சூடானில் நேற்றிரவு இடம்பெற்ற விமான விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ளது. இதன்போது 50 க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்பட்ட விமானமொன்றே சூடான் கடோமில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சீரற்ற காலநிலை, சுழல்காற்று மற்றும் மழையின் காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில் விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், இது ஒரு வெடிப்பு சம்பவமல்லவெனவும் விமான நிலையப் பணிப்பாளர் யூசுப் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
எங்களால் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவலைக்கூற முடியாதென்பதுடன், இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியும் எதுவும் கூறமுடியவில்லையெனவும் குறிப்பிட்ட விமான நிலையப் பணிப்பாளர் யூசுப் இப்ராகிம், அதிகளவிலான பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார்.
முதற்கட்ட அறிக்கையின் படி 203 பயணிகளில் அரைவாசிப் பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், இதில் 14 விமானப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
Wednesday, 11 June 2008
சூடான் விமான விபத்தில் 100 பேர் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment