Tuesday, 10 June 2008

ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக விரிவான அரசியல் முன்னணியொன்று உருவாக்கப்படும் - அனுரகுமார திஸாநாயக்க

நாளுக்கு நாள் நாட்டில் அழிவடைந்து செல்லும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் அனைத்து அரசியல் கட்சிகள், வெகுசன அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களை அணி திரட்டி விரிவான மக்கள் இயக்கமொன்றை உருவாக்க ஜே.வி.பி. திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வெகுசன அமைப்புக்களுடன் தற்போது உத்தியோகபூர்வ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் அனைவரும் ஜே.வி.பி.யுடன் அணி திரளுமாறு அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.

இதேவேளை, தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் நாடு திரும்பியுடன் விரிவான அரசியல் முன்னணியொன்றை உருவாக்குவது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

No comments: