* செல்வந்த நாடுகள் துரித கதியில் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறிய மக்கள் இரண்டு பில்லியனாக அதிகரிக்கும் நிலை உருவாகும் உணவுக்கான உச்சிமாநாடுகளின் பின்னர் ஒன்று 1996 இல், மற்றையது 2002 இல் சர்வதேச சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவின்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது. 1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்தில் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மூன்று ஐ.நா மகாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன்தரவில்லை. இரண்டு உச்சிமாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர். 30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ள நிலையிலும் 60 க்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி, தானியப் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் 150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய 3 ஆவது உலக உச்சிமாநாட்டில் வியாழனன்று தலைவர்கள் இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒழுங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர். யூ.என்.செயலாளர் நாயகம், பான்கிமூன் ரோமாபுரி உச்சி மகாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது ""?வைபீறியாவில், அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்துள்ளேன்' என்றார். இந்த மகாநாட்டில் கேட்ட பேரொலி யாதெனில் சர்வதேச சமூகத்தின், விசேடமாக செல்வந்த நாடுகளின் அரசமைப்புக்களை இந்த நெருக்கடிக்கும் தீர்வுகாணவேண்டிய தேவையுள்ளது என்பதை அழுத்தமாக விளங்கவைக்க வேண்டும் என்பதாகும். "நாங்கள் துரிதகதியிற் செயற்படாதவிடத்து உலகின் ஒரு பில்லியன் வறியமக்கள் இரண்டு பில்லியன்களாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களது பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டித்ததனால் அரைவாசியாகக் குறைந்துள்ளது' என்கிறார் . பசி,பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் யூ.என். ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் ஜோசெற்ஷிறான். உலக உணவுத்திட்டம் இந்த வருடம் அது 78 நாடுகளைச் சேர்ந்த 90 மில்லியன் மக்களுக்கு 5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உணவு உதவியைச் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. இந்த நாடுகளுள் அதிகம் பாதிக்கப்பட்டனவான ஹெயிற்றி ஆப்கானிஸ்தான், சோமாலியா, எதியோப்பியா, கென்யா ஆகியன அடங்கும். உரோமாபுரியைத் தளமாகக் கொண்ட உணவு, விவசாய நிறுவனத்தின் அனுசரணையில் 3 நாட்களாக நடைபெற்ற உச்சிமகாநாடு பிரகடனப்படுத்துவதாவது; உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போஷாக்கின்மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனம். ஆனால் இறுதியில் இதில் எவ்வளவு வீதம் நடைமுறைப்படுத்தப்படும்? இந்தப் பிரகடனத்துடன் தளம்பல் நிலையிலுள்ள எண்ணிக்கையும் வெளிவந்தது. செயலாளர் நாயகம் உச்சி மாநாட்டில் கூறியதுபோல உறுதியான புதியவளங்கள் தேவைப்படுகின்றன. அல்லது உலகளாவிய இந்த நெருக்கடியைத் தீர்க்க வருடமொன்றிற்கு 1520 பில்லியன் டொலர்களும் மேலும் ஆபிரிக்காவில் பசுமைப் புரட்சியின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வருடந்தோறும் 810 பில்லியன் டொலர்களும் தேவைப்படும். சான்பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஒக்லன்ட் மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் அனுறாதா மிற்றால் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது: முதற் பார்வையில் உச்சி மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட உத்தரவாதங்கள் நம்பிக்கையூட்டுவன. அவர் கூறுவதாவது: உணவு நெருக்கடியினாற் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடியாக உதவிகளுக்கும், கொள்ளை சிபார்ஸுகளுக்கும் அழைப்புவிடுப்பது. மேலும் இவற்றுள் சிறுவிவசாயிகளுக்கு உதவி, சமூக பாதுகாப்பு வலுப்படுத்தல், உணவு சேமித்துவைத்தல், ஆபத்து வேளைகளில் உதவக்கூடிய செயன்முறைகள் ஆகியனவும் உள்ளடக்கப்படுதல் போன்றனவற்றிற்கு அழைப்பு விடுத்தல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிறார். அதேவேளையில், மத்திம,நீண்டகாலச் சிபார்ஸுகள், விவசாயத்திற்கு மக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியனவும் உணவுப்பற்றாக்குறையை நீக்க உதவும் எனவும் அவர் கூறுகிறார். மிற்றால் மேலும் கூறுவதாவது: "அண்மைக்கால உணவு விலை நெருக்கடியும், அதிகரிக்கும் பட்டினி நிலையும் சர்வதேச சந்தையில் பொருட்கள் வர்த்தகம் செய்யப்படுதல் என்பதற்குப் பதிலாக புதிய விவசாய, உணவுக்கொள்கையின் தேவையொன்றை வேண்டி நிற்கிறது' இதற்கு மூன்றாவது உலக நாடுகளுக்கு உணவு நிறைவை உறுதிப்படுத்த உறுதியான கொள்கையொன்று அவசியமாகிறது. மேலும் மூன்றாவது உலகநாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தவறான வழிநடத்தல்களிலிருந்து விலகிக்கொள்ளும் திறமையும் அவசியமாகிறது. சிறுவிவசாயிகளை மையமாகக் கொண்டு ஒரு விவசாய முறையை உருவாக்குவது. விவ சாய தொழிலாளர்கள், மீனவர்கள், உள்நாட்டு சமூகங்கள் ஆகியவர்களை அடிப்படையாகக் கொண்டு உணவு நிறைவையும், நாடுகளின், உணவுக்கான சுயதேவைப் பூர்த்தியையும் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும் ஆகும். சர்வதேச செயற்பாடு, ஏற்கனவே உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்கிறது என பான் கூறினார். உணவு விவசாய நிறுவனம் குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கு விதைகள், வேறு விவசாய உதவிகளைச் செய்தற் பொருட்டு 1.7 பில்லியன் டொலர்களுக்காக அழைப்புவிடுத்துள்ளது. இந்த வருடத்திற்கான உத்தரவாதங்களை நிறைவேற்ற உலக உணவு நிறுவனம் சவுதி அரேபியாவிடம் இருந்து 755 மில்லியன் டொலர்களைப் பெற்றுள்ளது. உணவு, விவசாய நிறுவனம் மேலதிகமாக 200 மில்லியன் டொலர்களை பாதிக்கப்பட்ட நாடுகளில் வறிய கமக்காரர்களுக்குக் கொடுக்கிறது. மேலும் உலகவங்கி 1.2 பில்லியன் டொலர் நிதி வசதியை உருவாக்கி உணவு உற்பத்தியைப் பெருக்க உதவ முன்வந்துள்ளது. இதில் 200 மில்லியன் டொலர்கள் உலகின் மிகவறிய நாடுகளுக்கு உதவுவதற்காகும். ஐக்கியநாடுகள் சபையும் சி.ஈ.ஆர்.எவ். நிதியத்திலிருந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையினால் பாதிக்கப்படும் மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளுக்காக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. அவர் மேலும் கூறியதாவது, வளர்ந்துவரும் நாடுகள் தமது விவசாயப் பகுதியில் இன்னும் அதிகளவு நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும், அவை தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும், மற்றும் சிறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வலுவையும் கட்டுப்படுத்தி விடுமென்றும் கூறினார். தற்போதைய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலை மூன்று தசாப்தகாலமாக விவசாயத்தில் காட்டப்பட்ட சந்தை ஒழுங்கின்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. மிற்றால் கூறுவதாவது: ஆகவே உணவு உற்பத்தியை ஸ்திரப்படுத்தவும், தகுந்த முறையில் உணவை நியாயமான விலையில் உலகளாவிய ரீதியில் விநியோகிக்கவும் நல்ல தீர்வுகளைக் காணுமாறு அழைப்புவிடுக்கிறோம். அதேவேளையில் 237 அரசசார்பற்ற நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும், சமூக அமைப்புக்களும், ஏறக்குறைய 50 நாடுகளிலிருந்து பங்கேற்றுள்ளன. அவை உலக வர்த்தக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பஸ்கால்லாமியை வானளாவும் உணவுப் பொருட்களின் விலைக்கான விடை உணவு உற்பத்தி, வர்த்தகம் மேலும் ஒழுங்கீனம் ஆக்குவதிற் தங்கியிருக்கவில்லை என எச்சரித்துள்ளன. அக்கடிதம் டோகா செயற்பாடுகள் உலக உணவு முறையை எதிர்நோக்கும் பாரிய சவால்களை நிர்ணயிக்கவில்லை. அது காலநிலை மாற்றத்தையும், இயற்கை வளங்கள் குறைதல், எரிபொருட்களின் விலை நாலுமடங்காதல், வர்த்தக சந்தையில் போட்டியின்மை, பயோ எரிபொருள்கள் அதிகரித்தல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இதிற் கையொப்பமிட்டவர்கள் அக்ஷன் எயிட் இன்ரர் நாஷனல், ஆபிரிக்கா வர்த்தக வலைப்பின்னல், ஏஷியன் பெசன்ற் கொயலிஷன், ஒக்ஸ்பாம், ஒக்லன்ட் மன்றம் எல்.ஏ.சி.ஆர்.எம்.தேட்வேள்ட் நெற்வேக், பூமியின் நண்பர்கள் பூட்ஸ்பான் ஆகியவையாகும். ஐ.பி.எஸ்
Friday, 13 June 2008
உலகெங்கும் உணவு நெருக்கடிக்கு உச்சிமாநாடுகள் ஆனால்; உண்பதற்கு கிடைப்பது அரைவயிறு உணவே இரண்டு பாரிய ஐ.நா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment