Tuesday, 10 June 2008

கிழக்கில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள்

அரசாங்கப்படைகளினால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கொழும்பின் ஆங்கில நாழிதல் செய்தி வெளியிட்டுள்ளது.

பொத்துவில் பகுதியில் இருந்து 10 பேர் கடத்திச்செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையினருக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தம்மை தமிழீழ விடுதலைப்புலிகள் கடத்திச்சென்று முகாமில் தடுத்து வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

மற்றும் ஒரு சம்பவத்தில் திருகோணமலை புல்மோட்டையில், காட்டுக்கு பழங்கள் பறிக்கசென்ற வேளையில், ஊர்காவல் படை சிப்பாய்; ஒருவரும் ஐந்து சிறுவர்களும் கடத்திச்செல்லப்பட்டனர். இதன் பின்னர் ஐந்து சிறுவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், ஊர்காவல் படை சிப்பாயை விடுவிக்கவேண்டுமானால், 50 பை அரிசி தேவை என அவர்களை கடத்திச்சென்றோர் கோரியிருந்தனர்.

எனினும் பயம் காரணமாக குறித்த சிறுவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மீண்டும் செல்லவில்லை. எனினும் அவ்விடத்திற்கு சென்று காவல்துறையினரும் படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


மண்டூர் பகுதியில் சில் தினங்களுக்கு முன்னர் சிறிலங்கா படையினரின் முகாம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன, அதேவேளை காத்தான்கூடி வன்முறைகாரணமாக மாற்ற்ப்பட்ட போக்குவரத்து பாதையில் புலிகள் நிற்பதாக மக்கள் காதூம் காதுமாக பேசிக்கொள்கின்றனர் .

ஆக மொத்தத்தில் கிழக்கில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள்

No comments: