Wednesday 11 June 2008

இலங்கை மனித உரிமை நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை நிலைமை சீரடையாவிடின் நிதி உதவிகள் தடைப்படும் எனவும் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய நட்புறவுகள் உண்டு எனினும் ஆட்கடத்தல், காணாமல் போதல் தொடர்பில் இலங்கை அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கம் அதீத கவனத்தை செலுத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட இதர நாடுகளுக்கும் உரிமை உள்ளது எனினும் இந்த சலுகையை இலங்கை பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள ஆலோசனைகள் தொடர்பிலும் கவனம்செலுத்தவேண்டும். அத்துடன் நோர்வே பிரதிநிதி அவசிய தேவைகளின் பொருட்டு வன்னிக்கு செல்லாம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுகளுக்கான பிரதி செயலாளர் நாயகம் ஜஹோ அக்கீயூர் மக்கடோ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் காரியாலயத்தில் நேற்றுமாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான நட்புறவுகள் பேணப்பட்டு வருகின்றன அவற்றில் பொருளாதாரம், வர்த்தகம், அரசியல் மற்றும் கலாசார ஆகியவற்றை பாதுகாத்தல் தொடர்பிலான உறவுகள் வலுவானவை. இதற்கான சந்தர்ப்பத்தை நீடிப்பது தொடர்பில் தொடர்பில் இந்த விஜயத்தின் போது அரசாங்க தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது.

கிழக்கில் ஜநாயகம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய யூனியன் கவனம் செலுத்தியுள்ளது அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகள் சகல பாராளுமன்ற குழுக்களும் கட்டுப்படுத்த வேண்டும். சர்வ கட்சி ஆலோசனை குழுவின் செயற்பாடுகள் தொடரப்படும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை மேலும் அக்குழு இரண்டாவது திட்டத்தை சமர்ப்பிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முற்றுமுழுதான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகைøயப் பெறுவதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உரிமை இருக்கின்றது என்பதனால் அதுகுறித்து விண்ணப்பிக்கமுடியும் எனினும் அதற்கான தகைமைகள் தொடர்பில் அரசாங்க பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவன பிரதிநிதிகள் வன்னிக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தடுப்பதற்காக செயற்பாடாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளோம்.

கடந்த முறை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நோர்வே பிரதிநிதியை கிளிநொச்சிக்கு அனுப்புவதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கோரியிருந்தனர் அந்த நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் இருக்கின்றது.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் குறித்து நாம் எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துகொள்கின்றோம் சர்வதேச மாண்புமிக்கோர் குழு அண்மையில் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளது.மனித உரிமைகள் குறித்த அவர்களின் விதப்புரைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறும் சுயாதீன மனித உரிமைகள் கண்காணிப்பிற்கு வழிவகுக்குமாறும் நாம் கோருகின்றோம்.

எமது அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் ஆராயப்பட்டது எமது உதவிகளுக்கு அரசாங்கம் வரவேற்றுள்ளது. எனினும் இந்த உதவிகளை தொடர்வதில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என நாம் வலியுத்துகின்றோம் குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம்,ஐ.நா மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விசாக்களை தடைசெய்வதை நீக்கவேண்டும் அவசிய தேவைகளின் பொருட்டு வன்னிக்கு முகவர் நிறுவனங்கள் செல்வதற்கு வழிவகுக்கவேண்டும் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் நிறுத்தப்படல் வேண்டும் .

இவ்வாறான விவாகாரங்களை தீர்க்க தவறும் பட்சத்தில் இலங்கைக்கான நிதியுதவிகளை வழங்குவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதியுதவிகளை வழங்குவது என்பன சாத்தியமற்று போகும் என்பதையும் நாம் எடுத்து கூறியுள்ளோம்.

அரசாங்கம் சில விடயங்களை குறிப்பாக விசா சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது இதை நாம் வரவேற்கின்றோம் இறுதியாக இவை அøனத்தும் சாதகமாக அமையும் பட்சத்தில் அடுத்தவருடம் ஐரோப்பிய ஒன்றிய இலங்கை கூட்டு மாநாட்டை பிரஸ்ஸல்ஸில் நடத்துவதற்கு உடன்படுவோம்.

No comments: