Tuesday, 10 June 2008

ஐ.நா.சமாதானப் படையை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேசிய, சர்வதேச ரீதியில் சதி

நாட்டில் தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்கள் மத்தியில் இன வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு ஐ.நா.சமாதானப் படையை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேசிய, சர்வதேச ரீதியில் சதித்திட்டம் முனனெடுக்கப்படுகின்றது.

இன்னும் ஆறு மாதங்களுக்குள் எமது படையினர் முல்லைத்தீவைக் கைப்பற்றி விடுதலைப்புலிகளை தோல்வியடையச் செய்து விடுவார்கள். அதனைத் தடுத்து பிரைபாகரனை பாதுகாப்பதற்கான முயற்சியே இதுவாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

ஏ-9 பாதைக்கு மாற்றீடான பாதையை தேர்தெடுத்துள்ள எமது படையினர் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றி விடுவார்கள். இதன் மூலம் பிரபாகரனின் ஈழக் கனவு கலைந்து விடும்.????

பயங்கரவாதத்திற்கு எதிரான படையினரின் வெற்றியை திசை திருப்பி பிரபாகரனை பாதுகாத்து ஈழத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான சதித்திட்டம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேநேரம், தோல்வியின் விளிம்பிலுள்ள?? புலிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்காக தென்பகுதியில் சிங்கள மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்தாக்குதல்களில் மரணமானவர்களின் குடும்ப அங்கத்தினர்களை லிப்டன் சுற்று வட்டத்திற்கு கொண்டுவந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

கறுப்பு ஜூலையை உருவாக்கி தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

சிங்கள மக்கள் மத்தியில், பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தொருமைப்பாட்டை சீர்குலைத்து வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, குண்டுவெடிப்புகள், மனித உரிமைகள் தொடர்பில் கவனத்தை திசை திருப்பி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டுமென்ற அழுத்தத்தை அரசிற்கு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இன வன்முறைகளை ஏற்படுத்தி இரத்த ஆற்றை ஓடவிட்டு. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதாக ஐ.நாவில் முறையீடு செய்து சமாதானப் படைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் முன்னெடுப்புகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த தேசத்துரோக திட்டத்தை முன்னெடுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் ஊடகச் சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் பிரசாரத்தை சர்வதேச ரீதியில முன்னெடுக்கின்றன.

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நடத்தப்படவதாகவும் இன வன்முறைகள் தலை தூக்கியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம ஐ.நா.வுக்கு முறையீடுகளை அனுப்பி வைக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

எமது படையினர் முல்லைத்தீவை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்தி பிரபாகரனை பாதுகாத்த ஈழத்தை வழங்கவே இம் முயற்சிகள் முன்னெடுக்கபடுகின்றன.

இதற்கு இங்குள்ள எதிர்க்கட்சிகளும் துணை போகின்றன. வெளிநாடுகளுக்கும் சென்று இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை நடத்துகின்றன.

இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசிற்கு கட்சி பேதமின்றி ஆதரவு வழங்குகின்றன. ஆனால் எமது நாட்டில் அந்த நிலமை இல்லாது போயுள்ளது கவலைக்குறிய விடயமாகும்.

அதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள அரசும தனது அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும்.

எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பெறுமதி வாய்ந்த அதிக பெற்றோல் செலவாகும் பென்ஸ் கார்கள் இறக்குமதி செய்யபட்டள்ளன.

வடிகால்களை அமைத்து அதனை திறந்த வைப்பதற்கு ஆடம்பரமான விழாக்கள் நடத்தப்படுகின்றன.

சர்வதேச தொழிலாளர்அமைப்பின்சம்மேளனததிற்கு அமைச்சர், 23 பிரதிநிதிகளை கூட்டிச் சென்றுள்ளதோடு சுவிஸிலுள்ள விலையுயர்ந்த ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இவ்வாறன வீண் விரயங்களை அரசு கைவிட வேண்டும். தமது பக்க அர்ப்பணிப்புக்களை வெளிபடுத்தி மக்கள் ஆதரவைப் பெற வேண்டும்.

இல்லாவிட்டால் 6 மாதங்களுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றும் எமது படையினரின் வெற்றிப் பாதை திசை தெரியாது போகும் ஆபத்து உண்டு. எனவே, அரசின் மெத்தனப் போக்கை பாhத்துக் கொண்டிருக்காது தேசத்துரோகச் சக்திகளை தோல்வியடையச் செய்ய தேசிய சக்திகள் ஒன்றினைய வேண்டும்.

நன்றி : வீரகேசரி

No comments: