின் விளிம்பில் நிற்கும் தமிழ் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் அது இலங்கை அரசை மிகவும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இலங்கை அரசும், சர்வதேச நாடுகளும், மனித உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புக்களும் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று தமிழ் மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் கேட்டுக்கொள்வதோடு, இனியும் இவ்வாறு தாக்குதல்கள் தொடருமாக இருந்தால் தமிழ் மாணவர்களும், மக்களும் போராட்டங்களினை மேற்கொள்ளவேண்டி வரும் எனவும் எச்சரிக்கின்றோம்.


"மாணவர் சக்தி மாபெரும் சக்தி."
"விழுகின்ற பேனாக்கள் எழும் எங்கள் கைகளில் தமிழுக்கு விழுதாக எழுகின்றோம் எம் மண்ணில்"

ப.காண்டீபன்
தலைவர்,
தமிழ் மாணவர் ஒன்றியம்
2008-06-14

cartoon

வவுனியா அகதி முகாமில் குடிநீர் தட்டுப்பாடு

வவுனியாவில் உள்ள இரண்டு அகதி முகாம்களில் வாழும் 1,600 பேர் குடிநீர் தட்டுப்பாட்டினால் அல்லலுறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் ஆகிய பிரதேசங்களில் பாரிய குடிநீர்த்தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரே பவுசரில்தான் குறித்த இரண்டு பிரதேசங்களுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதி முகாம்களில் தங்கி வாழ்வோருக்காக குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவை பயன்பாட்டுக்கு உரிய நிலையில் காணப்படவில்லை எனத் தெரியவருகிறது.

கடுகதி ரயிலுடன் டிப்பர் வாகனமொன்று மோதியதில் இருவர் பலி

கம்பஹா மீரிகம பிரதேசத்தில் நேற்றுக்காலை கடுகதி ரயிலுடன் டிப்பர் வாகனமொன்று மோதியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

விஜய ரஜதபன என்ற இடத்திலுள்ள ரயில்வே கடவையில் நேற்றுக்காலை 8.20அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் கடுகதி பயணிகள் ரயிலின் பயணத்தையொட்டி ரயில்வே கடவை மூடப்பட்டு அபாய சமிக்ஞை காட்டப்பட்டிருந்தபோதிலும் அதனைப் பொருட்படுத்தாது சாரதி, ரிப்பர் வாகனத்தை ரயில்வே கடவைக்கு குறுக்காக செலுத்தியமையால் ரிப்பர் வாகனம் ரயிலில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டதில் சாரதியும் கடவைக்கு அருகே நின்று கொண்டிருந்த சமிக்ஞையாளரும் உயிரிழந்துள்ளனர்.

சமிக்ஞையாளர் பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தபோதும் ரிப்பர் வாகன சாரதியின் கவனயீனத்தினாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக மீரிக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் காரணமாக ரயிலுக்கோ அதில் பயணம் செய்தவர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் பொலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காத்திரமான பங்களிப்பை இந்தியா வழங்காததால் பிரச்சினை இழுபடுகின்றது - ஸ்ரீ ரவிசங்கர் குருஜி

இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்காததன் விளைவாகவே இலங்கை இனப்பிரச்சினை இழுபடுவதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ தெரிவித்தார்.

பெங்களுரில் வாழும் கலை அமைப்பின் சர்வதேச மத்திய நிலையத்தில் வைத்து விரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கி செவ்வியின் ஒரு பகுதி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை தற்போது கூட நாம் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம். அவருடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்.

இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல் ரீதியான அனுகுமுறை மூலம் தீர்வு கண்டு விட முடியாது. தீர்வை நோக்கிய பயணத்தில் மனமாற்றமும் பரஸ்பர நம்பிக்கையும் உறுதியான அடித்தளமாக அமைவதன் மூலமே இலகுவாக வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.

அந்த வகையில் அரசியல் அணுகுமுறையுடன் ஆன்மிக அனுகுமுறையும் இணைந்து பயணிக்கும் போதே முழுமையான வெற்றி ஈட்டக் கூடியதாக இருக்கும். என்று குருஜி அவர்கள் தெரிவித்தார்.

நாம் எமது அமைதி முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்போம். பதில் கிடைக்கின்றதோ இல்லையோ, அது குறித்து மனம் தளரவோ அல்லது சமாதன முயற்சியைத் தொடராமல் விடப்போவதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். மக்கள் நிம்மதியாக, சந்தோஷமாக அமைதியாக, சமாதனத்துடன் வாழ வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்க இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளளும் அமைதி வழிக்குத் திரும்பி பேச்சுவாhததை மேசையல் அமர்த்தி பேச்சுவார்ததை வெற்றி பெற அனைத்து முயற்சிகளிலும் நாம் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருப்போம்.

தொடர்ந்து முயற்சியை மேற்கொள்வோமாக இருந்தால் எப்போதாவத ஒரு சந்தர்ப்பத்தில் அது நிச்சயமாக வெற்றியை தரும் என நான் நினைக்கிறேன்.

இலங்கையில் சில அரசியல்வாதிகள் முன்பு செய்த தவறுகளினால் தான் இன்று இந்த நிலை உருவாகியுள்ளது என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிந்தும் தெரிந்தும் வைத்துள்ளனர். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

குடாநாட்டுக்கள் நுளைய புலிகள் தயாராகின்றனரா?-வீரகேசரி சுபத்திரா

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார்.

கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ்.

படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித் திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. தற்போது மேலதிக மாக 2.30 மணிநேரம் அதிகமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.

யாழ். கடல்நீரேரியில் ஒரு வார காலத்துக்கு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட் டிருக்கிறது. படையினரின் வாகனத் தொடரணி கள் செல்லும் போது வெளிநாட்டு, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும், நபரும் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கடந்த வார நடுப்பகுதியில் இருந்து யாழ்.நகரிலும் குடாநாட்டின் முக்கிய இடங்களிலும் படையினர் அதிகளவில் நிறுத் தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடாநாட்டின் தென்புற கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பெருமளவில் படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலதிக படையினருடன் தென்கரையோரப் பகுதிகளுக்கு கனரக பீரங்கிகள், மோட்டார் கள், டாங்கிகளும் நகர்த்தப்பட்டிருக்கின்றன.

யாழ்.படைத்தளபதியின் இந்த அறிவிப்பும், திடீரென அதிகரிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப் பும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றத்தையும் பீதியையும் உருவாக்கியிருக் கின்றன. கடந்த வாரத்தில் தென்மராட்சிப் பகுதியில் தாழப்பறந்து வட்டமிட்டு, புலிக ளின் முன்னரங்க நிலைகளுக்கு அருகே "கிபிர்' விமானங்கள் தொடர்ந்து நடத்திய குண்டுத் தாக்குதல்கள், பூநகரிப் பிரதேசத்தின் மீது நடத் தப்படும் இரவு பகல் பாராத விமானம் மற்றும் ஷெல் தாக் குதல்கள் என்பன குடாநாட்டை போர்ப் பீதிக்குள் சிக்க வைத்திருக்கின்றன.

தென்கரையோரப் பகுதி ஊடாக யாழ். குடா நாட்டுக்குள் நுழையப்போவதாக புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஒரு செய்தி பரவி யுள் ளதையடுத்தே இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு களை படையினர் மேற்கொள்வதாக யாழ்.

படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல் சந்திரசிறி தெரிவித்திருக்கிறார்.

"விடுதலைப் புலிகளால் குடாநாட்டின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யாழ்.

நகருக்கு அண் மையில் உள்ள சிறுத்தீவில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ள னர். அவர்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது என்பதாலேயே குடா நாட்டின் பாதுகாப்பை இறுக்கத் திட்டமிட்டி ருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி வெளியான ஆங்கில பத்திரிகையொன்றுக்கு யாழ்.படைக ளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி அளித்த பேட்டியில், "குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. படையினர் உயர்ந்த பட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்ப தோடு புலிகளின் ஊடுருவலையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குடாநாடு எப்போதுமே புலி களின் முக்கிய இலக்காக இருக்கிறது. அதனால் அவர்கள் குடாநாட் டுக்குள் ஊடுருவ முயற் சித்துக் கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கு கடினமானது. ஏனெனில், இறுக்கமான பாதுகாப்பு நடைமுறையில் உள் ளது' என்று தெரிவித் திருந்தார்.

எனினும் ஒரு மாதத்துக்குப் பின்னர்,அவரே குடாநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற் பட்டிருக்கிறது. சிறுத்தீவுத் தாக்குதலைப் போன்று புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத் தலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலை ஏற்பட்டமைக்கு சிறுத்தீவில் கடந்த 29ஆம் திகதி புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலும் காரணமாக இருக்கலாம். ஆனால், இது மட் டுமே படைத்தரப்பின் பதற்றத்துக்குக் காரண மல்ல. சிறுத்தீவுத் தாக்குதல் நடந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில்தான் புதிய பாது காப்பு இறுக்கங்களை படைத்தலைமை அமுல் படுத்தியிருக்கிறது.

குடாக்கடலில் மீன்பிடிக் கும் மீனவர்களிடம் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் தென்கரையூடாக தாக்குதலை நடத்தி குடாநாட்டுக்குள் பிரவேசிக்கப்போவ தாக புலிகள் தெரிவித்ததாக, பரவிய செய் தியே இந்தப் பாதுகாப்பு இறுக்கத்துக்குக் கார ணம் என்று யாழ். படைத் தளபதி தெரிவித் திருக்கிறார். இதுவும் கூட நடைமுறைக்குப் பொருத்தமான காரணமாகத் தெரியவில்லை.

புலிகள் எப்போதுமே குறித்த நாளில் தாக்கு தல் நடத்தப் போவதாக அறிவித்து விட்டு தாக் குதலைத் தொடுத்ததில்லை. இது படைத்தரப் புக்கு நன்கு தெரியும். வலுவான புலனாய்வு அமைப்புகளை வைத்திருப்பதாகக் கூறும் அரசபடைகள் இப்படி ஒரு வதந்தியை நம்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கத் தீர்மானித்த தாக சொல்வதை நம்ப முடியாதிருக்கிறது.

புலிகளால் ஊடுருவ முடியாதபடி இறுக்க மான பாதுகாப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய படைத்தரப்பு, சிறுத்தீவுத் தாக்குதலை அடுத்து தமது பாதுகாப்பு இறுக்கத்தின் பல வீனத்தைப் புரிந்து கொண்டிருக்கலாம்.

ஆயி னும் இந்தச் சிறிய தாக்குதலை அடுத்துப் படைத்தரப்பு மிகப் பெருமெடுப்பிலான முறி யடிப்புத் தாக்குதல் ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதை அவதானிக்கின்றபோது பாதுகாப்புத் தலைமை இது குறித்து அதிக கவலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

புலிகள் பலமிழந்து போய்விட்டதாகவும் கடைசியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடந்த தாக்குதலில் 500 வரையான புலிகளை கொன் றும் காயப்படுத்தியும் களத்தில் இருந்து அகற்றிவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்திருந் தது.


இந்தநிலையில் படைத்தரப்பு கணிப்புப் படி வடபோர்அரங்கில் புலிகளின் பலம் நிச்யம் குறைந்திருக்க வேண்டும். பெருமளவில் பலம் குறைந் திருக்கும் புலிகளால் எப்படித் தாக்குதல் நடத்த முடி யும் என்று படைத் தலைமை இந்த வதந்திகளை ஒதுக்கித் தள்ளா மல், படைகளை உஷார்படுத்தியிருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மர்மம் தான் என்ன கேள்வி எழுகிறது?


யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக்கில் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தத் திட்டமிட் டிருப்பதால், குடாநாட்டில் பாதுகாப்பு நடை முறைகளை இறுக்கமாகப் பேணவுள்ளதாக யாழ். படைகளின் கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அறிவித்துள்ளார்.


கடந்த புதனன்று பலாலியில் உள்ள யாழ். படைத் தலைமையகத்தில், குடாநாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரிய பீடப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது குடாநாட்டின் பாது காப்பு நடைமுறைகள் எந்தளவுக்கு இறுக்கப் படவுள்ளன என்பது குறித்தும் அவர் விவரித்திருந்தார். ஊரடங்குச் சட்டம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறைப் படுத்தப்படும். இதற்கு முன்னர் இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரையும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.


தற்போது மேலதிக மாக 2.30 மணிநேரம் அதிகமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. யாழ். கடல்நீரேரியில் ஒரு வார காலத்துக்கு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட் டிருக்கிறது. படையினரின் வாகனத் தொடரணி கள் செல்லும் போது வெளிநாட்டு, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும், நபரும் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமன்றி கடந்த வார நடுப்பகுதியில் இருந்து யாழ்.நகரிலும் குடாநாட்டின் முக்கிய இடங்களிலும் படையினர் அதிகளவில் நிறுத் தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடாநாட்டின் தென்புற கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பெருமளவில் படையினரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.


மேலதிக படையினருடன் தென்கரையோரப் பகுதிகளுக்கு கனரக பீரங்கிகள், மோட்டார் கள், டாங்கிகளும் நகர்த்தப்பட்டிருக்கின்றன. யாழ்.படைத்தளபதியின் இந்த அறிவிப்பும், திடீரென அதிகரிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப் பும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒரு வித பதற்றத்தையும் பீதியையும் உருவாக்கியிருக் கின்றன.

கடந்த வாரத்தில் தென்மராட்சிப் பகுதியில் தாழப்பறந்து வட்டமிட்டு, புலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு அருகே "கிபிர்' விமானங்கள் தொடர்ந்து நடத்திய குண்டுத் தாக்குதல்கள், பூநகரிப் பிரதேசத்தின் மீது நடத் தப்படும் இரவு பகல் பாராத விமானம் மற்றும் ஷெல் தாக் குதல்கள் என்பன குடாநாட்டை போர்ப் பீதிக்குள் சிக்க வைத்திருக்கின்றன.

