Wednesday, 11 June 2008

பிள்ளையான் இணைந்துகொள்ளும் வரையில் சர்வகட்சி பேரவையின் பணிகள் இடைநிறுத்தம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சர்வகட்சிப் பேரவையில் இணைந்து கொள்ளும்வரை பேரவையின் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைக்க அதன் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தீர்மானித்துள்ளார்.

பிள்ளையான் குழுவினர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டிருப்பதனால் அவர்களை சர்வகட்சி பேரவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையான் குழுவினரை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் சர்வகட்சி பேரவையிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிள்iளாயன் குழுவினர் இணைத்துக் கொள்ளப்பட்டால் சர்வகட்சிப் பேரவையில் குறித்த கட்சிகள் மீண்டும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

No comments: