பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் இலங்கையில் தோல்வியடைந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கும் கருத்தை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இவ்வாறான கருத்தைத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இவ்வாறான கருத்தைத் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாதென இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் இலங்கையில் தோல்விகண்டுவிட்டது.
வடபோர்முனைகளில் புலிகளை வெற்றிகொண்டு வருவதாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவிக்கின்றபோதிலும், தென்பகுதியில் அடிக்கடி இடம்பெறும் குண்டுத்தாக்குதல்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் தோல்விகண்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது எனக் கூறியிருந்தார்.
எனினும், இந்தக் கருத்தானது பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவரும் தோல்களைக் குறைத்துமதிப்பிடும் வகையில் அமைந்திருப்பதாக இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தென்பகுதியில் இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவற்றைக் கண்டிக்காமல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக உலகநாடுகள் அணிதிரண்டுள்ள நிலையில், இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் இராணுவத்தினரை ஊக்குவிக்காமல் அவர்களின் மனவலிமையைக் குன்றச்செய்யும்நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவித்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
பயங்கரவாதம் மிகவும்மோசமானது, முத்திய புற்றுநோயைப் போன்றது என உலகநாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுக்கும் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment