ஐரோப்பிய நகரங்களே உலகளவில் கூடுதல் வாழ்க்கைத்தரம் வாய்ந்த நகரங்களாக தரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தரப்படுத்தலில் சூரிச் முதலிடத்திலும், வியன்னா மற்றும் ஜெனீவா ஆகிய நகரங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன. வான்கூவர் மற்றும் ஒக்லாந்து ஆகிய நகரங்கள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களைப் பிடித்துள்ளன. அரசாங்கங்கள் மற்றும் தனியார் கம்பனிகளின் உதவியுடன் சர்வதேச ரீதயில் இந்த தரக்கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டில், தனிப்பட்ட பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு உள்ளக ஸ்திரத்தன்மை, குற்றச்செயல்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஏனைய நாடுகளுடனான உறவு ஆகியவை குறிப்பாக மதிப்பிடப்பட்டுள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான தரப்படுத்தலில் மிகக் குறைந்த புள்ளிகiளை பாகிஸ்தான் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கொழும்பு, டாக்கா, ஜகர்த்தா, மணிலா ஆகிய நகரங்கள் வரிசைப்டுத்தப்பட்டுள்ளன. ஆசியப் பிராந்தியத்தில் சிங்கப்பூர் 120.2 புள்ளிகளைப் பெற்று தனிப்பட்ட பாதுகாப்பில் முதலிடத்திலுள்ளது. பாகிஸ்தான் 25.3 புள்ளிகளைப் பெற்று கடைசி ஸ்தானத்தழில் உள்ளது. "எல்லைப் பிரச்சினைகள், உள்ளகப் பிரச்சினைகள், மோசமான குற்றச்செயல்களால், பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளைப் போல ஏனைய நாடுகளும் பின்தள்ளப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன" என சிரேஸ்ட ஆய்வாளர் ஸ்லாகைன் பரகாதில் தெரிவித்துள்ளார். "தனிப்பட்ட, குடும்ப பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வாழ்வது பற்றி கவனம் செலுத்துகின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2007 செப்டம்பர் முதல் நவம்பர் வரை தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டே இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 350 நகரங்களின் தரவுகள் சேகரிக்கப்பட்ட போதிலும் 215 நாடுகள் மாத்திரமே தரப்படுத்தலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. |
No comments:
Post a Comment