எமது இயக்கத்தின் மீது இந்தியா தடை விதிப்பதானது சிங்கள பேரினவாத அரசின் தமிழின விரோதப் போக்கினை உற்சாகப்படுத்துவதாகவே அமையும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது இயக்கத்தின் மீது தடை விதிப்பதனால் சிங்கள பேரினவாத அரசின் தமிழின விரேதப் போக்கை இந்திய அரசு உற்சாகப்படுத்துவதாகவே உள்ளது.
இது தமிழ் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை அதிகரிப்பதோடு இந்திய அரசின் மீது எமது மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக அமையும். வரலாற்று ரீதியாக இந்திய அரசு தனது உண்மையான நண்பன் யார் என்பதை உணரத் தவறி வருவதாகவே கருதுகின்றோம்.
புலிகளுக்கு எதிராகவும் தமிழரின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் ஒரு மறைமுகப் போரை இந்திய அரசு நடத்தியே வருகின்றது.
தமிழரை இன அழிப்பிற்குள்ளாக்கும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகள் புரிந்து தமிழின அழிப்பை ஊக்குவிக்கின்றது. தமிழ்நாட்டு மீனவர்களைத் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே சிங்கள கடற்படை கொன்று வருகின்றது. இதையும் இந்திய அரசு மௌனமாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசு கடைப்பிடித்து வரும் இந்தத் தமிழின விரோதப் போக்கைத் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் மக்களும் புரிந்துகொண்டு விழிப்படையும் வரை இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடரவே செய்யும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தமிழீழத் தமிழர்களுக்குமான உறவை எவராலும் பிரிக்க முடியாதது.
Wednesday, 11 June 2008
தமிழ் நாட்டு தமிழர்களுடனான உறவை எவராலும் பிரிக்க முடியாது - புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment