சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பத்தியாளரும், அவுட் ரீச் இணையத்தள ஆசிரியர்களில் ஒருவருமான ஜே.எஸ். திசாநாயகம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் திசாநாயகம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மேலும் 90 நாட்களுக்கு அவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை, திசாநாயகத்தை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஊடக செயற்பாட்டாளர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஊடகவியலாளர்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் பட்டியலில் 27 ஊடகவியலாளர்களின் பெயர்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக உரிமைகள் தொடர்பான பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் அந்த பெயர் விபரங்களை வெளியிடவி;ல்லை.
இருப்பினும் இந்தக் கருத்தை ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மறுத்துள்ளார்.
No comments:
Post a Comment