தென்கரையோரப் பகுதி ஊடாக யாழ். குடா நாட்டுக்குள் நுழையப்போவதாக புலிகள் எச்சக்கை விடுத்துள்ளதாக ஒரு செய்தி பரவி யுள் ளதையடுத்தே இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடு களை படையினர் மேற்கொள்வதாக யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல் சந்திரசிறி தெரிவித்திருக்கிறார்.


"விடுதலைப் புலிகளால் குடாநாட்டின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யாழ். நகருக்கு அண் மையில் உள்ள சிறுத்தீவில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ள னர். அவர்களின் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது என்பதாலேயே குடா நாட்டின் பாதுகாப்பை இறுக்கத் திட்டமிட்டி ருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.


கடந்த மாதம் 18ஆம் திகதி வெளியான ஆங்கில பத்திரிகையொன்றுக்கு யாழ்.படைக ளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி அளித்த பேட்டியில், "குடாநாட்டில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. படையினர் உயர்ந்த பட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்ப தோடு புலிகளின் ஊடுருவலையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


குடாநாடு எப்போதுமே புலி களின் முக்கிய இலக்காக இருக்கிறது. அதனால் அவர்கள் குடாநாட் டுக்குள் ஊடுருவ முயற் சித்துக் கொண்டேயிருக்கின்றனர். ஆனால் அது அவர்களுக்கு கடினமானது. ஏனெனில், இறுக்கமான பாதுகாப்பு நடை முறையில் உள் ளது' என்று தெரிவித் திருந்தார்.


எனினும் ஒரு மாதத்துக்குப் பின்னர்,அவரே குடாநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற் பட்டிருக்கிறது. சிறுத்தீவுத் தாக்குதலைப் போன்று புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத் தலாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்தநிலை ஏற்பட்டமைக்கு சிறுத்தீவில் கடந்த 29ஆம் திகதி புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலும் காரணமாக இருக்கலாம்.


ஆனால், இது மட் டுமே படைத்தரப்பின் பதற்றத்துக்குக் காரண மல்ல. சிறுத்தீவுத் தாக்குதல் நடந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில்தான் புதிய பாது காப்பு இறுக்கங்களை படைத்தலைமை அமுல் படுத்தியிருக்கிறது. குடாக்கடலில் மீன்பிடிக் கும் மீனவர்களிடம் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் தென்கரையூடாக தாக்குதலை நடத்தி குடாநாட்டுக்குள் பிரவேசிக்கப்போவ தாக புலிகள் தெரிவித்ததாக, பரவிய செய் தியே இந்தப் பாதுகாப்பு இறுக்கத்துக்குக் கார ணம் என்று யாழ். படைத் தளபதி தெரிவித் திருக்கிறார்.


இதுவும் கூட நடைமுறைக்குப் பொருத்தமான காரணமாகத் தெரியவில்லை. புலிகள் எப்போதுமே குறித்த நாளில் தாக்கு தல் நடத்தப் போவதாக அறிவித்து விட்டு தாக் குதலைத் தொடுத்ததில்லை. இது படைத்தரப் புக்கு நன்கு தெரியும்.


வலுவான புலனாய்வு அமைப்புகளை வைத்திருப்பதாகக் கூறும் அரசபடைகள் இப்படி ஒரு வதந்தியை நம்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கத் தீர்மானித்த தாக சொல்வதை நம்ப முடியாதிருக்கிறது.

புலிகளால் ஊடுருவ முடியாதபடி இறுக்க மான பாதுகாப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறிய படைத்தரப்பு, சிறுத்தீவுத் தாக்குதலை அடுத்து தமது பாதுகாப்பு இறுக்கத்தின் பல வீனத்தைப் புரிந்து கொண்டிருக்கலாம்.


ஆயி னும் இந்தச் சிறிய தாக்குதலை அடுத்துப் படைத்தரப்பு மிகப் பெருமெடுப்பிலான முறி யடிப்புத் தாக்குதல் ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதை அவதானிக்கின்றபோது பாதுகாப்புத் தலைமை இது குறித்து அதிக கவலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.


புலிகள் பலமிழந்து போய்விட்டதாகவும் கடைசியாக கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நடந்த தாக்குதலில் 500 வரையான புலிகளை கொன் றும் காயப்படுத்தியும் களத்தில் இருந்து அகற்றிவிட்டதாக படைத்தரப்பு தெரிவித்திருந் தது. இந்தநிலையில் படைத்தரப்பு கணிப்புப் படி வடபோர்அரங்கில் புலிகளின் பலம் நிச்யம் குறைந்திருக்க வேண்டும்.

பெருமளவில் பலம் குறைந் திருக்கும் புலிகளால் எப்படித் தாக்குதல் நடத்த முடியும் என்று படைத் தலைமை இந்த வதந்திகளை ஒதுக்கித் தள்ளா மல், படைகளை உஷார்படுத்தியிருப்பதாகக் காட்டிக் கொள்வதன் மர்மம் தான் என்ன கேள்வி எழுகிறது?

கடற்புலிகளின் தாக்குதல்களால் தோன்றியுள்ள புதிய நெருக்கடி-வேல்ஸிலிருந்து அருஷ்

அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பேச்சுக்களும் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன.

உலகின் இந்த மாற்றத்திற்கு இந்துமா கடலில் ஏற்பட்டுவரும் முனைவாக்கம் ஒரு முக்கிய காரணமாகும். தென் ஆசியாவை பொறுத்தவரையில் அங்கு அமைந்துள்ள எட்டு நாடுகள் மீதான பார்வைகள் தற்போது அதிகம். ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என்பன மீதான மேற்குலகத்தின் கவனம் தற்போது அதிகரித்து செல்கின்றது. இந்த வலையத்திற்கு வடக்கு மற்றும் மேற்காக சீனா அமைந்துள்ளது, மத்திய கிழக்கு, பல்கன் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மேற்காக அமைந்துள்ளன.

உலகின் கவனப்புள்ளியை பொறுத்தவரையில், 19 ஆம் நூற்றாண்டு அத்திலாந்திக் பிராந்தியத்தையும், 20 ஆம் நுõற்றாண்டு பசுபிக் பிராந்தியத்தையும், 21 ஆம் நுõற் றாண்டு இந்து ச?த்திர பிராந்தியத்தையும் நோக்கி முனைப்பு பெற்று வந்துள்ளதும், வருவதும் நோக்கதக்கது.

இதனை எதிர்கொள்வதற்காக இந்து ச?த்திரத்தின் வலையத்தில் உள்ள 14 நாடுகள் 1997 ஆம் ஆண்டு தமக்கிடையில் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியிருந்தன

இதன் முக்கிய நோக்கம் அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்களை பேணுவதாகும்.

ஆனால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் யார் ஆளுமையை கொண்டுள்ளனரோ அவர்கள் அத்திலாந்திக் மற்றும் பசுபிக் சமுத்திரங் களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தும் தகமை பெற்றவர்கள் என்பதும் முக்கியமானது. இதற்கு காரணம் இந்து ச?த்திரம் அத்திலாந்திக் மற்றும் பசுபிக் கடல்களுடன் தொடர்பை கொண்டுள்ளதாகும்.

எனவேதான் இந்து ச?த்திர பிராந்திய கூட்டமைப்பில் அதனை சூழவுள்ள 35 நாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்து சமுத்திர பிராந்தியம் 40 சதவீத எண்ணை உற்பத்தியை கொண்டுள்ள போதும் அதன் முக்கியத்துவம் கடற்போக்குவரத்திலேயே அதிகம் சார்ந்துள்ளது. இது உலகின் அரைப்பங்கு கொள்கலன்கள் ஏற்றிய சரக்கு கப்பல்கள், மூன்றில் இரு பகுதி எண்ணை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து பாதையாகும்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் எரிபொருள் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.

எனவே தனது எரிபொருள் வர்த்தகத்தை முன்னிறுத்தி கடல் பாதைகளை தன்னகப்படுத்த சீனா முனைப்புக் காட்டி வருகின்றது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் உலக சனத்தொகையில் கால் பங்கினர் வசிக்கின்ற போதும், அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளிடம் பி?வினைகளை பேணுவதற்கே முயன்று வந்துள்ளன. ஆனால் இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லரசாக இந்தியா தன்னை நிலைநிறுத்த முற்பட்டு வருகின்றது.

ஆனால் கடலிலும், வானிலும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை இந்தியாவுக்கு உண்டா என்பது கேள்விக்குறியானது. எனினும் இந்தியாவினால் அயல்நாடுகள் மீது படை பலத்தை பிரயோகிக்க முடியும். பொருளாதாரத்திலும், படை பலத்திலும் ஆசிய பிராந்தியத்தில் பிந்திய வரவை கொண்டுள்ள இந்தியா தற்போது ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசிய நாடுகளுடன் தனது பொருளாதார அபிவிருத்திகளில் முனைப்பு காட்டி வருகின்றது.

1950 களில் இருந்து நடைபெற்ற போர்களில் அமெரிக்க படையினர் தமது ஆயுதங்களின் மூலம் வெற்றியீட்டவில்லை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியே வெற்றிகளை பெற்று கொடுத்திருந்தது என்பது பல ஆய்வாளர்களின் வாதம். எனினும் இந்தியாவினதும் சீனாவினதும் வளர்ச்சிகள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆளுமைக்கு பெரும் சவாலாக மாறி வருவது கவனிக்கத்தக்கது.

இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள், துறைமுகங்கள், அபிவிருத்தி திட்டங்கள், இயற்கை வளங்கள் என்பவற்றில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு அவை முனைப்புக் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பலம் பொருந்திய நாடுகளின் பூகோள அரசியலில் இலங்கை இனப்பிரச்சினையும் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

அதாவது தென்னாசிய பிராந்தியத்தின் ஆழுமை தொடர்பான இந்த இழுபறிகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான விடங்களை புறம்தள்ள முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கடல் ஆதிக்கம் தொடர்பான பலப்பரீட்சைகள் வலுப்பெற்றுவரும் இந்து மாகடலில் கடற்புலிகளின் வலிமையும், தாக்குதல் திறனும் அதிகரித்து வருவதும் நோக்கத்தக்கது. கடந்த மாதம் சிறுத்தீவு பகுதியில் அமைந்திருந்த இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்படை காவல்நிலை மீது தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாகர்கோவில் கரையோரத்தில் தரையிறக்கம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலில் இராணுவத்தின் காவலரண்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர். கடந்த மாதம் மன்னார் நகரத்தின் கரையோரம் அமைந்திருந்த கொந்தைபிட்டி காவல்நிலையத்தின் மீதும் சிறுத்தீவில் அமைந்திருந்த படைநிலை மீதும் தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் இந்த மாதத்திலும் குறுகிய காலப்பகுதியில் மிகவும் துணிச்சல் மிக்க இரு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் மன்னாரில் விடத்தல்தீவு பகுதியில் இருந்து 6 விசைப்படகுகளில் வந்த விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் மன்னார் நகரத்திற்கு வடமேற்காக 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள எருக்கலம்பிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவ கடற்படை கூட்டு காவல்நிலையத்தை தாக்கி அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பத்து நிமிடங்களில் முகாமை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த விடுதலைப்புலிகளின் கொமோண்டோக்கள், அதனை அதிகாலை 4.00 மணிவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், பெருமளவான ஆயுதங்களையும், நவீன ராடர் சாதனத்தையும் கைப்பற்றியதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

21 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டின் ஆளுமையின் கீழ்வரும் இந்த பகுதியில் இராணுவத்தின் கஜபா றெஜிமென்டை சேர்ந்த ஏ கொம்பனி இராணுவத்தினரும் கடற்படையினருமாக ஒரு பிளட்டூன் துருப்புக்கள் நிலை கொண்டிருந்தன. எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பகுதிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன், மன்னார் நகரத்திற்கு விடுதலைப்புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் கொண்டிருந்தது.

81 மி.மீ மோட்டார்கள், 0.50 கலிபர் துப்பாக்கி போன்ற கனரக ஆயுதங்களை கொண்ட இந்த முகாமில் ஏறத்தாள 5,000 அமெ?க்க டொலர்கள் பெறுமதியான கடல் கண்காணிப்பு ராடரும் பொருத்தப்பட்டிருந்தது. ஜப்பானிய தயாரிப்பான ஊக்கீக்ணோ (M19322 ) கடற்கண்காணிப்பு ராடர் 36 தொடக்கம் 48 கடல்மைல் தூரவீச்சுக் கொண்டது. மிகவும் உணர்திறன் மிக்க இந்த ராடர் நீர்ப்பாதுகாப்பு கொண்டதுடன், இலகுவாக கையாளக்கூடியதுமாகும்.

இந்த தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை திட்டமிட, கடற்புலிகளின் கடல் தாக்குதல் கட்டளை தளபதி லெப். கேணல் இளங்கோ வழிநடத்த, ஈரூடகப்படையினரின் தாக்குதலை கடற்புலிகளின் கட்டளை தளபதி லெப்.

கேணல் விடுதலை வழிநடத்தியிருந்தாகவும் இந்த தாக்குதலில் தமது தரப்பில் 5 போராளிகள் பலியானதாகவும் விடுதலைப்புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எதிர்த்தாக்குதலை நடத்தும் பொருட்டு தலைமன்னார் கடற்படைத்தளத்தில் இருந்து நீருந்து விசைப்படகுகள் புறப்பட்ட போதும், கடற்புலிகளின் வழி மறிப்பு தாக்குதல்களினால் அது பின்னர் கைவிடப்பட்டிருந்ததாக புலிகள் தெரிவிக்கின்றனர்.

கடற்புலிகளின் தாக்குதலை தொடர்ந்து விமானப்படையின் எம்ஐ24 ரக தாக்குதல் உலங்குவானுர்தி ஒன்று தாக்குதலில் ஈடுபட்ட போதும் தளத்தில் இருந்து கனரக ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் வெளியிட்ட புகைப்படங்களில் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் இருந்து 200 இற்கும் மேற்பட்ட 81 மி.மீ மோட்டார் எறிகணைகளும் அதற்கு?ய இரு 81 மி.மீ எறிகணை செலுத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏறத்தாள 5.6 கி.மீ தூரவீச்சுக் கொண்ட இந்த மோட்டார்களை விடுதலைப்புலிகளின் இலகுகாலாட்படையினர் பெருமளவில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்த தாக்குதலை தாம் முறியடித்து விட்டதாகவும், தமது தரப்பில் 3 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அண்மைக்காலமாக அவர்களின் கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு மாதங்களில் நான்கு தரையிறக்கங்களையும், நடைபெற்றுவரும் நான்காம் ஈழப்போரில் 6 இற்கு மேற்பட்ட தரையிறக்க தாக்குதல்களையும் புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கடற்புலி கொமாண்டோக்களின் இந்த தாக்குதல்கள் பல நோக்கங்களை கொண்டவை. அதாவது, தமது கொமாண்டோ அணியினருக்கான பயிற்சிகள், சிறிய தாக்குதல் மூலம் அதிகளவான கனரக ஆயுதங்களையும், ராடர் போன்ற நவீன படைக்கல ஆதரவு சாதனங்களையும் கைப்பற்றுதல், பரந்த நீண்ட கடல் எல்லைகளை நோக்கி படையின?ன் வளங்களை திருப்புதல் போன்ற பல நோக்கங்களை கொண்டவை.

கடந்த இரு வருடங்களில் நடைபெற்ற நெடுந்தீவு, சிறுத்தீவு, எருக்கலம்பிட்டி படை கண்காணிப்பு நிலைகள் மீதான தாக்குதல்களில் மொத்தமாக 03 கண்காணிப்பு ராடார்கள், ஐந்து 0.50 கலிபர் துப்பாக்கிகள், இரு 81 மி.மீ மற்றும் இரு 60 மி.மீ மோட்டார்கள் என்பவற்றுடன் பெருந்தொகையான சிறிய ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மூன்று நடவடிக்கைகளிலும் ராடர் நிலையங்களை கைப்பற்றுவதே விடுதலைப் புலிகளின் பிரதான தாக்குதல் இலக்காக இருந்துள்ளது. இங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் நீண்ட தூர கனரக ஆயதங்கள் கணிசமானவை. அதாவது ராடரின் பாதுகாப்புக்கும், வான் எதிர்ப்புத் தாக்குதலுக்கும் என்றே அவை அங்கு குவிக்கப்பட்டிருந்தன. மேலும் ராடர் நிலையத்தின் பாதுகாப்பே இந்த நிலைகளில் முதன்மைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ராடர் நிலைகளின் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் படையினரிடம் மேலோங்கி இருந்தது.

அதாவது கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிலைகள் பெருமளவான படைபலம் குவிந்துள்ள யாழ்.

குடாநாட்டுக்கான மேற்குப்புற நுழைவாயிலின் எல்லைகளில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எருக்கலம்பிட்டி தளத்தில் யாழ்.

குடாநாட்டில் படையினர் வசம் உள்ள ராடர்களில் மிக நவீனமான ராடர் பொருத்தப்பட்டிருந்ததுடன், அதிக தூரவீச்சுக்கொண்ட இந்த ராடரின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூநகரி தொடக்கம் விடத்தல்தீவு வரையான பகுதிகளும் மன்னாரின் மேற்குப்புற கடற்பகுதிகளும் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்கள் ஆரம்பமாகிய பின்னர் இலகுவாக நகர்த்தப்படும் வான்பாதுகாப்பு ராடர்களின் தேவை படையினருக்கு அதிகரித்திருந்தது. மன்னார் வான்பரப்பில் பறக்கும் விடுதலைப் புலிகளின் விமானங்களை அவதானிப்பதுடன், விடுதலைப் புலிகளின் விமானங்கள் மேற்கு வாசலின் ஊடாக குடாநாட்டுக்குள் ஊடுருவுவதை கண்காணிக்கும் பணியையும் நெடுந்தீவு, எருக்கலம்பிட்டி தளங்கள் மேற்கொண்டு வந்திருந்தன.

ஆனால் விடுதலைப்புலிகளின் உத்திகள் வேறுபட்டவை, அதாவது வான் தாக்குதல்களை தடுப்பதற்காக படையினர் குவித்துள்ள கனரக ஆயுதங்களை சிறிய அதிரடிகள் மூலம் இலகுவாக கைப்பற்றி சென்றுவிடுகின்றனர். தமது இழப்புக்களை குறைவாக பேணியபடி தமக்கு தேவையான நவீன ராடர் கருவிகள், நீண்டதூர கனரக ஆயுதங்கள் என்பவற்றை விடுதலைப்புலிகள் அண்மைக்காலமாக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது நோக்கத்தக்கது.

விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்படும் இந்த நவீன ராடர்கள் வருங்காலத்தில் படையின?ன் நடமாட்டங்களை கண்காணிக்க உதவும் என்பதும், தமது கண்காணிப்பு நிலைகளை பாதுகாப்பதற்கு படையினருக்கு அதிக படை வளங்கள் தேவை என்பதும் படையினருக்கு தற்போது தோன்றியுள்ள புதிய நெருக்கடிகள்.

மணலாற்றில் பலப்பரீட்சை-வீரகேசரி சுபத்திரா

தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரின் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மண லாறு போர்அரங்கை நோக்கித் திரும்பியிருக்கி றது. மணலாறு போர்அரங்கில் படைத்தரப்பு தமது உச்சக்கட்ட படைவலுவைப் பயன் படுத்தி ம்ய்ன்னேறும் நடவடிக்கைகளை ஆரம் பித்திருக்கிறது. இதையடுத்து "மணலாறு' "மரணஆறு' ஆக மாறிவருகின்றது.

கடந்தவாரம் சிங்கள நாளிதழான "தினமின' வுக்கு அளித்த பேட்டியொன்றில், "பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு ?னைகளில் நெருங்கி வருகின்றனர்.

இன்னும் 21கி.மீ தூரத்துக்கு முன்னேறிச் சென் றால் படையினர் இறுதி இலக்கை அடைந்து விடுவர். அத்துடன் பதுங்குகுழியில் ஒளிந்தி ருக்கும் பிரபாகரனையும் படையினர் பிடித்து விடுவர்' என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

மணலாறு போர்அரங்கில் படையினர் தாக் குதல்களைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்தே இந்தப் பேட்டியை அவர் வழங்கியிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் மணலாறு போர் அரங் கில் புதிதாக உருவாக்கப்பட்ட 59ஆவது டிவி சனைக் கொண்டு தாக்குதல்கள் ஆரம்பிக்கப் பட்டன. இராணுவத் தளபதியின் நேரடிக் கண் காணிப்பில் வன்னிப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தலைமையில் இந் தப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(தற்போது மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய விசேட விடுப்பில் இருப்பதால் பதில் வன்னிப் படைத் தளபதியாக, இராணு வத் தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான பொது அலுவலர் மேஜர் ஜெனரல் எல்.ஏ.டி.அமர துங்க பணியாற்றிவருகிறார்.)

இந்தப் போர்அரங்கு கொக்குத் தொடுவாய் முதல் கிரிபன்வௌ வரையான 14கி.மீ நீள மான பிரதேசத்தைக் கொண்டிருக்கின்ற போதும், கிழக்கே ஜனகபுர முதல் மேற்கே பன்வௌ வரையான 11கி.மீ பகுதிகளி லேயே தீவிர நகர்வு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

59ஆவது டிவிசனின் தளபதி யான பிரிகேடியர் நந்தன உடவத்தவே இந்தப் போர்அரங்கில் படையினரை வழிநடத்து கிறார்.

இந்தப் போர்அரங்கில் படையினரின் முன்னகர்வுகள் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன? இதனால் முல்லைத்தீவில் உள்ள புலிகளின் தளங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகுமா? என்பன குறித்து இப்பத்தியில் பார்க்கலாம்.

படைத்தரப்பு அண்மை நாட்களாக வெளி யிட்டு வரும் தகவல்களைப் பார்க்கின்ற எவ ருமே மணலாறு போர்அரங்கில் படையினர் பெருமளவு பிரதேசத்தைக் கைப்பற்றி முன்னே றியிருக்கின்றனர் என்பது போலவும், முல்லைத்தீவை படையினர் நெருங்கி விட்டதைப் போலவும் இருக்கின்றன.

மணலாறு போர் அரங்கில் படையினர் சில பிரதேசங்களைக் கைப்பற்றியிருப்பதும் முன்னேறியிருப்பதும் உண்மையே.

ஆனால் அது இப்போதைக்கு முல்லைத்தீவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியின் மேற்கு முனைகளில் படைத் தரப்பு 57, 58ஆகிய இரண்டு டிவிசன்களுடன் புதிதாக 61மற்றும் அதிரடிப்படை2 என நான்கு டிவிசன்களைக் களம் இறக்கித் தாக்கு தல்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலை யில், சத்தமில்லாமல் மணலாறு போர்அரங்கில் குறிப்பிட்ட பிரதேசத்தைக் கைப்பற்றிவிட படைத்தரப்பு எத்தனித்து வருகிறது.

கல்யாணபுரவுக்கு வடக்கே உள்ள கிரிபன்வௌவில் இருந்து வடக்கே வேலன் குளம் நோக்கி லெப்.கேணல் மனீஷ சில்வா தலைமையிலான 592 பிரிகேட் டும், பராக்கிரமபுரவில் இருந்து வடக்கே நித்தியகுளம் நோக்கி லெப்.கேணல் பாலித பெர்னாண்டோ தலைமையிலான 593ஆவது பிரிகேட்டும் (தற்போது பதில் கட்டளை அதிகாரியாக லெப்.

கேணல் ஜாலிய சேனாரத்ன பணியாற்று கிறார்), ஜனகபுரவில் இருந்து வடக்கே ஆண்டான்குளம் நோக்கி லெப்.கேணல் அருண ஆரியசிங்க தலைமையிலான 591ஆவது பி?கேட்டும் முன்னேறி வருகின்றன.

கி?பன்வௌ களமுனையில் 592ஆவது பிரிகேட் துருப்புகள் இதுவரையில் சுமார் 7 கி.மீ வரையான பிரதேசத்துக்குள் முன்னேறியி ருப்பதாகவும், ஜனகபுரவில் இருந்து முன்னே றிய படையினர் 3 கி.மீற்றருக்கும் சற்று அதிகமாக முன்னேறியிருப்பதாகவும் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 மாதங்க ளாக நடந்து வந்த இந்தப் போர்அரங்கச் சமர்களில் இந்த மாதத் தொடக்கத்தில் ஜனகபுரவுக்கு மேற்காகவுள்ள "முன்னகம்' என்ற புலிகளின் அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்த தளம் ஒன்றை முதல்முறையாகக் கைப்பற்றியிருப்பதாகப் படைத்தரப்பு தெரிவித்திருந்தது. இதைக் கைப்பற்றியது 591ஆவது பிரிகேட் ஆகும்.

தற்போது 593ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த படையினர் நித்தியகுளத்தில் அமைந்திருக்கும் புலிகளின் பிரதான தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படையினர் பெருமெடுப்பில் நித்தியகுளம் அணைக்கட்டுக்கு தெற்கேயிருந்து முன்னேற முற்பட்டனர்.நித்தியகுளத்தில் புலிகளின் வன்போ(14) என்ற தளம் உள்ளது.

இந்தத் தளம் இந்தியப்படையினருக்குப் பெரும் சவாலாக இருந்ததொன்று. புலிகளின் தலைவர் பிரபாகரன் இங்கிருந்து தான் இந்தியப்படை களுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்தினார்.

எனவே பிரபாகரனைப் பிடிக்கும் நோக்கில் இந்தியப்படைகள் "செக்மேற்' என்ற பெயரில் மூன்று தடவைகள் பாரிய தாக்குதல்களை நடத்திய போதும் பெரும் இழப்புகளுடன் பின்வாங்க நேரிட்டது.

இந்தத் தளத்தைக் கைப்பற்ற 1991ஆம் ஆண்டில் "ஒப்பரேசன் மின்னல்' என்ற பெய?லும்,1992இல் "கய பகர' என்ற பெயரிலும் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ இரண்டு பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முதலாவது தாக்குதல் 30நாட்கள் வரை நீடித்தது. கஜபாபுரவில் இருந்து நித்தியகுளம் நோக்கி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு அப்போது "சுயாதீன பிரிகேட்'டின் தளபதியாக இருந்த பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமை தாங்கியிருந்தார். அவரது பிரதித் தளபதியாக இருந்தவர் அப்போது கேணல் தர அதிகாரியாக இருந்த இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத்பொன்சேகா ஆவார்.

இந்தத் தாக்குதலில் புலிகளின் சில தளங்க ளைப் பிடித்தபோதும் படையினர் அங்கு நிலை கொள்ள முடியாமல் பின்வாங்கியிருந்தனர். இப்போது மீண்டும் அந்த இலக்கு நோக்கி படையினரை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வழி நடத்தி வருகிறார்.

நித்தியகுளத்தில் இருந்து தெற்காக படையினர் நிலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் புலிகள் தமது வன்போ தளத்திற்குத் தெற்கே சுமார் 200 மீற்றர் அகலத்துக்கு காடுகளை வெட்டி பாரிய வெளியொன்றைத் தோற்றுவித்துள்ளனர். இந்த வெளியைக் கடந்து "வன்போ' தளத்தை அடைவதே படையினருக்குப்பெரும் சவாலாக உள்ளது.

இந்தப் பகுதியில் பெருமளவில் பொறிவெடிகள் காணப்படுவதுடன், மோட் டார்கள், ஆட்டிலறிகள் மூலம் சுலபமாகக் குறி வைக்கக் கூடிய வகையில் புலிகள் ஆள்கூறுகளைக் கணித்து வைத்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இந்த வெளியைக் கடந்து சென்று "வன்போ' தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் 593ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த இரு பற்றாலியன்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தன.

லெப்.கேணல் பிரியந்த பெரேரா தலைமையிலான 7ஆவது கெ?னு வோச் மற்றும் மேஜர் லக்சிறி பெரேரா தலைமையிலான 14 ஆவது விஜயபா காலாற்படை என்பனவே இந்தத் தாக்குதலில் பங்குபற்றியிருந்தன.

படையினர் இந்த வெளி யைக் கடக்க முற்பட்டபோது, புலிகள் உக்கிரமான தாக்குதலை நடத்தினர். இதனால் படையினர் பின்வாங்கினர். இரண்டு நாட்கள் வரை இந்த மோதல்கள் நீடித்தன.

கடந்த ஞாயிறு மட்டும் 07 படையினர் கொல்லப்பட்டு 19 பேர் காயமுற்றதாகவும் ஒரு சிப்பாய் காணாமற் போனதாகவும் படைத்தரப்பு அறிவித்தது.

ஆனால் புலிகளோ 15 படையினர் கொல்லப்பட்டு, 20பேர் காய முற்றதாகத் தெரிவித்திருந்தனர். அத்துடன் ஆர்.பி.ஜி. ஒன்று உட்பட பல வெடிபொருட்களையும் தளபாடங்களையும் கைப்பற்றியதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆனால் "வன்போ' தளத்தின் 5 காவல்நிலைகளைக் கைப்பற்றிவிட்டதாகவும், தளத்தையே கைப்பற்றி விட்டதாகவும் கூட படைத்தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

ஆண்டான்குளம், நித்தியகுளம் காட்டுப் பகுதி கள் இப்போது முக்கிய சமர் அரங்காக மாறியிருக்கிறது.

புலிகள் மணலாறு களமுனையில் முன்னரங்க நிலைகளுக்கு விநியோகங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொக்குத்தொடு வாயில் இருந்து தண்ணி முறிப்புக்குளம் வரை அமைத்திருந்த வீதியின் ஒருபகுதியை ஜனகபுரவுக்கு வடக்கே படையினர் கைப்பற்றி, விநியோகத்தைத் துண்டித்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாகப் படையினர் ஆண்டான்குளம் காட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் நித்தியகுள த்தில் இருந்து 9கி.மீ தொலைவில் உள்ள குமுழமுனையை நோக்கி படைநகர்வு இடம்பெறலாம் எனக் கருதப்படுகிறது.

குமழமுனை நோக்கிய நகர்வுகள் நாயாறு வரை விரிவுபடுத்தப்பட்டால் புலிகளின் கடல்வழி போக்குவரத்து மற்றும் விநியோகங்களை மட்டுப்படுத்தலாம் எனப் படைத்தரப்பு கருதுகிறது. ஆனால் புலிகள் படையினரின் திட்டத்துக்கமைய விட்டுக் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

இந்தப் போர்அரங்கில் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சொர்ணத்தின் தலைமையில் முறியடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்னரங்க நிலைகளில் உள்ள போராளிகளுக்கு மேலதிகமாக இந்தப் போர்அரங்கில், 500 மேலதிக ஒதுக்குப் படையினரையும் புலிகள் நிறுத்தி வைத்திருப்பதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

"ஜயசிக்குறு' காலத்தில் படையினர் வெலிஓயாவில் இருந்து முன்னகர்ந்து நெடுங்கேணியைக் கைப்பற்றியதுடன் பின்னர், ஒட்டுசுட்டான் வரை தமது கட்டுப் பாட்டுப் பிரதேசத்தை விஸ்தரித்திருந்தனர்.

ஆனால் அப்போதும் கூடப் புலிகளின் தலைமை முல்லைத்தீவில் பாதுகாப்பாக இருந்து கொண்டே, ஓயாத அலைகள்3 படை நடவடிக்கையையும் "ஜயசிக்குறு' முறிய டிப் புத் தாக்குதல்களையும் வழிநடத்தியிருந்தது.

மணலாறை புலிகள் இதயபூமியாகக் கருதுபவர்கள். அதன் முக்கியத்துவத்தைப் புலிகள் வெகுவாக உணர்ந்திருப்பதால் படையினருக்கு உச்சக் கட்டமான எதிர்ப்பைக் காண்பிப்பதுடன் அவர் களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தவும் முற்படுவர்.

எனவே மணலாற்றில் இருதரப்பும் செய்யும் உக்கிர சமர்கள் எதிர்வரும் நாட்களில் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இதில் எந்தத் தரப்பு தமது பலத்தை நிரூபித்துக் கொள்ளப் போகிற தென்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

"தேசத்துரோகி' நாமத்தை எவர் நெற்றியில் ஒட்டலாமென்கிற பெரும் போரொன்றை ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் கட்டவிழ்த்துள்ளன-இதயச்சந்திரன்

வடபோர் அரங்கில் போர் முனைப்பு தீவிரமடைந்திருக்கும் இவ்வேளையில் தென்னிலங்கையிலும் அரசியல் போர் உக்கிரமடைகிறது.

"தேசத்துரோகி' நாமத்தை எவர் நெற்றியில் ஒட்டலாமென்கிற பெரும் போரொன்றை ஆளும் தரப்பும் எதிர்த் தரப்பும் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

படையினருக்கு ஏற்படும் இழப்புக்களை தமது அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவதாக விசனமடையும் அதிகாரத் தரப்பின?ன் கோபத்திலும் சில உண்மைகள் பொதிந்திருக்கின்றன.

ஆயினும் துரோகிப் பட்டம் சுமத்தும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றலை ஏனைய பெரும்பான்மையினக் கட்சிகள் பெற்றிருக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஊடகத்துறை நசுக்கப்படும்போது மௌனம் காத்த பேரினவாத எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்த ஊடகத்திற்கும் அரசாங்கம் செய்தித் தடையில் வடிகட்டப்பட்ட குறுஞ்செய்திகளே மக்களை சென்றடைகிறது.

வடபோர் அரங்கின் நிலைவரங்களை சிங்கள மக்களுக்கு வெளிச்சமாக்க முடியாத கையறு நிலையில் ரணிலின் கட்சி உள்ளது.

ஆகவே, வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு மார்க்கம் எதிரணியின ருக்கு இல்லையென்றே கூறலாம்.

விடுதலைப் புலிகளை அழிக்கும்வரை பொருளாதாரச் சுமைகளை வீட்டின் தாழ்வாரங்களில் இறக்கி வைக்கும்படி நவீன சோசலிசம் பேசிய ஜே.வி.பி.யினர், கட்சி உடைந்ததும் வீதிக்கு இறங்கிவிட்டனர்.

அவர்கள் நிறுவிய வெகுஜன ஒன்றியங்க வாய்ப்பூட்டு போடப்படுகையில் கிளர்ந்து எழத்தொடங்கியுள்ளன.

போர் மயக்கத்துள் மூழ்கியுள்ள சிங்கள தேசத்தை தமக்குச் சார்பாக அணிதிரட்ட முடியாமல் தவிக்கும் கட்சிகள் ஊடகச் சமரையே இதுவரை காலமும் நம்பியிருந்தன.

தினமும் ஊடகவியலாளர்களை அழைத்து கொழும்பில் சந்திப்புக்களை நடத்தினாலும் ளும் தொழிற்சங்கங்களும் அட்டைப் போராட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்துள்ளன. பாணின் விலையேற்றம் இப்போதுதான் சிவப்புச் சட்டைக்காரருக்கு தெரிகிறது.

தத்துவப் போராட்டத்தால் பிரிந்து சென்ற தோழர்கள், தேசிய சுதந்திர முன்னணி என்கிற கட்சியை உருவாக்கி ஜீ.எஸ். பியைப் பற்றி பேசுகின்றனர்.

ஆடை உற்பத்தி செய்யும் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிற்சங்கங்களை புதிதாக உருவாக்கும் முயற்சியிலும் இவர்கள் அக்கறை கொள்ளலாம்.

இந்த செந்தோழர்கள் தமிழ் ஊடகத்தார் அழிக்கப்படும்போது நோர்வே கொடி ஏற்றிக் கொள்ளப்படுவதாக செய்திகள் வருகின்றன.

அதேவேளை, ஊடகம் தொடர்பான அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் நாம் அவதானிக்கலாம்.

அரசு வெளியிடும் படைத்துறைச் செய்திகளைத் தவிர வேறெதையும்வெளியிடக்கூடாதென்கிற எழுதப்படாத சட்டம், விடுதலைப் குடாநாட்டு இராணுவ கட்டளைத் தளபதியின் அண்மைய கூற்று இவையாவும் தற்காப்பு நிலை எடுத்தலிற்கான ஒத்திகையென்பதை விளக்கமாக எடுத்துக் கூறுகிறது. நெடுந்தீவு முதல் எருக்கலம்பிட்டி வரை நிகழ்ந்த தாக்குதல்கள் அனைத்தும் வட கடலிற்கான விடுதலைப் புலிகளின் வலிமையை நிலைநாட்டியுள்ளன.

மூழ்கடிக்கப்பட்ட ஆயுதக் கப்பல் நிகழ்வோடு கடற்புலிகளின் தாக்குதல்கள் புதிய பரிமாணத்தில் காலடி வைத்துள் ளன.

சிறுதீவு முற்றுகை, நாகர்கோவில் கரையோர முகாம்கள் தாக்கியழிப்பு முதல் அண்மையில் நடைபெற்ற எருக்கலம்பிட்டி படைத்தள தாக்குதல் கடற்புலிகளின் தாக்குதல் வீச்செல்லை குடாவைச் சுற்றிச் சூழல்கிறது.

இதனிடையே வலிந்த பாரிய நகர்வொன்றிற்கான ஒத்திகை யென்கிற போர்வையில் தற்காப்பு ஒத்திகையொன்றும் குடாநாட்டில் அரங்கேறியுள் ளது.

அதேவேளை நாகர்கோவிலில் இருந்து வடமராட்சி வரையான கடல் எல்லைகளில் போர் ஒத்திகைகளும் நிகழ்ந்துள்ளன.

ஏகாதிபத்திய எதிர்ப்புத் திருப்பணியில் ஈடுபட்டதை தமிழினம் மறக்காது.

ஆட்கடத்தலில் புதிய அத்தியாயம் படைக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து மலையகத்திற்கும் அது பரவுகிறது.

ஊடக தர்மம், அறஞ்சார்ந்த பொறுப்பு என்கிற சொல்லாடல்கள் பின் நவீனத்துவ இலக்கிய சஞ்சிகைகளில் அலங்காரப் பொருளாக பவனி வருகின்றன. தற்போது யாழ். ஊடக நிறுவனங்களிற்கும் அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடுகள் மேற் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனைப் பேச வைத்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஒவ்வொரு தாக்குதல் பற்றிய விபரங்களை அவர் சுடச்சுட வெளிநாட்டு ஊடகங்களினூடாக வெளிப்படுத்துகிறார்.

புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் புகைப்படங்களோடு தாக்குதல் நடைபெற்ற இடங்களின் படங்களையும் இணையத் தளங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் அதிகரிக்கும் கடற்புலிகளின் ஈரூடகப் படையணித் தாக்குதல்களே இங்கு முக்கியத்துவம்பெறுகிறது.

நாயாறில் மூழ்கடிக்கப்பட்ட டோரா படகிலிருந்து ஆரம்பமாகி திருமலைக் கடலில் இறக்கப்பட்ட ஆயுதக்கப்பல் நிகழ்வோடு கடற்புலிகளின் தாக்குதல்கள் புதிய பரிமாணத்தில் காலடிவைதுள்ளன.

சிறிதீவு முற்றுகை,நாகர்கோவில் கரையோர முகாம்கள் தாக்கியளிப்பு, முதல் அண்மைய எரிக்கலம்பிட்டி படைத்தள தாக்குதல் கடற்புலிகளின் தாக்குதல் வீச்செல்லை குடாநாட்டை சுற்றி சூளல்கிறது

இதனிடையே வலிந்த பாரிய ந்கர்வோன்றிற்கான ஒத்திகை என்ற போர்வையில் தற்காப்பு ஒத்திகை ஒன்றும் குடாநாட்டில் குடாநாட்டில் அரங்கேறியுள்ளது அதேவேளை நாகர் கோயில் இருந்து வடமராச்சி வரையான கடல் எல்லைகளீல் போர் ஒத்திகைகளும் ந்டந்துள்ளன

குடாநாட்டு ராணுவ கட்டளை தளபதியின் அண்மைய கூற்று இவை யாவும் தற்காப்பு நிலை எடுத்தலிற்கான ஒத்திகை என்று விளக்கமாக எடுத்துக்கூறுகின்றது நெடுந்தீவு முதல் எரிக்கலம்பிட்டி வரையான தாக்குதல்கள் அனைத்தும் வடகடலுக்கான் விடுதலை புலிகளின் வலிமையை நிலை நாட்டியுள்ளன

புலிகளிடம் ஊதியம் பெறும் 50 சிங்களவர்கள் பொலன்னறுவையில் - மைத்திரிபால சிறிசேன

maithripala-srisena.jpgதமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஊதியம் பெறும் 50 சிங்களவர்கள் பொலன்னறுவையில் இருப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராக்கொடையில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு படையினருக்கு பாதுகாப்பு கடமைகள் குறித்து தெளிவூட்டும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தன்னை கொலை செய்வதற்கு மூன்று தடவைகள் முயற்சித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

'எல்லாளன் படையுடன் தொடர்பில்லை'

அண்மைய கொழும்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறுகிறார்.

சமீப காலமாக கொழும்பில் நடக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எல்லாளன் படை என்கிற அமைப்பு, ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் உரிமை கோரியிருந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நடப்பதற்கு பதில் நடவடிக்கையாக தாங்கள் இந்த தாக்குதல்களை நடத்துவதாக இந்த அமைப்பு கூறியிருந்தது.

இந்த எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

இலங்கையின் வடமேற்கே, மன்னார் தீவில் எருக்கலம்பிட்டியில் அமைந்துள்ள கடற்படை நிலையை ஜூன் 11ஆம் தேதி அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அழித்ததாகவும் அவர் கூறினார். இதில் சுமார் 10 படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

அதேவேளை, விடுதலைப்புலிகளின் தாக்குதலை தாங்கள் முறியடித்ததாகவும், பாரிய இழப்புகளுடன் விடுதலைப்புலிகள் பின்வாங்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐந்து விடுதலைப்புலிகளும், மூன்று கடற்படையினரும் கொல்லப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.