Saturday 14 June 2008

மணலாற்றில் பலப்பரீட்சை-வீரகேசரி சுபத்திரா

தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரின் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மண லாறு போர்அரங்கை நோக்கித் திரும்பியிருக்கி றது. மணலாறு போர்அரங்கில் படைத்தரப்பு தமது உச்சக்கட்ட படைவலுவைப் பயன் படுத்தி ம்ய்ன்னேறும் நடவடிக்கைகளை ஆரம் பித்திருக்கிறது. இதையடுத்து "மணலாறு' "மரணஆறு' ஆக மாறிவருகின்றது.

கடந்தவாரம் சிங்கள நாளிதழான "தினமின' வுக்கு அளித்த பேட்டியொன்றில், "பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு ?னைகளில் நெருங்கி வருகின்றனர்.

இன்னும் 21கி.மீ தூரத்துக்கு முன்னேறிச் சென் றால் படையினர் இறுதி இலக்கை அடைந்து விடுவர். அத்துடன் பதுங்குகுழியில் ஒளிந்தி ருக்கும் பிரபாகரனையும் படையினர் பிடித்து விடுவர்' என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

மணலாறு போர்அரங்கில் படையினர் தாக் குதல்களைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்தே இந்தப் பேட்டியை அவர் வழங்கியிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் மணலாறு போர் அரங் கில் புதிதாக உருவாக்கப்பட்ட 59ஆவது டிவி சனைக் கொண்டு தாக்குதல்கள் ஆரம்பிக்கப் பட்டன. இராணுவத் தளபதியின் நேரடிக் கண் காணிப்பில் வன்னிப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தலைமையில் இந் தப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(தற்போது மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய விசேட விடுப்பில் இருப்பதால் பதில் வன்னிப் படைத் தளபதியாக, இராணு வத் தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான பொது அலுவலர் மேஜர் ஜெனரல் எல்.ஏ.டி.அமர துங்க பணியாற்றிவருகிறார்.)

இந்தப் போர்அரங்கு கொக்குத் தொடுவாய் முதல் கிரிபன்வௌ வரையான 14கி.மீ நீள மான பிரதேசத்தைக் கொண்டிருக்கின்ற போதும், கிழக்கே ஜனகபுர முதல் மேற்கே பன்வௌ வரையான 11கி.மீ பகுதிகளி லேயே தீவிர நகர்வு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

59ஆவது டிவிசனின் தளபதி யான பிரிகேடியர் நந்தன உடவத்தவே இந்தப் போர்அரங்கில் படையினரை வழிநடத்து கிறார்.

இந்தப் போர்அரங்கில் படையினரின் முன்னகர்வுகள் எந்தக் கட்டத்தில் இருக்கின்றன? இதனால் முல்லைத்தீவில் உள்ள புலிகளின் தளங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகுமா? என்பன குறித்து இப்பத்தியில் பார்க்கலாம்.

படைத்தரப்பு அண்மை நாட்களாக வெளி யிட்டு வரும் தகவல்களைப் பார்க்கின்ற எவ ருமே மணலாறு போர்அரங்கில் படையினர் பெருமளவு பிரதேசத்தைக் கைப்பற்றி முன்னே றியிருக்கின்றனர் என்பது போலவும், முல்லைத்தீவை படையினர் நெருங்கி விட்டதைப் போலவும் இருக்கின்றன.

மணலாறு போர் அரங்கில் படையினர் சில பிரதேசங்களைக் கைப்பற்றியிருப்பதும் முன்னேறியிருப்பதும் உண்மையே.

ஆனால் அது இப்போதைக்கு முல்லைத்தீவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்குச் சென்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியின் மேற்கு முனைகளில் படைத் தரப்பு 57, 58ஆகிய இரண்டு டிவிசன்களுடன் புதிதாக 61மற்றும் அதிரடிப்படை2 என நான்கு டிவிசன்களைக் களம் இறக்கித் தாக்கு தல்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலை யில், சத்தமில்லாமல் மணலாறு போர்அரங்கில் குறிப்பிட்ட பிரதேசத்தைக் கைப்பற்றிவிட படைத்தரப்பு எத்தனித்து வருகிறது.

கல்யாணபுரவுக்கு வடக்கே உள்ள கிரிபன்வௌவில் இருந்து வடக்கே வேலன் குளம் நோக்கி லெப்.கேணல் மனீஷ சில்வா தலைமையிலான 592 பிரிகேட் டும், பராக்கிரமபுரவில் இருந்து வடக்கே நித்தியகுளம் நோக்கி லெப்.கேணல் பாலித பெர்னாண்டோ தலைமையிலான 593ஆவது பிரிகேட்டும் (தற்போது பதில் கட்டளை அதிகாரியாக லெப்.

கேணல் ஜாலிய சேனாரத்ன பணியாற்று கிறார்), ஜனகபுரவில் இருந்து வடக்கே ஆண்டான்குளம் நோக்கி லெப்.கேணல் அருண ஆரியசிங்க தலைமையிலான 591ஆவது பி?கேட்டும் முன்னேறி வருகின்றன.

கி?பன்வௌ களமுனையில் 592ஆவது பிரிகேட் துருப்புகள் இதுவரையில் சுமார் 7 கி.மீ வரையான பிரதேசத்துக்குள் முன்னேறியி ருப்பதாகவும், ஜனகபுரவில் இருந்து முன்னே றிய படையினர் 3 கி.மீற்றருக்கும் சற்று அதிகமாக முன்னேறியிருப்பதாகவும் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 மாதங்க ளாக நடந்து வந்த இந்தப் போர்அரங்கச் சமர்களில் இந்த மாதத் தொடக்கத்தில் ஜனகபுரவுக்கு மேற்காகவுள்ள "முன்னகம்' என்ற புலிகளின் அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்த தளம் ஒன்றை முதல்முறையாகக் கைப்பற்றியிருப்பதாகப் படைத்தரப்பு தெரிவித்திருந்தது. இதைக் கைப்பற்றியது 591ஆவது பிரிகேட் ஆகும்.

தற்போது 593ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த படையினர் நித்தியகுளத்தில் அமைந்திருக்கும் புலிகளின் பிரதான தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை படையினர் பெருமெடுப்பில் நித்தியகுளம் அணைக்கட்டுக்கு தெற்கேயிருந்து முன்னேற முற்பட்டனர்.நித்தியகுளத்தில் புலிகளின் வன்போ(14) என்ற தளம் உள்ளது.

இந்தத் தளம் இந்தியப்படையினருக்குப் பெரும் சவாலாக இருந்ததொன்று. புலிகளின் தலைவர் பிரபாகரன் இங்கிருந்து தான் இந்தியப்படை களுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்தினார்.

எனவே பிரபாகரனைப் பிடிக்கும் நோக்கில் இந்தியப்படைகள் "செக்மேற்' என்ற பெயரில் மூன்று தடவைகள் பாரிய தாக்குதல்களை நடத்திய போதும் பெரும் இழப்புகளுடன் பின்வாங்க நேரிட்டது.

இந்தத் தளத்தைக் கைப்பற்ற 1991ஆம் ஆண்டில் "ஒப்பரேசன் மின்னல்' என்ற பெய?லும்,1992இல் "கய பகர' என்ற பெயரிலும் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ இரண்டு பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

முதலாவது தாக்குதல் 30நாட்கள் வரை நீடித்தது. கஜபாபுரவில் இருந்து நித்தியகுளம் நோக்கி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு அப்போது "சுயாதீன பிரிகேட்'டின் தளபதியாக இருந்த பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமை தாங்கியிருந்தார். அவரது பிரதித் தளபதியாக இருந்தவர் அப்போது கேணல் தர அதிகாரியாக இருந்த இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத்பொன்சேகா ஆவார்.

இந்தத் தாக்குதலில் புலிகளின் சில தளங்க ளைப் பிடித்தபோதும் படையினர் அங்கு நிலை கொள்ள முடியாமல் பின்வாங்கியிருந்தனர். இப்போது மீண்டும் அந்த இலக்கு நோக்கி படையினரை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா வழி நடத்தி வருகிறார்.

நித்தியகுளத்தில் இருந்து தெற்காக படையினர் நிலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் புலிகள் தமது வன்போ தளத்திற்குத் தெற்கே சுமார் 200 மீற்றர் அகலத்துக்கு காடுகளை வெட்டி பாரிய வெளியொன்றைத் தோற்றுவித்துள்ளனர். இந்த வெளியைக் கடந்து "வன்போ' தளத்தை அடைவதே படையினருக்குப்பெரும் சவாலாக உள்ளது.

இந்தப் பகுதியில் பெருமளவில் பொறிவெடிகள் காணப்படுவதுடன், மோட் டார்கள், ஆட்டிலறிகள் மூலம் சுலபமாகக் குறி வைக்கக் கூடிய வகையில் புலிகள் ஆள்கூறுகளைக் கணித்து வைத்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இந்த வெளியைக் கடந்து சென்று "வன்போ' தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் 593ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த இரு பற்றாலியன்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தன.

லெப்.கேணல் பிரியந்த பெரேரா தலைமையிலான 7ஆவது கெ?னு வோச் மற்றும் மேஜர் லக்சிறி பெரேரா தலைமையிலான 14 ஆவது விஜயபா காலாற்படை என்பனவே இந்தத் தாக்குதலில் பங்குபற்றியிருந்தன.

படையினர் இந்த வெளி யைக் கடக்க முற்பட்டபோது, புலிகள் உக்கிரமான தாக்குதலை நடத்தினர். இதனால் படையினர் பின்வாங்கினர். இரண்டு நாட்கள் வரை இந்த மோதல்கள் நீடித்தன.

கடந்த ஞாயிறு மட்டும் 07 படையினர் கொல்லப்பட்டு 19 பேர் காயமுற்றதாகவும் ஒரு சிப்பாய் காணாமற் போனதாகவும் படைத்தரப்பு அறிவித்தது.

ஆனால் புலிகளோ 15 படையினர் கொல்லப்பட்டு, 20பேர் காய முற்றதாகத் தெரிவித்திருந்தனர். அத்துடன் ஆர்.பி.ஜி. ஒன்று உட்பட பல வெடிபொருட்களையும் தளபாடங்களையும் கைப்பற்றியதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆனால் "வன்போ' தளத்தின் 5 காவல்நிலைகளைக் கைப்பற்றிவிட்டதாகவும், தளத்தையே கைப்பற்றி விட்டதாகவும் கூட படைத்தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

ஆண்டான்குளம், நித்தியகுளம் காட்டுப் பகுதி கள் இப்போது முக்கிய சமர் அரங்காக மாறியிருக்கிறது.

புலிகள் மணலாறு களமுனையில் முன்னரங்க நிலைகளுக்கு விநியோகங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொக்குத்தொடு வாயில் இருந்து தண்ணி முறிப்புக்குளம் வரை அமைத்திருந்த வீதியின் ஒருபகுதியை ஜனகபுரவுக்கு வடக்கே படையினர் கைப்பற்றி, விநியோகத்தைத் துண்டித்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாகப் படையினர் ஆண்டான்குளம் காட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் நித்தியகுள த்தில் இருந்து 9கி.மீ தொலைவில் உள்ள குமுழமுனையை நோக்கி படைநகர்வு இடம்பெறலாம் எனக் கருதப்படுகிறது.

குமழமுனை நோக்கிய நகர்வுகள் நாயாறு வரை விரிவுபடுத்தப்பட்டால் புலிகளின் கடல்வழி போக்குவரத்து மற்றும் விநியோகங்களை மட்டுப்படுத்தலாம் எனப் படைத்தரப்பு கருதுகிறது. ஆனால் புலிகள் படையினரின் திட்டத்துக்கமைய விட்டுக் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

இந்தப் போர்அரங்கில் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சொர்ணத்தின் தலைமையில் முறியடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்னரங்க நிலைகளில் உள்ள போராளிகளுக்கு மேலதிகமாக இந்தப் போர்அரங்கில், 500 மேலதிக ஒதுக்குப் படையினரையும் புலிகள் நிறுத்தி வைத்திருப்பதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

"ஜயசிக்குறு' காலத்தில் படையினர் வெலிஓயாவில் இருந்து முன்னகர்ந்து நெடுங்கேணியைக் கைப்பற்றியதுடன் பின்னர், ஒட்டுசுட்டான் வரை தமது கட்டுப் பாட்டுப் பிரதேசத்தை விஸ்தரித்திருந்தனர்.

ஆனால் அப்போதும் கூடப் புலிகளின் தலைமை முல்லைத்தீவில் பாதுகாப்பாக இருந்து கொண்டே, ஓயாத அலைகள்3 படை நடவடிக்கையையும் "ஜயசிக்குறு' முறிய டிப் புத் தாக்குதல்களையும் வழிநடத்தியிருந்தது.

மணலாறை புலிகள் இதயபூமியாகக் கருதுபவர்கள். அதன் முக்கியத்துவத்தைப் புலிகள் வெகுவாக உணர்ந்திருப்பதால் படையினருக்கு உச்சக் கட்டமான எதிர்ப்பைக் காண்பிப்பதுடன் அவர் களுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தவும் முற்படுவர்.

எனவே மணலாற்றில் இருதரப்பும் செய்யும் உக்கிர சமர்கள் எதிர்வரும் நாட்களில் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இதில் எந்தத் தரப்பு தமது பலத்தை நிரூபித்துக் கொள்ளப் போகிற தென்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

No comments: