Thursday, 12 June 2008

அரசாங்கத்தின் கொலை பட்டியலில் 27 ஊடகவியலாளர்கள்-அதிர்சியில் ஊடகவியலாளர்கள்

dayasirijayasekara.jpgஅரசாங்கத்தின் கொலை பட்டியலில் 27 ஊடகவியலாளர்கள் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொலை செய்வதற்காக அரசாங்கம் 27 ஊடகவியலாளர்களின் பெயர்களை அடங்கிய பட்டியலை தயாரித்துள்ளதாகவும்,


இந்த பட்டியல் தொடர்பான தகவல்களை ஊடக அமைப்புகள் தூதரங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஊடகவியலாளர்களை கொலை செய்து, அங்கு ஊடகத்தின் குரலை ஒடுக்கி விட்டு தற்போது,

தென் பகுதியில் ஊடகவியலாளர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். தென் பகுதி ஊடகவியலாளர்களை கொலை செய்யும் சூழல் ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிகொண்டு வரும் ஊடகவியலாளர் ஒருவரை யுத்த்தின் போர்வையில் கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஊடகவியலாளர் ஒருவர் கொலைசெய்யப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஊடகவியலாளர்களை கொலை செய்ய கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள ஜயசேகர பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஊடக தணிக்கை ஒன்றை அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

உரிய தரப்பில் இருந்து தகவல்களை பெறாது அவற்றை எழுதுவது, பாதுகாப்பு படையில் இடம்பெறும் பதவி உயர்வுகள் போன்றவற்றை வெளியிடுவதற்கு, பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments: