Sunday 15 June 2008

அமைச்சரின் மருமகனுக்கு வரதட்சணையாக 30 மில்லியன் ரூபா

அராசங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு வரதட்ணையாக 30 மில்லியன் ரூபா கடன் தொகையொன்றை இலங்கை வங்கியூடாக தனது மருமகனுக்கு வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

"கமட கர்மாந்த நய" என்ற கிராமப்புற கைத்தொழில் திட்டத்தின் கீழ் இந்த கடன்தொகை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இதே கடன் திட்டத்தின் கீழ் அமைச்சரின் சகோதரர் ஒருவருக்கு 320 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட நிதி கூடிய வட்டி வீதத்தில் தனியார் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொள்ள பல வர்த்தகர்கள் விண்ணப்பித்த போதிலும் 200 ஊழியர்களுக்கு அதிகமாக உள்ள தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் சில உறவினர்களுக்கு மாத்திரம் இந்தக் கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த அமைச்சரின் மருமகன் ஒரு புகைப்படக் கடையொன்றை மாத்திரமே வைத்திருப்பதாகவும் அதில் சில ஊழியர்களே கடமையாற்றுவதாகவும் இரிதா லங்கா பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை வங்கியின் நகர கிளையினூடாக 6.5 வீத வட்டிக்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் குறித்த அமைச்சரின் மகள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: