Saturday 14 June 2008

காத்திரமான பங்களிப்பை இந்தியா வழங்காததால் பிரச்சினை இழுபடுகின்றது - ஸ்ரீ ரவிசங்கர் குருஜி

இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்காததன் விளைவாகவே இலங்கை இனப்பிரச்சினை இழுபடுவதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜீ தெரிவித்தார்.

பெங்களுரில் வாழும் கலை அமைப்பின் சர்வதேச மத்திய நிலையத்தில் வைத்து விரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கி செவ்வியின் ஒரு பகுதி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை தற்போது கூட நாம் சந்தித்துப் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம். அவருடன் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்.

இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல் ரீதியான அனுகுமுறை மூலம் தீர்வு கண்டு விட முடியாது. தீர்வை நோக்கிய பயணத்தில் மனமாற்றமும் பரஸ்பர நம்பிக்கையும் உறுதியான அடித்தளமாக அமைவதன் மூலமே இலகுவாக வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.

அந்த வகையில் அரசியல் அணுகுமுறையுடன் ஆன்மிக அனுகுமுறையும் இணைந்து பயணிக்கும் போதே முழுமையான வெற்றி ஈட்டக் கூடியதாக இருக்கும். என்று குருஜி அவர்கள் தெரிவித்தார்.

நாம் எமது அமைதி முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்போம். பதில் கிடைக்கின்றதோ இல்லையோ, அது குறித்து மனம் தளரவோ அல்லது சமாதன முயற்சியைத் தொடராமல் விடப்போவதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். மக்கள் நிம்மதியாக, சந்தோஷமாக அமைதியாக, சமாதனத்துடன் வாழ வேண்டும். இத்தகைய ஒரு சூழ்நிலையை உருவாக்க இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளளும் அமைதி வழிக்குத் திரும்பி பேச்சுவாhததை மேசையல் அமர்த்தி பேச்சுவார்ததை வெற்றி பெற அனைத்து முயற்சிகளிலும் நாம் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருப்போம்.

தொடர்ந்து முயற்சியை மேற்கொள்வோமாக இருந்தால் எப்போதாவத ஒரு சந்தர்ப்பத்தில் அது நிச்சயமாக வெற்றியை தரும் என நான் நினைக்கிறேன்.

இலங்கையில் சில அரசியல்வாதிகள் முன்பு செய்த தவறுகளினால் தான் இன்று இந்த நிலை உருவாகியுள்ளது என்பதை அனைத்துத் தரப்பினரும் அறிந்தும் தெரிந்தும் வைத்துள்ளனர். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

No comments: