Wednesday 11 June 2008

பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகர் வரம்பு மீறல்

இலங்கை ஜனாதிபதி பிரித்தானிய எதிர்கட்சித் தலைவர் டேவிட் கமரூனை இன்று சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவற்றில் விடுதலை புலிகளை தொடர்ந்து தடை செய்யுமாறும் அவர்களுக்கு நிதி சேகரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறித்தியுள்ளார்.

இவருடன் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டு தகவல்களை வழங்கியதாக தெரியவருகிறது.

முன் எப்பொழுதும் இல்லாதவாறு இலங்கை உயர்ஸ்தனிகராலயம் தமிழ் மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது ஆச்சரியமான விடையமொன்றாகும். கடந்த ஆண்டில் B.B.C க்கு அளித்த பேட்டியில், தாமே அருகிலிருந்து பார்த்ததை போல வங்கி அட்டை மோசடிகளில் இலங்கை தமிழரே ஈடுபடுவதாக பரப்புரை ஒன்றை மேற்கொண்டது முதல் நேற்று நடைபெற்ற புலிகள் எதிர்பு ஆர்ப்பாட்டம்வரை இலங்கை உயர்ஸ்தனிகராலயமே திட்டமிட்டு மேற்கொண்டிருந்தது.

கமன்வெலத் மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற புலிகள் எதிர்பு ஆர்ப்பாட்டத்தில் 50இற்கும் குறைவான சிங்களவர்கள் கலந்து கொண்டது ஒரு கேலிக்கூத்தாகவே அமைந்தது.

இராஜ தந்திரிகர்களுக்கான விசாவில் பிரித்தனியாவில் வசிக்கும் இலங்கை உயர்ஸ்தானிகர் பல உள்நாட்டு விடயங்களில் மறைமுகமாக செயல்பட்டு வருவதும், சமீபத்தில் Southwark மேயர் பதவிக்கு போட்டியிட்ட எலைஷா பாக்கியதேவிக்கு பல இடையூறுகள் மேற்கொண்டதும் யாவரும் அறிந்ததே.

உயர்ஸ்தானிகர்களுக்கு என்று ஒரு வரை முறை சட்டம் இங்கிலாந்தில் இருப்பதை நாம் அறிவோம். இவர்கள் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க பிரித்தானியா வாழ் புத்திஜீவிகளும் சட்ட வல்லுனர்களும் நடவடிக்கை எடுத்தால்.. உயர்ஸ்தனிகராலயத்தின் தமிழ் விரோத போக்கை கட்டுப்படுத்த முடியும்.

No comments: