Friday 13 June 2008

விடுதலைப்புலிகளுக்கு 70 மில்லியன் பவுண்ஸ்! பிரித்தானியா இரட்டைக் கொள்கை மகிந்த கண்டணம்!

பிரித்தானிய அரசின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ கண்டித்துள்ளார்.பிரித்தானியாவில் இன்று வெளியாகியுள்ள த ரைம்ஸ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்புகு நிதி சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக பிரித்தானியா இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் மகிந்த கண்டித்துள்ளார்.


பிரித்தானியாவில் வாழும் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களிடம் இருந்து வருடம் ஒன்றுக்கு 70 மில்லியன் பவுண்ஸ் நிதி விடுதலைப் புலிகளுக்கு சேகரிக்கப்படுவதாகவும் மகிந்த கூறியுள்ளார்.


இந்த நிதிமூலம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் விடுதலைப் புலிகள் தம்மீது தாக்குதலை நடத்தி வருவதாகவும், பிரித்தானியாவில் மட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவற்றிலும் இடம்பெறும் விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர்.



பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்தபோது, வெளியே ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் போராட்டம் நடத்திய போதிலும், தமிழ் மக்களிடம் பலவந்தமாக நிதி சேகரிக்கப்படுவதாக, மகிந்த ராஜபக்ஸ கூறியிருப்பதை த ரைம்ஸ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: