Wednesday 11 June 2008

பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக சோசலிச பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம்

பொருட்களின் விலையேற்றம் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் உள்ளதாகவும், உடனடியாக பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் எனவும் கோரி ஜே.வி.பி.யின் சோசலிச மகளிர் அணி நேற்று மாலை 4.00 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.சோசலிச மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரியங்கிகா கொதலாவல, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜாதா அலகக்கோன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

பால் மா, பான், அரிசி, தேங்காய், எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் மாதிரி உருவங்களை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் வீண் விரயங்கள் குறைக்கப்பட்டு உடனடியாக பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

விலையேற்றத்திற்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒத்துழைப்பு வழங்கிய ஜே.வி.பி., மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு ஒருபோதும் தயங்காது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமெழுப்பினர்.

No comments: