Thursday 12 June 2008

இலங்கையில் வாகன வரி,விமான டிக்கட்டுக்களின் விலை உயர்வு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விமான டிக்கட்டுகளின் விலை நூற்றுக்கு 15 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துச் செல்லும் எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக விமான டிக்கட்டுக்களின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பல விமான சேவை நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான டிக்கட்டுகளின் விலையேற்றம் காரணமாக மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளி நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகன வரி அதிகரிப்பு

இலங்கையில் வாகன வரியை அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது. வரும் 16ம் திகதி முதல் இந்த வரி நடைமுறைப்படுத்தபடும் என்று அரசு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. தற்போது இலங்கையில் 3 லட்சம் வாகனங்கள் வரை இருப்பதாகவும், 2007ம் ஆண்டில் 2,97,892 வாகனங்கள் பதிவு செய்யபட்டதாகவும், மற்றும் தினமும் 500 வரையிலான வாகனங்கள் பெயர் மாற்றத்திற்காக வருவதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த வரியானது மக்கள் மீது மேலும் பல நெருக்கடிகளை தோற்றுவிக்கும், என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: