இத்தாலியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்பும் முயற்சியில் அந்நாட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இத்தாலி மிலானோ நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வினை குழப்பும் முயற்சியிலேயே சிறிலங்கா தூதரகத்துடன் இணைந்து அங்கு வாழும் சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை இறக்கச் செய்யுமாறு இத்தாலிய காவல்துறையினரிடம் சிறிலங்கா தூதரகத்தினரும், சிங்களவர்களும் முறையிட்டுள்ளனர்.
அவர்களின் முறைப்பாட்டினை பொங்கு தமிழ் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடம் இத்தாலிய காவல்துறையினர் கூறினர்.
இது மக்களின் நிகழ்வு, அதற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்து அதனை அரங்கிலும் தெரிவித்தனர்.
பொங்கு தமிழ் நிகழ்வு எதுவித தடையும் இன்றி தொடர்ச்சியாக நடைபெறுவதோடு தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் பாவலர் அறிவுமதி உணர்ச்சி பொங்க உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
No comments:
Post a Comment