Saturday, 14 June 2008

சின்னமுகத்துவாரத்தில் மண் ஏற்றச்சென்ற இரு இளைஞர்கள் கடலுக்கு பலி

ஆலையடிவேம்பு சின்னமுகத்துவாரம் கடற்கரையில் கடல் மண் ஏற்றச்சென்ற இரு இளைஞர்கள் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கோளாவில் மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திற்காக அருகிலுள்ள சின்னமுகத்துவாரம் கடற்கரையில் கடல் மண் ஏற்றச் சென்ற நான்கு இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் கடல் மண்ணை ஏற்றிவிட்டு கடலில் குளித்தபோது கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதில் கோளாவில் வைத்தியர் வீதியைச் சேர்ந்த சிதம்பரம் சக்திதாஸ் (வயது 20), பாரிப்போடி வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரதீப் (வயது 18) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் நேற்று வரை மீட்கப்படவில்லை.

தற்கொலை

இதேவேளை, ஆலய பூசாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பனங்காடு ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த கந்தக்குட்டி கமலநாதன் (வயது 51) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாரே நேற்று காலை அலரிக்கொட்டையை அரைத்து அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இவரது சடலம் பிரதேச பரிசோதனைக்காக அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: