Friday 21 March 2008

உலகிலேயே சுத்தமான நகரம்: சுவிட்சர்லாந்த் ஜூரிச்சுக்கு முதல் இடம்

ஐரோப்பிய நாடுகளில், வெளிநாட்டினரை உபசரிப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் பின்தங்கியுள்ள நகரங்களில், முதலிடத்தில் உள்ளது பாரிஸ். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது லண்டன். மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் மாஸ்கோ பிடித்துள்ளது. சர்வதேச அளவில், வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. லண்டனும், பாரிசும் தான் சர்வதேச அளவில், பொருட்கள் விற்பனை, உணவகங்கள், பொது பூங்காக்களுக்கு புகழ்பெற்றுள்ளன. பல்வேறு விஷயங்களில், முன்னணி இடங்களில் உள்ள பாரிஸ் மற்றும் லண்டன், அழுக்கான, குப்பை மிகுந்த நகரங்கள் பட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரம் தான், உலகிலேயே சுத்தமான நகரம் என்ற முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்நகரத்தில் பொழுதுபோக்கு அம்சம் மிகக்குறைவு. சுத்தமான நகரங்கள் பட்டியலில், கோபென்ஹாகன், ஸ்டாக்கோம் நகரங்கள் அடுத்த இடங்களை பிடித்துள்ளன. பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமுள்ள நகரங்களில், பிரசெல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர்கள் கணிப்பில் தவறில்லை. பாரிசில் பிரான்சியருக்கே உதவிகள் கிட்டுவது கடினம்; அத்துடன் எல்லோரும் பிரன்சு பேசவேண்டுனென எதிர்பார்ப்பார்கள்.
மேலும் பாரிசில் வசிப்போர் அனைவரும் பிரான்சியர் அல்ல. 75 % , வெளிநாட்டுத் தொடர்புடைய
சந்ததியார்களாக இருப்பார்கள்.
நான் பல டக்டவை லண்டன் சென்றுள்ளேன்; sir,can i help you எனக் கேட்டு உதவ வருவார்கள்.
சுத்தம் பற்றி பாரிஸ் ;லண்டன் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக உள்ளதாலும் குப்பை போடுவதற்கெல்லாம் கடும் சட்டம் போட்டு மக்களை பயப்படுத்தவில்லை.
சுவிஸ் அப்படியல்ல ;சில சட்டங்கள் சிங்கப்பூர் போல் மிகக் கடுமை... அதனால் அவர்கள் அதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள்.
நான் சுவிஸ் சென்ற போது; எனது நண்பர்கள் எங்களை அடிக்கடி ஞாபகப் படுத்தியது.குப்பையை சரியான நிற பொதிகளில் இடுதல்.
தவறின் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.