இலங்கை அரசாங்க ஊடகத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை தொடர்பாக சர்வதேச ஊடகவியலாளர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவினால் கடந்த 8ம் திகதி, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த மற்றும் பி.பி.சீ. செய்தியாளர் எல்மோ பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வானொலியில் பிரசாரம் செய்ததாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு சொல்ல வேண்டும் என ஊடக அமைச்சருக்கு சர்வதேச ஊடகவியலாளர் சங்கம் கடித மூலம் அறிவித்துள்ளது.
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சட்டபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருக்கும் அனைத்து ஊடகவியலாளர்களையும் பாதுகாக்குமாறும் அந்த சங்கம் அமைச்சரிடம் கோரியுள்ளது.
Friday, 13 June 2008
ஹட்சனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - சர்வதேச ஊடகவியலாளர் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment