Saturday, 14 June 2008

பத்மநாதனை ராமதாஸ் சந்தித்தமை குறித்து விசாரணை வேண்டும் -சுப்பிரமணிய சுவாமி

subramanian-swmi.jpgவிடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்துடன் தொடர்புடைய கே.பத்மநாதனை சந்தித்தமை தொடர்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பத்மநாபனை தேடி ஜெர்மனி சென்றுள்ளனர்.

ஆனால் கடந்த ஜனவரி 9ம் திகதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஜி.கே. மணி, திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்று, அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர் என சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ராமதாசிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

1 comment:

ttpian said...

first of all,this bramin (SAMY)CIA agent should be interrogated