மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் துக்கராம் சம்பாஜி சவுத்திரி (வயது 40). புறாக்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், ஏராளமான புறாக்களை வளர்த்து வந்தார்.
அவரது பண்ணைக்குள் நேற்று முன்தினம் ஒரு பாம்பு நுழைந்தது. அதை அடித்துக் கொல்வதற்காக துக்காராம் சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு பிரியமான புறா ஒன்று பறந்து வந்து துக்காராமை பலமாக கொத்தியது.
இதனால் சுயநினைவிழந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். துக்காராமை கொத்திய புறாவும் சிறிது நேரத்தில் இறந்து விட்டது.
பண்ணைக்குள் புகுந்த பாம்பு, அந்த புறாவை கடித்து இருக்கலாம் என்றும், அதனால் ஏற்பட்ட விஷம்தான் துக்காராமை கொத்தியபோது அவர் மீது பாய்ந்து இறந்து விட்டார் என்றும் கருதப்படுகிறது. எனினும், புறா கொத்தியதால் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் வினோதமாக உள்ளது.
Thursday, 12 June 2008
புறா கொத்தியதால் பலியான வாலிபர்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment