அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் அனைத்துலக மன்னிப்புச் சபையினால் புகைப்படக் கண்காட்சி இன்று வியாழக்கிழமையும் நாளையும் நடத்தப்பட்டு வருகின்றது.
இக்கண்காட்சி சிட்னியின் வியாபார மையமான மார்ட்டின் பிளேசில் முற்பகல் 11:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை நடைபெறுகின்றது.
இதில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதனால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்காலச் சமுதாயமும் விசனம் இன்றி சித்தரித்து காண்பிக்கப்பட்டு வருகின்றது.
இக்கண்காட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்களவர்கள் நியூசவுத் வேல்ஸ் மானிலத்தில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபைக்கு கண்டனங்களை மின்னஞ்சலில் அனுப்பி வருகிறார்கள். இதனால் தமிழர்கள், இக்கண்காட்சியினை நடாத்திய சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எமது பக்க நியாயத்தைத் தெரிவிப்பது கடமை. நாங்கள் இக்கண்காட்சி நடாத்தியமைக்கு நன்றிகளை சர்வதேச மன்னிப்புச்சபைக்கு தெரிவிப்பதுடன், எங்களுக்கு நடந்த கொடுமைகளையும் தெரிவித்தால் நல்லது.
http://www.amnesty.org.au/feedback
நியூசவூத் வேலில் உள்ள சர்வதேச மன்னிப்புச் சபை - nswaia@amnesty.org.au,
Jenny.Leong@amnesty.org.au
thank you:kanthappu and puthinam
No comments:
Post a Comment