ராஜபக்ஸ குடும்பத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக அப்பாவி படைவீரர்களின் உயிர்களை பலிகொடுத்து, தேசிய சொத்துக்களை சுரண்டி மேற்கொள்ளப்படும் யுத்தமே பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத பொருட்கள் விலையேற்றத்திற்கு பிரதான காரணம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்சள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாடு நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு தொடர்பாக இன்றைய தினம் (ஜூன்11) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஸ சகோதர ஆட்சி மக்களை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கி வருவதாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக எரிபொருள் விலையேற்றம் மற்றும் யுத்தம் என்பனவற்றை அரசாங்கம் காரணம் காட்டி வருவதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பாரியளவில் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தைவிட ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளே பொருட்களின் விலையேற்றத்திற்கு பிரதான காரணமாகும்.
மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு பங்களிப்பு செய்ததன் மூலம் தாமும் இந்தப் பிரச்சினைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இந்த நிலைக்கு பொறுப்பாளிகள் என அவர் சுட்டி;ககாட்டியுள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுபெற்றுக் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடும்போக்கிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுத்து, ஜே.வி.பி. மற்றும் ஏனைய அனைத்து அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்து விரிவான அரசியல் முன்னணியொன்றை உருவாக்குவதன் மூலம் 10 ஆண்டுகளில் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவிற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, இரண்டு கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை காணப்பட்டால் எழுத்துமூலமான ஆவணங்கள் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, 11 June 2008
பொருட்கள் விலையேற்றத்திற்கு காரணம் தேசிய சொத்துக்கள் சுரண்டப்படும் யுத்தமே - மங்கள
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment