Wednesday, 11 June 2008

சேரன் கொமாண்டோ அணியினரால் மன்னார் கூட்டுப்படைத்தளம் தாக்கியழிப்பு: 10 படையினர் பலி- பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு

மன்னார்தீவுள் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப்படைத்தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார் உட்பட பெருமளவிலான போர்க்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினரால் இன்று புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்துக்குள் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் உள்ளது.

இதில் 10-க்கும் அதிகமான சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளர். ஏனைய படையினர் தப்பியோடி விட்டனர்.






சிறிலங்கா கடற்படையின் கஜபா படைப்பிரிவின் ஏ கொம்பனி அணியினரே விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கொமாண்டோ அணியினரால் தாக்கியழிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:

ராடார் முழுத்தொகுதி -01

50 கலிபர் துப்பாக்கி - 01

50 கலிபர் துப்பாக்கி சுடுகுழல் - 01

50 கலிபர் ரவைப் பெட்டிகள் - 10

50 கலிபர் ரவைகள் - 1,195

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - 02

81 மில்லிமீற்றர் எறிகணைகள் - 203

81 மில்லிமீற்றர் பரா - 07

பிகே எல்எம்ஜி - 01

பிகேஎல்எம்ஜி ரவைகள் - 563

ஆர்பிஜி - 01

60 மில்லி மீற்றர் மோட்டர்கள் - 02

60 மில்லி மீற்றர் எறிகணைகள் - 65

60 மில்லி மீற்றர் பரா வெளிச்சக்கூடுகள் - 12

ஆர்பிஜி எறிகணைகள் - 06

ஆர்பிஜி புறப்ளர் - 05

தொலைநோக்கி தொகுதி - 01

ஏகேஎல்எம்ஜி - 01

ஏகேஎல்எம்ஜி இணைப்பிகள் - 675

ஏகேஎல்எம்ஜி ரம் ரவைக்கூடுகள் - 08

ரி-56-2 ரக துப்பாக்கி - 01

ரவைக்கூடுகள் - 09

நடுத்தர ரவைகள் - 5,870

மின்னேற்றி - 01

மின்கலம் - 01

மின் சீராக்கி - 01

ஜக்கற் ரவைக்கூடுதாங்கி - 01

கவச அணி - 01

நில அளவி - 01

செல்லிடப்பேசிகள் - 03

தொலைபேசி - 01

பை - 01

சப்பாத்து - 2 இணைகள்

கத்தி - 01

ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினர் கடற்படைத்தள அழிப்புத்தாக்குதலில் ஈடுபட, வழிமறிப்புத்தாக்குதலை கடற்புலிகளின் லெப். கேணல் புனிதா படையணி, லெப். கேணல் எழில்கண்ணன் படையணி ஆகியன ஈடுபட்டன.

தாக்குதலில் ஈருட அணியை முழுமையாக கடற்புலிகளின் கட்டளைத்தளபதி விடுதலை வழிநடத்த, கடல் தாக்குதலை கட்டளைத்தளபதி இளங்கோ வழி நடத்தினார்.


சிறிலங்கா கடற்படைக்கு பெரும் அதிர்ச்சியையும் இழப்பையும் ஏற்படுத்திய இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றார் அவர்.

No comments: