காமன்வெல்த் அமைப்பிலிருந்து மலேசியாவை நீக்க வேண்டும் என்று ஹின்ட்ராப் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான இந்து கோயில்களை இடித்து இந்தியர்கள் மீது பாரபட்சம் காட்டுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஹின்ட்ராப் அமைப்பின் தலைவர் வேதா மூர்த்தி கூறியுள்ளார்.
லண்டனில் பேட்டி அளித்துள்ள வேதா மூர்த்தி, 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள காமன்வெல்த் அமைப்பு அதிலிருந்து மலேசியாவை நீக்க வலியுறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய ஹின்ட்ராப் தலைவர்கள் 5 பேர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெனிவா சென்ற வேதா மூர்த்தியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது லண்டனில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்.
Wednesday, 11 June 2008
காமன்வெல்த் அமைப்பிலிருந்து மலேசியாவை நீக்க வேண்டும் என்று ஹின்ட்ராப் அமைப்பு கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment