Friday 13 June 2008

ஜனாதிபதியின் சால்வையையா உண்ணக் கொடுப்பது

நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கைக்கு மதிப்பளிக்காதமையினால் நாட்டு மக்கள் பட்டினி கிடக்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை பட்டினி; பிணியில் சிக்க வைத்திருக்கும் இந்த அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஸவின் சால்வையையா உணவாக மக்களுக்கு கொடுக்க உத்தேசித்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க இருந்த சந்தர்ப்பம் சில அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கத்தினால் கைநழுவிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் கலைக்கப்பட்ட இரண்டு மாகாணசபைகளிலும் வெற்றிபெறுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் சுலபமானது என கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த அரும்பாடுபட்ட ஜே.வி.பி. தற்போது தனித்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் பின்னணியில் இரண்டு மாகாணசபைகளிலும் வெற்றிபெறுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் இலகுவானதென அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மாகாணசபைகளை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: