Saturday 14 June 2008

ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை - ஐ.தே.க. பொதுச் செயலாளர்

ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூறி இருக்கிறார். புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவர்கள் பூண்டோடு ஒழித்துக்கட்டப்படுவார்கள் என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியினதும், பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை எதுவும் அவர்களிடம் இல்லை எனபதை தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

தேசிய பாதுகாப்பு இன்று பெரும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளது. வடக்கு கிழக்கு பகுதிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த யுத்தம் இன்று அகில இலங்கைக்கும் பரவி உள் ளது. யுத்தத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்த பீதி ஒரு புறம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மறுபக்கம், நாட்டு மக்கள் இந்த இரண்டிலும் சிக்கி தவிக்கிறார்கள்.

No comments: