Sunday 15 June 2008

தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கையரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளது!!!

indian-police1.jpgவிடுதலைப்புலிகளுக்கு வெடிமருந்துகள், ஆயுதங்களை கடத்தப்படுவதை தடுக்க தமிழக அகதி முகாம்களில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதுடன் அவற்றிக்கான அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்யவும் தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள், மின்கலங்கள் என்பன தொடர்ந்தும் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கை அகதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் தங்கியுள்ள முகாம்களில் வைத்துள்ள இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி தூர இடங்களுக்குச் சென்று வெடி மருந்துகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்து, அவற்றை மறைத்து வைத்து, கடல் வழியாக விடுதலைப்புலிகளுக்கு கடத்திச் செல்லும் சம்பவங்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உளதுறையினர் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 117 அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளிடம் இருக்கும் வாகனங்களை கணக்கிட்டு, அவற்றை பறிமுதல் செய்யவும், அதன் பின்னர் அவற்றிக்கான அனுமதிகளை நிரந்தரமாக ரத்துச் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பணிகளில் கியூ, உளவுதுறை காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காவல்துறையினர் அதிகாரி ஒருவர் அகதி முகாமில் உள்ள அகதிகளை வெளியில் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவர்களை அழைத்துச் சென்று, புலிகளுக்கு தேவையான வெடி மருந்து உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து அதனை மறைத்து வைப்பதாகவும்.

புpன்னர் அவை கடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்தே தமிழக அரசாங்கம் இந்த உடனடியாக உத்தரவைபிறப்பித்துள்ளது. அத்துடன் அகதிகள் வாகனங்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: