பலாங்கொட கல்தொட்ட பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிகேபொல பிரதேசத்தில் அமைந்துள்ள தமது இல்லத்தில் நேற்று (ஜூன்) வைத்து தனது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் மீதே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக வெலிகேபொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.எம். நிலந்த தெரிவித்துள்ளார்.
குடும்பத் தகராரின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.
கல்தொட்ட பொலிஸில் கடமையாற்றிய சனத் ஆனந்த என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Wednesday, 11 June 2008
கல்தொட்டவில் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment