தகவல் ஒன்றை அடிப்படையாக வைத்து இளம் பெண் வைத்தியர் ஒருவரை கண்டியிலிருந்து சென்ற இரகசியப் பொலிஸார் தம்புள்ள பிரதான ஆஸ்பத்திரியில் வைத்து கைது செய்துள்ளதாக வயோதிபத் தாயார் மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார். டாக்டர். செல்வி. ஜனா விக்னேஸ்வரன் (வயது 30) என்ற இளம் வைத்தியரே கைது செய்யப்பட்டு கண்டி இரகசியப் பொலிஸ் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தாயாரான திருமதி எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இக்கைது தொடர்பாக தம்புள்ள வைத்தியசாலை பிரதான வைத்தியர் சுதர்சன் உறுதி செய்துள்ளதுடன், தங்குவதற்கு இடமில்லாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தம்புள்ளயில் தொழில் புரிந்த டாக்டர் செல்வி ஜனாவுக்கு தனது இல்லத்திலேயே இடமளித்து தங்கவைத்திருந்ததாகவும் இப்பகுதியில் நடைபெறும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸாரே இவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் பிரதி அமைச்சரிடம் தெரிவித்தார். இரத்தப் பரிசோதனைப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியரான செல்வி ஜனா மீது எவ்வாறு சந்தேகம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கண்டி இரகசியப் பொலிஸ் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செல்வி ஜனா தொடர்பாக இரகசியப் பொலிஸ், பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட பலரிடம் பிரதி அமைச்சர் முறையிட்டுள்ளார்.
Wednesday, 11 June 2008
புலிகளுடன் தொடர்பு எனக் கூறி தமிழ் பெண் வைத்தியர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment