ஜே.வி.பி இனிமேலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என ஜே.வி.பி பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நூலகசாலையில் மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அவசரகால சட்டத்துக்கு சார்பாக ஒத்துழைப்பு வழங்கியது புலிகளின் தீவிரவாதத்தை ஒழிக்கவே தவிர ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவோ அல்லது பொதுமக்களின் குரல்களை நசுக்குவதற்கோ அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகள் எதனால் கலைக்கப்பட்டன என்பது குறித்த காரணத்தை முடிந்தால் வெளிபடுத்துமாறு விஜித ஹேரத் அரசாங்கத்திற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இம்மாகணசபையில் அங்கம் வகிக்கும்; பெரும்பாலனவர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் எனவும், இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மகாணசபை களைப்பட்டமை மஹிந்த ராஜபக்ஷவின் குறுகிய நோக்கத்தின் வெளிப்பாடாகும் என அவர் குற்றம் சாட்டடியுள்ளார்.
தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் இந்த சூழ்நிலையில் தேர்தல்கள் தேவைதானா என அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் சமாச்சாரங்களுக்கு பொலிசாரையும் பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்பத்தில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எங்கனம் எனவும், இச்செயல்பாடானது மாகாணசபை தேர்தல்களின் ஊடாக மீண்டும் போருக்கான ஒரு சூழ்நிலையை உறுவாக்குவதாக உள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டமை 13வது திருத்தத்திற்கு முரணானதாகும் எனவே இதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களோடு இணைந்து நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக விஜித ஹேரத்; தெரிவித்தார்.
No comments:
Post a Comment