இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக லண்டனில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய நாடுகள் அலுவலகத்தின் வெளிப்புறமாக இன்று முற்பகல் 11.30 மணியில் இருந்து 2.00 மணிவரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய தமிழர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மஹிந்த ராஜபக்ஸ அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கோஸங்களை எழுப்பியுள்ளனர்.
மறுபுறம் 50ற்கும் நூற்றுக்கும் இடைப்பட்ட சிங்களவர்களைக் கொண்ட குழு ஒன்று அரசாங்கத்திற்கு சார்பான, புலிகளுக்கு எதிரான கோஸங்களுடன் எதிர்ப் பக்கமாக ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது. இந்த இரு தரப்பினருக்கிடையிலும் தடுப்பு அரன்களை பிரித்தானிய காவற்துறையினர் அமைத்திருந்தனர்.
அந்த மண்டபத்திற்கு வெளியே சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து 2,000 இற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரம்பத்தில் சிறு கூட்டமாக தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், நேரம் செல்லச் செல்ல மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு சென்றதால், ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்து அருகில் உள்ள ட்ரவல்கர் சதுக்கத்திலும் மக்கள் சென்று கூடி தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததனை விட அதிகமாக வந்து அலை மோதியதால் ஆர்ப்பாட்டத்துக்கு ஓதுக்கப்பட்ட இடம் காவல்துறையினரால் மேலும் விரிவாக்கப்பட்டு பாதுகாப்பு வேலி விரிவுபடுத்தப்பட்டது.
பிரித்தானிய தமிழர் ஒன்றியத்துடன் இணைந்த பிரித்தானிய இளையோர் அமைப்பு, தெற்காசிய ஒற்றுமை அமைப்பு, சமாதானத்துக்கான ஒற்றுமை அமைப்பு, சோசலிச கட்சி, அனைத்துலக சோசலிச அமைப்பு, சிறிலங்கா இடதுசாரி அமைப்பான சமாஜக் கட்சியின் லண்டன் கிளை ஆகிய ஏழு அமைப்புக்கள இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
அனைத்துலக மன்னிப்புச்சபை ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுட மக்கள் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து பதாகைகளை தாங்கியிரிந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக, சிறீலங்கா அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூறு பேர் வரையிலான சிங்களவர்களும் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்த போதிலும், தமிழ் மக்களின் ஓர்மம் நிறைந்த கொட்டொலிகள் காரணமாக அங்கியிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
பொதுநலவாய அமைப்பின் தலைவர்களது மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக நேற்றைய தினம் அம்னாஸ்றிக் இன்றநாஸ்னல் என்ற அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment