கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஆகியோர் தோன்றும் காட்சிகள் இணைக்கப்படுகின்றன.
`தசாவதாரம்'
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தை, ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்துள்ளார். ரூ.50 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த படம், இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படம், ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக, `தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கலந்துகொள்கிறார். அவருடன் அமிதாப்பச்சன், மம்முட்டி, சிரஞ்சீவி போன்ற பிரபல நடிகர்களும் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
கருணாநிதி
`தசாவதாரம்' படத்தில், சில அரசியல் தலைவர்கள் தோன்றும் காட்சிகளை இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கமலஹாசனின் 10 வேடங்களில் ஒன்று, பிரபல விஞ்ஞானி. அவர் தனது புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அறிமுகம் செய்கிறார். இதற்காக அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் முன்னிலையில் இந்த விழா நடக்கிறது. அதில், முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொள்வது போன்ற காட்சி இணைக்கப்படுகிறது. இதற்காக கமலஹாசன், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஒரு கமலஹாசனுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது போன்ற காட்சியை இணைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் மேடையில் பேசுவது போன்ற ஒரு காட்சியும் படத்தில் இடம்பெறுகிறது.
Tuesday, 25 March 2008
கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படத்தில், அரசியல் தலைவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment