Wednesday 11 June 2008

பிரபாகரனையும் யுத்தத்தையும் காரணம் காட்டி அரசாங்கம் ஊடகங்களுக்கு பூட்டு போட்டுள்ளது--ஐ.தே.க

பிரபாகரனையும் யுத்தத்தையும் காரணம் காட்டி அரசாங்கம் ஊடகங்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டிருக்கின்றது என்று குருநாகல் மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

காலி மாவட்டத்திலுள்ள ஊபராதுவவில் ஐ.தே.க. வின் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெ?வித்தார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இன்று சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் மக்கள் கருத்துக்களை வெளியிட கருத்துச் சுதந்திரங்கள் இல்லாததால் கிராமப் புறங்களுக்கு வந்தேனும் எமது கருத்துக்கள் சிலவற்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கி றது. இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஊழல் மோசடிகள், திருட்டுக்கள், வீண் விரயங்கள் பற்றி தொண்டை கிழியக் கத்தினாலும் அவை ஊடகங்களில் வெளியாவது இல்லை. காரணம் ஊடகங்களுக்கு பூட்டுப் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் சரித்திரத்தில் முதலாவதாக 12 ஊடகவியலாளர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1988, 89 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு இடம்பெறவில்லை. 70 ஆம் ஆண்டில்கூட இவ்வாறு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படவில்லை.

ஆனால் இன்று ஊடகவியலாளர்கள் கடத்தப்படுகிறார்கள். பின்னர் கொலை செய்யப்படுகிறார்கள். சில சமயங்களில் விடுவிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் பொதுமக்களின் பிரச்சினைகளை துயரங்களை யா?டம் கூறி அழுவதென்றே தெரியாமலிருக்கிறது.

ரூபவாஹினிக்குச் சென்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய மேர்வின் சில்வாவுக்கு என்ன நடந்தது? அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கினார்களா? அல்லது அவர் மீது விசாரணை ஏதும் நடைபெற்றதா? ஒழுக்காற்று நடவடிக்கைதான் எடுக்கப்பட்டதா? ரணில் விக்கிரமசிங்கவின் காலத் தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் ஊடகங்களே அவரைத் தாக்கியிருக்கும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இன்று அடி மட்டத்துக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. பிரேமதாஸ ஜனாதிபதியின் காலத்தில் இரண்டு யுத்தங்கள் இருந்தன. வடக்கில் ஒரு யுத்தம்.

மற்றையது தெற்கில் இடம்பெற்ற ஒரு யுத்தம். தெற்கில் இடம்பெற்ற யுத்தம்தான் ஜே.வி.பி. யினரின் அநியாய அட்டகாசங்களிலிருந்து தெற்கை விடுவித்து மனித உயிர்களைப் பாதுகாப்பதாகும்.

இவர்களின் அழிவினால் 10, 15 வருட காலம் பின்னே தள்ளப்பட்டது. வடக்கு யுத்தத்திலும் நாடு பின் தள்ளப்பட்டது. அப்படி இருந்தும் பொருட்களின் விலை ஏறியதா? இதுதான் இன்றைய கேள்வி.

மக்கள் இன்று மிகவும் கஷ்டத்துடன் வாழ்கின்றனர். பெரும்பாலõனோர் ஒருவேளை உணவுடன் வயிற்றைச் சுருக்கிக் கொள்கிறார்கள். இன்று நாட்டிலே நீதி, நியாயங்கள் இல்லை. காட்டுச் சட்டங்களே அரங்கேறுகின்றன.

அரசாங்கம் சட்டங்களை அ?ல்படுத்தாது போனால் மனிதர்கள் சட்டங்களை கரங்களுக்குள் எடுக்கின்றனர். இப்போது இந்த நாட்டில் இதுதான் நடைபெறுகிறது.

No comments: