சிறீலங்கா சமாதான முயற்சியின் அனுசரணையாளர்களான நோர்வே தூதுவர்களை, வன்னி செல்ல அனுமதிக்க முடியாது என, சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க நேற்றிரவு றொயிற்றர்ஸ் (Reuters) செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் அனுசரணையாளர்களை தாம் நேரில் சந்திக்க விரும்புவதாக, விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணி்ப்பாளர் புலித்தேவன், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, நேர்வே தூதுவர்களை வன்னி செல்ல அனுமதிக்க முடியாது என, சிறீலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Thursday, 12 June 2008
நோர்வேயின் சமாதானத்தூதுவர்கள் வன்னி செல்லமுடியாது : சிறிலங்கா அரசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment